செய்தி:33
ரவி சொன்னதைக் கேட்டு மற்றவர்களுக்கு தலையே சுற்றிவிட்டது... வீனா தலையில் ஒரு நிமிடம் கை வைத்தவாறு கண்களை மூடிக்கொண்டாள்... சில நிழற்ப்படங்கள் ஓடியது... கார் சத்தம்... சில கூட்டம்... திடிரென அனைத்தும் அடங்கிபோனது... சட்டென தன் மேல் பட்ட ஒரு துளி கண்ணீரால் மீண்டும் உயிர் பெற்று கண் முளித்தாள்... அவள் முன் ஒரு இளைஞன் ... இளைஞனெனவும் சொல்ல முடியாது... வீனாவின் வயதை ஒத்த ஒருவன்... கண்கள் முழுவதும் கண்ணீருடன் வெள்ளை சட்டையில் பாதி இரத்தக்கரையுடன் அவளை மடியில் போட்டு அமர்ந்திருந்தான்... அது அப்படியே பாசானது... கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாய் தெரிந்தது... அது ரவி... வீனாவின் ரவி....
சட்டென கண்களை திறந்தவள் அவனை ஓடிச்சென்று அனைத்துக் கொண்டாள்...
வீர் : அப்போ நீ தான் அவள காப்பாத்துனியா??? ஆனா ஏன்டா இத்தன நாளா சொல்லல.????
ரவி : எனக்கே இன்னைக்கு தானே டா தெரிஞ்சிச்சு..
தான்யா : டேய் ஒரு ஒருத்தனா போட்டு கொலப்பாதீங்க டா... தயவசெஞ்சு Flashback க சொல்லுங்க...
( Kutty flashback )
அன்று ஒவீ ரொவீயின் 16 வது பிறந்தநாள்...
ஆஷ்ரமத்தில்
அதிகாலையிலே கண் விழித்த ரவி ஆஷ்ரமத்தின் வாண்டுகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.... ரனீஷ் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.... திடீரென ஒரு கருப்பு கார் வீரின் வீட்டிற்கு நான்கு வீடு தள்ளி நிறுத்தப்பட்டு அதிலிருந்து வீரின் சித்தி வனோஜா வருவதை கண்டு யோசனையுடனே அருகில் சென்றான்... ஆனால் இவன் செல்லும் முன்னே கார் சென்றுவிட்டது... வனோஜாவும் வீட்டுக்குள் நுழைந்தாள்.... ரவியோ யாரிவங்க??? புதுசா இருக்காங்க???? என்று வனோஜாவை பார்த்து யோசித்துக்கொண்டே ஆஷ்ரமத்திற்கு வந்தான்...
அப்போதிலிருந்தே மனம் ஏதோ நெருடலாகவே இருந்தது... சற்று தனியாக இருக்களாமென யாரிடமும் சொல்லாமல் பைக்கை எடுத்துக்கொண்டு கண் முன் தெரிந்த பாதையில் சென்றான்... இரண்டு மணிநேரம் களித்து அலைகளின் சத்தம் கேட்க... அப்போதே எங்கு வந்தோமென சுற்றி பார்த்தான்... சென்னையை தான்டி வெகுதூரம் வந்துவிட்டான்... சிறிது தூரத்திலே கடல் தெரியவும் அங்கு சென்று அமர்ந்திருந்தான்....
நேரம் கடக்க... நண்பர்களிடம் சொல்லாமல் வந்தது நினைவு வர உடனே பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான்... நெடுஞ்சாலையில் நிதானமாய் சென்றுக்கொண்டிருந்தவன்... நெடு தொலைவில் ஏதோ கூட்டம் கலைந்து செல்வதை கண்டான்.... அப்போது எங்கிருந்தோ வந்த அந்த கருப்பு காரை...( அதான்பா அந்த பெரிய மாடுங்க போன காரு... )
கண்டதும் அதை வினோதமாக பார்த்துக்கொண்டு நின்றிருந்தவன் ஏதோ தோன்ற போட்டு கொலப்பிக்காத டா.. என தனக்குத்தானே கூறிக்கொண்டு சென்றான்... அந்தகூட்டம் கூடிய இடத்தை அடயும்முன்பே ரவியின் இதயம் வேகமாக துடித்தது... அவனாலும் உணர முடிந்தது...
அருகில் செல்ல செல்ல...மனம் பதைபதைத்தது... கண்களை மட்டும் அவ்விடத்தில் உலாவவிட்டான்... அங்கு ஒரு பெண் கீழே விழுந்து அவளை சுற்றி இரத்தம் சிதறியிருந்தது... நிதானமில்லாமல் வண்டியை நிருத்திக்கூட வைக்காமல் அப்படியே போட்டுவிட்டு அவளை நோக்கி ஓடினான்....
யாரென்றே தெரியாதவளுக்காக பதற்றமடையும் மனதை கண்டறிய மறந்தான்... கீழே கிடந்தவளை தூக்கி தன் மடியில் போட்டுக்கொண்டவன்... கையை பிடித்து நாடிப்பார்த்தான்.... துடிக்கவில்லை... மூச்சற்று அவன் கைகளிள் கிடந்தாள் ..... இரத்தம் மட்டும் நிற்க்காமல் தலை எங்கிலும் வழிந்துக்கொண்டே இருந்தது....
முகம் முழுவதும் அவளின் இரத்தத்திலே மறைந்துவிட்டது... திடீரென மூச்சை இழுத்து கண்களை திறந்தாள்... கனநொடிக்கூட தாண்டியிருக்க வாய்ப்பில்லை... மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்...
உடனடியாக செயல்பட்டான் ரவி... அருகில் வந்த காரை நிறுத்தி அவளை தூக்கிக்கொண்டு ஏறினான்... சென்னையை அடைய இன்னும் தாமதமாகும் என்பதையறிந்து தனக்குத் தெரிந்த முதலுதவிகளை செய்தான்... மருத்துவமனையை அடைந்தவுடன் வேகவேகமாக உள்ளே அட்மீட் செய்தான்... 16 வயது பையன் என்பதால் இவனால் எதுவும் பேசமுடியாமல் வெளியே தள்ளப்பட்டான்... ஆனால் வீனாவிற்க்கு சிகிச்சையை தொடங்கியிருந்தனர்... ஒரு ஓரத்தில் மறைந்து நின்று டாக்டர் வருவதை பார்த்துக்கொண்டிருந்தான்... அவரோ செவிலியர் ஒருவரிடம் அந்த பொண்ணு சீக்கிரம் கண்ணு முளிச்சிரும்... சரியான நேரத்துக்கு கூட்டீட்டு வந்துட்டாங்க... ஆனா யாரு கூட்டிட்டு வந்தது ன்னு தான் தெரியல... அந்த பொண்ணோட குடும்பத்துக்கு தகவல் அனுப்புங்க... என்று சொல்லிக்கொண்டே சென்றார்...
அவள் நலமுடன் இருக்கிறாள் என்பதை தெரிந்துக் கொண்ட பின்பே மூச்சை விட்டான்... செல்லும் வழியிலே வேறொரு சட்டையை வாங்கி மாற்றிக்கொண்டு அங்கிருந்து சிறுது நேரத்திலே ஆஷ்ரமத்திற்கு சென்றான்... அங்கோ வாசலிலே வீரும் ரனீஷும் இவனை தேடி காணாமல் சோகமாய் அமர்ந்திருந்தனர்...
அருகில் சென்று அர்ச்சனைகளையும் திட்டுக்களையும் வாங்கிக் கொண்டு வீரின் வீட்டுக்கு இருவருடன் நடைப் போட்டான்... அதுக்கு அப்ரம்தான் உங்களுக்கு தெரியுமே....
நடப்பவை...
தான்யா : எங்கேங்கேந்தோ நமக்கு டிராக்கு உருவாகுது டா... அன்னைக்கு மட்டும் ரவி அங்க போகலன்னா... நெனச்சே பாக்க முடியல...
ரனீஷ் : உனக்கு எப்டிடா வீனா தான் அந்த பொண்ணுன்னு தெரிஞ்சிச்சு???
ரவி : அக்ஸிடன்ட் ட பத்தி வீனா சொல்லும்போது தான் டா நியாபகம் வந்துச்சு... இருந்தாளும் உறுதி பன்னிக்கனும்னு தான் அமைதியா இருந்தேன்... அவள ஹாஸ்ப்பிட்டல்ல சேத்துட்டு நா கெம்பி நம்ம ஆஷ்ரமத்துக்கு வந்ததுக்கு அப்ரம் தா என் பேன்ட் பாக்கேட்ல மாட்டீர்ந்த ஒரு செய்ன பாத்தேன்... என்ன ன்னு எடுத்துப்பாத்தா அதுல சாவி இருந்துச்சு... எனக்கு அத தூக்கிப்போட மனசு வரல... என் கிட்ட இருக்கனும்னு தோனுச்சி... சோ அத பத்தரமா வச்சிர்ந்தேன்....
ரக்ஷா : நமக்கே தெரியாம நம்ம வாழ்க்கைல என்னென்னமோ நடந்துப்போச்சுல்ல...????
அனைவரும் அமோதிப்பதாய் தலை ஆட்டினர்...
வீனாவுக்குள் ஏதோ உருத்திக்கொண்டே இருந்தது... லேசாக கழுத்தில் எரிச்சல் உண்டாகியது... அவள் கழுத்தை பிடித்துக்கொண்டு அமரவும் ஹாலில் ஏதோ ஒன்று கீழே விழுந்து உடையவும் சரியாக இருந்தது...
வீனா : டேய்ய்ய் கழுத்துல எறியிது டா...
ரவி : வீனா... உனக்கு அந்த தலும்பு அன்னைக்கே இருந்துச்சு டி... அன்னைக்கு தா ஏதோ உனக்கு கழுத்துல கீருடுச்சு போல...
வீனா : ம்ம்ம் இருக்களாம் டா.... இப்போ ஓக்கே வலிக்கல...
தான்யா : ஏதோ கீழ விழுந்துடுச்சுன்னு நெனக்கிறேன் வாங்க கீழ போலாம்... மீண்டும் ஏதோ பலமாய் உடயும் சத்தம் கேட்க வேகமாக கீழே ஓடினர்...
அங்கோ ஒரு பக்கம் மேஜையில் இருந்த கண்ணாடி கிலாஸ் உடைந்து தூள் தூளாய் கடக்க... வேர ஏதோ சத்தம் கேட்டுச்சே என சுற்றி பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி... டீவி பின் பக்கமாய் கீழே விழுந்து உடைந்திருந்தது...
ரனீஷ் : அச்சச்சோ டீவி போச்சே.... இந்த ஊருல இருந்த ஒரே பொழுதுபோக்கு அதான... என ஒப்பாரி வைக்காத குறையாய் கத்திக்கொண்டிருந்தான்...
வீனா : அந்த பேய் பன்றதுல தான் நமக்கு டைம்பாஸ் ஆகுதே டா...
ரனீஷ் : ஆமா டி... நமக்கெங்க? ?? அதுதான் நம்மல வச்சு டைம்பாஸ் பன்னிக்கிட்டு இருக்கு ... என்று தலையில் கைவைத்துக் கொண்டான்....
அனைவரும் அவனைப் பார்த்து சிரிக்க... திடீரென கரன்ட் கட்டானது... ஒரே இருட்டு... ஏதோ சத்தம் வந்தது...கர கர கர வென... பயத்தில் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டனர்....
திடீரென டப்ப்ப்... என சத்தம் வந்தது... என்ன சத்தமென பின் திரும்பி பார்க்க... அங்கோ ஒரே இருட்டு... சட்டென வெளிச்சம் வந்தது...
கீழே விழுந்து உடைந்த டீவி ஆன் ஆகி இருந்தது...
அதில் வெள்ளையாய் மட்டுமிருக்க... கண்களை பிழந்துக்கொண்டு ஆறுபேரும் அதை பார்க்க... அதில் இருந்து காச்சு மூச்சு வென சில சத்தம் கேட்டது... அடுத்த நொடி " சன் நியூஸ் " என பளிச்சிட மின்னியது... அதில் ஒரு பெண்ணின் புகைபடம்... யாருடா இது என உத்துப்பார்க்க... அப்போதே அது வனோஜா என தெரிந்தது....
ரவி வீர் வீனா "இது சித்தி தான??" என ஒரே போல் கேட்க... அதே போல் "ஆமா" என்றும் சொல்லிக்கொண்டனர்... வீருக்கும் வீனாவிற்ம் வனோவை பற்றி நாம் எதையும் அறிந்துக்கொள்ளவில்லையே என கவலை மேலோங்கியது...
அந்த டிவியிலோ...
முக்கிய செய்தி..
கோயம்பத்தூரின் நடுத்தரர்கள் மட்டும் வசிக்ககும் தரனி நகரில் கடந்த 6 வருடங்களாய் வசித்து வரும் Ms. Vanoja என்னும் பெண்மணி நேற்று அவர்கள் வீட்டில் நடந்த தீ விபத்தில் சிக்க கருகி மரணமடைந்தார்... உடல் கிடைக்கவில்லை... சாம்பல்களே மிஞ்சியது....
என ஒரு பெண்ணின் குரல் கேட்டது... அந்த குரலோ அனைவருக்கும் பலக்கப்பட்ட குரல்...
தான்யா : ஹேஹே இது அந்த பேயோட குரல் டா...😱😱😱
வீனா : அப்போ சித்தி... சித்தி... இறந்துட்டாங்களா.???? ஆனால் வீனாவுக்கும் சரி வீருக்கும் சரி வனோஜா மரணமடைந்தாள்
என்பதை கேட்டு ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லை....
சட்டென லைட்டெல்லாம் விட்டு விட்டு எறிந்தது... எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை... சட்டென கனமழை பேயத் துவங்கியது.... இடி இடிக்க அந்த இடியின் சத்தத்தை விட பெரிதாய் வெளி வந்தது ஒரு பெண்ணின் அலரல்....
சப்தநாடியும் அடங்கியது... இமைகளை மூடினால் ஏதும் நடந்து விடுமோ என பயந்து இமைகள் மூடாமல் பிழந்தே இருந்தது நாயகிகளுக்கு... நாயகன்கள் மூவரும் எங்களை தாண்டினால் தான் எங்களவள்களை நெருங்க முடியுமென அவர்கள் முன் வந்து நின்றனர்...
அலரல்... மீண்டும் மீண்டும் அதே அலரல்... ஒரு ஒருமுறையும் சத்தம் அதிகரித்துக் கொண்டே இருந்தது... காதிலிருந்து இரத்தமே வந்து விடும் அளவுக்கு இருந்தது அந்த அலரல்... காதையும் கண்களையும் இருக்கி மூடிக்கொண்டனர்....
எந்தவிதமான சத்தமும் கேட்கவில்லை.... ஒரே அமைதி... கண்களை ஒரே நேரத்தில் திறந்தனர்... அனைவருக்கும் முன்பு அந்த உருவம்.... தன் கூந்தலை முன்னாடி போட்டு .... வெட்டுகள் விழுந்த கைகளை தொங்கவிட்டு... கருப்பு போர்வைக்குள் நுழைந்துக் கொண்டு நின்றிருந்து... மெலிதாய் அதன் புறம் காற்று வீசியது.... அதன் கூந்தல் அங்குமிங்ககும் ஆடியது... முதலில் அதன் கிரல்கள் படிந்த கழுத்து தெரிந்தது.... அடுத்து வாயிலிருந்து ஒரு பக்கம் இரத்தம் வலிந்தவாரிருந்த கன்னம்... மற்றொரு கன்னத்திலோ இரத்தம் கோடாய் வலிந்துக்கொண்டிருந்தது.... இடது புறமாக காற்று வீச...மெல்லிய இடைவேளையில் அதன் ஒரு கண் மட்டும் தெரிந்தது.... இரத்தம் கக்கும் கண்கள்.... கன்னங்களில் வலிந்த கோடான இரத்தம் கண்களிலிருந்து வந்தது.... சட்டென அதன் புறம் காற்று பலமாய் வீச மொத்த கூந்தலும் மேல் பறந்து அதன் முழு உருவத்தை காட்டியது....
அதனை கண்டு இவர்கள் கண்களை பிளக்கும் நேரம்.... அதுவோ சட்டென தன் வாயை திறந்து காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்தும் போது வலிப்பதைவிட இன்னும் இரண்டு மடங்கு அதிக அளவில் பெருங்குரலெடுத்து அலரிய அலரலில் அருகில் இருந்த சோபா மேஜை என எல்லாமும் தூரமாய் போய் விழுந்தது.....
தொடரும்......
Hiii guys.. sry fr the short delay... namma oru saavi oru saavuku innu silla ud ss la end card vanthurum ..... intha ud epdi irukkunnu marakkama solitu pongoooo
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro