காடு :31
நடந்ததைக்கேட்டு அனைவரும் இவ்வளவு நடந்ததா என ஆச்சர்யமாய் இருந்தனர்... வீரும் வீனாவும் கண்ணீருடன் அமர்ந்திருந்தனர்... ஆனால் ரவியோ குழப்பமாய் அனைவரையும் பாத்துக்கொண்டிருந்தான்.... திடீரென கேட்ட செல் போனின் ரிங்டோனிலே அனைவரும் உலகிற்கு வந்தனர்... வீரும் வீனாவும் கண்களை துடைத்துவிட்டு நிமிர்ந்து பார்க்க... ரனீஷின் மொபைல் அடித்துக்கொண்டிருந்தது.... எடுப்பதற்குள் கால் கட்டானது.. அப்போதே மணியை பார்த்தவன்
ரனீஷ் : 2: 30 மணியா???
மற்றவர் : ஙங
ரனீஷ் : மணி நைட்டு 2:30 டா...
தான்யா : இவ்ளோ நேரமாவா பேசிக்கிட்டு இருந்தோம்.???😪
வீனா : நீங்க எங்க டி பேசுனீங்க??? நாதான நேத்து 7 மணிக்கு ஆரம்பிச்சு இன்னைக்கு வர தொண்டத்தண்ணி வத்தி போர அளவு சொல்லீர்க்கேன்...😡😡😡
தான்யா : ஈஈஈஈ
ரக்ஷா : வீனா அவ உன் அண்ணி டி.. இப்டிலா பேசக்கூடாது...
வீனா : ஆமா பெரிய தண்ணி... அவளள்ளாம் அண்ணீண்ணு கூப்டா ஏன் இமேஜ் என்ன ஆகுரது??
ரனீஷ் : ஒன்னு ஆகாது...
ரவி : ஆமா ஆமா... சரி வெட்டி பேச்ச விடுங்க... யாரு கால் பன்னது???
ரனீஷ் : தெரியல டா... அன்னௌன் நம்பர்...
மீண்டும் அலரியது ரனீஷின் மொபைல்.... ஒரே ரிங்கில் அட்டென் செய்து காதில் வைத்தான்..
அந்த பக்கம் : ஒரு அலுகுரல்...
ரனீஷ் : ஹலோ.. ஹலோ...
கட்டாகியது கால்... மீண்டூம் அடித்தவுடன் எடுத்து ஸ்பீக்கரில் போட்டான்....
அந்த பக்கம் : ஐயா... டாக்டர் ஐயா... ஏன் பேத்திக்கு தூக்கி தூக்கி போடுது ஐயா... ஏன் மவன் மயங்கி விழுந்துட்டான்.... ஹாஸ்பிட்டலுல யாரையும் காணும் யா.... காப்பாத்துங்க ஐயா...
என ஒரு வயதான பாட்டியின் அலுகுரல் கேட்டது...
ரவி : நாங்க உடனே வரோம் மா... நீங்க பயப்படாதீங்க....
போன் கட்டானது... வேகவேகமாக நாயகர்கள் கிளம்பி சென்றனர்... காயம் ஆறியிருந்ததால் வீரும் தான்யாவும் உடன் வந்தனர்.... அர்த்த ராத்திரியில் ஹாஸ்பிட்டலை அடைந்தவர்களுக்கு அதிர்ச்சி... நர்ஸ் டாக்டர்ஸ்ஸெல்லாம் அவரவர் வேலைகளை செய்துக்கொண்டிருந்தனர்... போனில் பேசிய பாட்டி போல் யாரும் அங்கில்லை....
ரனீஷ் : என்னடா இங்க பாட்டி பேத்தி மவன்னு யாருமே இல்ல???😕
வீர் : அதானடா நாங்களும் பாத்துக்குட்டு இருக்கோம்???😑
தான்யா : ஒரு வேல ராங் நம்பரா???😐
ரக்ஷா : அது எப்புடி டாக்டர் னு கரெக்டா போன் பன்னீட்டு ராங் நம்பராகும்????😟
வீனா : நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்.... ரொம்ப லேட் ஆய்டுச்சு... மணி மூணாச்சு டா... எனக்கென்னமோ சரியா படல...
வேகவேகமாக திரும்பியவர்கள் முன் ஒரு லாரி தன் லைட்டை ஆன் செய்து வந்துக்கொண்டிருந்தது.... லைட்டின் வெளிச்சத்தில் எவராலும் கண்களை திறந்து பார்க்க முடியவில்லை... கூசியது...
கண் இமைக்குள்ளும் கூட பிராகாசமாய் இருந்தது... மெல்ல வெளிச்சம் குறைய தொடங்க கண்களை திறந்த நாயகர்களுக்கு அதிர்ச்சி... ஏனென்றால் ஹாஸ்பிட்டலின் வாயிலில் நின்றவர்கள் இப்போது மறுவாழ்ப்பேட்டையின் காட்டில் நின்றுக்கொண்டிருந்தனர்....
வெளிரிய முகத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள.... பேசமுடியாமல் மௌனம் சாதித்தனர்... சட்டென காற்று பலமாய் வீச தொடங்க... எங்கிருந்தோ ஒரு மரத்தின் கிளை முரிந்து நாயகிகள் மேல் விழப்போக மூவரையும் பிடித்து இழுத்தான் ரனிஷ்.... ரனீஷின் காலிற்கு மிக அருகிலே விழுந்தது அந்த கிளை.... அந்த கிளையில் ஏதோ ஊருவதைப்போல் இருக்கவும் அதை வீர் தொடப்போக ரவியின் காதுகளில் "ஸ்ஸ்ர் ஸர்ர்" என்றது தெளிவாய் கேட்டது...
ரவி : வீர் அத தொடாத... பாம்பு டா....என மெதுவாக கத்தினான்...
உடனே விலகிவிட்டான்.... சட்டென அந்த பாம்பு எங்கோ பூந்து ஓடிவிட்டது... நிம்மதி பெரிமூச்சு விட்டனர் நாயகர்கள் மூவரும்... நாயகிகளோ பே என முளித்துக்கொண்டிருந்தனர்...😵
நாயகன்களின் Mind voice : பல்லிய பாத்தாளே பத்து ஊருக்கு கேக்குர மாரி கத்துவாலுக இப்போ என்ன பாம்பையே பாத்துட்டு அமைதியா இருக்காளுக ??? என்று அவர்களை தொட... தூக்கத்திலிருந்து எழுந்தவர்கள் போல் முளித்துவிட்டு கத்துவதற்கு வாயை திறக்கவும்....
கத்தபோராளுங்க என்பதை புரிந்துக்கொண்ட நாயகன்கள் தங்களின் ஆலின் வாயை பொத்திவிட்டனர்...
வீர் : கத்தாதீங்க டி... போன பாம்பு அதோட கும்பல கூட்டீட்டு வந்துரப்போது....😣
சரியென தலையை ஆட்டினர்..😷 சுத்தி முத்தி பார்த்த போதே அது அக்காடின் நடுப்பகுதியென தெரிந்தது... சுத்தி எங்கும் இருள் சூழ்ந்து இருந்தது... மெல்லிய நிலவின் வெளிச்சம் அங்கங்கு இருந்தது... தான்யாக்கு அந்த இருளிள் இரத்த சிவப்பில் அன்று தெரிந்த கண்கள் இன்றும் தெரிவது போலே இருந்தது...😰
வீனாவோ ஒரு மரத்தை பார்த்துவிட்டு இது இது.. என தடுமாற...
ரக்ஷா : அதுக்கென்ன டி???😕
வீனா : இந்த மரத்துல நீ...😨
ரக்ஷா : நானா??😨
வீனா : இந்த மரத்துல தான் டி அந்த பேயி உன்ன தொங்கவிட்டு கழுத்தறுத்துச்சு???😰
ரக்ஷா : என்னது ??? என தன் கழுத்தை பிடித்துக்கொண்டாள்....😱😱😱
வீனா : கணவு டி...
ரக்ஷா : அத முன்னாடி சொல்லமாட்டியா டி நாயே...😬
வீனா : ஹிஹி சாரி டி... மரத்த பாத்த ஆர்வத்துல நீ தொங்குனது தான் நியாபகம் வந்துச்சு...😅😅
ரக்ஷா : வரும் டி வரும் ... உனக்கு அதல்லா நல்லா வரும்...
மற்ற நாழு பேரும் தலையில் அடித்துக்கொண்டு சுற்று புறத்தை நோட்டமிட்டனர்...சரி அப்டியே போவோம் என நடக்கத்தொடங்கினர்... இரண்டு நிமிடங்கள் களித்து அவர்களின் பின்னே சில சருகுகள் உடையும் சத்தம் கேட்டது...
இரண்டிரெண்டு பேராக சென்றுக்கொண்டிருந்தனர்..
முதலில் ரவியும் வீரும்
இரண்டாவது ரனீஷும் தான்யாவும்
மூன்றாவது ரக்ஷாவும் வீனாவும்....
ரவியும் வீரும் பின் வருபவர்கள் நடக்கும் சத்தமாயிருக்குமென விட்டுவிட்டனர்... அதேபோல் தான்யாவும் ரனீஷும் கண்டுக்கொள்ளாமல் வர... கடைசியாய் வந்துகொண்டிருந்த இருவரும்... நாம தான எல்லாருக்கும் பின்னாடி வரோம்??? நம்ம பின்னாடி யாரு வர்ரது??? என ஒருவர் மற்றறவரின் கண்களை பீதியுடன் பார்க்க...😨😨 மெதுவாய் திரும்பி பார்த்தனர்... அங்கோ சில சருகுகள் பிந்துப்போய் கொதரிவைத்ததைப்போல் கீழே கிடந்தது... அதுங்கலே அதுங்கல கிழிச்சி கொதரீருச்சு.. நம்ம நம்ம வேலைய பாப்போம் என முன்னாடி மட்டும் பார்த்தவாரு நடந்தனர்...
சட்டென ஒரு குரல் கேட்டது... ஓய் என்று... யாரது என்று அனைவரும் திரும்பி பார்க்க... வந்த இடம் இருட்டாய் இருந்தது....திடீரென தான்யா அம்மா என்று கத்த தொடங்கினாள்... அவள் கத்தியதில் யாரு ஓய் என்று அழைத்தது என்று பார்க்க வந்த ரவியின் கைகளை பயத்தில் பிடித்துக்கொண்டாள் வீனா... 😰
ரக்ஷாவோ அவளுக்கும் ஒரு படி மேல் சென்று அருகில் நின்ற ரனீஷின் கழுத்தை பிடித்து குதித்து அவனின் கைகளிள் அமர்ந்துக்கொண்டாள்... அவனும் அவளை பிடிக்கவே தயாராக இருந்தவன் போல் பிடித்துகொண்டான்... யாரேனும் பார்த்தாள் ரனீஷே் ரக்ஷாவை தன் கைகளில் தூக்கிக்கொண்டான் எனவே நினைப்பர்... ரனீஷோ அவளை இன்னும் இருக்கிக்கொண்டான்...
வீரும் ரவியும் ஏன் இவ திடீர்னு கத்துனா??? என பீதியுடனே பார்க்க.... அதனை பார்த்துவிட்டு இருவரும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு சிரிக்க தொடங்கினர்... ஏன் இவனுங்க சிரிக்கிரானுங்க என கண்களை திறந்த தான்யாவை பார்த்து வீர் கீழே பார் என கண்ணை காட்ட... அச்சோ என் கால புடிச்சிருச்சு ன்னு தான நா கத்துன இவன் என்ன காலையே பாக்க சொல்றான்.... சரி பாப்போம்.... என பார்த்தவிட்டு நிமிர்ந்தவள் அனைவரையும் பார்த்து தலையை சொரிந்துக்கொண்டே சிரித்தாள்....
வீனாவும் ரக்ஷாவும் தங்களின் துணையை விட்டு பிரிந்தனர்..... தான்யாவின் கால் அங்கிருந்த ஒரு புதருக்குள் சிக்கியிருந்தது... அது தெரியாமல் அந்த பைத்தியம் பேய் தான் தன்னை பிடித்துக்கொண்டு விடமாட்டிக்கிது என பயந்து கத்தினாள்...
தான்யா : ஹிஹி சாரி மச்சீஸ்... பேய் தா புடிச்சிக்குச்சுன்னு நெனச்சேன்...😆😆
வீனா: மச்சி அந்த பேய் உன்னலாம் புடிக்காது டி.. உன் கைல கெடச்சா நீ தா புடிச்சிக்குவ...😜
ரக்ஷா : மேடம் மட்டும் பயப்படவே மாட்டீங்க பாருங்க.. உடனே ரவி கைய புடிச்சிட்டு நீ அவள கலாய்க்கிர???😝
வீர் : ஹலோ தங்கச்சி மா... வீனா கூட பரவால்ல... கைய தா புடிச்சிக்கிட்டா... நீ அவளுக்கும் மேல போய் இவன் கைல உக்காந்துட்டீங்க ங்குரத மறந்துராதீங்க....😂
ரக்ஷா : அ...அது ஏதோ பயத்துல ஏறிட்டேன்... அவனும் தான் என்ன தூக்கிக்கிட்டான்...😑
ரவி : அவன் தூக்கல மா... பிடிச்சிக்கிட்டான்... அப்ரம் நீ விழுந்துட்டன்னா??
ரக்ஷா : சரி சரி.. போதும் போதும்...😯 அம்மா 😱😱😱என திடீரென இவள் கத்தத்தொடங்கினாள்....
வீனா : இப்ப என்ன டி.????
ரக்ஷா : பேயி டி என முன்னாடி ஓடினாள்....😰😰
அனைவரும் திரும்பி பார்க்க... அங்கோ ஒரு மரத்தின் நிழல் இருட்டில் பேய் போல் தெரிய... அவளைப்பார்த்து கத்தினர்...
தான்யா : அடியேய் அது பேய் இல்ல டி... இங்க வந்து தொல ...
ரக்ஷா : நா வரமாட்டேன் நீங்க வாங்க... என அவள் கத்தினாள்..
ரவி : ஆமா நீ பாக்கிஸ்த்தான் பாடர்லையும் அவ இன்டியா பார்டர்லையும் இருக்கால்ல??? ஏன்டி இப்டி கத்துரீங்க...
வீர் : 5 அடி எடுத்துவச்சா அவ நிக்கிரா... அதுக்கு இந்த கத்தாடி கத்துவ???
தான்யா : ஏதோ உணர்ச்சி வசத்துல கத்தீட்டேன் விடுங்களேன் டா...
ரனீஷ் : வாங்க டி டா போலாம்... அந்த குட்டி சாத்தான் பயத்துல எங்கையாவது போய் மரத்துல முட்டிக்க போரா...
வீனா : அது என்ன டா "டி டா"????
ரனீஷ் : டிஸ் இரண்டு பேரு இருக்கீங்க.. டாஸ் இரண்டு பேர் இருக்கானுங்க அதான்...
ரவி : ரொம்ப முக்கியம் டா...
ரக்ஷா: அடேய் இன்னும் என்னடா பன்னிக்கிட்டு இருக்கீங்க சீக்கிரமா வந்து தொலைங்கடா...
வீர் : வரோம் டி கத்தாத...
ஆறு பேரும் ஒன்றாக நடக்கத்தொடங்கினர்... திடீரென ஒரு அலுகுரல் வேகமாய் கத்துவதைப் போல் கேட்டது... பெண்கள் மூவரும் ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு நடுங்கினர்.... ஆண்களோ என்ன சத்தம் அது??? என்று ஆராய்ச்சி பார்வை பார்த்துக்கொண்டிருந்தனர்... ஏதோ வீனாவின் காலை உறசுவதுபோல் இருக்கவும் பூச்சியாய் இருக்கும் என காலை உதறினாள்... மீண்டும் மீண்டும் உறசவும் கீழே குனிந்து காலை பார்க்க.. ஒன்றுமே தென்படவில்லை.... அப்போது யாரோ இவர்களின் பின் பக்கம் நிற்ப்பதைப்போல் இருக்கவும் ஒரே நேரத்தில் அனைவரும் திரும்ப... ஒரு கருப்பு போர்வை போல் ஏதோ ஒன்று அந்தரத்தில் தொங்கியது... கண்கள் விரிய அதையே பார்த்தனர்... காலை பின்னோக்கி எடுத்வைத்தனர்... சட்டென ரவி தெரியாமல் ஒரு மரக்கட்டையை மிதித்து விட... அந்த சத்தத்தில் அந்த கருப்பு போர்வைமேல் படர்ந்திருந்த அனைத்து வௌவால்களும் பரபரவென பறந்தது... உடனே அந்த போர்வையும் கீழே விழுந்து விட்டது... வௌவால்களின் இரைச்சல் தாங்காமல் காதுகளை தங்கள் கைக்கொண்டு மூடிக்கொண்டனர்... இரைச்சல் அடங்கியதும் ஏதோ ஒரு முனகல் அனைவரின் காதிலும் விழுந்தது... அது ஒரு பெண்னின் முனகல்... கண்களை அகல விரித்தவாரு அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்தனர்...
அந்த நேரம் சிலர் ஒரு பெண்ணை கைகால்கள் கட்டியவாரு அவள் வாயையும் ஏதோ துணியால் இருக்கி கட்டி இழுத்து வந்தனர்... அந்த முனகல் அவளாள் உருவானதே... ஆறுபேர் நிற்ப்பதைக்கூட கண்டுக்கொள்ளாமல் இவர்களை தான்டி அந்த பெண்ணை மண்ணில் போட்டவாரு இழுத்து சென்றனர்...
அவளின் முகமோ அவளின் நீண்ட கூந்தலில் மறைந்திருந்தது... அவளின் வெள்ளை தாவணி நுனியில் கிழிந்தும் மீதி கசங்கியவாரும் இருந்தது... மயக்கத்தில் முனகுகிறாளென்பது தெள்ளத்தெளிவாய் புரிந்தது...
எங்கும் இருள்.... லேசாய் இருந்த நிலவின் ஒளியும் கருமையை பரைசாற்றியது... மரங்களோ நீண்டு நீண்டு காணப்பட்டது... கதாநாயகர்களும் அவர்களை பின் தொடர்ந்தனர்... அவர்கள் அறியாமல் அவர்களை பின் தொடர்ந்தது அந்த உருவம்..... தன் கைகளிள் கொத்துக்கொத்தாய் சாவிகளை வைத்து ஆறுபேரையும் வெறியுடன் பார்த்துக்கொண்டே திடீரென மறைந்தது....
தொடரும்....
Hii guys.... intha ud epdi irukku???? fashback ithula start aaidum nu tha nenachen... bt illa... nethe intha ud aa typ panni vachitten... bt post panna maranthu evening ee thoongeetten... nxt ud innikku ni8 kulla post panna try pandren... marakkama comment pannunga ppa...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro