அவள்:17
Frst update panna part la some prblms irunthathu ... athanala thirumba athey part aa update pannirkken....
வீரின் இதயம் படபவென விடாமல் அடித்தது...தான்யாவை ஒரு முறை பார்த்தவன் அவள் வதனத்தை தன் கண்களுள் தேக்கிக்கொண்டு அவன் பாதையில் சென்றான்...இவ்விருவரும் ஹாஸ்பிட்டலை விட்டு வந்து முழுதாக 4ங்கு மணிநேரம் கடந்திருந்தது....மற்ற நாயகர்கள் ஷிஃப்ட் முடிந்து வெளியேரவும் அவர்கள் முன் வந்தார் அம்முதியவர்....தான்யாவும் வீரும் மரத்தடியில் கண்ட அதே முதியவர்...
முதியவர்: தேடிச்சென்ற இருவரும் வழிநடுவில் பிரிய...
தான் மரணப்பாதையில் இருக்கிறொம் என அறியாமல் அவள்...
அவளுக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ என துடிக்கும் அவன்...
செல் விரைந்து செல்...
உன் தோழர்களை அவள் நெருங்கும் முன் காட்டிற்கு செல்....
என கூறிக்கொண்டே சென்றார்...
ரனீஷ்: என்ன சொல்றாரு அவரு???
வீனா: ஒன்னுமே புரியல டா...
ரவி: அவரு சொன்னதுல ஏதோ மறஞ்சிர்க்குன்னு நெனக்கிரேன்...அவரு நமக்கே சொன்னாமாரி எனக்கு தோனுது...
மற்ற மூவரும்: எனக்கும் தா...
வீனா: ஏதோ தப்பா நடக்கப்போது... இந்த வீரும் தான்யாவும் கெளம்புனதுலேந்து என் மனசே சரி இல்ல..
ரக்ஷா: என்ன டி சொல்ற???
வீனா: ஆமா டி...
ரக்ஷா: இத ஏன் டி எங்கள்ட்ட முன்னாடியே சொல்லல???
வீனா: எதுக்கு உங்களையும் கொளப்பனும்னு தா டி சொல்லல...
ரனீஷ்: தப்பு பன்னிட்ட டி..
ரக்ஷா: அவ மறச்சா ஓக்கே...அத ஏன்டா தப்ப பன்னன்னு லாம் சொல்ற...??
ரனீஷ் : இல்ல டி.. என்னைக்குமே நம்ம உள்ளுணர்வுக்கு மதிப்பு குடுக்கனும்...மூளையால தெரிஞ்சிக்க முடியாததக்கூட நம்ம மனசு முன்னாடியே தெரிஞ்சுக்கும்....அது நமக்கு பன்ற எச்சரிக்கை யா கூட இருக்களாம்...
ரவி: அப்போ வீரும் தான்யாவும் பிரச்சனைல இருக்காங்கன்னு சொல்லவர்ரியா???
ரனீஷ்: அது...என்னால உறுதியா சொல்ல முடியாது டா...
ரக்ஷா: வீட்டுக்கு போனதும் காள் பன்ன சொன்னோம்ல ஏன் அவங்க காள் பன்னல??நம்ம காள் பன்னிப்பாக்களாமா???
ரவி: ம்ம்ம் நா வீர்க்கு ட்ரை பன்றேன்...
வீனா : நா தாயாக்கு காள் பன்றேன்...
இருவருக்கும் வந்ததோ நாட் ரீச்சபல் என்னும் பதில்...ரக்ஷா ரனீஷீம் சேர்ந்துக்கொண்டு காள் செய்தனர்... எதர்க்கும் பயனில்லை...
வீனா: போன் போக மாட்டுது டா... எனக்கு பயமா இருக்கு...
ரனீஷ் : பயப்படாத டி... போன கவனிக்காம இருந்துர்க்களாம் ல டி...
ரக்ஷா: அது எப்டிடா இரண்டு பேரும் பாக்காம இருப்பாங்க??
ரவி: வாங்க நாம வீட்டுக்கு போய் பாப்போம்... ஒரு வேல தூங்கீர்க்களாம்ல???
அதுவே சரியென பட நாழ்வரும் வீட்டிற்க்கு விரைந்தனர்...நம் மதிவாளயமோ பூட்டியபடி இருந்தது...அதனைக்கண்ட நாயகிகள் இருவரும் அதிர்ச்சியடைய... ரவி அருகில் எங்கேனும் இருக்கிரார்களா என நோட்டமிட... ரனீஷோ யோசிக்கத்தொடங்கினான்...
அம்முதியவர் கூறியதை அசைபோடத்தொடங்கினான்...
ரனீஷ்:
தேடிச்சென்ற இருவரும் வழிநடுவில் பிரிய
இதுக்கு அர்த்தம் இரண்டு பேர் எதையோ தேடி போனவங்க வழில பிரிஞ்சி போராங்க...
தான் மரணப்பாதையில் இருக்கிறொம் என அறியாமல் அவள்...
அந்த இரண்டு பேர்ல ஒன்னு பெண்... அவங்க ஆபத்துல இருக்கோம் னு தெரியாம போராங்க...
அவளுக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ என துடிக்கும் அவன்...
அந்த இன்னோறு ஆல் ஒரு ஆண்... அந்த பொண்ணுக்கு எதாவது நடந்துடுமோன்னு பயப்புடுராரரு...
செல் விரைந்து செல்...
உன் தோழர்களை அவள் நெருங்கும் முன் காட்டிற்க்கு செல்...
உன் Friends ட்ட சீக்கிரம் போ அவ வர்ரதுக்குள்ள ன்னு இந்த லைன் ல தெரியுது.. பட் யாரந்த பொண்ணும் பையனும்.... யாரந்த அவள்...
என தீவிர யோசனையில் மூழ்கியவனுள்
தீடிரென அம்முதியவர் குரலில் " ஆபத்தில் இருப்பது உன் தோழர்களே"... என கேட்டது... திடுக்கிட்டு கண்களை திறந்தவன் சுற்றி முற்றி முதியவரை தேடினான்...தொலைவிலிருந்த மரத்தின் அடியில் நின்று இவர்களை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்...கண்களை தேய்த்துக்கொண்டு மீண்டும் அங்கு நோக்கியவன் தெரிந்ததோ மரம் மட்டும் தான்... தன் நண்பர்களிடம் திரும்பியவன் சூழ்நிலை உணர்த்த முயன்றான்...
ரனீஷ்: டேய் நம்ம தான்யாவும் வீரும் ஆபத்துல இருக்காங்க டா...
வீனா: என்னடா சொல்ற???
ரனீஷ்: உண்மையா தான் சொல்றேன்... அவங்க இரண்டுப்பேரும் காட்டுக்குள்ள தான் இருக்காங்க...
ரவி: காட்டுக்குள்ளையா??? உனைக்கெப்புடி டா தெரியும்??
ரனீஷ் : அந்த தாத்தா சொன்னாரு ல்ல சில வரிகள்... அதுல இரண்டு பேர் ஆபத்துல இருக்காங்க சீக்கிரம் போங்கன்னு இருக்கு... அது யாரா இருக்கும்னு யோசிச்சப்போ எனக்கு அந்த தாத்தாவோட குரல்ல உன்னுடைய தோழர்கள்தா ஆபத்துல இருக்காங்க ன்னு கேட்டிச்சு டா....என்ன நம்புங்க....
ரக்ஷா: யாரு டா அந்த தாத்தா??? நம்ம Friends தா அங்க இருக்காங்கன்னு எப்டி டா நம்புரது???
ரனீஷ்: ப்லீஸ்... என்ன நம்புங்க டி... ரவி நம்புடா...ஒரு பொண்ணும் பையனும் போய்ர்க்காங்கன்னு தா அந்த லைன்ஸ் மீன் பன்னுது... And It also means that
they are in a separate way....நம்ம வீரும் தான்யாவும் கூட இங்க இல்ல டா....
ரக்ஷா: நா உன்ன நம்புரேன் டா...
வீனா: எனக்கும் ரனீஷ் சொல்றது உண்மையா இருக்களாம்னு தோனுது டி... நம்ம போலாம் ரவி... நேரத்த கடத்த வேண்டாம்...
ரவிக்குள்ளும் தன் நண்பர்கள் ஆபத்தில் இருகிறார்கள் என உணர்வு எல அவனும் செல்ல ஒப்புக்கொண்டான்.... ஒரு முறை ஊர் முழுவதும் தேடிவிடலாம் என ரனீஷ் கூற...ஊர் முழுவதும் தேடி இருவரையும் காணாமல் பயம் அதிகரித்தது... அப்பொழுது...அவ்வூரில் வசிக்கும் ஒருவர் இவர்கள் அருகில் வந்தார்...
அவர்: என்ன டாக்டர் தம்பிகளா??? என்னத்த தேடுரிஹ???
ரவி: அண்ணா இவங்க இரண்டு பேரையும் எங்கயாவது பாத்தீங்களா???
என வீர் மற்றும் தான்யாவின் புகைப்படத்தை காட்டினான்.... அதனைககண்ட அவர்...
அவர்: அட இந்த தம்பியும் பாப்பாவும் இன்னைக்கு மதியம்ப்போல காட்டுக்கு போர வழில போனாங்க தம்பிகளா...
அதிர்ச்சியுடன் இருவரும் : அப்போ அந்த தாத்தா சொன்னதுல்லாம் உண்மையா???
அவர்: எந்த தாத்தா தம்பி???
ரனீஷ் : அதுல்லாம் ஒன்னுஇல்ல ண்ணே... ரொம்ப நன்றி நாங்க கெளம்புரோம்...
காட்டில்...
கண்கள் எட்டிய தூரம் வரை ஒன்றும் புலப்படவில்லை நம் வீருக்கு... தான்யாவையும் தனியாக விட்டுவிட்டாயே என தன்னைத்தானே கடிந்துக்கொண்டவன் தன் எதிரில் இருந்த பெரிய மரத்தின் ஒரு வேரில் சாய்ந்து அமர்ந்தான்... அருகிலே மூச்சுக்காற்றும் வேகமாய் ஓடும் கால்களின் சத்தமும் கேட்க... எலுந்து சுற்றி பார்த்தான்... சற்றே தொலைவில் நான்கு ஓனாய்கள் தன் நாக்கை நீட்டிக்கொண்டு நின்றது... அதனை கண்டவன் தன் கைககளாள் வாயை மூடிக்கொண்டு மூச்சு விடுவதும் கேக்காதவாறு மெதுமெதுவாக மூச்சு வாங்கினான்.... மத்திற்க்கு கீழ் மூன்று பேர் இருக்கும் அளவு அகலமான ஒரு பொந்தைக்கண்டவன் அதனுள் சென்று தன்னை மறைத்துக்கொண்டான்...
கண்களில் ஏதேனும் தெரிகிரதா என கூர்ந்து நோக்கிக்கொண்டே வந்தாள் தான்யா...வீரிர்க்கு அழைக்கலாம் என தன் போனை எடுக்க அதிலோ சிக்னலில்லாமல் இருந்தது... தன் கால்களால் தரையில் உதைத்தவள் "சிக்னல் கூட இல்லை" என சலித்துக்கொண்டாள்...(மேடம்க்கு தான் சிட்டில இருக்குறொம்னு நெனப்பு... இருக்குரது காடுல அத மறந்துட்டு சிக்னல் இல்லங்குரா..) எதிரில் இருந்த மரத்தின் வேரை கவனிக்காமல் அதில் தடுக்கி கீழே விழுந்தாள்... முழங்கையிலும் நெற்றியிலும் சீராய்ப்புகளாய் இருக்க.. ஆஆ... என்ற முனகளுடன் தன் கைக்குட்டை கொண்டு தன் சீராய்ப்புகளில் தண்ணீரை சிறிது சிறிதாக வைத்தாள்...காட்டில் அமைதி எங்கும் பரவியிருந்தது... அவளின் முனகல் சத்தமே சத்தமாய் எதிரொலித்தது....
அங்கிரிந்து எலுந்தவலின் கண்களில் பட்டது தொலைவில் இருந்த மரத்தின் பின் நின்று இவளையே பார்த்துக்கொண்டிருந்த அவ்வுருவம்....
தான்யா: ஹேய் யாரு நீ???
அவ்வுருவத்திடமிருந்து எவ்விதபதிலும் இல்லை...வேக எட்டுக்களுடன் அதன் அருகில் சென்றவள்
தான்யா: கேக்குரன்ல??? யாரு நீ??? உனைக்கிங்க என்ன வேலை???
திரும்பி நின்றுக்கொண்டே அவ்வுருவம்: அதே கேள்வி ய நா உன் கிட்ட கேட்டா நீ என்ன சொல்லுவ???
தான்யா: நா ஏன் சொல்லனும்??? நீ யாருன்னே எனக்குத்தெரிராது...
உருவம்: நீ யாருன்னு எனக்கும் தா தெரியாது... நா மட்டும் ஏன் சொல்லனும்???
தான்யா: அப்ரமெதுக்கு என்ன அப்டி கண்ணக்கூட மூடாம பாத்துட்டு இருந்த???
இப்பொழுது அவ்வுருவத்திடமிருந்து எந்த பதிலுமில்லை.... மாறாக முன் நடக்கத்தொடங்கியது... இவளும் கத்திக்கொண்டே அதன் பின் சென்றாள்... திடீரென திரும்பிய அவ்வுருவம் அவள் எதிர்பாராத சமயம் அவள் கழுத்தை தன் கூர்மையான விரல்கள் கொண்டு நெரித்தது... அதனிடமிருந்து திமிரியவள் கீழே விலுந்தாள்... நிமிர்ந்து பார்த்தவளின் முன் கண்கள் இரத்த சிவப்புடனும் நீன்ட முடிகள் முகம் முழுவதும் மூடியிருக்க கண்கள் மட்டும் தனித்துத்தெரிந்து காற்றில் பறந்துக்கொண்டிருந்தது....... அவள் கண்ட காட்சியில் தான்யாவின் கண்கள் மூட மறுத்தது... பயத்தில் நா எலவில்லை...தன் கூர்மையான நகம் கொண்டு அவளை கீர நெருங்கியது... அமர்ந்தவாரே பின் நகர்ந்தாள் தான்யா... தன் பலம் கொண்டு எலுந்தவள் தைரியத்தை வரவைத்து யார் நீ என சத்தமாக கேட்டாள்... அவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்ததென கேட்டாள் தெரியாது என்பதே அவளின் பதில்...அவளின் கேள்வியில் மெச்சுதல் பார்வைப்பார்த்த அந்த உருவம்
உருவம்: ரொம்ப தைரியம் தான் உனக்கு...
அதன் குரல் அவளுக்கு நெருங்கியவர் யாரையோ நினைவூட்ட முயன்றது.... பலக்கப்பட்ட குரல்... ஆனால் குரோதமாய் கேட்டிராத குரல் குழம்பிய தான்யா அவளின் கழுத்திற்கு அருகில் கேட்ட மூச்சுக்காற்றின் சத்தத்தில் நினைவிற்க்கு வந்தாள்... மெதுவாக திரும்பியவளின் முன் திடீரென வந்தாள் அவள்....அவளின் கொடூரமான கோலத்துடன்.... அதனைக்கண்ட அடுத்த நொடி அவள் வந்த எதிர் திசையில் ஓடத்தொடங்கினாள்....கண்களை மூடினால் அதே உருவம் வந்து சென்றது.... அவள் பின்னே வந்த உருவம் திடீரென முன் தோன்றியது... என்ன செய்வதென தெரியாமல் அங்குமிங்கும் ஓடினால்... எங்கு சென்றாலும் அவள் முன் வந்து நின்றது அவ்வுருவம்...கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது....வீர் என கத்தினாள்...
மரத்தினுள் இருந்த வீரின் மனம் ரனமாய் வலித்தது.... தான்யா ஆபத்தில் இருக்கிறாள் என கதறி அழுதது....அவனையும் அறியாமல் கண்ணிலிருந்து கண்ணீர் விடாமல் வந்துக்கொண்டிருந்தது.... ஓனாய்கள் சென்றதை உறுதிப்படுத்தியவன் தான்யாவை தேடி ஓடினான்....நான் இருக்கும் வரை உனக்கு ஒன்றும் ஆகாது டி... என ஜபம்ப்போல் அதையே கூறிக்கொண்டான்....அவன் இதயத்தை தான்யா சிறைபிடித்துவிட்டாளென அப்பொழுதே உணர்ந்துக்கொண்டான்.... ஆனால் தனு என்னும் கேள்வியும் எலாமலில்லை... அனைத்தையும் தூக்கி எரியவைத்தது தான்யாவின் ஆர்வி என்னும் அலரல்....
மற்ற நாயகர்கள் காட்டில் நுழைந்தவுடன் எங்கிருந்து தேடுவதென தெரியாமல் அவகள் இருவருமிருக்கும் எதிர்திசையின் எல்லையில் இருந்தனர்.... தான்யாவின் அலரல்
இவர்கள் காதிற்க்கு எட்டாமல் இருந்தது... அவர்களின் கெட்ட நேரமோ?????
தான்யாவிற்கு ஏதேனும் நேர்ந்துவிடுமா???? வீர் அவளை காப்பாற்றி விடுவானா??? ரவி ரனீஷ் வீனா ரக்ஷா வீர் மற்றும் தான்யாவின் நிலையை அறிவார்களா????அடுத்த அத்யாயத்தில் கான்போம்....
தொடரும்....
Hiii guys innikke nxt update poduvannu na nenaikkave illa.... unagala wait panna waikka koodathunnu thaa ivlo seekirom typ panni ud potrukken mmistakes iruntha ignore pannidunga.... chinna ud tha adjust pannikkonga ppa... nxt ud friday kkulla potruven.... share ur comments guys😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro