அன்பு:25
தன் அருகிலமர்ந்த மகன்களை பார்த்து
இரத்தினம் தாத்தா: டேய் பசங்களா...வர்ர புதன் கிழமை நிச்சயம் பிக்ஸ் பன்னீர்க்கோம்...அப்ரம் ஷான்த்தியோட முத தங்கச்சிய நம்ம விக்ரம்க்கு பேசீர்க்கேன் டா...பேரு விமலா..நல்ல பொண்ணு...படிச்சு முடிச்சிட்டு சென்னைல நம்ம கம்பெனில தான் வேல பாக்குதாம்...உனக்கும் இவனுக்கும் ஒரு வயசு தா வித்யாசம்...இரண்டு பேரோட கல்யாணத்தையும் ஒன்னா பாத்துட்டா நிம்மதியா இருப்பேன் டா...இந்தா அந்த பொண்ணு போட்டோ...என்று வசன்த்திடம் கொடுத்தார்...
விக்ரமிற்க்கு பேசீர்க்கேன் என்பது வரை மட்டுமே விக்ரமின் மூளையில் பதிந்தது...அதன் பின் இருவர் பேசியதையும் இவன் கவனிக்கவில்லை... அவன் மனம் அதிர்ச்சியில் உறைந்திருந்தது...
வசன்த்: பொண்ணு ஷான்த்தி மாதிரியே இருக்கா ப்பா..இந்தா டா விக்ரம் பொண்ணப்பாரு...
பட்டென எழுந்த விக்ரம் வராத காலை வந்ததாக கூறி போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்...
விக்ரம்: Mind voice: நா எப்டி வேற ஒரு பொண்ண கல்யாணம் பன்னிப்பேன்...என் வாணி யோட எடத்த எப்டி வேற பொண்ணுக்கு என்னால குடுக்க முடியும்...வாணி ய மறந்து என்னால வாழ முடியுமா??? நா பொண்ண புடிக்கிலன்னு சொன்னா அப்பா ஏத்துக்குவாரு...ஆனா அண்ணி...கல்யாணம் வேணாம்னு சொல்லீட்டா...என் அண்ணணோட சந்தோஷத்த நானே அழிக்க மாட்டேன்...என் ஒரு தலை காதல் என்னோடயே மறையட்டும்...வாணிக்கிட்ட சொல்லாம இருந்ததும் நல்லது தான்...
வீட்டிற்க்குள் நுழைந்தவன்
அந்த பொண்ணையே கல்யாணம் பன்னிக்கிறேன்...என கூறிவிட்டு அவன் அறைக்கு விறுவிறென சென்றுவிட்டான்...அன்று இரவு முழுவதும் தூங்கா இரவாக கடந்தது விக்ரமிற்க்கு...
நாட்கள் வேகமாக சென்றது...ஒரு வாரம் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை...நிச்சயத்திற்க்கும் முதல் நாள்...அன்றுக்கூட விக்ரம் விமலாவின் படத்தை பார்க்கவில்லை...
வசன்த்தும் ஷான்த்தியும் திருமணக்கணவில் சுற்றிக்கொண்டிருந்தனர்...திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த உடனே தன் நிபந்தனைகளுக்கும் சம்மதம் கிடைத்தததில் மகிழ்ச்சியுற்றாள் ஷான்த்தி...தன் கணவான ஆஷ்ரமத்தை இன்னும் மேம்படுத்த இரத்தினம் தாத்தாவும் உதவப்போவதாக கூறியது இன்னும் ஆறுதலாக இருந்தது...
தன் தங்கை விமலாவிற்க்கும் தன்னுடனே திருமணமென்றதும் இறக்கைக் கட்டி பறக்காத குறை தான்...தன் இரண்டாவது தங்கையை கரைசேர்த்துவிட்டாள்...என் பொருப்பு முடிந்தது என்று யோசித்துக்கொண்டிருந்தாள் ஷான்த்தி..
அன்று மதியம் ஆஷ்ரமத்தில் வந்திரங்கினர் ஷான்த்தியின் இரண்டு தங்கைகளான விமலாவும் வனோஜாவும்....தாய் தந்தையை இழந்ததும் சோர்ந்துவிடாமல் தன் தங்கைகளையும் பார்த்துக்கொண்டே தன் கல்வியிலும் கண்ணாய் இருந்தாள் ஷான்த்தி...தங்கைகளுக்காக எதையும் விட்டுக்கொடுப்பாள்...இருவருக்கும் இன்னொரு தாயாய் மாறினாள் ....பதினைந்து வயதிலே இவ்வளவு பொருப்பா? ??? என்று ஆச்சர்யப்படாத ஆலே இல்லை...
அவர்களின் விருப்பப்படியும் ஆசை படியுமே அனைத்தையும் செய்தாளும் தன் கண்டிப்பில் நல்வழியிலே வளத்தாள்...தன் பட்டப்படிப்பை முடித்த விமலா தன் அக்காவுக்கு உதவியாய் இருந்தாள்...சில நாட்களிளே வந்தது அவளின் வேலை வாய்ப்பு...அதை வீனடிக்காமல் விமலாவையும் அவள் துணைக்காக வனோஜாவையும் பட்டப்படிப்பிற்க்கு அங்கு மாற்றினாள்...தங்கைகளை அன்புடனும் பல அறிவுரைகளுடனும் அனுப்பிவைத்தாள்...அழுதுக்கொண்டே சென்றவர்களை பார்க்க முதல் நாள் பள்ளிக்கு செல்ல மாட்டோம் என அழுது அடம்பிடித்த அவளின் குட்டி தங்கைகளாய் தெரிந்தனர்...
தானாய் வந்த கண்ணீரை அவர்கள் அறியாமல் துடைத்தவள் தனுக்கு கவலை இல்லை என்று தன் உணர்வுகளை மறைத்துக்கொண்டாள்....இன்று வீடு திரும்பிய தங்கைகளை ஆசை தீற கட்டிக்கொண்டு முத்தமிட்டாள்...
காலை அழகாக விடிந்தது...ஆஷ்ரமத்தில் பரபரப்பாக அனைவரும் அலைந்துக்கொண்டிருந்தனர் ....தங்கள் ஆஷ்ரமத்தின் செல்ல பிள்ளைகளான ஷான்த்தி விமலா மற்றும் வனோஜா இங்கிருந்து செல்லப்போகின்றனர் என ஒரு பக்கம் கவலையாக இருந்தாலும் மன நிறைவுடன் நிச்சய வேலையை செய்துக்கொண்டிருந்தனர்....நிச்சயம் எங்கள் வீட்டிலே வைத்துக்கொள்ளளாம் என இரத்தினம் தாத்தா கூறியதாள் அனைவரும் சூரியன் சாயும் நேரம் அங்கு செல்ல புரப்பட்டனர்....
அது வீடா? ???அரண்மனை யா என யோசிக்கும் அளவு இருந்தது...அவரின் வீடு... வெள்ளை போர்வையை போர்த்திக்கொண்டு அங்கங்கு இடைவேளை மஞ்சல் நிறத்தில் இருப்பதுப்போல் கல்லால் அலங்கரிக்க பட்டிருந்தது...அழகில் மிலிரும் அரண்மனைக்கு இன்னும் அழகு சேர்க்கும் விதமாய் நிறம்மாரும் பல்புகள் மாலை மாலை தொங்கிக்கொண்டிருந்தது....பூக்களாள் வாசலெங்கும் அலங்கரித்து இருந்தனர்...அங்காங்கே சிறுவர்கள் ஓடிக்கொண்டிருந்தனர்.... ஒரு பக்கம் பெரியவர்கள் அமர்ந்திருந்தனர்...மறுபக்கம் இளம் பெண்கள் புடைசூழ்ந்து நின்றுக்கொண்டிருந்தனர்....
வசன்த்தும் விக்ரமும் சிரித்த முகத்துடன் மேடையேரி வர....விக்ரமின் இதழ்கள் புன்னகைத்தாளும் கண்களிரண்டும் கவலையை தத்தெடுத்திருந்தது....ஷான்த்தியும் விமலாவும் குனிந்த தலை நிமிராமல் வந்து அமர்ந்தனர்....வசன்த் தன்னவளை காதலுடன் நோக்க...அதற்க்கு நேர்மரையாக விக்ரம் தரையை நோக்கிக்கொண்டிருந்தான்....வனோஜா இவைகளை கீழ் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.....
மோதிரம் மாத்திக்கொள்ள இருவரையும் அழைக்க ....எழுந்து நின்றனர்....முதல் ஜோடியான வசன்த்தும் ஷான்த்தியும் மோதிரம் மாற்றிக்கொள்ள...அடுத்ததாக அனைவரின் கண்களும் விக்ரம் விமலாவின் பக்கம் திரும்பியது....தன் இதயத்தை கல்லாக்கிக்கொண்டு குனிந்தவாரே அவனின் இடது கரத்தை நீட்டினான்...விமலாவும் குனிந்துக்கொண்டே தன் கையை அவன் கையில் கொடுத்தாள்....இவன் அனிவித்து முடித்ததும் அவளின் புறம் விக்ரமின் கை நீட்டப்பட .....மோதிரத்துடன் அருகில் வந்தாள் விமலா...மோதிரம் அணியும் நொடி அவன் புறங்கையில் பட்ட நீர் துளிகள் அவள் முகத்தை பார்க்க சொல்லி உந்துதல் கொடுக்கவும் கூட்டத்திலிருந்த ஒருவர் " மாப்பிள்ளை எவ்ளோ நேரம்தான் தரையையே பாப்பீங்க கொஞ்ச பொண்ணையும் பாருங்க " என்று சத்தமிட....
ஒரே சமயம் இருவரும் தலையை நிமிர்த்தி பார்த்தனர்...இருவரின் கண்களும் ஆச்சர்யத்தில் பிளந்துவிட்டது....தான் காண்பது கணவா நெணவா என அப்படியே நிற்க....விக்ரமின் நா தன்னையும் அறியாமல் "வாணி" என்றது....இவள் ஏன் இப்படி நிக்கிறாள் என அவள் அருகில் நின்ற ஷான்த்தி விமலாவின் தோலில் இடிக்க....சுயநினைவை அடைந்தவள் தாவி அவனை "ராஜ்" என்னும் அழைப்போடு கட்டிக்கொண்டாள்...விமலா ஆகிய விமலவாணி....
அவளின் அனைப்பில் உலகிற்க்கு வந்தவன் முழுமனதுடன் சிரித்துக்கொண்டே அவளை கட்டிக்கொண்டான்....
தன் தம்பியின் செய்கையிலே....இவன் இப்பெண்ணை காதலிக்கிறானோ???இல்லை இல்லை காதலித்தானோ???? அதனால் தான் நேற்றுவரை சோகமாய் இருந்தான் போல...இவனின் நிராகரிப்பில் என் திருமணத்தில் பிரச்சனை வந்து என் மனம் வருந்திவிடுமோ என்று தான் இத்திருமணத்திற்க்கு சம்மதித்திருக்கிறான்...என கன நேரத்தில் யூகித்த வசன்த் இப்பொழுது நிலமையை மாற்றுவது என் பொருப்பு...என்று நினைத்துக்கொண்டு....
வசன்த்: தம்பி சார்...தம்பி சார்...கொஞ்சொ உலகத்துக்கு வாங்க.... பெரியவங்களாம் இருக்காங்க இரண்டு பேரும் என்ன பன்னுரீங்க???? மச்சினிச்சி மேடம் உங்க வருங்கால ஹஸ்பன்ட யாரும் தூக்கீட்டு போய்ட மாட்டாங்க...என் தம்பிய கொஞ்சம் விடுரீங்களா????
அவனின் கேலி பேச்சில் நிலமை சகஜமாக மாரியது...இவன் கேலியில் இருவரும் சிரித்துக்கொண்டே விலகி நின்றுக்கொண்டனர்....
நிச்சயம் முடிந்து இரு ஜோடிகளும் பிரிந்து தங்கள் இருப்பிடத்தை அடைந்தனர்....இங்கு விக்ரமும் அங்கு விமலவாணி யும் தங்களின் காதலை தெரிவித்தனர்....
விமலா: அக்கா....நா அவர காதெலிச்சேன் தா...ஆனா அவரும் என்ன தான் காதலிச்சாருன்னு இன்னைக்கு தா தெரிஞ்சிக்கிட்டேன்....என்ன அறியாம வந்த காதல தூக்கிஎரிய முடியல...அவரு எங்க??? நா எங்க??? அதனால தா என் காதல மறச்சேன்....
ஷான்த்தி : அப்ரம் ஏன்டி கல்யாணத்துக்கு ஓக்கே சொன்ன.???
வனோஜா : நீ மாமா வோட போட்டவக்கூட பாக்கலையே க்கா...
விமலா: நாங்க எதாவது கேட்டா நீ முடியாதுன்னு சொல்லீர்க்கியா க்கா??? நீ யா ஒன்னுக்கேக்கும் போது எப்டி என்னால முடியாதுன்னு சொல்ல முடியும்ம்...நீ பட்ர கஷ்டமே போதும்னு தாக்கா சொன்னேன்....எனக்கு அவரதா நிச்சயம் பன்னபோரேன்னு தெரியாது வனோ....யாரா இருந்தா என்னன்னு தா வந்தேன்....என்றாள் அழுகையோடு...
தன் தங்கையின் அழுகையைக்கண்டு தானும் அவளை கட்டிக்கொண்டு கண்ணீர் சிந்தினாள் ஷான்த்தி...இதில் பார்வையாளராக மாறிப்போனாள் வனோஜா....
விக்ரம் : நல்ல வேல அண்ணா ....நீ பேச்ச மாத்தி காப்பாத்துன இல்ல என்ன ஆகுரது...
வசன்த் : அது இருக்கட்டும் .....உன் காதல் காவியத்த கொஞ்சம் சொல்லு கேப்போம்..
விக்ரம் : ஹிஹி அண்ணா....அது...
வசன்த் : சொல்லு தம்பி அண்ணா வெய்ட்டிங்....
விக்ரம் : பாத்த கொஞ்ச நாள்ளையே எனக்கு அவள புடிச்சிர்ந்துச்சு ண்ணா...போபப்போக காதலா மாறிடுச்சு...ஆனா ஏன்ட்டேந்து அவ விலகியே இருக்குரது தாற் கஷ்ட்டமா இருந்துச்சு....அவளப்பத்தி அப்பாட்டையும் உன்ட்டையும் சொல்லனும்னுதான் கெலம்பி வந்தேன்...இங்க வந்தா...உன் கல்யாணம்...அந்த சந்தோஷத்துல நா வந்த காரணத்த மறந்துட்டேன்....அப்பா எனக்கு பொண்ணு பாத்துர்க்கேன்னு சொன்னதக்கேட்டதும் என்ன பன்றதுன்னே தெரியல....உன் சந்தோஷம் ததான் முக்கியம்னு தோனுச்சு அதான் ஓக்கே சொன்னேன்....
தன் தம்பியை அறைத்துக்கொண்ட வசன்த் அவன் முதுகில் ஒரு அடி போட்டு
வசின்த் : என்ட்ட சொல்லீர்க்களாம்ல டா...அண்ணா நா எதுக்கு இருக்கேன்...சரி விடு...இனிமே இதப்பத்தி பேச வேண்டாம்...விமலாவோடு சந்தோஷமா வாழு...
விக்ரம் : தன்க்குயூ ண்ணா...
மறுநாள் டக்கென ஓடிவிட்டது...மனமகன்கள் இருவரும் மேடையில் மந்திரம் ஓதியபடி அமர்ந்திருந்தனர்...மனமகள்கள் வரவும் தன்னவளைக்காண திரும்பிய கண்கள் திரும்ப மறுத்தது...அழகு பதுமையென நடந்து வந்தவர்களை கண்ணெடுக்காமல் பார்த்தனர் விக்ரமும் வசன்த்தும்....
நிலமையை புரிந்து கடினப்பட்டு கண்களை திருப்பிக்கொண்டனர்....சில நிமிடங்களில் மனமகள்களின் கழுத்தில் தங்க தாளிளை அணிவித்து முழுமையாக தன்னனவள் என்னும் பட்டத்தை அளித்தனர் மனமகன்கள் இருவரும்...ஆனந்த கண்ணீருடன் மூவரையும் தன் ஆஷ்ரமத்திலிருந்து வழி அனுப்பிவைத்தார் மதர் ரினி...
மகிழ்ச்சியாக சென்றது நாட்கள்....விக்ரமும் விமலாவும் அழுவலகத்தை கவனிக்க வேண்டுமேன்பதாலும் வனோவின் படிப்பு முடியப்போகும் சமயம் என்பதாளும் வனோஜாவையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டனர்.... கோவையிலே தங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர் வசன்த் ஷான்த்தி தம்பதியர்...ஷான்த்தியும் விமலாவும் இரத்தினம் தாத்தாவை சொந்த தந்தையாய் நினைத்து வாழ்ந்தனர்...அவரும் மூவரையும் தன் பெண் பிள்ளைகளென்றே வாழ்ந்து வந்தார்....விமலா சென்னையிலிருந்தாளும் கோவைக்கு வாரத்தில் இருமுறையேனும் வந்து இரத்தினம் தாத்தாவை நன்றாக கவனித்து அக்காவிற்க்கு உதவிக்கொண்டிருப்பாள்....வசன்த்தின் அழுவலக பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லுவாள்....
நாட்கள் உருண்டோட சென்னையிலிருந்து விமலா கருவுற்றிருக்கிறாள் என்னும் நற்செய்தி வந்தது...கோவையில் மூவரும் குதிக்காத குறைதான் விமலா பயணம் செய்ய வேண்டாமென கண்டிப்புடன் கூறினாள் ஷான்த்தி...அதனால் ஒரு வாரம் விடுப்பெடுத்துவிட்டு மூவரும் சென்னை வந்து இன்ப அதிர்ச்சி தந்தனர்.....
ஏழு மாதங்கள் கழித்து இரண்டாம் நற்செய்தியாய் வந்தது ஷான்த்தியின் குழந்தை....இரத்தினம் தாத்தா இரட்டிப்பு மகிழ்ச்சியில் தின்டாடினார்....வசன்த் ஷைன்த்தியை தன் உள்ளங்கையில் வைத்து தாங்கினான்... தான் அப்பாவாக போகிறோம் என்று இருந்த மகிழ்ச்சியைவிட இப்போது "நான் சித்தப்பாவாக போகிறேன்" என மகிழ்ச்சியின் எல்லையிலிருந்தான் விக்ரம்...விமலா அடம்பிடித்து அக்காவை பார்த்தே ஆக வேண்டுமென கோவை வந்தாள்...அது வலைகாப்பு முடிந்துவிட்ட சமயம் என்பதனால் அங்கிருப்பதே இவளுக்கும் நல்லதென அவளை அங்கு விட்டுவிட்டு சென்னை திரும்பினான்....வனோஜாவும் படிப்பை முடித்துவிட்டு கோவையிலே இருந்தாள்...
தங்கையின் செயல்களில் மாற்றத்தை கண்டுபிடித்தனர் அக்காக்கள் இருவரும்...சத்தமாக கூட பேசத்தெரியாத தங்கையா வேலையாளிடம் அதட்டி அராஜகம் செய்வது.????நாங்கள் கூட அன்பாய் தானே அவர்களிடம் பேசுவோம்... மூன்று வருடங்களாய் இவள் செய்வதை ஏன் கவனிக்க தவறினோம்???? தங்கை தீயவழியில் சென்றுவிட்டாளா???? என அச்சம் கொண்டனர்....
மறுநாள் தங்களை கண்டும் காணாதவாறு சென்ற தங்கையை கண்டு ஆச்சர்யமானாள் ஷான்த்தி....சும்மா சும்மா அக்கா அக்கா என சுத்திக்கொண்டிருந்த எங்கள் தங்கையா இது???? என்ன ஆனது இவளுக்கு???? என்று வருத்தமுற்றறனர் இருவரும் .....தன் தங்கை இந்த சமயத்தில் கவலாயாக இருக்கக்கூடாதென அவளை தேற்றினாள் ஷான்த்தி....நாட்களும் சென்றது...அன்று வெள்ளிக்கிழமை....மாடியில் தன் அறையில் படுத்திருந்தாள் வனோஜா....கீழே விமலாவும் ஷான்த்தியும் உறையாடிக்கொண்டிருந்தனர்....விமலா தண்ணீர் வேண்டும் அக்கா எனவும் கிச்சனை நோக்கி சென்றாள்....அவள் தண்ணீர் குவளையை எடுக்கும்போது விமலாவின் திடீர் கதறலைக்கேட்டு பட்டென குவளையை தவறவிட்டாள்....தானும் கருவுற்றுரிக்கிறோம் என்பதை மறந்து ஹாலுக்கு வேக எட்டுக்களுடன் சென்றாள் ஷான்த்தி.... அங்கு விமலா சோபாவில் அமர்ந்து பிரசவ வவலியில் துடித்துக்கொண்டிருந்தாள்.... அந்த நேரம் இரத்தினம் தாத்தாவும் வீட்டிலில்லை....என்ன செய்வது? ?? என்று தாமதிக்காமல் வசன்த்தை அழைக்க போனை எடுத்தாள் ....சரியாக ஏதோ பைலை எடுக்க வந்தான் வசன்த்....விமலாவின் கதறல் வாசலை தான்டியும் கேட்க பதற்றமாய் உள்ளே ஓடிவந்தான்.....
அவனைக்கண்டதும் நிம்மதிப்பெருமூச்சி விட்ட ஷான்த்தி....
ஷான்த்தி : விமலா...ஒன்னுஇல்லை மா...கொஞ்சம் பொருத்துக்கோ....விமலாமா ஒன்னும் இல்லைடா....
விமலா : அக்கா... வ..லி..க்கி..து.க்கா... முடி...யல....
வசன்த் : ஒன்னு இல்லை டா....பயப்படாதே...ஷான்த்தி நீ கூட்டீட்டுவா...வனோஜா எங்க போனா???
ஷான்த்தி : மாடில தாங்க இருக்கா அவளையும் கூப்டுங்க...
வசன்த் : இவ்ளோ சத்தம் கேட்டும் ஏன் வராம இருக்கா....வனோஜா என பெருங்குரலெடுத்துக் கத்த....
இவ்வளவு நேரம் அக்காவின் கதறலை கேட்டும் அலட்ச்சியமாக அமர்ந்திருந்த வனோஜா வசன்த்தின் சத்தத்தில் ஓடோடி வந்தாள்...
விமலா : அ...க்கா வலி...க்கிது..க்கா...
வேகவேகமாக காரை எடுத்தான் வசன்த்....வனோஜாவும் ஷான்த்தியும் விமலாவை காரில் அமரவைத்தனர்...சில நிமிடங்களிள் ஹாஸ்பிட்டலை அடைந்தனர்....உடனடியாக இரத்தினம்தாத்தாவுக்கும் விக்ரமிற்க்கும் தகவல் சொல்லப்பட்டது....பதறியடித்து வந்தனர் இருவரும்....ஆளுக்கொரு பக்கம் வேண்டிக்கொண்டிருந்தனர்...வனோஜாவை தவிர்த்து..
சில மணிநேரப் போராட்டங்களுக்குப்பிறகு அழுகுரலுடன் இப்புவியில் காலடி எடுத்துவைத்தான் வீர்....
குழந்தையின் சத்தத்தை கேட்டபின்பே மூச்சு வந்தது மற்றவருக்கு...ஆனந்தத்துடன் செய்தி பரவியது...குழந்தை பிறந்துவுடன் முதலில் தூக்கியது ஷான்த்தியே....அழமட்டுமே தெரிந்த பச்சிளம் குழந்தைக்கு என்ன புரிந்ததோ அவளைப்பார்த்து சிரித்தான்...மற்றவர் தூக்கினாள் உடனே அழத்தொடங்கினான்...அதனை சிரித்துக்கொண்டே ரசித்தாள் விமலா....இரண்டே நாட்களிள் வீட்டிற்கு அழைத்துவந்தனர்....
7 மாதங்கள் களித்து ஷான்த்திக்கு வழி வந்தது....அவள் வலியில் அழுவதைக்கண்டு இரத்தினம்தாத்தா கையிலிருந்த 7 மாத குழந்தையான வீரும் விடாமல் அழுதுக்கொண்டிருந்தான்....
டாக்டர்: Sorry to say this...your wife is in dangerous stage...we will do our best...trust your god என்று இங்லிஷில் உலரிவிட்டு சென்றுவிட்டார்.....
விமலாவும் வீரும் ஒரு பக்கம் கண்ணீரில் கரைந்தனர்...இரத்தினம்தாத்த வசன்த்தையும் விக்ரமையும் தேற்றினார்....
பல மணிநேரம் களித்து ஷான்த்தியின் "அம்மா" என்ற அலரலுடன் குழந்தையின் அலரல் கேட்டது...அடுத்தும் ஒரு குழந்தையின் அழுகை கேட்டது....அனைவருக்கும் இரண்டு அழுகுரல் கேட்க்கிறதே என்று குழப்பம் மற்றும் மகிழ்ச்சி....வீருக்கு என்ன புரிந்ததோ இவ்வளவு நேரமாக அழுது கொண்டிருந்தவன் குழந்தைகளின் அழுகையை கேட்டு தன் பிஞ்சு கைகளை ஆட்டி ஆட்டி சிரித்தான்....
டாக்டர் : உங்க மனைவி நல்லா இருக்காங்க...உங்களுக்கு இரட்டைக்குழந்தைங்க பிறந்துர்க்காங்க...இரண்டுமே பொண்ணுங்க...என்றார் சிரித்துக்கொண்டே...
ஒரு குழந்தையை வசன்த் வாங்கிக்கொள்ள...இன்ளோறு குழந்தையை விக்ரம் வாங்கிக்கொண்டான்....தன் பெரியப்பாவையும் தந்தையையும் பார்த்து கையை மூடி மூடி திறந்தான் குழந்தை வீர்...அவன் அருகில் சென்றதும் எக்கி எக்கி குழந்தைகளை பார்க்க முயன்றான்...அது தன் அன்னை மடியிலிருந்துக்கொண்டு முடியாமல் போகவும் அத்தொடங்கினான்...அதை புரிந்துக்கொண்ட விமலா எழுந்து நின்று அவனுக்கு குழந்தைகளை காட்டினாள்....
அவர்களை பார்த்து கைதட்டி சிரித்தான் வீர்.....அனைவரும் இவன் அன்பைபார்த்து சந்தோஷப்பட்டனர்.....
தொடரும்......
Hiii guys...how was the ud???? Flashback konjo perusa thaa pogum nu nemaikiren ....konjo wait panni paarunga pa....😄My hearty request....
Aprm 2nd story yaarukum pudikkalaya??? Pudikkilanna comment pannunga pa...na eludhanuma vendaama nnu mudivedukkanum...pls share ur comments lovely hearts
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro