சந்திப்பு - 7
வீட்டு வாயிலில் நுழையும் போதே வழக்கத்திற்கு அதிகமான காலணிகள் கிடப்பதை கண்டு நெற்றி சுருங்கியவாரே உள்ளே நுழைந்த வந்தனா, உள்ளிருக்கும் அந்த குடும்பத்தை பார்த்த நொடியே கணித்து விட்டாள், யாரோ ஒருவர் தன்னை பெண் கேட்டு தான் வந்திருக்கிறார்கள் என்பதை.
மேஜையில் மல்லிப்பூ சரத்துடன் ஒரு தேங்காய், இரண்டு ஆப்பிள் ஒரு ஆரஞ்சு, வாழை பழ சீப்பு, மாதுளை என நிரம்பி இருக்க.. அதன் மேல் இளஞ்சிவப்பு பட்டு புடவை அழகாய் அமர்ந்திருந்தது.
அனைத்தையும் தாம்பூலத்தில் பரப்பி வைத்திருந்த மாப்பிள்ளையின் குடும்பம் வந்தனாவின் வரவில் முகம் கொள்ளா புன்னகையுடன் அவளை நோக்க.. அவளோ நேருக்கு நேராக பார்த்தது என்னவோ, தன்னை எதிர்கொள்ள எதோ உணர்வு தடை விதித்ததில் இங்கும் அங்குமாக பார்வையை திருப்பிக்கொண்டே இடையிடையே கிடைக்கும் நொடி நேர அவகாசத்தில் ஓர பார்வையால் தன்னை பார்க்கும் டிப்-டாப் ஜென்டில் மேனை தான்.
அவனை காரணமே இல்லாமல் முறைக்க நினைக்கும் விழிகளை அடக்கியவாரு அவனுடன் சேர்த்து அவன் குடும்பத்தையும் நோக்கி கொண்டிருந்தவள், இரு நொடிக்கு மேல் தனது முறைப்பை கட்டுபடுத்த இயலாமல் பார்வையை தந்தையை நோக்கி திருப்பி கொள்ள.. வரன் வீட்டார் தான் அவளை புரியாத பார்வையில் பார்த்தார்கள்.
அதை கவனித்த லட்சுமிதாஸ், செயற்கையாக முகம் கொள்ளா சிரிப்பையெல்லாம் வரவழைத்து கொள்ளாமல் சாதாரன புன்சிரிப்புடன் வரன் வீட்டாரை எதிர்கொண்டு, "காலேஜ்ல இருந்து வர்ற வரைக்கும் நீங்கலாம் வீட்டுல இருக்குறத நா சொல்லல... அதா கோப படுறா...", என்றவாறே அவளை அழைத்து கொண்டு அனைவர் முன்னிலையிலும் சென்று நின்றார். வந்தானாவும் எதையும் பேசாமல் தன் முக பாவனையை சாதாரணமாக மாற்றி கொண்டு மௌனமாகவே தந்தையின் இழுப்பிற்கு வந்துவிட்டாள்.
மகளின் குணமறிந்த தந்தை, அனைத்தையும் திட்டமிட்டே செய்திருந்தார். ஒரு வாரம் முன்பே வரன் வீட்டில் அவர் பேசியிருக்க, வந்தனா திருமணத்திற்கு முரண்டு பிடித்ததால் இன்று அவர்கள் வீட்டிற்க்கு வருவதையும் கூறாமல் விட்டுவிட்டார்.
அதே நேரம் மகளின் விருப்பும் கண்டிப்பாக வேண்டும் என்பதால், "அம்மா இல்லாத பொண்ணு... ஒத்த புள்ளையா வேற இருக்கா... மனசுல படுரத சொல்லிக்க ஆளில்ல... இப்போ கல்யாணம் வேணாம் மேல படிக்கணும்னு ஆச படுது... ஆனா தனியா நா ஒருத்தன் பொம்பள புள்ளைய வச்சுருக்குறது கஷ்ட்டமா தா இருக்கு... நீங்க பொண்ணு கேட்டு வரைல நாலு வார்த்த நல்லபடியா பேசி அவளுக்கு புரிய வையுங்கங்க..... பதில்... ... .. எதுவும் பேச மாட்ட... ஆனா சுருக்குன்னு எதாச்சும் சொல்லிட்டா தப்பா எடுத்துக்காதீங்க.. அவளுக்கு இஷ்ட்டம் இல்லனா இப்போதைக்கு வேணாமே... பையனுக்கும் வயசு இருக்கே...", என வரன் வீட்டாரிடம் முன்பே கூறியிருந்தார் அவர்.
இப்போது அதை நினைவு கூர்ந்த மணமகனின் தாய் செல்வி, "இங்க வா மா", வந்தனாவை அழைத்ததில், மகள் என்ன சொல்ல போகிறாளோ என அவளின் தந்தை பதைபதைப்புடன் நிற்க.. வந்தனாவின் எரிச்சலுடன் கூடிய பார்வை செல்வியை நோக்கி திரும்பியது.
★★★
"மனோ... சுபா எங்க?", அப்போதே வீட்டினுள் நுழைந்தவனை நோக்கி கலைவானரின் குரல் உச்சகட்ட கோபத்தில் ஒலித்தது.
"பத்ரமா தா இருக்கா...", சலித்துகொண்டு கூறியவன் முன்னேற பார்க்க... ரஞ்சனியின் ஐவிரல் அவன் கன்னத்தில் பதிந்தது.
"என்ன டா பத்ரமா இருக்கா??.. அவள எங்கேயோ தனியா விட்டுட்டு.. என்ன டா பத்ரமா இருக்கா??.. எங்க டா அவ... எங்க என் பொண்ணு...", தாய்மையின் கதறல், கோபம், பயம், அக்கறை என அனைத்தும் கலந்து ஒலிக்க... அது மனோஜின் மனதை உலுக்கி பார்த்தாலும் அதனை திடப்படுத்தி கொண்டு தன் வார்த்தைகளை தொடர்ந்தான்.
"உங்க பொண்ணுன்னு இப்போ தா தெரியுதா.. காலைல அவ ஆசபட்டு ஒரு விஷயத்த கேக்குறப்போ தெரியலையா??., இன்னைக்கு அவ பொறந்த நாள்.. அதுவாச்சும் நியாபகம் இருக்கா இல்லையா??.. புது சட்ட போடலையான்னு ஒரு வார்த்த???... ஹ்ம்ம்... இன்னைக்கும் சமையல் கூட அவ தா... அவளுக்கு புடிச்சத இன்னைக்காச்சும் நீங்க கொஞ்சமா செஞ்சிருக்களாமே ம்மா... இப்டி அவள வீட்டுக்குள்ளேயே பொத்தி வைக்க உங்களுக்கு புடிச்சிருக்களாம்... ஆனா அது அவளுக்கு புடிக்கல... எனக்கும் புடிக்கல..... ... ... இன்னும் ஆறு மாசம்.... ஆறு மாசத்துக்கு அவள நா பாத்துகுறேன்... அதுக்கப்பறம் அவ இங்க வந்துருவா... வீட்டுக்குள்ள வர விடலைனா ஒன்னும் பிரச்சன இல்ல... அவள அப்பறமும் நானே பாத்துக்குறேன்", என சுவற்றுடன் பேசி கொண்டிருந்தவன் கூறியதில் ரஞ்சனி உடைந்து விட்டார்.
"என்ன டா சொன்ன.. என் பொண்ணு மேல எனக்கு அக்கற இல்லையா??.. டேய் அவள பத்தி உனக்கு தெரிஞ்சத விட எங்களுக்கு தான் டா அதிகம் தெரியும்... நீ பொறக்குறதுக்கு முன்னாடியே, நாலு வருஷம் அவ விளையாட்டா பண்ணுற எல்லாத்தையும் பாக்க தான் டா செஞ்சோம்... காலம் கெட்டு கெடக்குற நேரத்துல நாங்க அவள வெளிய அனுப்பாதது ஒரு குத்தமா?..", ரஞ்சனியின் வார்த்தைகள் ஆதங்கத்தில் ஒலிக்க... கலைவானரின் விரக்தி நிரம்பிய குரல் அதற்கு முட்டுக்கட்டை போட்டது.
"விடு ரஞ்சனி... அதா புள்ள தோலுக்கு மேல வளந்துட்டான்ல... இனி அவன் தா நமக்கு பாடம் எடுக்கனும்... நம்ம பேச்செல்லாம் எடுபடாது... நம்ம கஷ்டமும் புரியாது... எல்லாம் அவன் ஒரு நாள் ஒரு புள்ளைக்கு அப்பனா ஆவான்ல... அப்போ புரியும்..."
"இல்லங்க.... சுபாவ இவன் எங்க விட்டுட்டு வந்துருக்கான்னு கூட தெரியல... அவ எப்டி தனியா இருப்பா??.", ரஞ்சனி தவிப்பில் அவள் கணவனை நோக்க..., "அதா அவரே சொல்லிட்டாருல... அவரு அக்காவ அவரே பாத்துபாருன்னு... பாக்கட்டும்.. நீ வா", விரக்தியில் வெளிவந்த வார்த்தைகளுடன், வர விருப்பம் இல்லாமல் நிற்கும் மனைவியையும் அழைத்து கொண்டு களைவானர் தங்களின் அறைக்குள் சென்று விட..., "புரியுது ப்பா உங்க கஷ்டம்... அதுக்காக என் சுபா மனசு கஷ்ட பட வேணாமே.... பயப்படாதீங்க... அவ பத்ரமா இருப்பா... மாமா இருக்காரு அவளுக்கு...", பூட்டிய தாய் தந்தையின் அறை கதவை வெறித்து பார்த்து கொண்டே மனதினுள் கூறிகொண்டவன் , "ஹ்ம்ம்... நாம நெனச்ச அளவுக்கு பூகம்பம் வெடிக்கல... ஒரே ஒரு அறையோட முடிஞ்சு போச்சு.. காலைல அவளுக்கு இப்போ எனக்கா?... பட் மம்மி நல்ல மம்மி தா.. அவ்வளவா வலிக்காத மாதிரியே அடிச்சுருக்காங்களே.. இட்ஸ் ஓகே...", எதுவுமே நடவாதாதை போல் ஹாயாக வண்டி சாவியை விரலில் சுற்றி கொண்டு தன்னறைக்கு சென்றான் மனோஜ்.
★★★
மதிய நேர வெயில் அப்போதே கீழ்வானத்தை விட்டு மெல்லமாக மேல்நோக்கி எட்டிப்பார்க்க துவங்கியிருக்க... மொட்டை மாடியில் வெயில் வராமல் நிழலாக இருக்கும் ஒரு ஓரத்தில் நின்றிருந்தான், வந்தனாவிடம் தன்னையே தொலைத்திருந்த கவின்.
இருபது நிமிடம் வரையில் சுற்றிலும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவன், வந்தனாவின் கொலுசொலி மாடியேறுவதை செவிமடுத்து அவ்விடம் நோக்கி திரும்பிட... தந்தையின் கட்டாயத்தின் பேரில் லேசான அலங்காரத்துடன் ஒரு சில்க் புடவையில் கவின் இருக்குமிடம் நோக்கி மெல்லநடையில் வந்து சேர்ந்தாள் வந்தனா.
அவளின் முகத்தை பார்த்த படியே நின்றவன், அவளை முழுமையாக ரசிக்க ஒப்புதல் கிடைக்குமோ கிடைக்காதோ என லேசான ரசனையுடன் சில நொடிகள் பார்த்துக் கொண்டே நிற்க... எப்படி தன் மனதில் உள்ளதை கூறுவது என்பது தெரியாமல் பதட்டத்தில் நின்றிருந்தாள் வந்தனா.
சில நிமிடங்கள் முன்...
கவினின் தாய் செல்வி வந்தனாவிடம் பேசுவதற்காக அவளை அழைத்த போது அவள் முகம் சுருங்கியதிலேயே கவின் கண்டறிந்து விட்டான் அவளுக்கு உண்மையிலேயே நடக்கும் எவற்றிலும் விருப்பம் இல்லை என்பதை.. முன்பே இவ்விஷயம் பற்றி லட்சுமிதாஸ் கூறியதாக தன் தாய் கூறி அவனுக்கு தெரியும்.. இருப்பினும் சற்று மனம்விட்டு பேசினால் சரியாகிவிடும் என அதனை சாதாரணமாக நினைத்தவன் இப்போதே உணர்ந்தான் அவளின் மன குமுறலை.
செல்வி அழைத்ததற்கு வந்தனா ஏதோ கூற வாயெடுக்க... கூற வந்ததை அவள் கூறிடும் முன்பாகவே எங்கே தன்னை மணக்க மறுப்பு தெரிவித்து விடுவாளோ என பதறிய கவின், அவள் செல்வியிடம் வார்த்தைகளை உதிர்க்கும் முன், எதையோ முடிவெடுத்து பட்டென எழுந்து, "வந்தனா... அம்மா கிட்ட அப்பறம் பேசிக்கோங்க... இப்போ நா உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்... பிளீஸ் மாடிக்கு வரீங்களா??.." மென்மையாக வார்த்தைகளை உதிர்த்தவன், எவரின் பதிலையும் எதிர்பார்க்காமல் மாடி ஏறி விட்டான்.
✨ சந்திப்பின் காலம் வரும்✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro