சந்திப்பு - 6
சுபித்ரா செல்லும் பேருந்தானது தன் பார்வையை விட்டு மறையும் வரையில் பார்வையை பேருந்தின் திசையிலேயே பதித்திருந்த மனோஜ், அது மறைந்த பின்னர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு கொண்டு தன் மெர்சிடஸ்ஸை நோக்கி நடக்க தொடங்கினான்.
நடந்து கொண்டே கையை பேன்ட் பாக்கெட்டினுள் விட்டவன் தனது அழைபேசியை துழாவி கையில் எடுக்க... திரையிலேயே மிளிர்ந்தது அக்கா தம்பி மாற்றி மாற்றி முடியை பிடித்து கொண்டிருக்கும் ஒளிபடம்.
அதை பார்த்து மெலிதாக சிரித்து கொண்டவன், தன் மொபைலில் எதையோ தேடிக் கொண்டே வண்டியை அடைந்ததும் அதன் பக்கவாட்டு கதவை திறந்து கொண்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.
மொபைலில் 'கோவை அங்கில்' என சேமித்திருந்த எண்ணை கண்டுபிடித்து அந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்து அதை ப்ளூடூத்தில் இணைத்து காதில் சொருகிவிட்டு, கையில் வைத்திருந்த வண்டி சாவியையும் அதன் இடத்தில் சொறுகி விட்டு வண்டியை மிதமான வேகத்தில் வீட்டை நோக்கி செலுத்தினான்.
அக்காவை கனவு பாதையில் வழியனுப்பிய நிம்மதி மறைந்து, இப்போது அவன் மனதில் தந்தையை எவ்வாறு எதிர்கொள்வது என்ற பயம் தான் தலைதூக்கி இருந்தது... அதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து கொண்டே வாகனத்தில் கவனம் செலுத்தியிருந்தவன் இரண்டாவது முறையாக அதே எண்ணுக்கு அழைப்பு விடுத்தான்.
அதுவும், "உயிர் போகும் நாள் வரை உனை தேடுவேன்.. உனை மீண்டும் பார்த்த பின் கண் மூடுவேன்.. நீங்க முடியுமா... நினைவு தூங்குமா....", என முழுதாக காலர் டியூன் பாடிவிட்டு ஓய்ந்து போக... மூன்றாவது முறை அழைப்பு விடுக்கையில் கடுகடுப்புடன் இருந்தாவன் காதில், "ஹலோ.." என ஒலித்தது ஒரு தூங்கி வழியும் குரல்.
அக்குரல் வர தாமதமானதால் இங்கே இவன் உச்சநிலைக்கு சென்றிருக்க... "டேய் மட சாம்பிராணி... எவ்ளோ நேரம் டா உனக்கு ஃபோன எடுக்க... தூங்கு மூஞ்சி.. தூங்கிட்டியா என்ன??", மனோஜ் கத்திய கத்தலுக்கு மறுமுனையில் இருந்து கிடைத்த பதில், ஆழ்ந்த உறக்கத்தின் அசாத்திய அமைதியே.
"டேய்.. லைன்ல இருக்கியா??... டேய் தடியா.... ஹலோ... ஹலோ அங்கில்... மை அங்கில்... லைன்ல இருக்கீங்களா??... ", இறுதியாக ராகம் பாடியவன், மறுமுனையில் இருப்பவனின் பலவீனத்தை சீண்டிய பின்னரே முழுமையாக தூக்கத்தில் இருந்து விழித்தான் விசோழன்.
"டேய்... ஒழுங்கா மாமான்னு கூப்பு டா... இல்லனா பேர சொல்லி கூப்டு...", தூக்க கலக்கத்துடன் சூடாக வந்த பதிலை கேட்டு வாய்க்குள் சிரித்து கொண்டே, "ஓகே ஓகே மாம்ஸ்... கூல்.. கூல்... சரி இன்னுமா நீ எந்திரிக்கல??.."
"அதா எழுப்பி விட்டுடியே... அப்பறம் என்ன?" அலுத்து கொண்டு தரையில் எழுந்து அமர்ந்தான் அவன்.
"அட பாவி.. அப்போ நா கால் பண்ணலைனா இன்னுமும் தூங்கிட்டு தா இருப்பியா??.. பாவி.... துரோகி... உன்ன நம்பி என் சுபாவ ஊருக்கு அனுப்புறேன் பாரு... இரு நா போய் அவள திருப்பி கூட்டிட்டு வரேன்..."
"என்னது சுபி கெலம்பீட்டாளா??... கோவைக்கா??... எப்டி??.. எப்போ??... மாமா எப்டி விட்டாரு??... டேய் உண்மைய தா சொல்லுறியா??.. எப்போ கெலம்புனா??...", அடுக்கடுக்காக கேள்வியை அடுக்கியவன் இன்னுமும் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தான்.
"நெஜமா தா மாம்ஸ்... இப்போ தா பஸ் கெலம்புது... அவ கெலம்புனதும் உனக்கு கால் பண்ணுறேன்... அன்ட் அப்பாவாலாம் ஒன்னும் விடல... நா தா அவள கடத்தீட்டு வந்துட்டேன்...", என கூறி மனோஜ் சிரிக்க..., "என்னது... கடத்திட்டு வந்துட்டியா??.. என்ன டா ஒலர்ற?", ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் தூக்க கலக்கத்தில் கடுகடுத்தவனுக்கு காலையில் இருந்து நடந்ததை விளக்கமாக விளக்கினான் மனோஜ்.
"அடப்பாவி... உன்ன ஸ்கூல் படிக்கிற சின்ன புள்ளன்னு நெனச்சேன் டா... இப்டி அக்காவுக்காக பக்கா கிரிமினல் வேலையெல்லாம் செய்யுறியே...", மனோஜ் கூறிய சம்பவத்தை கேட்டு நெஞ்சில் கைவைத்த விசோழன், "ஹ்ம்ம்.. எப்டியோ அவ ஆசைய அவ கைல புடிச்சு குடுத்துட்ட", மனோஜை எண்ணி புன்னகைக்க..
"யா.. யா... ஐயா சுபாகாக இதுவும் செய்வேன் இதுக்கு மேலயும் செய்வேன்..."
"செய் செய்.. நல்லா செய்... என்ன வச்சு செய்யாம இருந்தா சரி.."
"ஹாஹாஹா... அன்ட் மாம்ஸ்.. ஃபார் யுவர் கைன்ட் இன்பர்மேஷன்... நா இன்னும் ஸ்கூல் முடிக்கலைன்னு நீ நெனச்சுட்டு இருக்கேன்னு எனக்கு தகவல் வந்துச்சு... பட் நா காலேஜ் போய் ரெண்டாவது வருஷம் ஸ்டார்ட் ஆகிருச்சு "
"அதுகுள்ளையா டா ரெண்டு வருஷம் ஓடிருச்சு... ஹ்ம்ம்.. டைம் ரொம்ப ஃபாஸ்ட்ட இருக்குல??... ... ... சரி அவளுக்கு தெரியுமா நா தா அவளுக்கு கார்டியனா இருக்க போறேன்னு..."
"ம்ம்க்கும்.... அது ஒரு லூசு... பஸ்ஸ பாக்காவும் எங்க தங்க போறேன்னு கூட கேக்காம போய்ருச்சு.... இடைல கால் பண்ணுனா சொல்லுறேன்... இல்லனா அங்க ரீச் ஆகிட்டு தா கூப்புடுவா பாரேன்....", அக்காவை தம்பி வசை பாட... அவளுக்கு வக்காலத்து வாங்க வந்தான் விசோழன்.
"டேய்... டேய்.. டேய்.. அவள ரொம்ப ஓட்டாத... எல்லாம் நீ பாத்துபன்ற நம்பிக்க தா... அது மட்டுமில்லாம இப்டி திடுதிப்புன்னு எல்லாம் நடந்ததுல புள்ள பயந்து போய்ருக்கு... மத்தபடி அவ தெளிவா எல்லாத்தையும் கேட்டுட்டு தா காரியத்துல இறங்குவா"
"டேய் மாமா... என் அக்கா பத்தி எனக்கே டியூஷனா... சரி தா... ஓகே.. டைமுக்கு போய் அவள பிக் பன்னிரு... இல்லனா பயந்து அழுதுற போறா.
"சரி சரி நா பாத்துக்குறேன்... ஆமா... இப்போ நீ வீட்டுலயா இருக்க?"
"யோவ் லூசு மாமா... இப்போ தானே டா அவள பஸ் ஏத்தி விட்டுறுக்கேன்.... அதுக்குள்ள எப்டி வீட்டுல இருக்க முடியும்?"
"ஆமால.. சரி சரி.. நீ போய் அங்க சமாளி ... சுபி எங்க இருக்கான்னு கேட்டா சொல்லிராத... அப்பறம் மாமா நேரா இங்க கெளம்பி வந்துருவாரு... நம்ம திட்டம் வீணா போய்ரும்"
"எனக்கு தெரியாதா என்ன?... இங்க நா பாத்துக்கிறேன்... அங்க அவள பத்திரமா பாத்துக்கோ... இல்லனா நீ காலி டா மவனே..."
"தங்கள் உத்தரவு படியே ஆகட்டும் மன்னா.... ஹாஹாஹா..."
"போ டா லூசு தடியா... ... சரி... வைக்கிறேன்... டைமுக்கு போய் பிக் பண்ணிரு... பய்..."
"ம்ம் பய் டா மனோ... நா பாத்துக்குறேன்... நீ அத்த மாமாவ கவல படாம பாத்துக்கோ..."
"ம்ம் சரி டா மாம்ஸ்.. வைக்கிறேன்... டாட்டா.." அழைப்பை துண்டித்தவன் சாலையில் கவனத்தை பதித்தான்.
★★★
மதுரை அரசு கலை கல்லூரியில் இரண்டாம் பாட வேளை துவங்கி இருபது நிமிடம் கடந்திருந்தது... வகுப்பில் மும்முரமாக இல்லையெனினும் ஏதோ ஓரளவிற்கு தன் கவனத்தை ஆசிரியரின் சொல்லில் பதித்திருந்த வந்தனா, அங்கிருந்து தன் சிந்தையை அவ்வப்பொழுது விலக்கி கொண்டு கனவு லோகத்தில் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டவண்ணம் பாடத்தை கவனித்து கொண்டிருந்தாள்.
அந்நேரம் வாயிலுக்கு வந்த ஒரு நபர், "எக்ஸ்கியூஸ் மீ மேடம்...", என குரல் கொடுக்க.. மொத்த வகுப்பும் அப்பக்கமாக திரும்பியதில் அனிச்சையாகவே எழுந்து விட்டாள் வந்தனா.
அவள் எழுந்தது மூலம், வந்திருப்பவர் வந்தனாவின் உறவு என்பது ஆசிரியர் உட்பட அனைவருக்கும் தெரிந்து விட.., "நா வந்தனாவோட ஃபாதர்... அர்ஜென்ட்டா ஊருக்கு போறோம்... அதா கூட்டிட்டு போறதுக்கு வந்துருக்கேன்", என அவர் கூற, வந்தவாவிடம் திரும்பிய ஆசிரியை, "உன் கிளாஸ் டீச்சருக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு கெளம்பு", என அவளுக்கு அனுமதி கொடுத்தார்.
சரியென தலையை ஆட்டிவிட்டு தன் பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள், "எங்கப்பா போறோம்... என்ன பிரச்சன...", என காலையில் நடந்ததை மறந்து விட்டு, இப்போது ஒன்றும் புரியாமல் கேட்க.., "நீ மொதல்ல வீட்டுக்கு வா.. சொல்லுறேன்", எதுவும் கூறாமல் அவளை அழைத்து கொண்டு சென்றார்.
ஒரு விடுப்பு கடிதம் எழுதி தன் வகுப்பாசிரியரிடம் கொடுத்துவிட்டு வந்தவள், வெளியே தன் தந்தைக்காக காத்திருந்த ஆட்டோவில் ஏறி வீட்டிற்க்கு புறப்பட்டாள்.
இடைப்பட்ட பயணத்தில் அவள் கேட்ட எந்த கேள்விக்கும் சரியாக பதிலளிக்காமல் லட்சுமிதாஸ் மழுப்பிகொண்டே வர... ஒரு கட்டத்திற்கு மேல் அலுத்து போய் அவளே தன் கேள்விகளை நிறுத்தி கொண்டாள்.
வீட்டிற்கு சென்றால் எப்படியும் தெரிய தானே போகிறது... சென்று பார்த்து கொள்ளலாம் என அமைதியாக வந்தவளுக்கு பேரிடியாக இருந்தது அவள் வீட்டில் காத்திருந்த செய்தி..
✨ சந்திப்பின் காலம் வரும்✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro