Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சந்திப்பு - 3

மனோஜின் அந்த கருப்பு மெர்சிடஸ் சொகுசு கார், ஐந்து நிமிடத்திற்கும் மேலாக மதுரையின் சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து நுழைந்து வெளிவந்து கொண்டிருக்க... அதனை துரத்தி வந்த கலைவானரின் வெள்ளை சுசூகி ஒரு சந்து முனையில் தன் செயல்பாட்டை இழந்து அப்படியே நின்று விட்டது.

இதையே எதிர்பார்த்து இவ்வளவு நேரமும் தந்தைக்கு ஊர் சுற்றி காட்டி கொண்டிருந்த மனோ, தந்தையிடம் வண்டி நட்ட நடு ரோட்டில் நின்றுவிட்டதை கண்ணாடி வழியாக பார்த்து விட.. அவன் கண்ட காட்சியில் அவனது உதடுகள் அனிச்சையாகவே குறும்பில் மேல் நோக்கி வளைந்தது..
இதுவரையில் தாறுமாறாக எங்கெங்கோ சுற்றி கொண்டிருந்த கார் இப்போது சீரான வேகத்தில் மாட்டுத்தாவனி பேருந்து நிலையம் நோக்கி நகரத் தொடங்கியது...

பாவம் அங்கே நடு வீதியில் நின்றிருந்த கலைவானருக்கு தான் குழப்பம், நேற்று வண்டியில் நிரப்பி வைத்த டீசல் இன்று எங்கே போனது என்று.

இவ்வளவு நேரமும் பின்னால் வந்து கொண்டிருந்த தன் தந்தையின் வண்டியை பதட்டத்தில் திரும்பி திரும்பி பார்த்து கொண்டே பின் சீட்டில்  அமர்ந்திருந்த சுபித்ரா, அவரின் வண்டி செயலிழந்து நின்ற பின்பே முழுமையாக உணர்ந்தாள்.. காலையில் இருந்து நடப்பது அனைத்தும் தன் உடன்பிறப்பின் சதிச் செயல் தான் என்பதை...

தந்தையின் வண்டியை நோக்கியபடி பின்னோக்கி திரும்பி இருந்தவளுக்கு உண்மை விளங்கிய அடுத்த கணம் அவள் விழிகள் பிரமிப்பில் அகல விரிய... அதே அதிர்ச்சியுடன் ஸ்லோ மோஷனில் தன் தம்பியின் புறமாக திரும்பியவள், விடிந்தது முதல் நிகழ்ந்ததை ஒவ்வொன்றாக நினைவு கூர்த் தொடங்கினாள்.

காலையில் இருந்து நடந்த அனைத்திலும் எங்கெங்கே தன் தம்பியின் தலையீடு இருந்தது என்பதை அசை போட தொடங்கிட.. உண்மைகள் ஒவ்வொன்றாக அவளுக்கு புரிந்ததில் மேலும் மேலும் மலைத்து தான் போனாள் அவள்.. அத்துடன் தனக்காக தன் உடன்பிறப்பு செல்லும் எல்லையை எண்ணி பெருமிதமும் கொண்டாள்.

***சரியாக காலை ஐந்து மணி... அது தான் அலாரம் அடித்தது போல் வழக்கமாக சுபித்ரா எழும் நேரம்... ஓரிரு நிமிடங்கள் வித்தியாசம் இருக்கலாம்... ஆனால் இன்றோ, காலையில் அரை மணி நேரம் விரைவாகவே எழுந்து விட்டாள்...

என்றும் இல்லாத புதுபொழிவு இன்று எழும்போதே அவள் முகத்தில் சூடியிருக்க... தன் அழகிய காலை நேர கனவுகளை அசைபோட்டபடியே சிறிது நேரம் மெத்தையிலேயே இருந்தால்.

அன்று இவள் மட்டும் தான் விரைந்து எழுந்து கொண்டாள் என்று பார்த்தால் சூரியனும் விரைவாகவே எழுந்து கொண்டது. அதன் பொன் கீற்றுகள் மெல்ல வெளிவர தொடங்கியதில் இரு மாடி கொண்ட விசாலமான வீட்டின் முதலாவது மாடியில் இருந்தவளின் பார்வை அனிச்சையாகவே ஜன்னலின் புறமாக பாய்ந்தது.

மெத்தையில் இருந்து எழுந்து ஜன்னலை நோக்கி நகர்ந்து சென்று சூரிய கீற்றை தடுத்து கொண்டிருந்த திரையை விலக்கியவள் மீது ஜொலிக்கும் சூரிய கீற்றுகள் மென்மையாக தீண்ட, மலர்ந்த புதுமலராய் புன்னகை சூடியவள் தன் பார்வையை கீழ் நோக்கி செலுத்தினாள்.

அங்கே அவள் கண்ட காட்சியில், "இவனுக்கு இதே வேலையா போச்சு..... என்ன சொன்னாலும் திருந்தவே மாட்டான்...", தலையில் அடித்து சிரித்து கொண்டாள், தந்தையின் வண்டியில் இருந்து டீசல் திருடும் தம்பி மனோவை கண்டு.

இது வழக்கமாக நடப்பது தான்... வெளியே நண்பர்களுடன் நீண்ட பயணம் செல்லும் நேரங்களில், எப்போதும் நிரம்பி வழியும் தந்தையின் வண்டியில் இருந்து பாதியளவு டீசலை தூக்கி கொள்வான்... தன் செலவுகளை தானே மேற்கொள்ள கையில் பணம் இருந்தாலும் இது அவனுக்கு அலாதி இன்பம். இந்த விஷயம் சுபித்ராவை தவிர வீட்டில் யாருக்கும் தெரியாது.

இன்றும் எங்காவது ஊர் சுற்றுவதற்கு தான் இவ்வாறு செய்கிறான் என எண்ணி கொண்டு தன் தினசரி காலை வேலைகளை கவனிக்க சென்று விட்டாள் சுபித்ரா. ஆனால் மனோவின் இன்றைய திட்டமே வேறாக இருந்தது.

வெற்றிகரமாக அந்த சிவப்பு சுசூகி வண்டியின் டீசல் டாங்க்கை காலி செய்து தன் கருப்பு மெர்சிடெஸ்ஸில் நிரப்பியவன் வெற்றி புன்னகையோடு ஜிம் நோக்கி தன் ஜாக்கிங்கை தொடங்கினான்.

தன் உடற்பயிற்சிகளை எல்லாம் முடித்து கொண்டு காலை ஏழு மணி போல் அவன் மீண்டும் வீட்டிற்க்கு வந்த நேரம் தாயும் தந்தையும் ஹாலில் உட்கார்ந்து ஆளுக்கு ஒரு செய்தி தாளை வாசிக்க... காதுக்கு இனிமையான சங்கீதத்தை முணுமுணுத்தவாரே காலை உணவு தயாரிப்பில் தீவிரமாக களமிறங்கி இருந்தாள் சுபித்ரா.

அதை பார்த்து கொண்டே தன்னறைக்கு சென்றவன், பத்து நிமிடத்தில் குளித்துவிட்டு ஆடையை மாற்றி கொண்டு மெத்தையில் அமர... மணியடித்தது போல் கதவை திறந்து கொண்டு காஃபியுடன் உள்ளே வந்தாள் மனோவின் உடன் பிறப்பானவள்.

புன்னகை சூடிய வதனத்துடன் வந்தவள், வந்ததும் காஃபியை கொடுத்துவிட்டு உடனேயே அவள் வெளியேற பார்க்க..., "ஓய்... இன்னுமா வேல முடியல?..", அலுத்து கொண்டு கேட்டான் மனோஜ்.

"முடிஞ்சுது தம்பி ஸார்...", அவன் முகபாவனை கண்டு வாய்க்குள் சிரித்து கொண்டவள் அவனருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

"ஏன் சுபா... இன்னிக்கும் நீ தா வேல செய்யனுமா??.. இன்னைக்கு கூடவா உனக்கு ரெஸ்ட் இல்ல?.."

"டேய்... எனக்கென்ன ரெஸ்ட் எடுக்குற வயசா??.. அப்பாம்மா தா ரெஸ்ட் எடுக்கனும்... இப்போ தா காலேஜ் முடிஞ்சுதே... வெட்டியா இருக்க போர் அடிக்குதுன்னு தா எல்லா வேலையவும் நானே பாக்குறேன்..."

"ம்ம்க்கும்... அதானே... நீயாவது வெட்டியா ஓக்காரதாவது... அது சரி.. புது டிரஸ்ஸ ஏன் போடல??"

"வீட்டுல தானே டா இருக்கோம்.. அதுக்கு எதுக்கு புதுசு புதுசா போட்டுகுட்டு"

"நீ அப்டியே போட்டுடாலும்... அப்ரம் ஊருல மழ பேஞ்சு வெள்ளம் வந்துருமே", சற்று நக்கலாக மனோஜ் கூற, அவன் தலையில் லேசாக தட்டியவள், "சரி அக்காக்கு கிஃப்ட் எதுவும் இல்லையா??..", அவள் ஆசையாக கேட்டாள்.

எந்த ரியாக்ஷனும் காட்டாமல் தன் மொபைலை எடுத்து மணியை பார்த்தவன், "இன்னும் ரெண்டு நிமிஷம் கழிச்சு குடுக்குறேன்", என்றவாறே மொபைலின் மிளிரும் தொடு திரையை அவளை நோக்கி நீட்ட..., அதில் தெரிந்த 7.28 என்ற எண்ணை கண்டு தம்பியை முறைத்தாள் அவள்.

அந்த இரண்டு நிமிடமும் அவள் அப்படியே இருக்க.. அவளின் முக பாவனையை கண்டு வாய்க்குள்ளேயே நமட்டு சிரிப்பு சிரித்து கொண்டிருந்த மனோ, சரியாக மணி ஏழு முப்பதை தொட்ட நொடி, "ஹாப்பி பர்த்டே ஏழ்ரைல பொறந்த ஏழ்ர சனியே...", என முறைப்பவளின் முறைப்பை மீறி சென்று அவளை அணைத்து கொண்டான்.

முறைப்பை விடுத்து அவன் வாழ்த்தால் தோன்றிய புன்னகையுடன் பதிலுக்கு அவளும் தன் தம்பியை அணைக்க, "சுபா... நா தானே ஃபர்ஸ்ட் விஷ்??", அவளிடம் இருந்து விலகியவன் ஆவலாக அவள் முகம் பார்த்து கேட்டான்.

"இல்லியே... நைட்டே ப்ரெண்ட்ஸ் விஷ் பண்ணிடாங்களே."

"ஹ்ம்ம்.. போடி... என்னால தூக்கத்த கெடுத்துலாம் விஷ் பண்ண முடியாது...  வீட்டுல நா தானே ஃபர்ஸ்ட்?.."

"ஹாஹா... ஆமா ஆமா., நீ தா ஃபர்ஸ்ட் நீ தா லாஸ்ட்...", புன்னகையுடன் பதிலளித்தாள்.

"ஹான்... அதானே பாத்தேன்... வருஷம் வருஷம் இது தானே நடக்குது... மகளுக்கு ஒரு கேக் வெட்டனும்ன்னு கூட இங்க அக்கற இல்ல பாரேன்", அவன் கூறிக்கொண்டே அலமாரியில் எதையோ தேடினான்.

"ஏன் டா நீ வேற... கேக்கு கேட்டா, நீ என்ன கொழந்தையான்னு கேக்குறாங்க.... அதெல்லாம் மறந்து ஏழு வருஷம் ஆச்சு... இப்போ ஏன் டா அத நியாபக படுத்துற??...", கேக் என கூறியதும் வாயில் எச்சில் ஊரி விட்டது அவளுக்கு.

அலமாரியில் தேடி எடுத்ததை அமைதியாக கொண்டு வந்து அவள் முன் நீட்டி நிற்க... கேக்கின் நினைப்பால் ஆசை கொண்ட தன் நாவை கட்டு படுத்தி கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் சுபித்ரா.

"என்ன டா இது??"

"ஹான்.. கிஃப்ட்டு..."

"கிஃப்ட்டா???.. பேப்பர்ல மடிச்சு கிஃப்ட் குடுப்பாங்க தெரியும்... இப்டி பேப்பரையே கிஃப்ட்டா குடுக்குறீங்களே தம்பி ஸார்... இது என்ன புது டிரெண்டா இப்போ??", கிண்டலாக கூறி கொண்டே நான்காக மடித்திருந்த அந்த காகிகத்தை பிரித்தவள் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.

அந்த காகிதத்தின் மெல்புறம், பட்டை எழுத்தில், "ஐடியல் ஸ்கூல் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி, கோவை". என்றிருந்தது.

சந்திப்பின் காலம் வரும்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro