சந்திப்பு - 12
சில்லென்ற குளிர் காற்று அவள் மேனி தீண்ட... வெளிப்புறம் வந்து விட்டதை தன்னில் உணர்ந்தாள் சுபித்ரா...
அவள் கண்ணை கட்டியிருந்த துணியில் கைவைத்த விசோழன், "சுபி.. ரெடி??...", அவளின் அனுமதி கேட்க.. "சீக்கிரம் சீக்கிரம்... என்னால இதுக்கு மேலலாம் வெயிட் பண்ண முடியாது..", அவசரமாய் பரபரத்தாள் அவள்.
மெல்ல புன்னகைத்தவன் சுபித்ராவின் கண்ணில் இருந்து கைக்குட்டையை அவிழ்க்க.. விசோழனின் கையால் அவள் கண் கட்டு விலகியதும் பட்டென இமை பிரித்தவளின் விழி சென்று முதலில் பதிந்தது என்னவோ வானில் பெளர்ணமியை எதிர்நோக்கி கொண்டிருக்கும் இளமஞ்சள் வட்ட நிலவின் மீது தான்.
நிலவை கண்டதும் அதன் என்றும் மாறா அழகில் அனிச்சையாகவே சுபித்ராவின் முகம் மலர.. அவள் பக்கவாட்டில் நகர்ந்து வந்த விசோழன், அவளின் முகத்திற்கு முன்பாக சொடுக்கிட்டு அவள் கவனத்தை ஈர்த்தான்.
என்னவென்று அவனை நோக்கி சுபித்ரா திரும்பியதும், "சர்பிரைஸ்...", மெல்லிய குரலில் கூறியபடி எதிர்திசையில் கண்ணை காட்டினான் விசோழன்.
அவன் பார்வை சென்ற திசையை நோக்கியவள் ஆச்சரியத்தில் மெய்மறந்து தாமாகவே அவ்விடம் நோக்கி நடக்க தொடங்கிட... அவளை தொடர்ந்து மென்னகையுடன் நடந்தான் விசோழன்.
கோல்டன் மினி மாலின் மொட்டை மாடியின் நட்ட நடுவே, தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் இருவருக்கு தாராளமான அளவில் ஒரு சதுர மேஜையில் பல வித உணவு வகைகள் விதவிதமாக களன்களின் கண்ணாடி மூடி வைத்து மூடி இருக்க.. மேஜையில் அலங்காரமாக தங்க ரிப்பன் கட்டபட்ட கண்ணாடி குடுவையினுள் சிவப்பு மெழுகுவர்த்திகள் பிரகாசித்து ஒளிர்ந்து கொண்டிருந்தது... மேஜையின் மையத்தில் நீண்ட கண்ணாடி ஜாடியில் இரு அடர் சிவப்பு ரோஜா எட்டி பார்த்தது.
அதன் எதிரெதிரே இரு பக்கத்தில் பஞ்சு மெத்தை போல் ஒரு விரிப்பு தரையில் விரிக்க பட்டிருந்தது... அமருவதற்கு ஏதுவாக இரு பக்க விரிப்பிலும் இரண்டிரண்டு குஷன் ஜம்மென அமர்ந்திருந்து. ஒவ்வொன்றையும் பார்த்தற்கே சுபித்ராவிற்கு வயிறு நிரம்பியது போல் இருந்தது.
"என்ன சோழா இது?...", தன் ரசனைகளில் இருந்து வெளிவந்தவள் அவனை நோக்க..., "ஹாம்ம்ம்... கேன்டில் லைட் நிலா சோறு....", என சேட்டை தூக்கலாக அவனளித்த பதிலால் கண்களை குறுக்கி அவனை முறைத்தாள் சுபித்ரா.
அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாதவன், "என்ன சுபி?.. இப்போ உனக்கு பசிக்கல?...", நக்கலாக அவளை பார்த்த விசோழன், நேராக சென்று ஒரு பக்கத்தில் அமர்ந்து கொள்ள.., அவன் குரலுக்கு பின்பே தன் பசியை நினைவு கூர்ந்து அவனுக்கு எதிரில் சென்று அமர்ந்தாள்.
"எதுக்கு சோழா இதெல்லாம்... மொத்த சொத்தையும் எனக்கே செலவு பண்ணிருவ போலவே...", என சிரிப்புடன் சாதாரணமாகவே கூறியபடி டேபிலில் இருந்த ஆரஞ்சு ஜூஸை எடுத்து இரு மிடறு பருக.. அவளின் வார்ததையால் விசொழன் முகம் ஒருநொடி இறுகியது..
ஆனால் மறு நொடியே அவளறியாமல் தன்னை மீட்டு கொண்டவன், "உனக்காக நா ஏன் சுபி எங்க பூர்வீக சொத்த எடுக்கனும்... உனக்கு செய்யுறதுக்கு தா நானே சம்பாதிப்பேனே... அதுக்கு தானே நா தனியா வந்தது.. எவ்ளோ தா குடும்ப சொத்து இருந்தாலும் பொண்டாட்டிக்கு நம்ம சொந்த உழைப்புல செய்யுற திருப்தி வருமா?..", என தன்னை தானே பெருமிதமாக கூறி கொண்டான் அவன்.
"ஹம்.. ரொம்பத்தா... ஆமா இப்போ என்ன வேல பாக்குற நீ... எவ்ளோ சம்பளம் உனக்கு??.."
"அது... ஹம்ம்.. ஒரு தீம் பார்க்ல டிக்கெட் கௌன்டர்ட்ல இருக்கேன்... டெம்ப்ரவரி தா சுபி... டிவென்டி கே (20k) வாங்குறேன்..."
"அடேய்.... அப்போ மொத்த சம்பளத்தையும் நீ எனக்கே செலவு பண்ணிட்டியா...", ஒரு ஃப்ரெஞ்ச் ஃபிரஸ் எடுத்து வாயில் வைக்க போனவள் அப்படியே அதிர்ந்து நிற்க.., "அதுக்கென்ன.. நா சம்பாதிக்கிறது மொத்தமும் உனக்கு தானே.. மத்த பசங்க மாதிரி நா சம்பாதிச்சு குடுத்தா தா என் வீட்டுல எல்லாரும் மூனு வேல சாப்பிடுவாங்கன்னு எனக்கு எந்த கண்டிஷனும் இல்லையே சுபி மா.. நா சம்பாதிக்கிறது மொத்தமும் உனக்கும் எனக்கும் மட்டும் தா.. சோ லெட்ஸ் என்ஜாய் யுவர் பர்த் டே", என அவளுக்கு பிடித்த சிக்கன் பிரைட் ரைஸை இருவருக்கும் பரிமாறினான்.
அவன் கூறுவதும் உண்மையே என்பதால், "இந்த வெட்டி வீராப்புக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல...", என அலுத்து கொண்டு உணவில் கவனத்தை பதித்தாள் சுபித்ரா.
கண் முன் இருக்கும் அனைத்தும் சுபித்ராவிற்கு பிடித்ததே... இரு ஆண்டிற்கு முன் மதுரையின் அணைத்து ஹோட்டலுக்கும் அவளை அழைத்து சென்ற அனுபவத்தின் வெளிப்பாடு தான் விசோழனின் இந்த ஏற்பாடு.
வயிறு திருப்தி ஆகும் வரையில் இருவரும் உண்டு முடித்தார்கள்.. உணவும் மீந்து போகாமல் முடிந்து போனது.. சரியாக இருவர் உண்ணும் அளவிற்கு தான் உணவை ஏற்பாடு செய்திருந்தான் விசோழன்.
இரவு உணவை முடித்த பிறகு, ஹோட்டல் மேனேஜரை அழைபேசியில் அழைத்து இந்த ஏற்பாடுகளுக்கு நன்றி கூறியவன் அனைத்தையும் எடுத்து செல்லுமாறு கூற... உணவு பாத்திரங்கள் அனைத்தும் எடுத்த பின் இப்பொழுது அந்த டேபிலில் மெழுகுவர்த்திகளும் ரோஜா ஜாடியும் மட்டுமே இருந்தது.
தங்க நிலவின் கதிரொளியும்... மெழுகுவர்த்தியின் சுடரொளியும் சேர்ந்து சுபித்ராவின் முகத்தை ஜொலிக்க செய்ய.. அவளுக்கு எதிரே அமர்ந்து கொஞ்சமும் திகட்டாமல் அவளை ரசித்து கொண்டிருந்தான் விசோழன்.
"ம்ச்... சோழா... அப்டி பாக்காத.. வா மொதல்ல கெலம்பலாம்...", என அங்கிருந்தும் அவன் பார்வையில் இருந்தும் தப்பிக்க முயற்சிக்க..., "அப்போ கிஃப்ட் வேணாமா சுபி..", என்றவன் சொல்லில் அப்படியே அமர்ந்தது விட்டாள் அவள்.
"இத்தன சர்பிரைஸ்க்கு மேல கிஃப்ட் வேர வச்சுருக்கியா நீ?.."
"ம்ம்...", என சாதாரணமாக தோளை குலுக்கினான் அவன்.
"என்ன கிஃப்ட்?... சீக்கிரம் சீக்கிரம் குடு.. மீ வெயிட்டிங்..."
"தரேன்.. பட் அதுக்கு முன்னாடி நீ ஒன்னு சொல்லணும்?"
"என்னதுஉஉஉ....????...."
"ஹாஹா.. நீ நெனைக்கிற மாதிரிலாம் இல்ல.... .... ...... .... என் மேல கோபமா இல்லையா நீ?", முதலில் சிரித்தவன் கடைசியில் சீரியஸாக கேட்டான்.
"ஏன் இல்லாம... செம்ம கோபத்துல இருந்தேன்.. நீ மட்டும் கண்ணு முன்னாடி வந்தா உன்ன அப்படியே புடிச்சு குனிய வச்சு முதுகுலயே நாலு குத்து குத்தி.. அடிச்சு.. முடிய பிடிச்சு... பிச்சு பீஸ் பீஸாக்கி.... .... அவ்ளோ கோபத்துல இருந்தேன்.. பட் உன் மூஞ்சிய பாத்ததும் எல்லாம் புஸ்ஸுன்னு போய்ருச்சு... சிரிச்சே என்ன கௌதுட்ட நீ...", நொந்து கொண்டு கூறி முடிக்க.. அவளை சமாதானம் செய்த அதே புன்னகை வீசினான் அவன்.
"பாத்தியா பாத்தியா.. நா திட்டிட்டு இருக்கேன் நீ சிரிக்குர...", ஒரு விரலால் அவனை சுட்டி காட்டியபடி அவனை பற்றி அவனிடமே குற்ற பத்திரிக்கை வாசிக்க... அவள் விரல் நீட்டிய கரத்தை அப்படியே பிடித்து கொண்டான்.
ஏனென்று புரியாமல் சுபித்ரா அவன் முகம் நோக்க.. பேன்ட் பாக்கெட்டில் இருந்து மிக மெல்லிய ஒரு தங்க மோதிரத்தை கையில் எடுத்தான் அவன்.
அதை ஏற்கனவே அவள் கையில் இருந்த மோதிரத்துடன் சேர்த்து அணிவித்தவன், "என் மொத மாச சம்பளத்துல எல்லாருக்கும் கிஃப்ட் வாங்குனேன்... உனக்கு குடுக்க இப்போ தா நேரம் கெடச்சுருக்கு... நாளைல இருந்து நீ செய்ய போர புது முயற்சிக்கு பெஸ்ட் ஆஃப் லக் சுபி மா...", என அவள் கரத்தை அப்படியே பிடித்து கொள்ள... அவளும் அமைதியாகவே அவன் முகம் பார்த்து அமர்ந்திருந்தான்.
"சுபி மா.. பொறுப்பா இருக்க வேண்டிய நேரத்துல ஆச ஆசன்னு ஆச பின்னாடியே போய்ட்டேன்... கல்யாணம்ன்னு ஒரு பேச்சு வந்தப்போ தா என் வீட்டுல என்னோட தகுதி என்ன.. எல்லாரும் என் கிட்ட என்ன எதிர்பாக்குறாங்கன்னு புரிஞ்சுது... அதா மா என் வீட்ட விட்டு... உன்ன விட்டு வெலகி வந்தேன்... ஃபர்ஸ்ட் கொஞ்சம் கஷ்ட்டமா தா இருந்துச்சு... இப்போ.... ஏதோ பரவால்ல... பட் பிராமிஸ் சுபி... உன்னோட அடுத்த பர்த் டே'ல நா கண்டிப்பா உன்னோட ஹஸ்பண்டா வந்து தா உனக்கு விஷ் பண்ணுவேன்....", என அவளின் கைபிடித்து உணர்வு பூர்வமாக அவன் பேச..., "அப்டி தான்டா செஞ்சாகணும் நீ... ஏன்னா உனக்கு குடுத்த டைம் என்னோட அடுத்த பர்த்டே வர்றதுக்கு மூனு மாசம் முன்னாடியே முடிஞ்சிடும். அதுகுள்ள நீ மட்டும் என்ன கல்யாணம் பண்ணல... அப்பறம் மனோவ வர சொல்லி.. உன்ன தூக்கிட்டு போய் நானே உனக்கு தாளி கட்டிருவேன் பாத்துகோ..", என வில்லங்கமாக பதிலளித்தாள் சுபித்ரா.
"என்னது நீ எனக்கு தாளி கட்டுவியா?"
" ஆமா... நீ கட்டலைனா நானே கட்டிருவேன்.. யாரு கட்டுனா என்ன??... யாரு கழுத்துல இருந்தா என்ன? தாளி தாளி தானே.."
"அது சரி... இதுவும் நல்லா தா இருக்கு...", என அவளை ஏற இறங்க பார்த்தவன், சிரிப்புடன், "சரி... ரொம்ப டைம் ஆகிருச்சு.. வா கெளம்பலாம்", என அவளை அழைத்து கொண்டு கீழே சென்றான்.
ரிஸப்ஷனில் விசோழன் பில் செட்டில் செய்து கொண்டிருக்க... அருகே ஓரிடத்தில் அமர்ந்திருந்த சுபித்ரா, இவ்வளவு நேரம் எடுத்த பல்வேறு புகைப்படங்களை மனோஜிற்கு அனுப்பி கொண்டிருந்தாள்.
'கோவை மாமா' என்ற எண்ணில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக வரும் படங்களை பார்த்த மனோஜ், கடுப்பில் மொபைலை அணைத்து கட்டிலில் தூக்கி எரிந்து விட்டு, "இங்க ஒருத்தன் சோறு கெடைக்குமா கெடைக்காதான்னே தெரியாம ஒக்காந்துட்டு இருக்கேன்... வெறும் சாப்பாடா அனுப்பி உசுப்பேத்துறத பாரு... பைத்தியம்.. பைத்தியம்...", என புலம்பி கொண்டே தன் அறையின் கதைவை நோக்கி இருபதாவது முறையாக நடந்தான்.
✨ சந்திப்பின் காலம் வரும்✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro