Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சந்திப்பு - 11

கோல்டன் மினி மால்... தங்க நிறத்தில் விளக்குகள் மின்னும் எழுத்துகளை தாங்கிய உயர்தர உணவகம் முன்பாக நின்றது விசோழனின் இனோவா..

மிக பிரம்மாண்டமான நுழைவாயிலில் நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் முகப்பில் ஒளி விளக்குகளுடன் கூடிய அலங்காரங்களையும் கொண்டு பிரமாதமாக இருந்தாலும் அங்கு ஆள் நடமாட்டம் என்பது அரவே இல்லை.. கண்ணை கைது செய்யும் அழகில் அதையெல்லாம் கவனிக்க தவறியிருந்தாள் காரினுள் அமர்ந்திருந்த சுபித்ரா.

காருக்குள் இருந்த படியே தன் முன் இருந்த ஃபைவ் ஸ்டார் ரெஸ்டாரன்ட்டை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவள், "சோழா.. என்னதிது... ஹோட்டலா... இதுவா டா உன் சர்பிரைஸ்...", என வியக்கும் பார்வையை வெளியே வைத்திருந்தவளுக்கு வழக்கம் போல தன் சிரிப்பிலேயே ஆம் என்னும் பதிலளித்தவன் காரை விட்டு கீழிறங்கி அவளிருக்கும் திசையின் புறமாக நடந்து சென்று கார் கதவை திறந்து அவளுக்கு தன் ஒற்றை கரம் நீட்டினான்.

அவன் செய்கை எதற்காகவென புரியாது வியந்தவள் மறுக்கமால் தன் கரத்தை அவனுடன் கோர்க்க... கைபிடித்து அவளை காரினுள் இருந்து வெளியே அழைத்தவன் தன்னை நோக்கி வந்த செக்யூரிட்டியிடம் கார் சாவியை கொடுத்துவிட்டு, தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கக்குட்டையை எடுத்து சுபித்ராவின் கண்களை கட்டினான்.

"ஓய் சோழா... என்ன செய்யுற நீ.. எதுக்கிது?..."

"ஷ்ஷ்... சர்பிரைஸ்னா இப்டி தா குடுப்பாங்க... அமைதியா இரு.. இல்லன்னா வாயயும் சேத்து கட்டி போட்டுறுவேன்... அப்பறம் உள்ள போய் எதையும் சாப்புட முடியாது பாத்துக்கோ..."

"அட போடா...", என அலுத்து கொண்டாலும் அவன் செய்கையை தடுக்கவில்லை அவள்.

சுபித்ராவின் கண்ணை கட்டி முடித்தவன் அவளை தோளோடு அணைத்தபடி கையை பிடித்து கொண்டு உணவகத்தின் உள்ளே வழிநடத்தி சென்றான்.

"உள்ள வந்தாச்சா?.."

"இல்ல.. நட.."

"இப்போ வந்தாச்சு.."

"ரெண்டு ஸ்டெப் தானே நடந்துருக்க... அதுக்குள்ள என்ன வந்துச்சு... நட..."

"சரி... இப்ப??... "

"வாய் மேலயே போட போறேன் பாரு..."

"ஹாஹாஹா.... இப்போ வந்தாச்சா??..."

"ஷப்பாஆஆஆஆ...."

"சொல்லு சொல்லு சொல்லு... வந்தாச்சாஆஆஆஆஆ..."

"..........."

"ம்ச்... சொல்லு சோழா..."

"தெய்வமே... வா... இன்னும் ஒரு பத்து ஸ்டெப் தா..."

"அப்டி சொல்லு... சொல்லாம கொள்ளாம கூட்டிட்டு போனா நானும் எவ்ளோ தூரம் தா நடக்குறதாம்... ",  வார்த்தைக்கு வார்த்தை அவனை சீண்டி கொண்டே நடந்தவள்,  ஓரிடத்தில் அவன் தன்னை நிறுத்தி, தன் கண் கட்டை அவிழ்ப்பதை உணர்ந்து, தனக்கு என்ன கொடுக்க போகிறான் என்பதை காண ஆர்வமாகினாள்.

கண்ணை மறைத்திருந்த கைக்குட்டை விலக... கண்ணை சிமிட்டி திறந்தவள், தன் முன்னால் இருந்ததை கண்டு கண்ணீர் சிந்தாமல் இருந்தது தான் ஆச்சரியம்.

ஹேப்பி பர்த் டே சுபி மா... என ஜிகுகிகு தோரணம் தொங்க.. வெள்ளை மற்றும் நீல நிற பலூன்கள் தரையிலும் சுவரிலும் பறந்து கொண்டிருக்க... அவளின் பிரியமான ரெட் வெல்வெட் சிறு டேபிலில் அமர்ந்திருந்தது.
அருகில், குட்டி குட்டி குழந்தைகள் இங்கும் அங்குமாக ஓடியாடி பலூன்களுடன் விளையாடி கொண்டிருந்தார்கள். அதில் சில குழந்தைகளின் பார்வை கேக்கின் மீதே தான் இருந்தது.

அவ்விடம் மொத்தத்திலும் குழந்தைகள் மட்டுமே இருக்க.. பெரியவர்கள் என்ற பெயரில் சுபித்ரா மற்றும் விசோழனை தவிர்த்து நடுத்தர வயதுடைய இரு பெண்கள் மட்டும்  அந்த குழந்தைகளை இழுத்து பிடித்து ஓரிடத்தில் கட்டுப்படுத்தி கொண்டிருந்தார்கள்.

இது சுபித்ராவிற்கு மிகமிக பிடித்தமான ஒன்று. என்றேனும் ஒரு முறையாவது பெரியோர்கள் இல்லாமல் இப்படி குட்டி குழந்தைகளுடன் தானும் ஒரு குழந்தையாக தன் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என ஆசை பட்டிருக்கிறாள். அதை ஒரு முறைதான் விசோழனிடமும் கூறி இருந்தாள்.

அவளின் அந்த வார்த்தையை... அவள் ஆசையை... அப்படியே நினைவில் நிறுத்தியிருந்தவன், இன்று அவள் இங்கு வரவிருக்கிறாள் என்னும் தகவல் கிடைத்த மறு நொடியே அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து முடித்து விட்டான்.

நடக்கும் ஒவ்வொன்றையும் பார்த்து அவள் வியந்து கொண்டிருக்க..., "பிறந்த நாள் வாழ்ததுக்கள் சுபி மா...",  காதருகில் கேட்டது விசோழனின் வாழ்த்து.

வியப்பு நிறைந்த விழிகளுடன் பின் நிற்பவனை நோக்கி திரும்பியவள், "நீ நியாபகம் வச்சிருக்கியா சோழா...?", ஆசையாக கேட்க..., "மறந்தா என்ன உயிரோடயா விடுவ நீ?...", சிரிப்புடன் பதிலளித்தான் அவன்.

"ம்ச்.. பர்த் டே'வ கேக்கல... இது... இது எல்லாத்தையும் கேக்குறேன்... இந்த கொழந்தைகள நீ தானே கூட்டிட்டு வந்த??... வேர யாருமே இங்க இல்ல.... டேய்.. ஹோட்டல வெலைக்கு வாங்கிட்டியா என்ன??...", விழி பிதுங்கி அவள் அதிர்ச்சியுடன் கேட்க.. அதை கண்டு வாய்விட்டு சிரிக்க தொடங்கி விட்டான் விசோழன்.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல... சும்மா... ஹால்ப் அன் ஹவர் புக் பண்ணிருக்கேன்... அவளோ தா.. இப்போ டைமும் முடிய போகுது.. குட்டீஸ் கேக்குக்காக வெயிட்டிங்.. வா போலாம்..."

"எதுக்கு டா இதெல்லாம்... நா கேட்டேனா உன்ன?.."

"ம்ச்... எனிதிங் ஃபார் மை டால்...", என்றவன் பதிலில் ஆனந்த வெள்ளத்தில் அவன் முகத்தையே பார்த்து நின்றாள் சுபித்ரா.

அவள் தோளில் கை போட்டபடி அவளை நோக்கி புன்னகைத்த விசோழன், "பப்பா... எல்லாம் வருஷம் வருஷம் கெடைக்காது... ஒரு தடவ தா கெடைக்கும்.. அப்டி கெடைக்கும் போதே அனுபவிச்சுரனும்... சரியா?.. அத விட்டுட்டு இப்டியே பாத்துட்டு இருந்தன்னு வை... அப்பறம் கேக் காலியா போய்ரும்... வா மொதல்ல...", அவளை தள்ளி கொண்டு சென்று கேக்கின் முன் நிறுத்த.. அணைத்து குட்டிகளும் நொடியில் அவளை சூழ்ந்து கொண்டார்கள். முழு மனநிறைவுடன் கத்தியை கையில் எடுத்தாள் சுபித்ரா.

★★★

மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய போகும் ஆனந்தத்துடன், முழு திருப்தியில் இருந்ததால் இன்று எட்டு மணிக்கெல்லாம் தன் உணவை முடித்துக்கொண்டு உறங்க சென்றிருந்தார் லட்சுமிதாஸ்.

ஹாலில் டிவி பார்த்து கொண்டிருப்பதாக நினைத்து கொண்டிருக்கும் வந்தனாவின் கவனம் டிவியில் இல்லாமல் வேறொரு பெரும் சிந்தனையில் உழன்று கொண்டிருந்தது.

சுவற்றில் தொங்கி கொண்டிருக்கும் தன் அன்னையின் படத்தை நோக்கி பார்வையை நிமிர்த்தியவள், "ம்மா... எனக்கு தெரில ம்மா... நா செய்யுறது சரி தானே??... அவங்கள பாத்தா என்ன நல்லபடியா வச்சுப்பாங்கன்ற மாதிரி தா தோணுது.. படிக்கவும் வச்சுருக்வாங்க... நான் பயந்த மாதிரி என்ன ஒதிக்கி.. வீட்ட விட்டு தொரத்தவும் மாட்டாங்க.... இனி எனக்கு வேலைக்கு போகனும்னு கூட அவசியம் இல்ல தானே ம்மா...  இப்போ இவர நா வேணாம்னு சொல்லி.. அப்பறம் வேற யாராவது வரும் போது அவங்க சரி இல்லாம போனா அப்போ ஃபீல் பண்ணுறதுக்கு நான் இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம் தானே?... இவங்க ரொம்ப நல்லவங்க ம்மா.. அப்டி என் முடிவு தப்புன்னா எப்டியாச்சும் எனக்கு சொல்லிருங்க ம்மா...", என அன்னையிடம் மானசீகமாக உரையாடி கொண்டிருந்தாள் வந்தனா.

★★★

நேரம் இரவு எட்டரை.. கோல்டன் மினி மாலில் குட்டி குழந்தைகளின் பெரும் கொண்டாட்டம் நிறைவு பெற்று, இப்போது அனைவரும் இரவு உணவு வேட்டையில் இறங்கி இருந்தார்கள்.

அந்த குழந்தைகளின் காப்பாளர்களிடம், இரவு உணவை முடித்த பின் கிளம்ப கூறி கட்டாயபடுத்தி ஒப்புகொள்ள வைத்த விசோழன், இப்போது குழந்தைகளுடன் விளையாடி அவர்களை உன்ன வைத்து கொண்டிருந்தான்.

சுபித்ராவும் தனக்கு புதிதாக கிடைத்த குட்டி நண்பர்கள் கூட்டத்திற்கு உணவு ஊட்டிக்கொண்டு அவர்களின் ஆஷ்ரமத்து வீர தீர சாகச கதைகளை எல்லாம் கேட்டு கொண்டிருந்தாள்.

அனைவரும் உணவை முடித்து கிளம்பவே மணி ஒன்பதரையை தாண்டி விட்டது... அவர்களுக்கு பில் செட்டில் செய்து விட்டு அனைவரையும் சுபித்ராவுடன் சேர்ந்து வழியனுப்பி வைத்தான் விசோழன்.

தன் குட்டி நண்பர்கள் அனைவரும் உற்சாகமாக தன்னிடம் டாட்டா காட்டிகொண்டு வேனில் ஏறி சென்றபின் அருகில் நின்றிருந்த விசோழனின் கையை தன்னிரு கைகளால் பிடித்துகொண்டு அவன் தோளில் சாய்ந்தாள் சுபித்ரா.

"சோழா... மீ ஹாப்பி... ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி... நல்லா இருந்துச்சு உன் சர்பிரைஸ்...", என நெகிழ்ச்சியில் துள்ளி குதிக்க... புன்னகையுடன் அவளை ஏறிட்டவன், "சரி.. நாம சாப்ட போலாமா...", என கேட்ட பின்பே அவள் வயிறும் குரல் கொடுத்தது.

"இத எப்டி நா மறந்தேன்... சீக்கிரம் வா.. எனக்கு பசிக்குது...", என அவனை  தனியே விட்டுவிட்டு அவள் மட்டும் முன்னோக்கி நடக்க... "பப்பா.. அந்த பக்கம் இல்ல.. இந்த பக்கம்...", என அவள் கரம் பிடித்து இழுத்தவன் மீண்டும் அதே கைக்குட்டை கொண்டு அவள் கண்களை மூட..., "மறுபடியுமா... சோழா எனக்கு பசிக்குது டா...", என சினுங்குபவளை கண்டு சிரித்து கொண்டே, "ஜஸ்ட் மொட்ட மாடிக்கு போரோம் சுபி... அங்க இருக்கு உன் டின்னர்.", என கூறி அவளை படியின் வழியே மாடிக்கு வழிநடத்தினான் விசோழன்.

சந்திப்பின் காலம் வரும்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro