சந்திப்பு - 1
கல்வியின் கரம் பிடித்து விட்டால் வாழ்வில் கரம் பிடிப்பவனை எதிர்பார்க்காமல் எந்த சூழலையும் துணிந்து சந்திக்கலாம் என்னும் எண்ணத்தில் மிதப்பவள், பட்டம் பெறாமல் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க மாட்டேனென கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பவள் வந்தனா.
செல்வத்தில் மிதந்தாலும் தன் கனவு பாதையை சந்திக்க இயலாமல் வாடும் சுபித்ரா. உடன் பிறப்புக்காக எதையும் சந்திக்க துணியும் சுபித்ராவின் தம்பி மனோஜ்.
எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றியை கண்டாலும் ஒரு துணையின்றி, செய்யும் அனைத்து செயல்களிலும் நிறைவை சந்திக்க இயலாமல் ஒரு துனைக்காக தவம் கிடக்கும் கவின்.
அன்னையின் தயவால் 23 வயதிலேயே வந்தனாவின் கரம்பிடிக்க காத்திருக்கும் கவினின் இனிய மொழியால் அவள் மனதில் வேரிட்டு பரந்து கிடக்கும் எண்ணங்களை கைவிட்டு அவன் கரம் பிடித்த கணத்தில் அவள் வாழ்வும் தடம் மாறுகிறது.
விதியின் அடுத்த சதி என்னவென்ற யோசனை எதுவுமே இல்லாமல் வாழ்வில் முக்கிய முடிவெடுக்கும் இவர்கள் நால்வரையும் தெரிந்தோ தெரியாமலோ முறையான பாதையில் இட்டுச் செல்லும் நாயகன், தன் வாழ்வின் சந்திப்பது என்னவோ தொடர் தோல்விகளையே...
இவ்வைவரின் வாழ்வும் ஒன்றாக ஒரே நேர்கோட்டில் சந்தித்து கொள்ளும் விதியின் அந்த ஒரு பக்கம் வரும் நேரம் இவர்களின் நிலை என்ன?..
அவள் கண்கள் இரண்டும் இரத்தம் பாயும் நரம்புகள் தெரிய சிவந்திருந்தது.... அழுது அழுது அவளின் முகமும் வீங்கிப் போய் வாடியிருக்க... சிந்த கண்ணீரின்றி அவளின் கண்களும் வற்றிப்போயே இருக்க... சுவற்றில் முதுகு மோத தலை குனிந்த நிலையில் தன் கல்லூரி பையை தோளில் சுமந்து நின்றாள் அவள்.
"இப்போ முடிவா என்ன சொல்லுற?..", தன்னை நோக்கி வரும் தந்தையின் குரலுக்கு பதில் கொடுப்பதற்காக அழுகையை விழுங்கி கொண்டு, "
"ப்பா... இதுவர நீங்க எனக்குன்னு எதையும் பாத்து பாத்து செய்யலனாலும் செய்ய வேண்டிய எல்லாத்தையும் அப்பான்ற கடமைக்காகவாச்சும் நல்லாவே செஞ்சுட்டீங்க... ஆனா இதுக்கு மேல இது என் லைஃப்... நா தா முடிவெடுப்பேன்... நா படிச்சு முடிச்சுக்குறேனே", இறுதி சொல் தந்தையிடம் இறைஞ்சி நிற்க... அவள் பார்வையோ சுவற்றில் மாலையிட்டு தொங்கி கொண்டிருக்கும் அவள் அன்னையின் படத்தின் மீதே பதிந்திருந்தது.
"வந்தனா.... நீ ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல.... இதுக்கு மேலயும் என்னால உன்ன வச்சு பாக்க முடியாது... நாளைக்கே எனக்கு எதாச்சும் ஆகிட்டா??... நீ என்ன பண்ணுவ??.. எங்க போவ??.. யார தெரியும் உனக்கு??.... அதுக்கு தா உனக்கு இப்போவே ஒரு கல்ய."
"அப்பா... உங்க பயம் எனக்கு புரியுது... ஆனா என் பயம் உங்களுக்கு புரிய மாட்டுதே... இப்போ உங்க பேச்ச கேட்டு எந்த ஒரு தகுதியுமே இல்லாம நீங்க சொல்லுறவங்கள கல்யாணம் பண்ணி, நாளைக்கு அவங்க என்ன தனியா விட்டா???... இப்போ நீங்க சொல்லுறீங்களே, உங்களுக்கு எதாவது ஆனா என்ன பாக்க ஆளில்லன்னு... அதே நெலம தானே அப்பவும் இருக்கும்... அத ஏன் புரிஞ்சுக்க மாட்டுறீங்க??...", அவள் காரசாரமாக தன் மன குமுறல்களை முதல் முறையாக இன்று தான் உடைத்து கொண்டிருந்தாள்.
"வந்தனா..... போதும்... இத்தோட நிருத்திக்கோ.... நீ ரொம்ப பேசுற...
இதுக்கு தா உன்ன படிக்க வைக்க பயமா இருக்குன்னு சொல்லுறேன்... இப்போ தா காலேஜ் போகவே ஆரம்பிச்சுருக்க... அதுக்கே இப்டி.. இன்னும் நீ கேக்குற அஞ்சு வருஷ டைம குடுத்தா என்னென்னலாம் பண்ணுவியோ..."
"ஹ்ம்ம்... சந்தேகமா??.. பயபடாதீங்க.. எங்கயும் ஓடிற மாட்டேன்... அந்தளவுக்கு தைரியம் எனக்கு இல்லவும் இல்ல... இனியும் வராது... உங்களுக்கு என்ன பத்தி தெரியுறத விட எனக்கு என்ன பத்தி நல்லாவே தெரியும் ப்பா... ", சிவப்பு நரம்புகள் தெரிய விழிகள் இரண்டும் சிவந்து வற்றி போய் இருக்க... எதையோ நினைத்ததில் இப்போது மீண்டும் கண்ணில் நீர் கோர்க்க துவங்கியது.
"இப்போ என்ன???.... ஊரு ஒலகத்துல நடக்காததா நா பண்ண போறேன்... இங்க படிக்குறதுக்கு பதில் அங்க போய் படி.. அவங்க என்ன உன்ன படிக்க வேணாம்னா சொல்லுறாங்க?", மகளின் முந்தைய பதிலில் எந்தவித சலனமும் இல்லை.... மேலும் அவர் பதிலில் எத்தகைய உணர்வு உள்ளதென்பதையும் அவர் மட்டுமே அறிவார்.
வந்தனாவை பொருத்த வரையில் தந்தையின் வர்த்தைகளில் இருப்பது தன்னை குறித்த பயமே... ஆனால் அது தன் பாதுகாப்பு கருதிய பயமா? இல்லை சமூகம் தன் மீது செலுத்தும் விஷ பர்வை குறித்த பயமா என்றால் அது கேள்வி குறியே...
தாயில்லா பிள்ளை தவறான வழி செல்வாள் என்ற ஊராரின் பேச்சை பொய்யாக்கி, இத்தனை காலம் தன் மகளை தனி ஒருவனாய் நின்று ஒழுக்கத்துடன் வளர்த்த உன்னத மனிதர் தான் என்றாலும், ஏனோ அவள் வாழ்வில் முக்கிய முடிவான திருமணத்திற்கு அவ்வளவு அவசரம் காட்டுகிறார் லட்சுமிதாஸ்.
வந்தனாவின் கண்ணில் எப்போதோ நீர் கோர்க்க துவங்கி விட்டது... அதனை கன்னத்தில் புரளவிட்டு முகத்திற்கு போட்ட பௌடர் அழிந்திடாமல் பாதுகாத்தவள் தன் ஒரு விரல் கொண்டு கண்ணீரை துடைத்து விழி விளிம்பிலேயே அடக்கி கண்மையமயை மட்டும் கரைத்து கொண்டிருந்தாள்.
"நீங்க என்ன சொன்னாலும் சரி... எனக்கு என் லைஃப் தா முக்கியம்... எவன் தயவுலயும் வாழ எனக்கு இஷ்டம் இல்ல ப்பா.. நா படிக்குறதே அதுக்கு தா.... படிச்சு முடிச்சு வேல கெடைக்கும்ன்னு உறுதியான போதும்... நா கல்யாணம் பண்ணிக்கிறேன்..."
இப்போ படிக்கணும்னு சொல்லுவ.. அப்பறம் வேலைக்கு போகனும்ன்னு சொல்லுவ... அதுவர நா உன்ன நெனச்சு பயத்துலயே இருக்கணுமா?
"இல்ல ப்பா... வேலைக்கு போகனும்ன்னு அடம் பிடிக்கலாம் மாட்டேன்... எனக்குன்னு ஒரு பிடிமானம் இல்லாம, அறகொறையா இன்னொரு வீட்டுக்கு போற பட்சத்துல... அங்க என்ன தொரத்திவிட்டா??..... ???.... என்ன நானே தாங்கனும்... அவ்ளோ தா..."
"அப்போ உன்ன தொரத்தி விடுற அளவுக்கு நீ நடந்துப்ப.. அப்டி தானே?"
".... ...... ....", என்ன பதில் கூறவென்று அவளுக்கு தெரியவில்லை... அவள் ஒன்றைநினைத்து பேச.. ஆனால் சென்றடையும் கருத்தோ அவள் கருத்துக்கு நேர்மாறாக இருக்கிறது.
"அப்டிலாம் இல்ல ப்பா... என் மூலமா உங்களுக்கு கெட்ட பேரு வந்துறும்ன்னு நினைக்காதீங்க... நா போற எடத்துல என் ஆசையெல்லாம் விட்டுட்டு அவங்களுக்கு புடிச்ச மாறி தானே இருக்க போறேன்..", ஒரு விரக்தி புன்னகை சூடியபடி, "எல்லாருக்கும் பொண்ணுங்க அப்டி இருந்தா தானே பிடிக்கும்... இல்லனா அவ தா அடங்காதவளா ஆகிருவாளே... நா அடங்கியே போறேன்...", அப்போதே அவள் குறள் தழுதழுக்க.., "அதுக்கும் மேல அவங்களே என்ன ஒதுக்குற பட்சத்துல... என்னால தாங்க முடியலனா தா நா அங்கெருந்து வெளியேறுவேன்.", இறுதியாக அவளின் உடையும் குரல் அழுத்தமாக எதிரொலித்தது.
"ஹ்ம்ம்... என்னவோ பண்ணு போ... உன் வாழ்க்கைய நீயே நாசம் பண்ணிக்கிற... இனி ஓக்காந்து தேடுநாலும் இந்த மாறி நல்ல மாப்பிள்ள கெடைக்காது... ", தன் சட்டை பையில் இருந்து சில ரூபாய் தாள்களை எடுத்து அருகில் இருந்த கண்ணாடி டேபிலில் பட்டென வைத்தவர் விருவிருவென வெளியேறி தன் சைக்கிளில் ஏறி புறப்பட்டு சென்றார்.
தந்தை வீட்டில் இருந்து புறப்பட்ட பின்பே அரை மணி நேரமாக தான் நின்றிருந்த இடத்தில் இருந்து நகர்ந்தவள் அவர் வைத்து சென்ற ரூபாய் தாள்களை எடுத்து தன் பையில் வைத்து கொண்டு, முகத்தை கழுவி விட்டு, அழுதது தெரியாமல் இருப்பதற்காக மீண்டும் மேலோட்டமாக ஒப்பனை செய்து கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டாள் வந்தனா.
கதவை பூட்டிவிட்டு அவள் வெளியேறிய அதே நொடி ஜன்னல் வழியே வீசிய மென்காற்று டேபிலில் இருந்த அந்த ஃபோட்டோவை கீழே தள்ளி விட்டு கவிழ்த்தி போட்டது.
அந்த ஃபோட்டோவின் பின்புறம்
பெயர் - கவின்
வயது - 23
படிப்பு - பி. டெக்.
சம்பளம் - 75,000.
என வந்தனவிற்கு பார்க்கப்பட்ட வரனின் தகவல் இருந்தது.
✨✨✨
அங்கே அவளின் வெண்ணிற கன்னங்கள் இரண்டும் சிவந்து போய் இருக்க... ஐவிரலும் அவள் கன்னத்தில் அச்சாக ஒட்டி கொண்டு தன்னை கண்ணாடியில் பிரதிபலித்து கொண்டிருந்தது...
அது தீ பிடித்தது போல் வலித்தாலும் அவள் மனதின் வலி தான் இப்போது மலை அளவிற்கு இருந்தது.
நேரடியாக பெற்றோரிடம் குரல் உயர்த்த மனமில்லை... துணிவும் இல்லை... ஆனால் ஏதேனும் ஒரு வழியில் தன் ஆசை நிறைவேறிடாதா?? அதற்கு வழி கிடைத்திடாதா?.. எத்தனை ஆசைகள் தோற்றாலும் உயிர்நாடியில் கலந்த ஒரே ஆசை... அது போகும் பாதை எதுவோ??.. பாதை திறக்கும் வழி எதுவோ??.. வழி செல்லும் திசை எதுவோ என எதுவும் புரியாமல் மெளனியாய் அவள்... சுபித்ரா.
அவள் இங்கு மௌனியாய் அமர்ந்திருக்க... வெளியே இவளுக்காகவே தன் பெற்றோர்களிடம் குரலை உயர்த்தி கொண்டிருந்தான் இவளின் தம்பி மனோஜ்.
அவன் பேசுவது தனக்காக தான் என்றாலும் எதிர்ப்பது பெற்றோரை என நினைக்கையில் சுபித்ராவின் மனம் வலியெடுக்க.. அவள் பார்வை அனிச்சையாகவே பதிந்தது எதிரில் இருந்த டேபிலில் நின்று கொண்டிருந்த அந்த ஃபோட்டோ ஸ்டான்ட் மீது.
சலனமற்ற பார்வையுடன் அதை தன் கையில் எடுத்தவள், "ஏன் டா என்ன தனியா விட்டுட்டு போன.. என்னயவும் கூட்டிட்டு போய்ருக்கலாம்ல.. நானும் உன் கூடவே எனக்கு புடிச்ச மாதிரி இருந்துருப்பேன்ல?.. இப்ப பாரு... எனக்காக இவன் அப்பாம்மாவ கஷ்ட படுத்தீட்டு இருக்கான்...", என படத்தை திட்டியவல் கண்ணில் கண்ணீர் உருள துடித்தது.
படக்கென அந்த படத்தை கவிழ்த்து போட்டவள் கண்களை துடைத்து கொண்டே, "உனக்காகலாம் நா அழ மாட்டேன் போ டா.. என்ன விட்டுட்டு போனல்ல...", என்றவளால் என்ன தான் முயன்றாலும் அழுகையை அடக்க வழி கிடைக்காமல் போக.. இரு கைகளாலும் முகத்த மூடி கொண்டவள் ஓடி சென்று கட்டிலில் விழுந்து மௌனமாக கதறி அழுதாள்.
✨ சந்திப்பின் காலம் வரும்✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro