9
பல நாளாக
ஒரு கேள்விக்கான
பதிலை கண்டறிய
என் இல்லாத மூளையைக்
குடைந்து குடைந்து
இன்று வரை பார்க்கிறேன்...
இன்னும் தான்
பதில் கிடைத்த பாடில்லை...!
"சாரி" என்ற ஒற்றை வார்த்தைக்கு
அளவுகோலொன்றை
இந்நாள்வரை தேடிக்கொண்டிருக்கிறேன்...
இந்நொடி வரை சிக்கவேயில்லை...!
"சாரி" என்ற வார்த்தையை
சொல்பவரிடம் கேட்கலாம் என்றால்,
கேட்கும் என்னையே
பைத்தியம் என்ற அளவுகோலில்
பார்த்து விட்டு
விடை சொல்லாமலே
சென்று விடுகின்றனர்...!
விரிவுரைக்கு வராமல்
அடுத்த நாள் விரிவுரைக்கு வந்த விரிவுரையாளர் உதிர்த்த
முதல் வார்த்தை
"சாரி"
அடுத்து வந்த பாடவேளையில்
ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்த
விரிவுரையாளர் உதிர்த்த
முதல் வார்த்தையும் அதே
"சாரி"
இன்னும் எனக்குப் புரியவில்லை...!
உங்களுக்காவது புரிகிறதா...?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro