4
விடைபெற்று விட்டாயே...
ரமழானே...
நம்மில் இருந்து
விடைபெற்று விட்டாயே...
ஒரு மாதகால
பயிற்சிப் பாசறையாக
வந்து
நம்மை வழிநடத்திய
ரமழானே
முடிவில் ஒரு இனிய நன்னாளை
நமக்கு சமர்ப்பித்து விட்டு
விடைபெற்று விட்டாயே...
எவரும் எழுந்திராத நேரத்தில்
எழுந்து உணவு உண்டு
கிட்டத்தட்ட பதின்நான்கு
மணித்தியாலங்கள்
உணவு, பானம் எதுவுமின்றி
உன்னுடன் நாம் ஒன்றாக
கலந்த அந்நாட்கள்
நிச்சியமாக அடுத்த
வருடமும் வரும்
அதில் இம்மியளவும்
எனக்கு சந்தேகமில்லை....
எனினும்....
உன்னை வரவேற்க
நான் இத்தரணியில்
இருப்பேனா என்பதிலேயே
தான் நான்
சிக்கித்தவிக்கிறேன்.
மீண்டும் உன்னை
வரவேற்கும் பாக்கியம்
வேண்டும் என இறைவனை
வேண்டியே நித்தமும்
வாழ்கிறேன்...
எவரும் விழித்திராத
நேரத்தில் விழித்து
பல நல்லமல்கள் நாம்
செய்தோமே...
அவற்றை நம் இறைவன்
ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்ற அவாவில்
என் நன்மை தட்டை
எடைபோட்டுக்கொண்டு
இருக்கிறேன்...
நம் இறைவன் இட்டுள்ள பர்ளான
செயற்பாடுகளுக்கு
ஒரு பர்ளின் நன்மையையும்
ஒரு சுன்னத்தான நன்மைக்கு
ஒரு சுன்னத்தான நன்மையையும்
தரும் இறைவன்...
புனித மாதமாகிய உன்னில்
ஒரு பர்ளுக்கு
எழுபது பர்ளுகளின்
நன்மையையும்
ஒரு சுன்னத்தான செயற்பாட்டுக்கு
ஒரு பர்ளின் நன்மையையும்
அள்ளி வழங்கினானே...
அதை மீண்டும்
அடைய வேண்டும்
என்ற ஆவலில்
உன்னை மீண்டும் அடைய
இறைவனிடம் வரம்
கேட்டுக்கொண்டு
காத்திருக்கிறேன்...
நிச்சியமாக மீண்டும்
வரும் உன்னை
உயிருடன்
நான்
இருந்து
வரவேற்க வேண்டும்
என்ற தீராத ஆசையில்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro