34
திரண்ட உன் கேசம்.
அகன்ற உன் நெற்றி.
பட்டும் படாமலும் சேர்ந்திருக்கும் தடித்த உன் புருவங்கள்.
எனை நோக்கும் போது அடிக்கடி மூடித்திறக்கும் உன் இமைகள்.
அதற்குள் பொக்கிஷமாக இருக்கும் உனக்கே உனக்கான கூர்மை பார்வையுடனான கண்கள்.
நீண்ட நேர்த்தியான உன் மூக்கு.
புகைப்பழக்கம் அற்றவன் என்பதை பறைசாற்றும் சிவந்த உன் உதடுகள்.
நான் பிடித்துக் கொஞ்சும் உன் நாடி.
ஒட்டி நறுக்கப்பட்ட உன் மீசை.
என் விருப்பத்திற்காகவே வைத்திருக்கும் நேர்த்தியான உன் சிறிய தாடி.
இல்லாத உன்னை மேலும் வர்ணிக்க வார்த்தை கிடைக்கவில்லை.
அவனை வர்ணிக்கப் போய் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டேன்😂
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro