25
இனி ஒரு துன்பம் என்னை தாக்காதவாறு
என்னை நான் பார்த்து கொள்கின்றேன்.
மீண்டும் அன்பை யாருக்கும் கொடுக்காமல்
என்னை நானே நேசிக்க தொடங்குகிறேன்.
எங்கேனும் பயணம் போனால்
தனி இருக்கை தேடுகின்றேன்.
என்னோடு கை கோர்த்து நடக்க
காற்றை மட்டுமே அனுமதிக்கின்றேன்.
என் தோள்கள் சாய்ந்து தூங்க
தலையனைகள் வாங்கி கொள்கின்றேன்.
கடவுச்சொல் இல்லாமல்
தொலை பேசியை பயன்படுத்துகின்றேன்.
சோக கீதம் இசைக்காமல்
குத்து பாட்டுக்கு ஆடுகின்றேன்.
கடந்த நாட்களில் அழுது கண்ணீர் முடிந்ததால்
இப்போது புன்னகையிலே திழைக்கின்றேன்.
எவரேனும் என்னை பின் தொடர்ந்தால்
நானே தொலைந்து போகின்றேன்.
செத்து செத்து பிழைக்க எனக்கு
தெரியவில்லை - ஆதலால்
காதலையே வெறுக்கின்றேன்.
(நெடுந்தீவு முகிலன்)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro