14
என் அழுகையில் பொய் இல்லை - ஆனால் என்னை
சிரிக்க வைப்பவர்கள் என்னோடு உண்மையாய் இல்லை...
கூட இருப்பவர்கள் பொய்யான நேசத்தோடே
பழகுவதால் - உண்மையான பாசத்தை உணர
கூட வாய்ப்பு கிடைக்கவில்லை...
காயம் வைத்தவர் நியாயம் கேட்பதும் - நேசம்
வைத்தவர் அவமானப்படுத்தப்படுவதும் நம் சமூகத்தில்
ஒன்றும் புதிதில்லை...
அன்பு நிரந்தரமானதாக இருக்க வேண்டும்
இல்லை என்றால் அடிக்கடி பிரிவு ஏற்ப்படும்.
பிரிவு என்றாலும் நிரந்தரமானதாக இருக்க வேண்டும்
சேர்ந்த பிறகும் விலகிப்போவது பழகிவிடும்.
தேவைக்காகத்தான் பழகுகிறார்கள் என்று தெரியாமல்
நாம் நேசம் வைத்து விடுகின்றோம்.
இப்போது நம் தேவையே நேசம் என்று தெரியாமல்
வேலை முடிந்ததும் அவர்கள் விலகி விடுகிறார்கள்.
நிராகரிக்க பட்ட பின்பும் பின் தொடர்வதாலே...
மேலும் வலி வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையில் யாரையுமே நம்பாமல் இருந்திருந்தால்
ஒரு போதும் ஏமாந்து இருக்கவே வாய்ப்பு இல்லை...
எப்போதுமே ஆறுதலாய் இருப்பேன் என்றவரே
அழ வைக்கிறாரே என்பது தான் வலிக்கிறது.
நினைவுகளோடு காத்திருந்தாலும் நம்பிக்கையை...
இழக்காமல் தவித்து கொண்டிருந்திருக்கிறோம்.
போலியான அன்புக்குத்தான் ஏங்கிக் கொண்டிருந்தோம்
என்பதையே நாட்கள் கடந்த பின்புதான் உணர்கின்றோம்.
வெறுத்தவர்களை தேடி போகாதீர்கள் - அவர்கள்
பெரும்பாலும் யாரையோ தேடித்தான் போயிருப்பார்கள்.
திரும்பி வந்தால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்
அவர்கள் எப்போதாவது விலகி போக கூடியவர்களே...
(நெடுந்தீவு முகிலன்)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro