10
மறந்து__போச்சு
அப்பன் கோயில் மணி ஓசை
மறந்து போச்சு
ஆத்தா அரைக்கும்
அம்மி சத்தம்
மறந்து போச்சு
உரல் உலக்கை
மறந்து போச்சு - அரிசி
குத்தும் சத்தம் மறந்து போச்சு - அதன்
வாசனை மறந்து போச்சு
அப்பன் விறகு கொத்தும் - சத்தம்
மறந்து போச்சு - அதன்
வாசனையும் மறந்து போச்சு
காலையில் துயில் எழுப்பும் -சேவல்
மறந்து போச்சு - பழம்
கொறிக்கும் அனிலும் மறந்து போச்சு
அதி காலை வேளையில்
பசு மாட்டு பால் கறக்கும் - ஓசை
மறந்து போச்சு
பிள்ளை கன்று துள்ளும் - அழகும்
மறந்து போச்சு
வேப்பம் மர காற்றும்
மறந்து போச்சு - அதன்
நிழலும் மறந்து போச்சு
பூவரசம் பூவும்
மறந்து போச்சு - பூவரசம்
பீப்பியும் மறந்து போச்சு
வெள்ளிக்கிழமை ஆரவாரம்
மறந்து போச்சு - நல்ல
காய் கறி சமையலும் மறந்து போச்சு
கோவில் பொங்கல்
மறந்து போச்சு - அங்கே
சிறுவர் முண்டி அடிக்கும - அழகும்
மறந்து போச்சு
பனை மரம்
மறந்து போச்சு - பனம்
பழ பினாட்டும் பறந்து போச்சு
பனை மரக் கள்ளு
மறந்து போச்சு - அதில்
மிதக்கும் குழவி எறும்பும்
மறந்து போச்சு
பனை நார் கடகம் சுமந்து
எரு சுமந்த காலம் மறந்து போச்சு
வயல் வெளியில்
சம்மணர் போல் உட்கந்து
குழை சாதம் உண்ணும் அழகு
மறந்து போச்சு
திருட்டு இளநீர் பறித்து
தாகம் தீர்த்தது மறந்தும் போச்சு
மழை வெள்ளம் தனில்
காகித கப்பல் விட்டது மறந்த போச்சு
இடி மின்னல் வேளையில்
புகைப்படம் எடுத்தது மறந்து போச்சு
எல்லாம் மறந்து மறந்து - தமிழ்
பேசுவதும் மறந்து போச்சு
~விஸ்வகவி...☺☺☺
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro