67 (completed)
5 வருடங்களுக்கு பிறகு:
ஹேய் தியா குட்டி...நீ ரொம்ப வாழு டா என அர்ஜுன் கூற...ஆமா அஜு..அப்பியே ஷாகி(ஷாக்ஷி) மாயி என தன் மழலை மொழியில் கூறியவளை தூக்கி மடியில் வைக்க...ஹேய்...தியா,. மாமானு சொல்லுனு எத்தனை தடவை சொல்லுறது என சாரா கத்த...தியா முகம் வாடவும்...சும்மா இரி சாரா...பிள்ளை முகமே வாடிருச்சு...நீ அர்ஜுனே சொல்லு டா தங்கம் என அர்ஜுன் கூறவும்...கண்ணத்தில் குழி விழ சிரித்தாள்...ஆஜித் சாரா தம்பதியின் ஒன்ற வயது குழந்தை தியா..
பாப்பு...நம்ம பாப்பா எப்ப வரும் என ஆருத் கேட்க..அது என் பாப்பு என சந்தியாவின் மடியில் உட்கார போன ஷாக்ஷியை தூக்கிய ப்ரவீன்... ஷாகி பேபி,. அத்தை வயித்துல பேபி இருக்கு பார்த்தியா டா...அதுனால நீ என் மடியில உட்கார்ந்துகோ என தன் மடியில் அமர்த்தினான்...அர்ஜுன் மற்றும் ப்ரஸியின் இரண்டு வயது குழந்தை ஷாக்சியை...
அப்ப நானு என பாவமாக கேட்ட ஆருத்திடம்...ஆருத் கண்ணா,. அங்க பாரு..வினை மாமா,. ஸ்வேதா கூட கடலை போடுறான்...போய் டிஸ்டர்ப் பன்றியா என கேட்க...ஐ...போறேன் என ஒவ்வொரு கம்பியாக பிடித்து சென்றவன்,. வினை மாமா..தூக்கு என கூறி அவனை ஸ்வேதாவுடன் பேசாமல் அழகு இம்சை பன்னினான்...மையூரி மற்றும் பரத்தின் இரண்டு வயது குழந்தை ஆருத்..
ஹேய் குட்டீஸ்,.. கோயமுத்தூர் வந்துருச்சு என ரன்வா கத்த...ஐஐஐ...ஜாலி என குதூகலமாகினர் தியா, ஆருத் மற்றும் ஷாக்சி கத்தி...ஆட்டம் போட்டனர்...
சரி...சரி...வீடு வந்துருச்சு...உங்க வாலை சுருட்டிட்டு அமைதியா இருக்கனும் என ஷாலினி கூற...மூன்றும் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டது...
ஆஜித்,சனா மற்றும் தியா,..
அர்ஜூன், ப்ரஸி மற்றும் ஷாக்சி,
மையூரி மற்றும் ஆருத்,..
ப்ரவீன் மற்றும் சந்தியா,.
வினை, ரன்வா,சுதா மற்றும் ஷாலினி என அனைவரும் மரியமின் வீட்டிர்க்கு மினி பேருந்தில் வந்து இறங்கினர்,..
வீட்டுல் அழகான பட்டு ரோஜா நிறத்தில் வண்ணம் அடித்து,.. வீட்டை சுற்றி சீரியல் பல்பு போட்டு வெளியே பந்தல் போட்டு மிக பிரமாண்டமாக இருந்தது...
வாங்க பா...வாங்க வாங்க என செய்யது மற்றும் சிராஜ் வரவேற்று அனைவரையும் மாடியில் இருக்கும் இரண்டு அறையில் தங்க வைத்தனர்..
வீடே ப்ரமாண்டமாக அலங்கரிக்க,..
இத்தனை வருடமாகியும் ஏங்க...அவ என்னை ம்மா னு கூட கூப்பிட மாட்டிக்கிறா என சிராஜின் தோளில் சாய்ந்து ஃபரிதா அழுகவும்...இங்கே பாரு மா...முன்னாடி முகத்தை திருப்பிக்கிட்டு போனவ இப்ப நார்மலா இருக்கா மா...மொத்தமா வெருக்காட்டாலும்..அவளால நம்மள ஏத்துக்க முடியல மா...எனக்கு நம்பிக்கை இருக்கு..சீக்கிரம் சரியாகிடுவா...அவ நம்மள ம்மா, வாப்பா னு கூப்பிடுற நாள் ரொம்ப தூரத்தில் இல்லை மா என சிராஜ் சமாதானம் படுத்தினாலும்...இது நம்ம பிள்ளை கல்யாணம்ங்க..நான் முன்னே நின்னு நடத்தனும்னு ஆசையா இருக்குங்க என ஃபரிதா அழுகவும்...
தாரளமா நடத்து ஃபரிதா...நீ தான் எதுலயுமே கலந்துக்காமே இருக்குறா...இனி நீ தான் எல்லாத்தையும் முன்னே நின்னு நடத்தனும் என கூறி வெளியே அழைத்து சென்றார்..
ஹேய்...என்ன டி..மரியம பார்க்க விட மாட்டிக்கிறாங்க என அர்ஜுன் சோகமாக கூற...முஸ்லீம்ஸ் அப்படி தான்...ஃப்ரெண்ட்ஸ்ஸா இருந்தாலும் அவுங்க கட்டுப்படாடு டா...அதான் மேரேஜ்க்கு பார்த்துகலாம்லே என ஆஜித் சமாதானம் படுத்தவும்...ப்ரஸியும் ஆமோதித்தாள்...
அன்று மாலை ரிஷப்ஷனிர்க்கு ஆண்கள் அனைவரும் பேன்ட் ஷர்ட்டிலும் பெண்கள் அனைவரும் சல்வாரிலும் தயாராகினார்..
ஹேய்..என்ன டி...நாங்க ரெடியாகிட்டோம்..நீ என்னன்னா கடலை போட்டுட்டு இருக்குறே..அதான்,. நாளைக்கு மாப்பிள்ளை சார் வந்துருவாங்களே என மரியமின் தோளில் அடித்து ஷிவானி கிண்டல் செய்ய...அதே. அதே என அருகில் வந்த ப்ரஸி..இந்தா ட்ரெஸ்..நஸிரா ம்மா தந்தாங்க..போட்டுக்கோ என கூறி குடுத்தாள்...
அதை வாங்கி பிரித்து பார்த்தவளுக்கு புரிந்தது...இதை யார் வாங்கியிருப்பார்கள் என்று...அமைதியாக அணிந்து கொண்டாள்...
ரிஷப்ஷனில் பெண், மாப்பிள்ளை பார்க்க கூடாது என்றிருப்பதால்...அவர் அவர் வீட்டில் அமைதியாக இருந்தனர்..
பெண் வீட்டில் உள்ளவர்கள் மாப்பிள்ளை வீட்டிர்க்கு சீர் எடுத்து செல்லும் போது..தன் தோழர்களை தங்களுடன் இருக்குமாறு தங்க வைத்து கொண்டான் ஆஷிஃப்..
இரவில் பெண்கள் அனைவரும்,.
முற்றத்தில் இருந்து மணப்பெண்ணிர்க்கும் தங்களுக்கும் என மெஹந்தி வைத்துக்கொண்டனர்...
ஹேய்...என்ன இது...மரியம் குசுகுசுனு...எங்களுக்கும் சொல்லுங்க என மரியமின் காதில் குசுக்குசுக்கும் அம்னா(தெரு தோழி)விடம் கேட்க...சொல்லுறேன்...சொல்லுறேன் என கூறி மரியமை பார்த்து புன்னகைத்தவள்...
இப்ப மெஹந்தி விடுறோம்லே...இவ கைலயும் கால்லயும் மொத்தமா ஐந்து எடத்துல ஆஷிஃப் ஆஷானு ரொம்ப சின்னதா எழுதுவோம்..
நாங்க எங்க எழுதிக்குறோம்னு பொண்ணுகிட்ட மட்டும் சொல்லிப்போம்...
நாளைக்கு நைட்டு மாப்பிளை சார்...அதை கண்டுபிடிச்சா தான் மத்தது எல்லாம் என அம்னா கண்ணடிக்க...ச்சே...இந்த மாதிரி நாம்ம ஃபாலோ பன்னுனா எவ்வளவு நல்லா இருக்கும் என ப்ரஸி வருத்தப்பட மற்ற பெண்களும் ஆமோதித்தனர்...
இப்படியே இவர்களின் கலாட்டா முடிய அங்கே ஆஷிஃபிர்க்கோ தூக்கம் தொலைந்து போனது...
டேய்...இப்படியே முழிச்சிட்டு இருந்தா...நாளைக்கு நைட்டு மரியம் பக்கத்துலே தூங்கி விழுவா என ஆஜித் கூறவும்...எனக்கு சுத்தமா தூக்கமே வரமாட்டிக்குது என ஆஷிஃப் கூற...அனைவரும் சிரித்தனர்...
காலை அழகாக விடிய,..
குளித்து விட்டு வீட்டை சுத்தமாக வைத்து அழகாக தயாராகினர்..
மாலை 6 மணிக்கு நிக்காஹ்(திருமணம்) என்பதால் அவர் அவர்களுக்கு வேலையில் நேரம் போக பொண்ணு மாப்பிள்ளைக்கு மட்டும் நேரம் நகரவே இல்லை...
நிக்காஹ் என குறிப்பிட்ட நேரத்திர்க்கு அரை மணி நேரத்திர்க்கு முன்னதாகவே மாப்பிள்ளை கோர்ட் சூட் அணிந்து..மாப்பிளையுடன்அநேகம் ஆண்கள் மஸ்ஜீத் வரை பைத்(வலம் வருதல்)தில் செல்ல வேண்டும் என்பதால்...ஆஷிஃப் கிளம்பி...தன் தோழர்களுக்கும் தொப்பியை குடுத்து போட சொல்லி உடன் அழைத்து சென்றான்...
மஸ்ஜீதின் நுழைவாயிலிலே மணப்பெண்ணின் தந்தையான சிராஜ் மற்றும் செய்யது மாப்பிள்ளைக்கு ஸலாம் குடுத்து...கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றனர்...
முஸல்லா(தொழுகை விரிப்பில்)இல் மாப்பிள்ளையை அமர வைத்து...மைக்கில் ஓதி(இதை மணப்பென் வீட்டிலிருந்தே கவணித்து கேட்கு வேண்டும்)
...இந்த நிக்காஹ் இல் சம்மதமா என ஆலிமிஷா(ஆண் ஆலிம்) கேட்க..
சம்மதம் என ஆஷிஃப் கூறவும்...ரசாக் ஆஷிஃபின் கையில் வெள்ளி மோதிரத்தை அணிவித்து...என் லாத்தாவ பார்த்துக்கோங்க மச்சான் என கூறவும்..புன்னகையுடன் தலையசைத்தான்..
மரியமிர்க்கு மஹராக ஒன்பது பவுனில் நெக்லஸ்செட் குடுத்தான் ஆஷிஃப்..
(மஹர் என்பது மாப்பிள்ளை பெண்ணிர்க்கு குடுப்பது...பெண் கேட்பதை மாப்பிளை குடுக்க வேண்டும்...மரியமிடன் கேட்ட போது...அவுங்க விருப்பம் என்று சொன்னதால் ஆஷிஃப் தேர்ந்தெடுத்தான்..
மஹர் குடுத்து மணமுடித்தாள் தான் நிக்காஹ் செல்லும்)..
இதே நேரத்தில் வீட்டில் மணப்பெண்ணின் கழுத்தில்,..மணப்பெண்ணின் தாய் சங்கிலி அணிய வேண்டும்...
நஸிரா,..சங்கிலியை எடுத்து ஃபரிதாவை பார்க்க...அவள் கண்களில் வலி தெரியவும்..ஃபரிதாவிடம் சென்று சங்கிலியை குடுத்தவள்...நீ போட்டு விடு என அழைத்து சென்றாள்..
ஃபரிதாவோ,. பயத்துடனே மரியமின் அருகில் செல்ல..அப்பொழுது தான் மரியம் ஃபரிதாவை பார்த்து விட்டு...திரும்பி நஸிராவை பார்த்து விட்டு திரும்ப,...ஃபரிதா சங்கிலியை மரியம் கழுத்தில் அணிவிக்கிமல் இருக்கவும்...ஃபரிதாவையே பார்த்த படி இருந்த மரியம்...அவள் கண்களையே பார்த்தவள்..
"செய்ன் போட்டு விடுங்க ம்மா" என கண்ணீருடன் மரியம் கூறவே,. தலையசைத்து கண்களில் கண்ணீர் வர..உதட்டில் சிரிப்பு வர..மரியமிர்க்கு சங்கிலியை அணிவித்து..நெற்றியில் முத்தத்தை பதித்தாள் ஃபரிதா..
காதல் பரிசாக என்னுள் வளர்ந்த உன்னைப் பற்றிய கனவுகளுடன் நானும் அவரும் மகிழ்ந்திட...
விதி வசத்தால் உங்கள் இருவரையும் நான் பிரிய...
பதினெட்டு வருட தேடலின் பதிலாய் உன்னை நான் காண...
சந்தோஷ வெள்ளத்தில் திளைத்திருந்த நான் உன் ம்மா என்னும் அழைப்பிர்க்காக காத்திருக்க...
நீ என்னை தாயாய் ஏற்காதது சாத்தானின் ஓதுதலா..??
வேதனையில் துடிக்கிறேன் நான்..
அல்லாஹ்வின் ஆசியால் என்னை ம்மா என்று நீ அழைத்த இந்நொடி...
முழுமை பெற்றது என் வாழ்க்கை...
(Srinidhisweety இன் வரிகள்)
மரியமை மேடையில் ஏற்றிட..சிராஜ் மற்றும் செய்யது மாப்பிள்ளையை பெண்ணின் தந்தை தான் கைகுடுத்து ஏற்ற வேண்டும் என்பதால்...முன்னதாகவே மஸ்ஜீதிலிருந்து பெண் வீட்டார் கிளம்பினர்..
செய்யது கூறி...சிராஜே ஆஷிஃபிர்க்கு கைகுடுத்து மேடையில் அமர வைத்தார்..
"மரியமின் முடியை ஆஷிஃபின் கைகளால் சிறிது நேரம் பிடிக்க வைத்து ஓதினர்"..
ஆஷிஃபின் கண்களில் முழு நிம்மதி தெரிந்தது..
(மரியமை மணமுடித்ததாள் அல்ல..எந்த ஊரில் தன்னையும் தன் ம்மாவையும் அவமானம் படுத்தி ஒதுக்கி வைத்தார்களோ..அதே ஊரில்..தன் திருமணம் நடந்து...தங்களை ஒதுக்கி வைத்தவர்களே திருமணத்தில் கலந்திருப்பதால்...சந்தோஷமாக தந்தையை பார்த்தான்)
நிக்காஹ் நல்ல படியாக முடிந்து பெரியவர்கள் மணமக்களுக்கு பால்பழம் குடுக்க..முதலில் ரியாஜ் ஆஷிஃபிர்க்கு குடுத்து மரியமிர்க்கு குடுத்தார்..
பின்னர் சிராஜ் ஆஷிஃபிர்க்கு குடுத்து மரியமிர்க்கு குடுக்க சென்று..தயங்கி நிற்க..சிராஜின் கையை பிடித்து தன்னிடம் இழுத்தாள் மரியம்...தன் பிஞ்சுவின் முதல் ஸ்பரிசம் என கண்கலங்கினார் சிராஜ்..
"பசிக்குது வாப்பா" என மரியம் கண்ணீருடன் கூற...கண் கலங்கியபடி பால்பழத்தை குடுத்து தன் மகளின் நெற்றியில் தன் முதல் முத்தத்தை பதித்தார் சிராஜ்...
அடுத்தடுத்து சித்தி, ஹனா, செய்யது, நஸிரா, ஃபரிதா, செல்வி, கவதா, மரியமின் தோழிகள் இன்னும் அநேகர் பால்பழம் குடுத்தனர்..
அடுத்து பந்தி வைக்க...அனைவரும் சாப்பிட சென்றனர்..
பந்தி முடிந்ததும் மணமகளுக்கு விளையாட்டு வைக்க...இரவு நேரமானதால் அக்கம் பக்க வீட்டில் உள்ளவர்கள் வெளியேற..சொந்தங்களும் நட்புகளும் மட்டுமே இருந்தது...
முதலில்..பல்லாங்குழி விளையாட வைக்க...மரியம் சிறு வயதிலிருந்தே அதிகம் விளையாடியதால் அருமையாக விளையாட...பாவம், ஆஷிஃப் தான் பேந்த பேந்த விழித்து...மற்றவர்கள் சொல் படி விளையாடினான்..இறுதியில் மரியமே வெற்றியடைந்த போதும்..மாப்பிளை வெற்றி அடைந்ததாகவே வெளியே கூறினர்..
(மாப்பிள்ளை கெத்தா இருக்கனுமாம்😭)
அடுத்து....மரியம் மற்றும் ஆஷிஃப் கையில் ஆளுக்கு ஐந்து வெற்றிலையை குடுத்தனர்..இந்த விளையாட்டில் இருவரில் ஒருவர் தங்களுக்குளிருந்து பறித்து பத்து வெற்றிலையாக சேர்க்க வேண்டும்..
ஹேய்..மரியம்...வாங்கு டி..வாங்கு..வாங்கு என ஷிவானி,ப்ரஸி மற்றும் தோழிகள் கத்த...தலையை உயர்த்தி ஆஷிஃபிடமிருந்து வெற்றிலையை வாங்க கையை கொண்டு செல்லவும்...ஆஜித், அர்ஜூன் என தோழர்கள் அனைவரும் ஆஷிஃபின் கையை தூக்க..மரியம் வெட்க்கப்பட்டு திரும்பி கொண்டாள்..
ஆஷிஃப்..மரியமிடமிருந்து வெற்றிலையை வாங்க வர கையை இருக்கி பிடிக்காமல் ஆஷிஃபிடம் வெற்றிலையை குடுத்தாள்...
அடுத்ததாக...ஃபரிதா மற்றும் நஸிரா ஒரு வாழி நிறைய சாக்லட், பூக்கள் மற்றும் காசு பணம் என மணமக்களின் மேல் வீச...தியா,ஷாக்சி,ஆருத் மற்றும் சில குழந்தைகள் போட்டி போட்டு சாக்லேட்டை எடுத்தனர்...
அதிலிருந்து ஐந்து ஒன் ருபி காய்னை ஆஷிஃபிடம் குடுக்க...மரியமின் கையை பிடித்து அவளை தன் பக்கமாக திருப்பி நெற்றியில் வைக்க...அவளோ வெட்க்கப்பப்டு மறுப்பக்கம் திரும்பி கொண்டாள்...மறுபடியும் அவளை பிடித்து தன் பக்கம் திருப்பி இரு கண்ணங்களிலும் நாடியிலும் வைத்தவன்...அடுத்ததாக உதட்டில் காசை வைக்க...அதை புரிந்து கொண்ட மரியம் தலையை அசைத்து திரும்பி கொள்ள...பெண் தோழிகளும் அவளை தங்கள் பக்கம் இருக்கி பிடித்து கொன்டனர்...
ஆஷிஃபோ,..அந்த காய்னை தன் உதடில் வைத்து முத்தம் பதித்து அவளின் ஆஷாவை இழுத்து அதே வேகத்தில் மரியமின் உதடில் காய்னை வைத்தான்...
இதைக்கண்ட ஆண் நன்பர்கள் "ஓஓஓஓ" என கத்தினர்...
தங்கள் விளையாட்டுகளை முடித்ததும் முதலிரவு அறைக்குள் போக சொல்லி எழுப்ப...ஆஷிஃப் மரியமிடம் கை நீட்ட..அவள் வெட்க்கப்பட்ட கையை பின் பக்கம் இழுக்கவும் ஆஷாவை தூக்க வர... வேகமாக தன் கையை தன் கணவனிடம் குடுத்தாள் மரியம் ஆயிஷா..
சரி...வாங்க..நாம்ம போய் தூங்குவோம் என ப்ரவீன் கூற..டேய்...ஜூனியர்...பாவம் டா என அர்ஜுன் இழுக்கவும்...ஏன் என வினை கேட்க...ஏதாச்சும் டவுட் கேட்ட சொல்லிகுடுத்துட்டு போலாம்னு நினைக்கிறேன் என அர்ஜுன் கூறவும் ஆஷா, ஆஷிஃபின் வெட்கம் அரங்கேறியது...
சுபம்
😍என்னை முதன் முதலாக கதை சொல்ல தூண்டிய என் தோழிக்கும், என் கதையை சைலன்ட் ரீடராக இருந்து எண்ணிக்கையில் சந்தோஷத்தை தந்தவர்களுக்கும், வோட்டை பதிப்பதன் மூலம் தங்களை எனக்கு தெரியப்படுத்தியவர்களுக்கும், கமேண்டில் தங்கள் கருத்தை அழித்தவர்களுக்கும், என் மனதில் நெருங்கி என் தவறுகளை சுட்டிக்காட்டிய என உறவுகளுக்கும் இந்த கதையை சமர்பிக்கிறேன்...
(பாராட்டும், திட்டுக்களும் இவர்களுக்கே சொந்தம்..ஈஈஈஈஈ )😍
.
.
.....
இதே போல் ஒரு கதையில்
"கணவருக்காக" என்ற தலைப்பில் சந்திப்பேன்...
(கொஞ்சம் நாள் சென்று...ஈஈஈஈஈ )
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro