65
ஹேய்...விடு என் கைய...யாராச்சும் பார்த்துர போராங்க என சொல்லிக் கொண்டே அவன் இழுத்த இழுப்பிர்க்கு தோதுவாக சென்றவள்...கடைசியாக இருந்தது உணவகத்திர்க்கு பின்னால் இருக்கும் பூங்கா...
இங்கே உட்காரு என கூலாக சொன்னவன்...அமர செல்ல...டேய்...உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கிறா...ஏன்...என்னை டிஸ்டர்ப் பன்றா?? காணாததுக்கு ஹஸ்பண்ட்னு சொல்லி கைய பிடிச்சு இழுத்துட்டு வர என மனதில் சந்தோஷம் பட்டுக்கொண்டு வெளியே கோவமாக பேசினாள் சாரா..
ஓய்...இவ்வளவு பேசுற நீ ஏன் டி நைட் ஆகுனா அப்படி இப்படி வர என்றவனை புரியாமல் பார்த்தவள்...புரியலயே என்றாள்...சும்மா நடிக்காதே டி...நைட் ஆகுனா மட்டும் முத்தம் குடுக்குறே...கட்டி பிடிக்கிறே...சீக்கிரம் பிள்ளை பெத்துகளாம்னு சொல்லுறே...காலையா ஆகுனா என்னை கண்டுக்காம போறே என்றவன் சாராவை பார்க்க...அவள் முகமோ சிவந்து போய் இருந்தது...அதை மறக்க அங்கு இங்கு என திரும்பி கொண்டிருந்தாள்...இதை பார்த்து உள்ளுக்குள் நகைத்தவன்...சொல்லு டி...இனிமே காலைலயும் என் கூடவே இருந்துக்குறியா என ஆஜித் கேட்க...
நீ என்ன உளறிட்டு இருக்குறே...கனவு ஏதும் கண்டியா என கோவமாக முகத்தை வைத்துக் கேட்க...
(பாவம்...காதலன்...வெட்கம் கலந்த பேச்சு...புன்னகை...என அனைத்தும் அவனிடம் கோவம் காட்ட முடியாமல் தடுத்து நிறுத்த...தடுமாறி போனாள்)...
ஆமா பொண்டாட்டி...கனவு தான் தெரியுமா?? பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு...எனக்கு லவ் பன்னலாம் தெரியாது...நான் பாட்டுக்கு ஒரு ஹீரோ போஸ்ட்ல கெத்தா சுத்திட்டு இருந்தேன்...ரொமேன்ஸ் பன்னவும் வராது ...பட்,..நான் கொஞ்சம் ப்ரிளியன்ட்..
நீ எனக்கு சொல்லி தந்த கப்சிப்புனு மண்டைல ஏத்தி...அது படியே உன் கூட ரொமேன்ஸ் பன்னுவேன்...ஓகே என்றவனை சாரா முறைக்க...ஹேய்...முறைக்காதே டி...உனக்கு நடிக்க தெரியலே என ஆஜித் கூறவும்...வெட்கப்பட்டு அவன் சுதாரிக்கும் முன் ஓடியே விட்டாள்...
.
.
.
டார்லூ என அழைத்துக் கொண்டு வந்தவன்...இங்கே தான் இருக்கியா?? உன்னை எங்கேளாம் தேடுறாது என பின்னாலிருந்து அனைத்த படி அவளின் முகத்தை பார்த்தவன்...என்ன ஆச்சி மா...ஏன் அழுகுறா என கேட்டவனிடம்...நம்ம பொண்ணுங்க என அழுதபடியே ஃபரிதா கூற...என்ன சொல்லுறே மா...நம்ம பொண்ணு சீக்கிரம் கிடைச்சிறுவா என சிராஜ் கூற.. நம்ம பொண்ணு கிடைச்சிடாங்க என கூறியவள் கண்ணீர் வடிந்த முகத்துடனும் இதழில் புன்னகையுடனும் கூறியவளை நம்பாமல் பார்த்தவன்...என்ன சொல்லுறே ஃபரிதா...நீ சொல்றது எனக்கு புரியலயே என பதற்றத்துடன் கேட்டவனிடம்...இங்கே பாருங்க என லேப்பை அவன் புறம் திருப்ப...மரியம் என்றவன் விழிக்கவும்...அவனுக்கு ஃபரிதா ஜும் செய்து காட்ட...அவன் கண்களிலும் கண்ணீர் ஆறாய் ஓடியது...
அப்படினா என் பொண்ணு கிடைச்சிட்டா...என் சொத்து என் கைக்கு வந்திருச்சி...மரியம் தான் என் பொண்ணு...வா...நாம்ம பார்க்க போகலாம் என குதூகலித்தவனிடம்...இல்லை...இப்ப அவ காலேஜ் டூர் போய்க்கிறா...வர நாளு நாள் ஆகும்...நாம்ம இப்ப கோயமுத்தூர் போகலாம்ங்க...நஸிரா லாத்தாவ பார்ப்போம்...நம்ம பிள்ளையை ரொம்ப நல்ல ஒழுக்கமா வளர்த்திக்குறாங்க...ஆனா, எனக்கு பயமா இருக்குங்க என கூறியவளின் முகத்தில் பயமும் வருத்தமும் தெரிய...
ஏன் மா....பயமா இருக்கு என கேட்ட சிராஜிடம் ஒரு வேலை நம்ம மரியமை நம்ம கிட்ட தரமாட்டேனு சொன்னா...அப்படி இல்லைனா நம்ம மரியம் நம்ம கிட்ட வரலைனா...எனக்கு என் பிள்ளை என் கூடவே இருக்கனும்ங்க...ஏதாவது செய்யுங்க என குழந்தை போல் அழுதவளிம்...நீ அழுவாதே மா...அவ நம்ம குழந்தை...அவ நம்மள விட்டு போக மாட்டா...போக விட மாட்டேன்...கோர்ட்ல கேஸ் போட்டாச்சும் நம்ம பிள்ளையை நான் மீட்டெடுப்பேன் என ஆக்ரோஷமாக கூறியவன்...நீ உங்க காலேஜ் மூலமா மரியமோட அட்ரெஸ எடு...நாம்ம அங்கே போகலாம் என கூறியவன் சில ஏற்பாடுகள் செய்து முடித்து...நாங்க ஊர்க்கு போயிட்டு வரோம்...
சேட்டை பன்னாம உன் மூமா(ஃபரிதாவின் தாய்) கிட்ட இருந்துக்கனும் என ரசாக்கிடம் கூறி விட்டு இருவரும் பல எதிர்ப்பார்புகளோடு கோயமுத்தூர் நோக்கி சென்றனர் ஃபரிதா மற்றும் சிராஜ்...
.
.
.
ஹேய்...வாவ்...செம்மயா இருக்கு...இந்த லேக் என சந்தியா கத்தவும்...உன் கூட இருக்கும் போது இன்னும் அழகா இருக்குலே என சந்தியா காதோரத்தில் ப்ரவீன் கூற...ஆமா...ஆமா..அழகா இருக்கும் என அர்ஜுனும் வினையும் ஒரு சேர கத்தினர்...
பெலிக்கல் லேக்
பின்னர் அவர் அவர்களின் வேலையை ஆரம்பிக்க...அதான்ங்க அங்கு ஒரு குரங்காக...இங்கே ஒரு குரங்காக செல்ஃபி எடுத்து கொண்டிருந்தனர்...
போதும் பா...இதுக்கு மேலே என்னால முடியலே...கொஞ்சம் நேரம் அந்த ஸ்டோன் பென்ச்ல உட்கார்ந்திருக்கேன் என மரியம் கூறவும்...வா...நானும் உன் கூட இருக்கேன் என ப்ரஸியும் கூட வர...ஹேய் லூஸு அர்ஜுன் ஃபீல் பன்னுவான்...நீ என்ஜாய் பன்னு...நான் அங்கே உட்கார்ந்திக்குறேன் என கூறி அங்கே மறைவாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி தலையை பின்னால் சாய்த்த படி அமர்ந்திருந்தாள் மரியம்...
"ஆஷா மா" என அழைத்து அவள் அருகில் அமர்ந்தவனை கோப பார்வை பார்த்தவள் மறுபடியும் கண்களை மூடிக் கொள்ளவும்...அவளுக்கு ஸ்வெட்டரை போட்டு விட்டவன்...இந்தா ஆஷா.."மஷ்ரூம் ஃப்ரை" உனக்கு ரொம்ப பிடிக்கும்லே என அவளிடம் ஆஷிஃப் குடுக்க...அதை மறுத்து திரும்பி கொண்டவளை...உனக்கு குளுருனால தான் ஃபீவரா இருக்கு... இது இதமா இருக்கும் சாப்பிடு மா என கூற...கண் கலங்கியவள்...ப்ளீஸ் ஆஷிஃப்..இங்கே இருந்து போயிடு என கூறியவளின் கண்ணீரை தொடைச்சவன் ப்ளீஸ் டா...இதை சாப்டுட்டு...இந்த டேப்லட்ட போடு...நான் போயிடுறேன் என கெஞ்சியவனை...சொன்னா புரிஞ்சுக்க...எனக்கு ஆல்ரெடி உடம்புக்கு முடியல...என்னை டிஸ்டர்ப் பன்னாதே என கோவமாக மரியம் கூறவும்...
வேகமாக "மஷ்ரூம் ஃப்ரை"யை கீழே வீச போனவனை...முறைத்து பார்த்தவள்...எதுவும் சொல்லாமல் வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள்...
ஹாஹா...எனக்கு தெரியும் ஆஷா...நீ எதையும் வேஷ்ட் பன்ன மாட்டேனு...அது உனக்கு பிடிக்கவும் பிடிக்காது...அதான் வீச போனேன் என மனதில் கள்ளதனமாக சிறித்தவன் முகத்தை பாவமாக வைத்து கொண்டு மாத்திரையை நீட்ட...ஒரு முறை முறைத்தவள் வேறு வழியில்லாமல் மாத்திரையும் வாங்கி போட்டு கொண்டாள்...
இப்ப ஓகே தானே...போறியா என கேட்டவளை...உறுத்து பார்த்தவன்...வேகமாக அவள் நெற்றியில் கை வைக்க...ஃபீவர் போகலையே...உனக்கு குளிர வேற செய்யுது...பேசாம என இழுத்தவனை முறைத்தவள்...என் மடியில் படுத்துக்கோனு சொல்ல வந்தேன் என ஆஷிஃப் இழிக்க...அவனை முறைத்து விட்டு...என் ஃப்ரெண்ட்ஸ் வந்துருவாங்க போ ஆஷிஃப் என மரியம் கூற...அப்ப நான் யாரு...நான் தானே உன் ஃபர்ஸ்ட் ஃப்ரெண்ட் என கூறியவனை..முறைத்து முறைத்து பார்க்க...சும்மா சும்மா முறைக்காதேடி...உன் ஆஷிஃப் எரிஞ்சிருவான்....நான் போறேன்...
ஆனா, மறுபடியும் வருவேன் என ஸ்டைலாக சொல்லி கண்ணடித்து சென்றவனை...ரசித்து பார்த்தவள்...
ச்சே...உன் மனசு...மானங்கெட்டது என தன்னை தானே கூறி திரும்பி கொண்டாள் மரியம்...
.
.
.
என்னங்க...எனக்கு பயமா இருக்குங்க...ஏதோ தப்பா நடக்க போற மாதிரி என் மனசு சொல்லுதுங்க என கூறிய நஸிராவை சமாதானம் செய்தவர்..
அப்படிலாம் ஒன்னும் ஆகாது மா...நீ பயப்புடாதே...எல்லாம் நல்ல படியா நடக்கும் என்றவரை பார்த்து இல்லைங்க...ஏதோ கன்டிப்பா தப்பா நடக்க போகுதுங்க...
நம்ம மரியம்...நம்ம மரியம யாரும் என் கிட்ட இருந்து பிரிச்சிர மாட்டாங்களே...அவ என் பொண்ணுங்க என நஸிரா ஒரு படப்படப்புடன் கூற...
இப்படி நீ பயந்து புலம்புனா...உனக்கு முடியலேனு ஹாஸ்பிடல்ல வச்சிக்கிறோம்னு மரியம்க்கு ஃபோன் போட்டு சொல்லிருவேன் என செய்யது மிரட்ட...இல்லை...இல்லை...புலம்ப மாட்டேன் என வாயை மூடிக்கொண்டாள்...
.
.
.
ஊட்டியில் பல இடத்திர்க்கு சென்று சந்தோஷமாக கழிய...
அடுத்ததாக மைசூரை நோக்கி பேருந்து சென்றது...
மரியமிர்க்கு காய்ச்சல் குறைந்தாலும்.. கவலைகல் குறையாமல் அமைதியாகவே இருந்தாள்...
இதனால் நட்புகளுக்கும் உற்சாகம் குறைந்தே போனது..
மரியமை சகஜ நிலைக்கு கொண்டு வர...எல்லோரும் படாத பாடு பட்டு கொண்டிருந்தனர்...
ஓரளவுக்கு மரியம் தன் நட்புகளுக்காக தன்னை தேற்றி சகஜ நிலைக்கு வந்ததும் குதூகலமாக புகைப்படம் எடுத்து கொண்டிருக்க பேருந்து மைசூரில் நின்றது...
ஸ்டூடண்ட்ஸ்...மைசூர் மஹாராஜா பேலஸ் பார்த்துட்டு தான்...நாம ரூம்க்கு போவோம்...இங்கே ஆடாம உங்க வாள சுருட்டி வைச்சிட்டு அமைதியா போகனும்...உள்ளே லைன் ஃபார்ம் பன்னி தான் போகனும் என ஒரு ஆசிரியர் கூற..
மேம்...நாங்க குட்டி பசங்களா...இப்படி சொல்லுறீங்க என அவர்களில் ஒருவன் கேட்க...இந்த பேலஸ்ல அப்படி தான் போகனும்னு ரூல்ஸ்...அதான் என கூறி ஆசிரியர் செல்ல...இவர்களும் பேருந்தை விட்டு அமைதியாக இறங்க...மரியமின் பின்னால் ஆஷிஃப் நின்று அவளை இம்சித்து கொண்டிருந்தான்...
.
.
.
.
கோயமுத்தூர் வர வர...மனதில் படப்படப்பு அதிகமாக.. அட்ரஷை கண்டுபிடித்து செல்லவும்...வாசலில் பூட்டு தான் தொங்கி கொண்டிருந்தது...
பக்கத்து வீட்டில் விசாரிக்க...
நஸிராவிர்க்கு முடியாமல் மருத்துவமனையில் இருப்பதாக சொல்லவும்...மருத்துவமனையை நோக்கி சிராஜின் கார் சென்றது...ஃபரிதா பதற்றத்துடன் கண்களை இருக்கி மூடி ஓதிக்கொண்டே இருந்தாள்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro