63
இதையெல்லாம் கவனிக்காத மரியமின் கவனம் புதிய ஆடையின் மேல் இருக்க...சிராஜ் வாப்பா என்றாள்...
நஸிராவும் செய்யதும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி உறைந்து போயினர்...
வாப்பா
..வாப்பா...என மரியம் கத்த...
ஹான்...சொல்லு டா என பதறியபடி செய்யது கேட்க...என்ன ஆச்சி வாப்பா...ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க என மரியம் கேட்கவும்...இல்லை மா...கொஞ்சம் தலை வலிக்குது...நீ போ மா...எனக்கு கொஞ்சம் நேரத்தில சரியாகிடும் என செய்யது கூறவும் சரி என சென்றுவிட்டாள்...
என்னங்க இது....எனக்கு ஒன்னுமே புரியலே...ஃபரிதா வாப்பா ரொம்ப கொடுமைப்பத்தி கூட்டிட்டு போனாங்களே...சிராஜும் காணாமல் போயிருந்தாங்க...எப்படி திரும்பி வந்திருப்பாங்க...எப்படி ஒன்னு சேர்ந்திருப்பாங்க...அப்ப நம்ம மரியம தேடிருப்பாங்களா?? நம்மள தேடி திருச்சிக்கு வந்திருப்பாங்களா??
நம்ம கிட்ட இருந்து திரும்பவும் பிள்ளைய வாங்கிருவாங்களா?? நம்மள விட்டு நம்ம செல்லம் போயிருவாளா?? என ஒவ்வொன்றாய் நஸிரா கேட்டுக் கொண்டிருக்க செய்யதிர்க்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது...
இல்லை மா....நம்ம பொண்ணு நம்மள விட்டு போக மாட்டா...நீ கவலை படாதே என செய்யது அவர் மனைவிக்கு ஆறுதல் கூறினார்...கூடவே தனக்கும் ஆறுதல் கூறிக் கொண்டார்...
இருவரும் இரு மூலையில் பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் சோகத்தை உருவாக்கி கொண்டு அமர்ந்திருந்தனர்...
ம்மா...நாளைக்கு பெருநாள் மா...ஆனா, இன்னும் என் பெருநாள் ட்ரெஸ காமிக்கவே இல்லையே என மரியம் வர...அது மா...உங்க ம்மா....உங்க மேம் தந்தாங்களே...அந்த ட்ரெஸ்ஸ போட்டுக்கோ மா என நஸிரா கூறவும்...
ஏன் மா...நீங்க சொல்லிக்குறீங்களே...எவ்வளவு கிஃப்ட்டா வந்தாலும் பெருநாளைக்கு பெத்தவங்க இல்லைனா மாப்பிளை எடுத்து தர ட்ரெஸ தான் போடனும்னு...அது தான் பரக்கத்(அபிவிருத்தி)னு சொல்லுவீங்க...ப்ரஸி கூட எத்தனை ட்ரெஸ் தந்தாலும் பெருநாளைக்கு போட விட மாட்டீங்க...இப்ப என்னனா ஃபரிதா மேம் தந்த ட்ரெஸ்ஸ போட்டுக்க சொல்லுறீங்க என மரியம் கேட்க...
ம்மா...அது இல்லை மா...இப்ப கொஞ்சம் பட்ஜட் ப்ராப்ளம் மா...அட்ஜஸ்ட் பன்னிக்கோ மா...நெக்ஸ்ட் டைம் ரெண்டு ட்ரெஸ் எடுத்துக்கலாம் என கூறி மரியமை சம்மதிக்க வைத்தார் செய்யது...
(சரியாக பதினெட்டாவது வயதில்... பெருநாளைக்கு முதன் முதலாக சொந்த பெற்றோர் எடுத்து குடுக்கும் ஆடையை மரியம் அணிய வேண்டும் என நினைத்தார்கள்)...
காலையில் பெருநாள் என மரியமிர்க்கு பிடித்த அடை, வட்டிலப்பம்(my fvrt😍) ஜவ்வரிசி, மட்டன் பிரியாணி என வகை வகையாக செய்தார் நஸிரா...
நோன்பு பெருநாளைக்கு சாப்பிட்டு விட்டு தான் தொழுக போக வேண்டும் என்று இருப்பதால் சாப்பிட்டு விட்டு தொழுக போனாள்...
மரியம் அந்த ஆடையில் தேவதை போல் இருக்க...மரியமிர்க்கு அது சந்தோஷமாகவும்...நஸிராவிர்க்கும் செய்யதிர்க்கும் அது நெருடலாகவும் இருந்தது...
பெருநாள் முடிந்த மாலை மரியம் கே.டிவியில் "சின்னக் கண்ணமா" படம் பார்த்த படி அழுது கொண்டிருந்தாள்...பக்கத்தில் இருந்த நஸிரா...ஏன் மா அழுகுற என வினவ...
"இல்லை மா...இந்த படத்தை பாருங்களேன்..
குழந்தை பிறக்கும் போது ஹாஸ்பிடல்ல விபத்து நாள மாரி விட்டது....அது சில வருடம் கழித்து தான் தெரிய வருது...அதுக்குள்ள சரண்யா, ஞாசர் கிட்ட வந்த கார்த்திக்கோட குழந்தை இறந்துடுச்சு...கார்த்திக் கிட்ட இருக்குற சரண்யா ஞாசரோட குழந்தை உயிரோட இருக்கு...உயிரோட இருக்குற அந்த குழந்தை அப்பா(கார்த்திக்) மேலே உயிரையே வச்சிருக்கு...அந்த குழந்தைக்கு கார்த்திக் தான் எல்லாமே...
ஆனா, பெத்தவங்க அந்த குழந்தை எங்க குழந்தை...எங்களுக்கு தான் கிடைக்கனும்னு கேஸ் போடுறாங்க...கார்த்திக் குடுக்க மாட்டேனு சொல்லுறான்..."
ரொம்ப கொடுமையான கதை மா...ரெண்டு பேரும் பாவம் தானே...ஒன்னு பெத்தவங்க...இன்னொன்னு உயிருக்கு உயிரா வளர்த்தவங்க என மரியம் அழுக...சரி மா...நீ என்ன நினைக்கிறா...குழந்தை யாரு கிட்ட இருக்கனும்னு நினைக்கிறா என செய்யது ஒரு தவிப்புடன் கேட்க...குழந்தையோட எதிர்க்காலத்தை வைச்சி பார்த்தோம்னா குழந்தை கார்த்திக் கிட்ட தான் இருக்கனும்...ஆனால்,.. சரண்யா, ஞாசர் பாவம்...குழந்தைக்கு நாளு வயது...பேசாம ஒரே குடும்பமா இருக்கலாம் என மரியம் கூற...அது கதைக்கு ஒத்து வரும்...நடைமுறைக்கு சாத்தியம் படாது மா என கூறி சென்றார் செய்யது...
ஏன் மரியம்...ஒரு வேலை உன்னை நாங்க தத்து எடுத்து வழர்த்திருந்தா என்ன பன்னிருப்பே என நஸிரா கேட்க..
அட போங்க மா...காமெடி பன்னாம ஆன்ட் நீங்க அப்படி பன்னிருந்த எனக்கு மதி தெரிய ஆரம்பிக்கும் போது...அதாவது ஆறு வயசுலயே சொல்லிருப்பீங்க...அதானே!! இஸ்லாம நீங்க கரெக்ட்டா ஃபாலோவ் பன்னுவீங்களே...அப்புடினா இஸ்லாத்தின் படி என் கிட்ட சொல்லிருப்பீங்க என மரியம் கூறவும்...உன் கிட்ட சொல்லாம மறைச்சது தான் தப்பு மா என மனதால் அழுதாள் நஸிரா...
.
.
.
சரி மா...பார்த்து போயிட்டு வா என கல்லூரிக்கு அனுப்பி வைத்தார் செய்யது மற்றும் நஸிரா...
ஆனா, மரியம் கல்லூரிக்கு செல்வதில் இருவருக்கும் சிறிதும் உடன்பாடில்லை...
மரியமோ...தன்னை பிரிய தான் கஷ்டப் படுகிறார்கள் என நினைத்து கொண்டாள்...
நஸிராவிர்க்கோ மரியமிடம் உண்மையை சொல்ல நினைத்தாலும்...அந்த தைரியம் இல்லாமல் போனது...
செய்யதிர்க்கோ...மரியம் தங்களை விட்டு போயிரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்...
(பிள்ளைனு வரும் போது எவ்வளவு தான் நல்லவங்களா இருந்தாலும்...கஷ்டப்பட்டு ஆசையா பிஞ்சில இருந்து பதினெட்டு வருஷமா வழர்த்த பிள்ளையை குடுக்க மனசு வராதுலே...அதே தான் இங்கேயும்)..
சந்தோஷமாக மரியம் தன்னுடைய கல்லூரிக்கு சென்றாள்...முக்கியமாக ஆஷிஃபை பார்க்கவும்...
பெருநாள் விடுமுறை முடிந்து நட்புகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக இருந்தனர்...
பேங்களூர் ட்ரிப் கேன்சல் என வந்ததுமே ஆஜித் கூற...ஏன்...என்ன ஆச்சி...எங்க வீட்டையே கஷ்டப்பட்டு ஒத்துக வைச்சோம்...இப்போ போய் கேன்சல் ஆச்சே என சுதா வருத்தப்பட...
ஹ்ம்ம்...பெங்களூர் கேன்சல்...பட் டூர் கேன்சல் இல்லை என ஆஜித் கூற...
அப்படினா எங்க போறோம் என மரியம் ஆவலாக கேட்க...ஊட்டி, முதுமலைகாடு, மைசூர் ஆன்டு கொச்சி...பேங்களூர் முன்னாடியே ஸ்டாப் ஆகிடும் என ஆஜித் கூறவும்...
ஏன்...பேங்களூர்க்கும் போகலாம்லே என ப்ரஸி கேட்க...ஹ்ம்ம்...சரியான கைட் கிடைக்கலயாம்...பேங்களூர் கேர்ள்ஸ்க்கு சேஃப்டி இல்லை...அதான் என கூற சரியென ஆமோதித்தனர்...
டூர்க்கு பணம் குடுத்து தங்கள் பெயரை நண்பர்கள் பதிவு செய்ய.. டூர்க்கு போக வேண்டிய நாளும் வந்தது...
எல்லோரும் சந்தோஷமாக மூன்று பேருந்தில் கிளம்பினர்...
ஆஷிஃப் ஒரு பேருந்தில் ஏறுவதை பார்த்த மரியம் தானும் அதில் தான் ஏறுவேன் என அடம்பிடித்து ஏறிக்கொண்டால்...டிப்பார்ட்மென்ட் படி பிரியாமல் அவர் அவர்கள் எந்த பேருந்தில் ஏறிக்கொள்ள நினைக்கிறார்களோ அந்த பேருந்தில் தங்கள் பெயர் மற்றும் எந்த டிப்பார்ட்மென்ட் என பதவி செய்து ஏறிக்கொண்டனர்...
இதன் படி ஆஷிஃப், ரன்வா, மரியம், ஷிவானி, ப்ரஸி, சுதா, சந்தியா, ஆஜித், அர்ஜூன், மையூரி, வினை, ப்ரவீன், ஷாலினி என ஏறிக் கொண்டனர்...
பாவம்...ஏன் இந்த பேருந்தில் ஏறினோம் என மரியம் வருந்த பேகிறாள் என்பது அப்பொழுது மரியமிர்க்கு தெரியவில்லை...
.
.
.
.
இங்கே!! பலதையும் நினைத்து பயந்த படி இருந்த நஸிரா... நெஞ்சில் கை வைத்து சரிந்தார்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro