Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

60

என்னங்க...எந்திரிங்க...டைம் ஆச்சி...சீக்கிரம்ங்க என எழுப்பியவளின் கையை பிடித்து இழுக்க...விடுங்க மா...இப்ப தான் குளிச்சேன் என்றவளை...
அதுக்கு தானே டி இழுத்தேன்...ஹப்பா...இந்த மணத்துலையே என் வயிறு நிறைஞ்சிறும் டி என கூற...ச்சீ..போங்க மா என வெட்கப்பட்டாள்...

அடடா...வெட்கத்தை பாரு என கூறியவன்...அடுத்த நொடி கீழே கிடக்க...
அடேய் நாயே நிம்மதியா தூங்க முடியலே...
ஏன் டா...இப்படி புலம்பி தள்ளுரே என கட்டிலில் தூங்கி கிடந்தவனை அவனின் புலம்பல் தாங்க முடியாமல் கீழே தள்ளி விட்டது மட்டும் இல்லாமல் கத்திக்கொண்டிருந்தான் அர்ஜுன்...

ஆமா டா...புலம்புறது தான் புலம்புறான்...புரியுற மாதிரி புலம்புறானா...
நைட் ஃபுல்லா தூங்கலேனு நிம்மதியா தூங்களாம்னு பார்த்தா...அதுக்கும் வழி விட மாட்டிக்கிறான் என வினை ஒரு பக்கம் பொறிந்து தள்ள...

கீழே விழுந்து கடந்தவனோ யோசனையில் இருந்தான்....

அவளை...அவளை ஒரு தடவை தானே பார்த்தோம்...அப்புறம் எப்படி?? எப்படி நம்ம கனவுல வந்தா....அதுவும் இவ்வளவு நெருக்கமா என யோசித்தவன்....
ஹ்ம்ம்...இதுவும் நல்லா தான் இருக்கு "சாரா" என மனதில் நினைத்தவன்...
ச்சே...இந்த நாய் தள்ளி விட்ருச்சி...இல்லாட்டி கனவுலயாச்சிம் ஒரு கிஸ் குடுத்திருக்கலாம் என ஆஜித் அர்ஜுனை மனதில் திட்டிக்  கொண்டிருக்க...டேய்...ச்சீ...என்னடா உன் நல்ல மனசு இப்படிலாம் நினைக்குது....
இது தப்பு...ஒருத்தி அழகா இருக்குறான்னு சொன்னா போதுமே...உடனே கல்யாணம் முடிஞ்சி பிள்ளையை பெத்து...பிள்ளைக்கு பேற வைச்சி ஃபேமிலி ப்ளானிங் பன்னிருவீங்களே என கூற...இதுவும் நல்லா தான் இருக்கு என ஆஜித் நினைத்துக் கொண்டிருக்க...

அடேய்...இவன் ஏன் டா பிடிச்சு வைச்ச பிள்ளையார் மாதிரி இருக்கான் என ப்ரவீன் கூற அப்ப தான் சுய நினைவிர்க்கு வந்தவன்....ஈஈஈஈஈ...ஒன்னும் இல்லை டா என ஆஜித் இழிக்க... ச்சீ....நாயே ப்ரஸ் பன்னு...தாங்க முடியல என கூறி தள்ளி நின்ற ப்ரவீனை முறைத்தவன்...வந்து கவனிச்சிக்கிறேன் என கூறி சென்றான்...

இவன் என்ன வாஷ்ரூம்க்கு போய் இவ்வளவு நேரம் ஆச்சு...கனவு எதுவும் கான்றானா என வினை கூறிக்கொண்டிருக்க....

உள்ளேயோ...ப்ரஸை எடுத்து பார்த்த ஆஜித்....இந்த ப்ரஸ் இன்னைக்கி அழகா இருக்குலே என கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவன்...ஹேய்...ப்ரஸ் உனக்கு ட்ரெஸ் போட்டு விடுறேன்...வெய்ட்...வெய்ட் என கூறியவன் "க்ளோஸ் அப்"பை எடுத்து வைத்து...இப்ப நீ இன்னும் கொஞ்சம் அழகா இருக்குறா தெரியுமா என கூறியவன்...பொறுமையாக பல்லை தீட்டினான்...தீட்டினான்...தீட்டி கொண்டே இருந்தான்...வினை கதவை தட்டும் வரை...

டேய்...உள்ளே போய் "ஹால்ஃப் ஆன் ஹார்" ஆச்சி டா...என்ன டா பன்றே...பசிக்குது டா என கத்தியதும் தான் சுய நினைவிர்க்கு வந்தவன்...இதோ வந்துட்டேன் டா என கூறி வெளியே வந்த ஆஜித் கண்ணாடியின் முன் நின்று பல்லையே பார்த்துக்கொண்டிருக்க....டேய்...
கண்ணாடியை பார்த்தது போதும்...நல்லா தான் இருக்கே...வா என இழுத்து கொண்டு சென்றான் அர்ஜுன்...

அங்கே...இவர்கள் உணவகத்திர்க்குள் செல்ல...இவர்களுக்கு முன்னாடியே கேர்ள்ஸ் வந்து அமர்ந்திருந்தனர்...
ஹாய் என்றபடி அர்ஜூன் வர...பதிலுக்கு ஹாய் என மற்றவர்கள் கூறினர்...

"அஸ்ஸலாமு  அலைக்கும்" என ஆஜித் வந்து அமர மெலிதாய் புன்னகைத்த மரியம்...
"வ அலைக்கும் முஸ்ஸலாம்" என கூறினாள்...

இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லலயே மரியம் என அர்ஜுன் கேட்க...
அடேய்...ஆரம்பிச்சிட்டியா...பாவம் டா...
அவளே நோன்பு பிடிச்சிக்கிறா...வந்ததும் படுத்தாதே என ப்ரவீன் கூற...

ஹேய்...அப்படிலாம் இல்லை...எங்களுக்கு கடமை இருக்கு...இதை பத்தி மற்றவர்களுக்கு எத்தி வைக்க...நான் நோன்பு பிடிச்சிட்டு இதை பத்தி சொன்னா எனக்கு இன்னும் நன்மை கிடைக்கும் என ப்ரவீன்க்கு பதில் கூறியவள்...அர்ஜுன் பக்கம் திரும்பி...

"அஸ்ஸலாமு அலைக்கும்" னா "உங்கள் மீது சாந்தி உண்டாவதாக"..."வ அலைக்கும் முஸ்ஸலாம்" னா "உங்கள் மீதும் சாந்தி உண்டாவதாக" என கூறியவள்...
ஒரு முஸ்லீம் மற்றொரு முஸ்லீமை பார்த்தா கண்டிப்பா ஸலாம் சொல்லுவோம்...அதே மாதிரி...ஸலாம் க்கு முந்திக்கனும்...
ஐ மீன் ஒருத்தவங்களை பார்த்ததும் அவங்க ஸலாம் சொல்ல ஆரம்பிக்க முன்னாடி நாம்ம ஸலாம் சொல்லனும்...

சில பேர்...ஸலாம் ல கஞ்சத்தனமா இருப்பாங்க...அதாவது...
ஸலாம் னு மட்டும் சொல்லுவாங்க...
முழு ஸலாம் க்கு எவ்வளவு அழகான அர்த்தம் இருக்கும் தெரியுமா?? என கூறியவள்...

"அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துலாஹி வ பரக்காத்துஹூ" இதுக்கு மீனிங்.." உங்கள் மீது சாந்தி உண்டாவதாக இன்னும் அல்லாஹ்வின் கிருபையும் இன்னும் அபிவிருத்தியும் உண்டாவதாக" இதுக்கு எவ்வளவு அழகான அர்த்தம் இருக்கு...ஆனா, யாரும் இப்படி சொல்றது இல்லை...இதுல என்ன கஞ்சத்தனமோ தெரியலே என உதட்டை பிதுக்கியவள்...

ஒரு ஆராய்ச்சியாளர் கண்டு பிடிச்சிக்கிறாங்க...
மற்ற உயிரினங்களும் தங்களுக்குள் ஸலாம் சொல்லிக்கிறதாம்...
அதாவது...ஒரு எறும்பு மற்றொரு எறும்புக்கு ஸலாம் சொல்லுமாம்...
நீங்க கவனிச்சிக்றீங்களா??
எறும்பு கூட்டமாக செல்லும் போது ஒரு எறும்பு மற்றொரு எறும்பிடம் ஒரு நிமிடம் நின்று விட்டு செல்லும்...இரண்டு எறும்பும் சிறிது நேரம் மோதுவதை போல் நின்று விட்டு...நின்று விட்டு...செல்லும்...

அந்த நேரத்தில் ஒரு எறும்பு மற்றொரு எறும்புக்கு ஸலாம் கூறுமாம்...
இதை எல்லா எறும்புமே செய்யுதாம் என மரியம் கூற...

ஆமாம்...நானும் பார்த்திக்கிறேன்...
இரண்டு எறும்பு க்ராஸ் ஆகும் போது சிறிது நேரம் நின்று விட்டு செல்லும் என ஷாலினி கூற...ஆமா...ஆமா...நாங்களும் பார்த்திக்கிறோம் என மற்றவர்களும் ஆமோதித்தனர்...

ஸலாமுடைய  அர்த்தமும் நல்லா இருக்கு மரியம்...இனி நாங்களும் உனக்கு ஸலாம் சொல்லுவோம் என ஆஜித்  கூற மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்...

ஆமா...நோன்பாளி...நீங்க ஏன் சீக்கிரம் முளிச்சிடீங்க என வினை கேட்க...மறுபடியுமா என ப்ரஸி கத்தினாள்...
ஏன் என அர்ஜுன் கேட்க...ஹ்ம்ம்...ஃபர்ஸ்ட் அவ சீக்கிரம் எந்திரிச்சதும் நான் கேட்டேன்...அப்புறம் இங்கே வந்ததும் மையூரி கேட்டாங்க...இப்ப நீங்க கேக்குறீங்க...இதுக்கு இவ எத்தனை தடவை பதில் சொல்லுவா என ஷிவானி சலிச்சிக்க....

சரி...மரியம் சொல்ல வேண்டாம்...நீங்க சொல்லுங்க...மரியம் சொன்னதை எவ்வளவு தூரம் கவனிச்சிக்கிறீங்கனு பார்ப்போம் என்றதும் ப்ரஸீ பேந்த பேந்த முழிக்க...அவளின் முகத்தை பார்த்த மற்றவர்களுக்கு சிரிப்பு வந்தது...

ஹேய்...பாவம் பா...என் தோழியை விட்ருங்க...நானே சொல்லுறேன் என கூறிய ஷிவானி...

நோன்பு பிடிச்சா...நோன்பாளினு சொல்லிட்டு எந்த வேலையும் செய்யாம தூங்குரதுக்கு பேரு நோன்பு இல்லை...
நோன்புனா அதுக்கு எல்லாத்தையுமே சேர்த்துக்கனும்...
அதாவது...வயிறு பட்னியா இருக்கனும்...அதே நேரம்...அதே பட்னியோட அல்லாஹ் கிட்ட தொழுது துஆ கேட்கனும்...குர்ஆன் ஓதனும்...ஒரு வருட நோன்புள முழு குர்ஆனையும் ஓதி முடிக்கிறதா நிய்யத் வைக்கனும்...

நோன்பு பிடிச்சிக்கிறேன்...என்னை டிஸ்டர்ப் பன்னாதேனு ஒரு வேலையும் செய்யாம கோவம் பட கூடாது...தப்பான எண்ணம் மனசுல இருக்க கூடாது...சுத்தமா இருக்கனும்...மேரேஜ் ஆன ஹஸ்பண்ட் ஆன்ட் வொய்ஃப் சேர கூடாது...

சில பேர் நோன்பு பிடிச்சிட்டு பசியை மறக்க தூங்குவாங்க....அந்த நோன்ப எப்படி அல்லாஹ் ஏத்துக்குவான்...
அந்த நோன்பு....
"நாய் பட்டினி கிடக்கிற மாதிரி..."
நோன்ப பிடிச்சிட்டு தூங்குரதா இருந்தா மட்டும் போதுமே...வருடம் ஃபுல்லா நோன்பு பிடிக்களாமே என ஒரு பெரிய விளக்கத்தை கூறினாள் ஷிவானி...

செம்ம டி...நான் சொன்னத அப்படியே சொல்லிட்டா என மரியம் ஷிவானியை பாராட்ட இழித்து வைத்தாள் ஷிவானி...

சரி...இப்ப சாப்பிடுற இடத்துக்கு வந்திக்கிறா...நாங்க எப்படி சாப்பிடுறது என ஆஜித் கேட்க...

நீங்க தாரளமா சாப்பிடுங்க...
அதுல ஒன்னும் இல்லை...
நான் மத்தவங்க மாதிரி இல்லை...
சாப்பாட பார்த்தாலும் எனக்கு கன்ட்ரோல் இருக்கும்...அதுலாம் பசிக்காது....

சாப்பாட பார்த்ததும் பசிக்கிதேனு புலம்புனா...அது எப்படி நான் நோன்பு க்கு செய்யுற சங்கையா இருக்கும்...

என் நோன்பு...எனக்கு நிறைய சக்தியை தான் குடுக்கும்...பசிக்கலாம் செய்யாது என மரியம் கூறவும்...மற்றவர்கள் சாப்பிட ஆரம்பிக்க...வழக்கம் போலவே எந்த மாற்றமும் இல்லாத மரியத்தை பார்த்த மற்றவர்கள் உன்மைக்குமே அதிசயித்து தான் போனார்கள்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro