6
தன் மேடிட்ட வயிற்றை பார்த்த படி இருந்தவளை பின்னிருந்து அனைத்தவன்...என்ன டி, என் பிள்ளையை பார்த்து கண்ணு வைக்கிறாய் என்று கூறியவனை கண்ணும் வைக்கவில்லை, மூக்கும் வைக்கவில்லை என்று கூறி உதடை சுளித்தாள் ஃபரிதா..
ஏய்! எனக்கு ஒரு சந்தேகம் டி என்று
கேட்டவனை என்ன என்பது போல பார்க்க..பிள்ளை வயிற்றில் இருக்கும் போதே..நம் மூத்த பிள்ளைக்கு தம்பியோ, தங்கையோ பெற முடியுமா?? என்று கேட்க...
பேச்சற்று முழித்தாள் ஃபரிதா...
பின்ன என்ன டி இப்படி உதடை சுளித்தாள் அப்படி தான் நடக்கும்...ஜாக்கிரதை என்று கொஞ்சலாக எச்சரித்தான் சிராஜ்😍😍
நாட்களும் நகர...
ரமளான்(இஸ்லாமிய மாதம்) வந்தது..
[நோன்பு(fasting) என்பது வருடத்திற்கு ஒரு முறை ரமளான் மாதம் முழுவதும் அதிகாலை கிழக்கு வெளுப்பதற்கு முன்பிருந்து சூரியன் மறையும் வரை எதையும் உண்ணாமலும் பருகாமலும் எல்லா விதமான தீயச் செயல்களிலிருந்தும் விலகி இருப்பது.....இது அறிவு சுவாதீனமுள்ள வயது வந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாகும்.]
முதல் நாள் இரவு பெண்கள் பள்ளியில் தராவீஹ் தொழுகைக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு ஸலாம்(அஸ்ஸலாமு அலைக்கும்) கூறி ஒருவருக்கொருவர் ரமலான் மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டு தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பிய ஃபரிதா இரவு சாப்பிட்டு....ஸஹர்(நடு இரவு) க்கு சமையல் செய்து முடித்து சிறிது நேரம் தூங்கி...பிறகு நேரம் ஆக சிராஜை எழுப்பி விட்ட ஃபரிதா...சாப்பிட்டு நோன்பை வைத்தார்கள்...
ஃபரிதா நோன்பு வைத்திருப்பதை கேள்வி பட்ட நஸிரா கோபப்பட்டு ஃபரிதாவை திட்டினார்....இப்படி வயிற்றில் பிள்ளை இருக்கும் போது அதை பட்டினி போட்டு, தாகிக்க வைக்கலாமா??...நம்மை படைத்தவன் அப்படி ஒன்றும் நம்மை கஷ்டப்படுத்தவில்லையே....இந்த மாதிரி நேரத்தில் நோன்பு பிடிக்காமல் பிள்ளை பிறந்த பிறகு களா(கடமையானதை பிற்படுத்தி செய்ரது) செய்ய வேண்டியது தானே...
இங்கு திட்டியது மட்டுமல்லாமல் செய்யது(இ)டமும் புலம்பி தள்ளினார்...
(பாவம்!! அந்த அப்பாவி மணுசனும் வேறு வழியில்லாமல் கேட்டு கொண்டிருந்தார்)😂😂😂
நோன்பு பிடிப்பது,தொழுவது, ஓதுவது( reading quraan)
ஃபித்ரா(தானம்) கொடுப்பது....இப்படியே நோன்பு கடக்கையில் ஒரு நாள் பள்ளியில் பயான்(நல்லுபதேசம்) நடந்தது...
அதிலே பெற்றோர்களை பற்றி பேசினார்கள்...அவர்களின் கடமையை பற்றி கூறினார்கள்...
(சுருக்கமாக போட்ருக்கேன்)
இந்த பயானை கேட்ட ஃபரிதா கண்கலங்கினாள்...
தன் பெற்றோர் தனக்கு கடமையானதை செய்தாலும், பணம் என்று தானே கிடந்தார்கள்....
சிராஜ் பெறாத பிள்ளையிடமே தன் வயிற்றை தொட்டு பேசி இப்படி அன்பை பொழிகிறாரே....தன் தந்தை ஒரு நாளும் தன் பக்கம் அமர்ந்து பேசியது கூட இல்லையே என்று நினைத்து கொண்டிருந்தாள்..
(பெற்றவர்கள் பிள்ளைகளிடம் அன்பை காட்டவில்லை என்றால் அன்புக்காக ஏங்கி...யாரிடம் கிடைக்கின்றதோ அங்கையே சென்று விடுகின்றனர்).
ரமளான் மாதமும் முடிந்தது...
கவிதாவுக்கு மெட்ராஸில் வளைகாப்பு வைப்பதால் அங்கு திலீப் தன் குடும்பத்துடன் செல்லுவதாகவும் பிரசவத்திற்கு அங்கு தான் வசதி இருப்பதாக கவிதா முன்னமே தெரிவித்துள்ளதால் பிரசவம் முடிந்த பிறகே திருச்சி வருவதாக சொல்லி சிராஜ், ஃபரிதாவிடம் விடைபெற்றார்கள்.
மருத்துவர் ஃபரிதாக்கு தேதி குடுத்த ஒரு வாரம் முன்னதாக...
சிராஜ் டிராவல்ஸ் காரணமாக மும்பைக்கு போக வேண்டிய வேலை வந்ததால்....இரண்டு நாள் மட்டும் தான்.. போய் வருவதாக கெஞ்சி கொண்டிருந்தான் சிராஜ்....
ஃபரிதா மறுத்து பேச வர நஸிரா சம்மதிக்க வைத்தார்...நஸிரா விடம் என் கண்ணம்மாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் லாத்தா(sister)
என்று கூறி ஃபரிதாவை நஸிரா விடம் ஓப்படைத்துவிட்டு மும்பையை நோக்கி சென்றான் சிராஜ்.
.
.
.
.
.
.
.
.
.
.
Friends...Muslims ah pathi neenga thaerinjika virupapattadhaala indha chap potaen.
Nonbu patri niraya iruku pa....naan detail ah sollalae....
Sila peruku pidikaama poidalaam nu short ah sollirkaen...
Ungaluku virupam irundha kandipa details podraen pa
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro