Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

54

டேய்...சுத்தி வர பல வகையான உணவு இருக்கு டா...கொஞ்சம்மாச்சும் எனக்கு குடு டா...ரொம்ப பசிக்கிது டா...அடேய்...அடேய்...டேபிள பாரு டா என வயிறு கத்திக்கொண்டிருக்க...ப்ச்...கொஞ்சம் அமைதியா இரி...அவள பாருடா எவ்வளவு அழகா குளோப் ஜாமை சாப்பிடுறானு..
அவ உதடு சும்மாவே அழகு...இதுல அந்த பானி பட்டு பலபலனு இருக்கே....ஐயோ முடியலயே என ப்ரவீன் புலம்ப...

இந்த கொடுமைய நான் எங்கே போய் சொல்லுவேன்...பொண்ணுங்கனா அழகா தான் இருப்பாங்க...அதுக்காக இப்படியா டா?? கொஞ்சம்மாச்சிம் சாப்பிட்டுட்டு அப்புறம் சைட் அடி டி என வயிறு எவ்வளவு சொல்லியும் கேக்காமள் செவனே என தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தான் ப்ரவீன்...

சாப்பிட்ட படி பேசிக்கொண்டிருந்த ஆஜித் எதார்த்தமாக ப்ரவீனை பார்க்க...இவன் ஏன் மந்திரிச்சி விட்டவன் மாதிரி இருக்கான்...பார்வையே சரியில்லையே...என்னவா இருக்கும் என யோசித்த படி...ப்ரவீன் பார்க்கும் திசையை பார்க்க...அங்கு சந்தியா சுதாவுடன் குளோப் ஜாம்க்காக சண்டை போட்டு கொண்டிருந்தாள்...

ஓரளவுக்கு ஊகித்தவன்.. ப்ரவீன்,ப்ரவீன் என ஆஜித் கூப்பிடவும்...ஹ்ம்ம்...சொல்லு டா என கேட்ட ப்ரவீனிடம்...இல்லை டா.. குளோப் ஜாமை சாப்பிடாம வச்சிக்கிறியே...எனக்கு தா டா என ஆஜித் எடுக்க போக...ஐஐஐ...எனக்கு என சந்தியா எடுத்து கொண்டு தேங்ஸ் ப்ரவீன் என்றாள்...அவள் ப்ரவீன் என்று அழைத்த அழைப்பில் ப்ரவீன் உருகி போக...வடை போச்சே என வயிறு புலம்பியது...

அடேய் என ஒரு சேர எல்லோரும் கத்துவது போல் கேட்டு...குரல் வந்த திசையை பார்க்க...ஆஜித், அர்ஜூன் மற்றும் வினை இருக்க...ஈஈஈஈஈ என இழித்த ப்ரவீனிடம் ஆஜித் கண்களால் சந்தியாவை காமித்து என்ன என்பது போல் சிரிக்க...அநியாயத்துக்கு வெட்கம் பட்டான் நம்ம ப்ரவீன்...

சரி...சரி...சாப்பிடு சாப்பிடு என வினை கூற சிரித்தபடி சாப்பிட ஆரம்பித்தான்...

ஏய்...நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே என மரியம் இழுக்க...ஹ்ம்ம்..கேளு என மயூரி கூறவும்...அது இல்லை...உங்க ஃப்ரெண்ட்ஸ்ல எல்லோரும் ஒரே மாதிரி பழகுனாலும் ஆஜித்க்கு மட்டும் ஏன் நீங்க மரியாதை குடுக்குறீங்க...ஐ மீன் எதுனாலும் ஆஜித்த தான் ஃபர்ஸ்ட் இடத்துல நிப்பாட்டுரீங்க என மரியம் கேட்க...

ஹ்ம்ம்...ஆமா மரியம்...அர்ஜூனும் எதா இருந்தாலும் ஃபர்ஸ்ட் இம்பார்டன்ட் ஆஜித்க்கு தான் குடுப்பான்.. எனக்கும் இந்த டவுட் இருந்துச்சி என ப்ரஸி கூற...

ஹாஹா...அப்படிலாம் இல்லை...நாங்க எல்லோரும் சரி சமம் தான் என ஆஜித் சமாளிக்க...பொய் சொல்லாதீங்க.. எங்கள உங்க ஃப்ரெண்ட்ஸ்ஸா நினைச்சா சொல்லுங்க என மரியம் கேட்க...மரியமை ஒரு பார்வை பார்த்தவன்...சரி...நீங்க சொல்லிட்டு இரிங்க...ராஜா சார் கூப்பிட்டாங்க நான் வந்துருரேன் என சென்றான் ஆஜித்...

அவன் சென்ற சிறிது நேரம் அமைதி நிலவியது...

அந்த அமைதியை கலைக்கும் விதமாக அர்ஜூன் ஆரம்பித்தான்...உங்களைளாம் யாரு வளர்த்தாங்க என அர்ஜூன் கேட்க...வேற யாரு...எங்க பேரண்ட்ஸ் தான் என ஜூனியர்ஸ் பதில் கூற...எங்களை யாரு வளர்த்தா தெரியுமா என கேட்ட அர்ஜூனை புரியாமல் பார்த்தார்கள்...
.
.
.
சென்னைல இருக்குற டாப் 10 கோடீஸ்வரங்கள சிதம்பரம் ப்பா ஒருத்தவங்க...

அவங்களுக்குனு சொல்லிக்க யாருமே இல்லை...ஆதித்தியன் குழந்தைகள் காப்பகம்ல தான் அவங்கள வேணாம்னு யாரோ விட்டுட்டு போயிட்டாங்க.. அங்க தான் வளர்ந்தாங்க...

அவங்க வளர்ந்து,நல்ல படிச்சி கடின முயற்சியால ஆயிரம், லட்சம், கோடினு சம்பாதிச்சாங்க..

அப்ப தான் ப்ரோகர் மூலமா ஒரு பொண்ணு வந்தது...சிதம்பரம் ப்பா க்கு அவங்கள ரொம்ப பிடிச்சி போய் கல்யாணம் பன்னிக்கிட்டாங்க...

அவங்க வாழ்க்கை நல்லா போயிட்டு இருந்துச்சி...அப்ப அப்ப அவங்களை வளர்த்த காப்பகத்திர்க்கும் போய் வருவாங்க...காப்பகத்துக்கு தேவையான உதவிகளை அவங்க கேட்காமலே செய்வாங்க..

உலகம் சுற்றும் வாலிபனா எல்லா இடத்துக்கும் போயிட்டு வந்தாலும் அவங்க மனைவியா நல்லா கவனிச்சிப்பாங்க..

எல்லோருக்கும் வாரி வழங்குவாங்க...

அப்ப தான் அவுங்க மனைவி கற்பமா இருப்பது தெரிய வந்துச்சி...ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க...அவங்க ஆசைப்பட்ட படி மகனே அவங்களுக்கு பிறந்தான்...

அழகான பையன், அன்பு மனைவி, அளவில்லாத செல்வம்னு வாழ்க்கை நல்ல படியா போய்ட்டு இருந்திச்சி...

சிதம்பரம் ப்பா அவங்க மகனையும் காப்பகத்துக்கு கூட்டிட்டு போய்...சின்ன வயசுலயே அடுத்தவுங்களுக்கு உதவி செய்யனும்ங்குற நல்ல விஷ்யத்த அந்த பிஞ்சு மனசுல விதைச்சாங்க...

அந்த பிஞ்சு குழந்தை தான் ஆஜித்....

நான், ப்ரவீன், வினை, மையூரி, ஷாலினி...நாங்க ஐந்து பேரும் அந்த காப்பகத்தில ஒன்னா இருந்தோம்...அங்க தான் ப்ரவீனின் தங்கை மாலதி பாப்பாவும் வளர்ந்தா என்ற அர்ஜுன் ப்ரவீனை பார்க்க அவன் உணர்ச்சிகளை அடக்கி கொண்டிருந்தான்...ஆனால், அதையும் மீறி கண்கள் கலங்கியது...

மாலதி பாப்பானா எங்க எல்லோருக்கும் உயிர்.. எங்க எல்லோருக்குமே அவ தான் செல்ல தங்கச்சி...

ஒரு நாள் மாலதி பாப்பா...காணாமல் போகவும்...எல்லோரும் பயந்து தேடிட்டு இருந்தோம்...

அப்ப தான் ஒரு மரத்தடியில உட்கர்ந்து ஆஜித் கூட சாக்லேட் சாப்டுட்டு இருந்துச்சு...

எனக்கு இந்த பாப்பா வேணும்...நாம்ம கூட்டிட்டு போயிரலாம்னு ஆஜித் ஒரே சிதம்பரம் ப்பா கிட்ட சொல்லி அழுகை...மாலதி பாப்பா எங்க பின்னாடி வந்து ஆஜித் கூட போக மாட்டேனு ஒழிஞ்சிக்கும்..

மாலதி பாப்பாவ பார்க்குறதுக்காகவே ஆஜித் அடிக்கடி காப்பகத்துக்கு வருவான்..
வரும் போது சாக்லேட், டாய்ஸ்னு வகை வகையா வாங்கிட்டு வருவான்...

மாலதி பாப்பா என்ன சொன்னாலும் ஆஜித் கேட்பான்...பாப்பாக்காக தான் எங்க கூட பேச ஆரம்பிச்சான்...

நாங்க ஆஜித் கூட க்ளோஸ் ஆகிட்டோம்...எங்க மேலயும் ரொம்ப பாசமா இருப்பான்..

அன்றும், எப்போதும் போல ஆஜித்...பாப்பாக்காக ட்ரஸ், டாய் என எல்லாம் வாங்கிட்டு வந்து பார்க்க...
மாலதி பாப்பா மஞ்ச காமாலையால இறந்து போனது தெரிய வந்தது..

மாலதி பாப்பா...எழுந்திரு பாப்பா...உனக்காக அண்ணா ட்ரெஸ்லாம் வாங்கிட்டு வந்திருக்கேனு எவ்வளவோ அழுகை...அது இன்னும் எங்க கண்ணுலயே நிக்கிது என அர்ஜூன் கூறி கண்ணை துடைக்க மற்றவர்கள் கண்களும் கலங்கியிருந்தது...

அதுக்கப்புறம்...ஆஜித் காப்பகத்துக்கு வர்ரதே இல்லை...ஒரு நாள் வந்தான்...நாங்க நைன்த் படிக்கும் போது...
எங்க எல்லோரையும் அவன் கூட கூப்பிட்டான்...
நாங்க வர மாட்டோம்னு சொன்னோம்..

நீங்க வரலைனா நானும் மாலதி பாப்பா போன இடத்திற்க்கே போயிடுவேனு சொன்னான்..

எங்களுக்கு என்ன பன்றதுனே புரியலே... அப்ப தான் சுந்தரி அம்மா...அவங்க தான் காப்பகத்துக்கு பொறுப்பாளர்...அவங்க வந்து எங்க கிட்ட பேசுனாங்க...
.....
வழக்கம் போல ஆஜித் பள்ளிய விட்டு வீட்டுக்கு வரும் போது...கதவு பூட்டிருந்தது...

அம்மா...எங்கே போயிருப்பாங்க என யோசித்த படி இருந்தவன்...வீட்டின் உள்ளே சத்தம் கேட்கவும் ஜன்னல் வழியாக பார்க்க...

அங்கே... அவள் வீட்டில் வேலை செய்யும் இருவருடன் சந்தோஷமாக இருப்பதை பார்க்க...ச்சீ என கண்களை மூடி கீழே அமர்ந்த படி அழுது கொண்டிருந்தான் ஆஜித்...

ஆஜிதின் பின்னால் வந்த சிதம்பரம் ஏன் பையன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துட்டு இப்படி அழுவுறான் என யோசித்தவர் அவரிடம் இருக்கும் மற்றொரு சாவியை வைத்து வீட்டை திறந்து போனார்...
.
.

வீட்டிர்க்குள்ளே பயங்கரமான சத்தம் கேட்கவும் வேகமாக எழுந்து ஜன்னல் பக்கம் பார்க்க...அங்கே மற்றவர்கள் இறந்து கிடக்க...சிதம்பரம் தூக்கி தொங்க முனைந்தார்...

அப்பா...வேண்டாம் பா...ப்ளீஸ் ப்பா என ஆஜித் எவ்வளவோ கெஞ்ச...

நீ நல்லா இருக்கனும் டா என இறுதியாக கூறியவர் தூக்கில் தொங்கினார்...
....
அவன் பாவம் டா...ரொம்ப கொடுமைய அனுபவிச்சிக்கிறேன்...

இத்தனை நாளா வராம இருந்தவன்...
நான் என் ஃப்ரெண்ட்ஸ பார்க்கனும்...அவங்கள எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேனு வந்து நிக்கிறான்...

இதுக்கு மேலே நீங்க தான் முடிவு பன்னனும் என சொல்லிவிட்டு சென்றார் சுந்தரி...
.......
அவன் கண்ணு முன்னாள் நடந்த கொடுமையை தவிர எங்களுக்கு எதுவுமே பெரிசா தெரியலே...

நாங்க அவன் கூட போயிட்டோம்...மையூரியும் ஷாலினியும் எங்க கூட வர சுந்தரி மா அனுமதிக்கலை..

எங்களுக்கும் அது சரினு பட்டுச்சி..

இருந்தாலும் அப்ப அப்ப எங்க கூட மையூரியும் ஷாலினியும் வருவாங்க..

அவன் எங்களுக்காக ஒன்னு ஒன்னும் பார்த்து பார்த்து செய்தான்...

நாங்க போடுற ட்ரெஸ்ல இருந்து நாங்க சாப்பிடுற சாப்பாடு வரை..

அவன் காசுல தான் நாங்க இவ்வளவு பெரிய காலேஜ்ல படிக்கிறது...

நாங்க எல்லோருமே ஒன்னா டைம் ஸ்பென்ட் பன்னனும்னு தான் ஹாஸ்டெல்ல இருக்குறோம்..

இதுவரை எங்களை தவிர இது யாருக்கும் தெரியாது...

யாரு கிட்டயும் இதை சொல்ல விட்டதும் இல்லை...ஃபர்ஸ்ட் டைம் உங்க கிட்ட சொல்ல சொல்லிக்கிறான் என அர்ஜூன் கூறி முடிக்க மற்றவர்கள் கண்களிலும் கண்ணீர் நிறைந்தது..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro