53
ஹேய்...வேணாம் டி என மரியம் ஓட...ப்ரஸி துரத்தி வருவதர்க்குள் பல மைல் தூரம் சென்றவள் ஒருத்தன் மேல் மோதி கீழே விழ போக கைத்தாங்களால் அவளை பிடித்தான்...
கீழே விழுந்தோம் என பயத்தில் கண்களை இருக்கி மூடி இருந்தவள்.. எதுவும் ஆகலே பா என நிம்மதியுடன் கண்களை திறந்து பார்க்க...இதுக்கு நாம்ம கீழேயே விழுந்துக்களாம்...இப்படி வந்து இவன் கிட்டயே திரும்ப திரும்ப மாட்டிக்கிறீயே மரியம் என தனக்கு தானே மனதினுள் புலம்பியவள்...அவன் உதட்டை சுளித்து அலட்சியமாக பார்க்க தன்னையே நொந்து கொண்டவள் செய்வதரியாமல் இருக்க...
மத்த பசங்க மாதிரி நான் இல்லை...உன் அழகுல விழுந்து கிடக்குறதுக்கு...என்னை அப்படி அவ்வளவு சீக்கிரம் உன்னால மயக்க முடியாது...கொஞ்சம் எழுந்திக்கிறியா என பல்லைக்கடித்து கூறவும்...
அப்பொழுது தான்...தான் இன்னும் அவனின் கையில் இருப்பதை உணர்ந்தவள்...
உனக்கு மூளைனு ஒன்னு கண்டிப்பா இல்லை டி என தனக்குள் புலம்பியவள் தலையை தூக்க...
மரியமின் முடி அவன் கையில் மாட்டி இழுக்க...ஷ்ஷ்ஷ்....ஆஆஆஆ என மறுபடி தலையை கீழ் இறக்கி முடியை தன் கையால் பிடித்து கொண்டே பார்க்க அவனின் இடது கையில் வெள்ளி சங்கிலி ஒன்று "ஏ" என்ற லாக்கெட்டுடன் பல்லை இழிக்க...அதை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்த மரியம்...அவன் முகத்தை பார்த்து...திரும்பி அவன் கையை பார்த்தவள் சங்கிலியை தன் கையால் வருடி ஆஆஆ என கூற வந்தவளை...
"ச்சீ...கைய விடு" இது ஒன்னும் நீ நினைக்கிற அளவு பிளாட்டினம் இல்லை என குத்தலாக பேசிவிட்டு சென்றான்...
அவன் சென்ற பிறகும்...தன்னாலே அழுகை வந்தது...ஆனால், நீ எனக்கு பிளாட்டினம் தான் டா...இத்தனை வருஷமாகியும் புதுசு போல் பாதுகப்பாய் பத்தரம் படுத்தி வைத்திருந்த "ச்சைன்" எனக்கு சொல்லிருச்சு டா...இன்னும் உன் மனசுல நான் பத்தரமா இருக்குறேனு...
ஹாஹா...ஆஷிஃப் குட்டி...நீ வளர்ந்து பெரிய பையன் ஆகிட்டிலே...அதான் ச்சைன் டைட்டா இருக்குனு கைச்சைனா போட்டிக்கிறியோ...சும்மா சொல்ல கூடாது டா...செம்ம ஸ்டைலா இருக்கு டா என தனக்குள் புலம்பியவள்...
இந்த விதி தான் டா...என்னை உன் கிட்ட தப்பா காமிச்சிக்குது...நீ என்னை ஏன் டா இவ்வளவு தப்பா புரிஞ்சிட்டு இருக்கிறே...நான் தான் டா உன் ஆஷா..."லெட்ஸ் ஸ்டார்ட் மை லவ் கேம்"...
இருக்கு டா உனக்கு என் ஜாமுன் என கூறி தன் கண்ணீரை துடைத்தவள் வெட்க புன்னகையுடன்....
காதல் ஒன்னும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதனும் இல்லை
நண்பர்களும் காதலர் ஆக
மாறியப்பின் சொல்லிய உண்மை..
என பாடியவளை என்ன டி உன்னை துரத்தானிட்டு வந்தா தனியா இங்கே நின்னு பாடிட்டு இருக்கிறே என்ற மூச்சு வாங்க நின்ற ப்ரஸியிடம்....ஈஈஈஈஈ...ஒன்னுமில்லை செல்லம்...நான் ரொம்ப ஹேப்பியா இருக்கிறேன்...இன்னக்கு என் ட்ரீட்...வாங்க செல்லங்களா என தோழிகளை தள்ளி விட்டு முன்னாள் நடந்த மரியம்...திரும்பி பார்த்து சீனியர்ஸையும் வர சொல்லு...அர்ஜூன்க்கு கால் பன்னி என மரியம் கண்ணடிக்க...
என்ன டி நடக்குது...இங்கே...
"நீ துரத்தினே, மரியம் ஓடுனா, கீழே விழுந்துட்டாளா...பின்னாடி அடிப்பட்டுடுச்சா...அங்கே தான் மிடில் ஆப்ளிகேட் இருக்கு என தன் கையை பின் மண்டையில் வைத்து கூறியவள்...அது ஒன்னும் இல்லை.. கொஞ்சம் நேரத்தில் தன்னாலே சரியாகிடும்" என "நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம்" படத்தில் வரும் வசனத்தை போல் ஷிவானி.. ப்ரஸியை பார்த்து கூற தோழிகள் அனைவரும் சிரித்தி உருண்டனர்...
அர்ஜூன்க்கு கால் பன்னி மரியம் ட்ரீட்டாம்...கேண்டீன்க்கு வருவீங்களாம் என கூறி கைபேசியை அனைத்து விட்டு தோழிகளுடன் கதைத்த படி கேண்டீன்க்கு சென்ற ப்ரஸி அதிர்ச்சியாக...மற்றவர்களும் அதிர்ச்சியாகினர்...
.
.
டேய் மச்சி...மரியம் ட்ரீட்டாம்...கேண்டீன்க்கு வர சொல்லுறாங்க என அர்ஜூன் கூறவும்...என்னடா திடீர்னு.. மார்னிங் கூட எதுவுமே சொல்லலை என ஆஜித் கேட்க...தெரியல என உதட்டை பிதுக்கியவனை பார்த்து...சரி வாங்க போகலாம் என மையூரி எந்திரிக்க..மற்றவர்களும் பேசிக்கொண்டே எழும்பினர்...
கண்ணாடியை எடுத்து தன் முகத்தை பார்த்தவன்...தலை முடியை அழகாக கோதி விட்டு சிரித்த படியே கண்ணாடியை பார்த்து கணவு கண்டிருந்தவனின் தோளை தட்டிய வினை...என்ன டா...கேர்ள்ஸ் பன்றதெல்லாம் பன்னுறே...எப்படா இதெல்லாம் பன்ன ஆரம்பிச்சே..இது சரியில்லையே என கூற...ஈஈஈஈஈ என இழித்தவன்.. ஒன்னும் இல்லை...வாங்க போகலாம் என முன்னாள் நடந்தான் ப்ரவீன்..
.
.
இரண்டு டேபிளை ஒன்றாக சேர்த்து போட்டு சுற்றி பன்னிரெண்டு நாற்காலி இருக்க...டேபிளின் மேல் பாகுப்பாடு இல்லாமல் மட்டன் பிரியாணி, மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ், தந்தூரி சிக்கன் , லாலிபாப் சிக்கன், சவர்மா, சிக்கன் நகட்ஸ்,
ஃப்ரென்ச் ஃப்ரைஸ், சிக்கன் பாப் கார்ன் என அனைத்தும் டேபிளின் நடுவில் இருக்கு...அதை சுற்றி கப்புகளில் குளோப் ஜாமுன் இருக்க, பெரிய பெரிய க்ளாஸில் ஃப்ரெஸா ஜிகர்ந்தன்டா இருந்தது...
அதிலே...ஒரு நாற்காலியில் மரியம் குளோப் ஜாமை ருசித்து சுவைத்து கொண்டிருக்க...என்ன ப்ரஸி இது என புரியாமல் அர்ஜூன் வந்ததுமே கேட்க...
ஈஈஈஈஈ...பிரியாணி ஆறிடாமா வா என மையூரி முன்னே செல்ல...அதானே என நட்புகள் அனைவரும் ஒன்று கூடி அமர்ந்தனர்...
இவர்களை பார்த்து சிரித்த மரியம்...எல்லோரும் சாப்பிடுங்க..எதாச்சும் மிஸ்ஸிங்னா சொல்லுங்க...ஆர்டர் பன்னிரலாம் என கூற மற்றவர்களுக்கே தலையே வெடித்தது...
நம்ம நட்புங்க...கெஞ்சி கேட்டாளே ட்ரீட் தராம டிமிக்கி விட்டுருங்க...இவ என்னனான லாஸ்ட் க்ளாஸ் வர எதுவும் சொல்லாம...திடீர்னு இவ்வளவு சந்தோஷமா ட்ரீட் தரான இடைப்பட்ட நேரத்தில என்ன நடந்து இருக்கும் என ஆளுக்கொரு பக்கமாக யோசித்து கொண்டிருக்க...திடீரென ப்ரஸி குரல் கேட்கவும் நிலைக்கு வந்தனர்...
அடியேய்...என் பர்ஸ் எப்படி டி இங்கே என ப்ரஸி கேட்க...இவ்வளவும் வாங்க மனி(money) வேணும்லே மச்சி...ஃப்ரீயா தர மாட்டாங்க டி என தோளை குழுக்கி மரியம் சொன்னாள்...
அடி செல்லம்..."இது உன் ட்ரீட் டி" என ப்ரஸி கூற...ஆமா...இப்பயும் இது என் ட்ரீட் தான்...ஆனால், ஸ்பான்சர் நீ...சும்மா டைம் வேஸ்ட் பன்னாம சாப்பிடு...குடுத்த பணத்துக்கு வயிறு நிறைய சாப்பிடு என்றவளை ப்ரஸி முறைக்க...மற்றவர்கள் சிரித்தனர்...
சரி...மரியம் எதுக்கு ட்ரீட் னு சொல்லவே இல்லையே என ஆஜித் கேட்க...எல்லோருடைய பார்வையும் மரியம் மீது இருக்க...ஈஈஈஈஈ...கூடிய சீக்கிரமே சொல்லுறேன்...இப்ப என்ஜாய் பன்னலாம் என கூற எல்லோரும் பேசி சாப்பிட ஆரம்பித்தனர்....ஒருவனை தவிர...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro