52
கல்லூரி வழக்கம் போலே நகர.. இடைவேளையில் சாப்பிட்டவன்...ஜன்னல் வழியாக கை கழுவ சென்று...எதையோ நினைத்து சிரித்தான்...
டேய்...என்ன டா ஒரு மார்க்கமா இருக்கிறே என ஆஜித் கேட்கவும்...ஈஈஈஈஈ...அப்படிலாம் இல்லை டா... இங்க கை கழுவ எனக்கு ஒரு மாதிரி இருக்கு டா என ப்ரவீன் கூறினான்...
எப்பையும் இங்கே கைய கழுவுறேன்ற பேறுல கிரவுண்ட நாசம் பன்னுவே...உன்னால தான் டெங்கு கொசு வந்து ஊரு ஃபுல்லா ஃபீவரா இருக்கு...இப்ப எதுக்கு டா புதுசா யோசிக்கிறே என ஆஜித் கேட்கவும்....
ஈஈஈஈஈ...அது இல்லை மச்சான் என இழுக்க...முதல்ல இப்படி இழிக்கிறத நிறுத்து டா...முடியல...சீக்கிரம் கைய கழுவிட்டு வா...கேண்டீன்க்கு போறேன் என சென்றான் ஆஜித்...
டேய்...இது உனக்கு தேவையா என மனசாட்சி கிண்டல் செய்ய...
நான் என்ன டா பன்னுவேன்...
இங்கே கை கழுவ வரும் போது சந்தியா தான் நியாபகத்துக்கு வரா..
அவ மேல கை கழுவுன தண்ணி பட்டது தான் நியாபகம் வருது என மனசாட்சிக்கு பதில் கூறவும்...
ஈஈஈஈஈ...எச்சி தண்ணிய அவ மேல ஊத்திட்டு...என்ன மா டீசென்ட்டா சொல்றே நீ என மனசாட்சி கேட்க...அடேய் அப்படியெல்லாம் சொல்லாதே டா...அவ முடி எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா.. அப்படி பஞ்சி போல இருக்கும் டா என கூற...டேய் அவ தலைக்கு ஆயில் வச்சிருக்க மாட்டா டா என மனசாட்சி பதில் கூறியது...
இல்லை டா...அவ முடி எப்படி இருக்கும்னா ஒவ்வொன்னும் இப்படி தனி தனியா வரும் டா என தன் நடு விரலுடன் அடுத்த விரலையும் சேர்த்து கட்டை விரலுடன் முடியை பிரிக்கும் படி காற்றில் கை அசைத்து செய்ய...டேய்...அடங்கு டா என மனசாட்சி கூற.. உனக்கு பொறாமை டா...உனக்கு இப்படி அழகான முடி இருக்குறவ காதலி இல்லைனு பொறாமை டா என ப்ரவீன் பதில் கூற...என்ன காதலா என மனசாட்சி கேட்க...ஐய்யையே உலறிட்டோமே என மனதினுல் நினைத்த படி இருக்க...டேய் என பின்னால் இருந்து ப்ரவீனின் தோளில் கை வைத்தவனை..
என்ன டா...நீ இன்னும் கேண்டீன் போகலையா என ப்ரவீன் கேட்க...
அவன் போயிட்டு வந்துட்டான்...நீ ஏன் காத்துல கைய ஆட்டிட்டு இருக்குறே என கேட்க...
வேகமாக திரும்பிய ப்ரவீன் ஐயோ சார்...நீங்க எப்ப வந்தீங்க.. சாரி சார் என ப்ரவீன் தலையை சொரிய...அவரு ஒரு மாதிரி அவனை மேலும் கீழும் பார்த்து சிரிக்கவும்...மாணவர்களும் சேர்ந்து கொண்டனர்...
மானம் போச்சி என ப்ரவீன் தலையிலடித்தி கொண்டான்...
.
.
குட் மார்னிங் மேம் என மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றவர்களை சிறித்த முகத்துடனும் சிறு தலையசைப்புடனும் உள்ளே நுழைந்தாள் ஃபரிதா...
வந்து அமர்ந்ததும் அவள் கண் யாரையோ தேட..அதை புரிந்தவள் போல் சிரத்தாள் மரியம்...
முன் இருக்கை காலியாக இருக்கவும்..கண் அசைவில் முன்னாள் அழைக்க...சிறு புன்னகையுடன் முன்னாள் சென்று அமர்ந்தாள் மரியம்...
என்ன மரியம்...ஆர் யூ ஆல்ரைட் என கேட்டு ஸ்நேகமாக சிரித்த ஃபரிதாவை பார்த்து அதே புன்னகையுடன் எஸ் மேம் என்றாள்...
ஹ்ம்ம்...யு ஆர் லுக்கிங் சோ பியூடிஃபுல் மா என புன்னகையுடன் கூறிய ஃபரிதாவை பார்த்தவளுக்கு.. ஏனோ அந்த லைப்ரரியன்...நீங்க பார்க்குறதுக்கு ஃபரிதா மேம் மாதிரி இருக்கீங்கனு சொன்னது நியாபகம் வர...இதை சொல்லலாமா வேண்டாமா என யோசித்தபடி இருந்தவளை பார்த்த ஃபரிதா...என்னாச்சி மா என கேட்கவும்...நோ மேம்...தேங்ஸ் என மரியம் கூறவும்...சிரித்த படி பாடம் எடுக்க ஆரம்பித்தாள்...
.
.
.
அடேய்...ரண்வா...அடேய் என கத்திகொண்டிருக்க..
என்ன டா...ஏன் இப்படி கத்துறே என்றவனை பின்னே என்ன டா...நான் உன் பக்கத்துல வந்துட்டு இருக்கேன்..நீ என்னன்னா தள்ளி தள்ளி போயிட்டு இருக்கே என ஆஷிஃப் கேட்க...
ஈஈஈஈஈ...அது ஒன்னும் இல்லை டா...உன் பக்கத்துல வந்தா என் ப்ரஸ்டீஜ் என கூற வந்த ரண்வாவை...என்ன என்பது போல முறைக்க...இல்லை மச்சான்...உன் பக்கத்துல வந்தா எந்த பொண்ணும் என்னை பார்க்க மாட்டிங்குது டா என ரண்வா உண்மையை கூறினான்..
ஹாஹா...அழகா இருக்குறது என் குத்தமா என கேட்ட ஆஷிஃபை பார்த்து...நான் மட்டும் பொண்ணா பிறந்திக்கனும் அப்படியே....உன்னை என ஒரு மார்க்கமாக இழுத்தவனை....ஈஈஈஈ...இது ஆஷாவுக்கு சொந்தம் டா என தன் நெஞ்சில் கை வைத்து காண்பித்தான் ஆஷிஃப்...
.
.
.
மச்சி...ரொம்ப டயர்டா இருக்கு...நான் இப்படி உட்கார்ந்துக்கிரன்...நீ போய் ஏதாச்சும் வாங்கிட்டு வா என ப்ரஸி கூற...
சரி என சென்றவள்...கேண்டீன்க்கு போய் கொண்டிருக்க...மத்த நேரம்லாம் ஃப்ரெண்ட்ஸோட தான் இருக்கா...கேண்டீன்க்கு வரும் போது மட்டும் தனியா வர்ரா டா என மரியம்க்கு கேட்க்கும் படி ஆஷிஃப் ரண்வாவிடம் சொல்ல...
என்னன்னு புரியாம விழித்த ரண்வாவிடம் கண்களால் ஜாடை செய்யவும்..
ஏன் டா அப்படி என கேட்ட ரண்வாவிடம் அது ஒன்னும் இல்லை டா...கேண்டீன் பக்கம் தான் தனியா இருக்கலாம்...யாரும் இருக்க மாட்டாங்க...ஹேப்பியா இருக்கலாம் என கூறிக்கொண்டே போக மரியம் அழுதபடி ஓடி விட...
கண்ணீர காமிச்சே கவுத்துருலுவாங்க மச்சான்...பொண்ணுங்களை நம்பிடாதே என வேணும் என்றே கத்தி சொன்னான் ஆஷிஃப்..
பாவம்...ரண்வாவும் ஒன்றும் புரியாமல் கேப்டு கொண்டிருந்தான்...
.
.
ஹை வாப்பா வந்துட்டாங்க என ரசாக் கூறியபடி ஓடி வர...வாங்க தம்பி என வரவேற்றவர்ரை சோகமாக பார்த்த படி உள்ளே வந்தான் சிராஜ்...
அவனின் முகத்தை வைத்தே தெரிந்து விட்டது...இந்த தடவையும் பிள்ளையை பற்றிய தகவல் இல்லையென்று...
எங்க வாப்பா...இப்பையும் நீங்க லாத்தாவ கூட்டிட்டு வரலே என கேட்டவனை அழுதபடியே கட்டியணைத்துக் கொண்டான் சிராஜ்..
சீக்கிரம் வந்துருவா தங்கம்...உன் கூட விளையாட...உன் கூட சண்டை பிடிக்க..உனக்கு படிக்க சொல்லி தரனு சீக்கிரம் வந்துருவா டா என கூறிய தந்தையை பாவமாக பார்த்தவன் எப்பையும் நீங்க இப்படி தான் சொல்லுறீங்க...போங்க வாப்பா என கூறி ஓடி விட்டான் ரசாக்...
.
.
என்ன டி...உன்னை பார்க்க லவ் பன்ற பொண்ணு மாதிரியே தெரியலயே என மரியம் கேட்க...
என்ன டி...அதுக்காக நெத்தியில "ஐ லவ் அர்ஜூன்" னு எழுதிட்டு சுத்த சொல்றியா என கேட்ட ப்ரஸியை பார்த்து தோழிகள் சிரிச்சி உருள...
ஏன் டி லூசுங்களா?? இப்படி சிரிக்கிறீங்க என கேட்ட ப்ரஸியிடம்... இல்லை மச்சி நீ
"ஐ லவ் அர்ஜூன்" னு எழுதிட்டு அப்படியே சுத்துனா எப்படி இருக்கும்னு நினைச்சி பார்த்தோம்.. சிரிப்பு வந்திருச்சி என ஷிவானி கூறவும்...
ஹாஹா..."நங்கே..நங்கே"னு தலையில ஒத்த கைய வச்சி அடிச்சிட்டு சுத்துற காதல் பரத் மாதிரி இருக்கும் என கூறி மரியம் பரத்தை போல் செய்து காண்பிக்க...தோழிகள் அனைவரும் சிரிக்கவும்...ப்ரஸி மரியமை அடிக்க துரத்தி கொண்டிருக்க...
மரியம் ஓடுறேன் என்ற பெயரில் ஒருவன் மேல் விழுந்து அதிர்ச்சியானாள்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro