50
ப்ரஸியின் இடையில் மெலிதாய் கை வைத்தவன் அவனோடு சேர்த்து அவளை அனைத்து....அவளது காதில் அவன் இதழால் உரசி "انا احبك"
என கூற அதிர்ச்சியானவள்...அர்ஜூனை பார்க்க...அவனோ கோபத்துடன் இருந்தான்..
அர்ஜூனின் சட்டை காலரை பிடித்து இழுத்தவள்...ஹாஹா...அப்படியா என கேட்க...ஹூஹூம் என தொன்டையை கனைப்பது போல செய்து அங்கும் இங்கும் பார்த்து கொண்டிருந்தான்...
சோ ஸ்வீட்...இப்படி காதலை சொன்னால் மட்டும் பத்தாது தம்பி...என்னை என கூற வந்தவளை...உன்னை என்ன செய்யனும் என்பது போல வேகமாக ப்ரஸியின் முகத்தின் அருகில் வர...அவனின் நெஞ்சில் கை வைத்து பின்னால் தள்ளியவள்...என்னை பார்த்து சிரிக்கனும்னு சொல்ல வந்தேன் பொருக்கி என்றாள் ப்ரஸி...
யார டி பொருக்கினு சொன்னே...எவ்வளவு அழகா மரியம் கிட்ட கேட்டு உன் கிட்ட காதலை சொல்ல வந்தா ஹூம் என்றவனை....ஹாஹா...அதுவே அன்னைக்கு ஏதோ மரியம் சொன்ன வேர்ட காப்பி அடிச்சிட்டு வந்து சொல்லுறே...காதல யாராவது காப்பி அடிப்பாங்களா டா என கேட்டாள் ப்ரஸி..
ஹாஹா... ஐ லவ் யூ கூட யாரோ ஒருத்தர் சொல்ல ஆரம்பிச்சி தான் மா...உலகம் முழுவதும் சொல்ல ஆரம்பிச்சிது... அதுக்காக காப்பினு சொன்னா காதல் பாவம் இல்லையா என அர்ஜூன் கூறினான்..
ஐயையோ...பக்கி மடக்கிருச்சே...இப்ப என்ன சொல்ல என யோசித்தவளை...நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்...ஃபர்ஸ்ட் என் கூட வா என ப்ரஸியின் கையை பிடித்து இழுத்து சென்றான் அர்ஜூன்...
எங்கே அர்ஜுன் என கேட்டபடி வந்தவளை...வெய்ட்...சொல்லுறேன் என கூறி கொண்டு வந்தான்...
அர்ஜூன் கூட்டி சென்ற இடமோ கேண்டீன்... இங்கே எதுக்கு என யோசித்தபடி வர...அங்கே ஆஜித், வினை மற்றும் ப்ரவீன் இருக்கவும்...ஹேய்...கைய விடு அர்ஜூன்...உன் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க என ப்ரஸி கூற...அவளின் கையை விட்டவன்...அவளின் வல பக்கம் இடையில் கை வைத்து அவனோட அனைத்த படி கூட்டி வந்தான்...
டேய்...நடத்து டா நீ...இங்கே என்ன நடக்குது...நீ என்ன பன்னுறே என கேட்ட ஆஜிதிடம்...ஈஈஈஈ...கண்டுகாதே மச்சான் என கூறியவன்...சரி மரியம் எங்கே என அர்ஜூன் ப்ரஸியிடம் கேட்க...அவ தூங்குரா...ஹாஸ்டல்ல என கூறியவள் சோகமானாள்...
ஏன் இந்த நேரத்திலே தூங்குறா...என்னாச்சு என கேட்ட வினையிடம் ஹான்...அது.. ஒன்..னும் இல்..லை....உட....ம்..புக்கு முடிய...லை என கூற அதை சொல்றதுக்கு ஏன் இப்படி இழுக்கிறே என ப்ரவீன் சந்தேகமாய் கேட்டதும்...அப்படிலாம் இல்லை என ப்ரஸி சமாளித்தாள்..
சரி வா என அர்ஜூன் அழைக்க...எங்கே என கேட்டவளை கையை பிடித்து இழுத்து சென்றான் அர்ஜூன்...
அங்கே...அந்த மரத்தடியில் ஆஜிதின் கராத்தே உதவியுடன் சிவா, மதன் மற்றும் வினீத் அநேகம் பரிசுகளை பெற்றிருந்தனர்..
ஹேய்...என்னாச்சி இவங்களுக்கு...யாரு இப்படி அடிச்சிக்கிராங்க என கேட்ட நேரம் அங்கே ஷாலினி மற்றும் மையூரி...ப்ரஸியின் தோழிகளை அழைத்து வந்ததுடன் கூடவே மரியமையும் அழைத்து வந்திருந்தனர்..
ஜூனியரஸ் அனைவருக்கும் எதுவும் புரியாமல் இருக்க...எங்க கிட்ட இருந்து தானே நீங்க கத்துக்கனும்...நாங்களே சொல்லுறோம் என சீனியர்ஸ் கூற ஆரம்பித்தனர்...
(இப்ப நாம எங்கே போறோம்???
கதை கேக்க போறோம்...
வாங்க நண்பர்களே...
எல்லோரும் ஒன்றா போலாம்...
😂😂😂)
யூ.ஜி ஆன்ட் பீ.ஜி ஃபைனல் ஏர் ஸ்டூடண்ட்ஸ்...அஸ்ஸெம்பில் தி அட்மினிஸ்ட்ரேஷன் ப்ளாக் க்யுக்ளி என அறிவிப்பு வர மாணவ மாணவிகள் சென்று அமர்ந்தார்கள்...
ஹேய்...இவன் ஏன் டா இஞ்சி தின்ட குரங்கு மாதிரி இருக்கான் என சிவாவை சுட்டி காட்டி ப்ரவீன் கேட்கவும்...அவன் காதல் புஸ்வானம் ஆகுன வருத்தத்துல இருப்பான் என மையூரி கூறினாள்..
என்ன...இந்த சேவல் மண்டை லவ் பன்றானா என அர்ஜூன் கேட்க...
ஹாஹா...நல்லா பேரு வைக்கிறா மச்சான் நீ என வினை கூறியதும் மற்றவர்களும் அதை ஆமோதிப்பதாய் சிரித்தார்கள்...
அடேய்...சொல்லிட்டு சிரிங்க என அர்ஜூன் கூறவும்...ஏன் அர்ஜூன் உனக்கு தெரியாதா??
நம்ம ப்ரஸிய தான் சார் காதலிச்சாங்க என ஷாலினி கூற...வாட் என முழித்தவன்.. இது எப்ப என கேட்டான்..
ஹேய்...ப்ரஸி சொல்லும் போது...இதுங்க ஐஸ் க்ரீம் வாங்க போச்சிங்களே என மையூரி கூற...அன்று கடற்கரையில் நடந்ததை கூறினார்கள்...ஓ..சரி..சரி என கேட்டு கொண்டான் அர்ஜூன்...
ஹப்பா...சீக்கிரம் காதல சொல்லனும்...இல்லைனா அந்த புறாவா எவனாவது கொத்திட்டு போயிருவாங்க போலே என நினைத்தவன் அடுத்த நாளே ப்ரஸியிடம் காதலை சொல்ல முடிவெடுத்தான்...
ப்ரஸியை தேடி கேண்டீன்க்கு சென்றவன் அங்கு சிவாவுடன் அவள் இருப்பதை பார்த்து என்ன நடக்குது என புரியாமல் தடுமாறியவன் சரியாக தனக்கு முன்னால் நின்ற பைக் கண்ணாடியை பார்த்தான் அர்ஜூன்...
அந்த பைக் கண்ணாடி மூலமாக.. அர்ஜூன்க்கு பின்னால் இருந்த மரத்தின் பின்னால் சரியாக மறைந்து நின்று எட்டி எட்டி பார்த்து குரோதமாக சிறித்து கொண்டிருந்த மதனையும் வினீத்தையும் பார்த்தான்...
கோவம் வந்தாலும் அவர்களின் போக்கிலே விட்டு பிடிப்போம் என முடிவு செய்தவன்...நடந்ததை நம்பியதை போலே திரும்பி சென்றான் அர்ஜூன்..
என்ன மச்சான் காதலை சொல்லிட்டியா என கேட்ட வினையிடம்...ஹ்ம்ம் இல்லை என கூறிய அர்ஜுன்...வினையை இழுத்து கொண்டு நண்பர்களிடம் சென்று நடந்ததை கூறினான்...
என்ன டா...இவ்வளவு கேவலமா ஒரு பொண்ணு மேலே பழிய போட்டு காதலை பிரிக்க யூஸ் பன்னிக்கிறாங்க என புலம்பி திட்டினார்கள்...ஆனாலும் எனக்கு ஒரு டவுட் டா...நீ ப்ரஸிய லவ் பன்றது எப்படி அவுங்களுக்கு தெரியும் என கேட்ட ஷாலினியிடம் இதுக்கு பதில் அவுங்க கிட்ட தான் இருக்குது என கூறிய அர்ஜுன்...இப்ப என்ன செய்யலாம் மச்சான் என ஆஜித்திடம் கேட்டான்...
ஆஜத் கூறியதை கேட்டதும்...வேகமாக கிளம்பினர் நண்பர்கள் பட்டாலம்...
எப்படியும் சிவா இந்த நேரம் கண்டிப்பா ப்ளேன் சக்ஸஸானு கேட்பான்...இதை பத்தி கண்டிப்பா பேசுவானுங்க என கூறி அவர்களின் அருகில் அதே நேரம் அவர்கள் கண் பார்வையில் படாமல் மறைவாக அவர்கள் பேசியதை தன் கைப்பேசியில் வீடியோ மூலமாக பதிவு செய்தான் ப்ரவீன்..
கையில் ஆதாரம் கிடைத்ததும் அவர்களை போட்டு அடித்து புரட்டினான் ஆஜித்...
(பின்னே...மரியம் கிட்ட ஆடிக்கிறான்லே...
என்ன தான் மரியம் மனதில் ஆஷிஃப் இருந்தாலும் ஆஜித் சும்மா விடுவானா)..
.
.
.
இதெல்லாம் கேட்டவர்ளுக்கு கோவம் தலைக்கு ஏற...அவர்களை அருவருப்பாக பார்த்தனர்...
சிவாவை ஓங்கி அறைந்த ப்ரஸி...மரியமை அடிக்க சொன்னாள்...ச்சீ..அசிங்கம் என கையை பின்பக்கமாக இழுத்து கொண்டாள் மரியம்..
இந்த வீடியோவ என்ன பன்ன என கேட்ட ப்ரவீனிடம்...இது உங்க கிட்டயே இருக்கட்டும்...இந்த அசிங்கத்தை இதோட விட்ருங்க...மேற்கொண்டு என் மரியம்க்கு எந்த ப்ராப்ளமும் வர வேண்டாம் என கூறிய ப்ரஸியை கட்டி அணைத்தாள் மரியம்...
.
.
.
.
.
மனதில் உள்ள பாரம் நீங்க...நிம்மதியாக படுத்தவள்...இன்று காலையில் நன்றாக தூங்கியதால் தூக்கம் வராமல் போக கைப்பேசியை எடுத்தாள் மரியம்...
அதில்...
ஹாய் ஆஷா...யு ஹேவ் எ நியூவ் நோடிஃபிக்கேஷன்..
"அவள் ஒரு தொடர்கதை"
(அதாங்க...நம்ம anbu211996 சகோவின் கதை)
என வரவும் இந்த ஆதர்...எவ்வளவு லேட் யுடி போடுறாங்க...ஹூம் என மனதில் நினைத்தவள்..ஆனாலும்...செம்ம ஸ்டோரி பா...சீக்கிரம் படிப்போம் என அதை ஓபன் செய்து...அதர்க்கு ஒரு வோட்டையும் போட்டு விட்டு படிக்க ஆரம்பித்தாள் மரியம்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro