Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

47

உடனே கதாசிரியரிடம் இருந்து "😂😂😂"
இந்த ஸ்மைலி வரவும் அதை பார்த்தவன் கதாசிரியரின் பெயரை அப்பொழுது தான் கவனித்தான்...

அதில் "Aasha" என்றிருக்க ஒரு நிமிடம் சந்தோஷத்துடன் அதையே பார்த்துக் கொண்டிருந்தவன்...

வேகமாக ஆஷாவின் ப்ரொஃபைலை போய் பார்க்க...அதில் யூஸர் நேம், ஃபுல் நேம் இரண்டுமே ஆஷா என்றிருந்தது...

ஆனால், லொகேஷன் சென்னை என்றிருக்கவும்... அப்ப இது வேற யாரோ போல என நினைத்தவன்.. அவள் எழுதிய கதைகளை பார்க்க...நான்கு கதைகள் எழுதி இருக்கிறாள்...அந்த நான்குமே காதல் கதைகள்..

ஹேய்...ஒரு வேலை இது உன் ஆஷாவா இருந்தா எப்படி இருக்கும் என மனசாட்சி கூற...நல்லாதான் இருக்கும்...ஆனால், வேற பொண்ணா இருந்தா என்ன பன்றது என ஆஷிஃப் பதில் கூற..

வந்தா மலை...போனா ****...ஹான் அதே தான்...நீ போய் பேசு...பார்க்கலாம் என மனசாட்சி கூற...சரி பேசி தான் பார்ப்போமே என முடிவெடுத்தவன் ஹாய் என அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்...
.
.
.
.
அழுது கொண்டே போன மரியம்...
அவளுடைய கட்டிலில் போய் படுத்தவள்...அழுதபடியே தூங்கினாள்...

அவள் தோழிகள் வந்து சுமதி, சந்தியா வீட்டில் நடந்த உபசரிப்பை பற்றி புகழ்ந்து கூற...இவள் அமைதியாய் கேட்டு கொண்டிருந்தாள்..

என்னாச்சி மரியம்...ஏன் ஒரு மாதிரி இருக்கா என ஷிவானி கேட்க..
ஒன்னுமில்லை என பேச்சை மாற்றியவள் அவர்கள் திட்டியதை கூறாமல் மறைத்தாள்..

ப்ரஸிக்கு ஒரு கால் வர...அட்டென்ட் செய்து பேசியவள்...சரி வாங்க...கொஞ்த நேரம் வால்க் பன்னிட்டு வரலாம் என ப்ரஸி கூற..

ஏன் டி...இவ்வளவு நேரம் சுத்திட்டு வந்தது பத்தாதா??
நான் வரலை...போ என மரியம் கூற..

ஹேய்...வா டி...செல்லம், டார்லிங் என கெஞ்சி, கொஞ்சி...ஒரு வழியாக ப்ரஸி மரியமை ஒத்துக்க வைக்க...

ப்ரஸி, ஷிவானி, மரியம் மூவரும் பேசியபடி நடந்து கொண்டிருக்க...

"ஹேப்பி பர்த்டே மரியம்" என கத்தும் குரல் கேட்டு அதிர்ச்சியில் கண்களை விரித்து பார்க்க... கேக்கை நடுவில் வைத்து அதை சுற்றி விடுதி தோழிகள், சீனியர்ஸ் இருந்தார்கள்...

வா செல்லம் என மரியமை ப்ரஸியும், ஷிவானியும் கூப்பிட்டு செல்ல...மரியம்க்கு தான் வித்தியாசமாக இருந்தது..

அவர்களின் வாழ்த்துக்களை ஏற்று கேக்கை வெட்டி எடுத்தவள் திருதிருவென விழிக்க..
அவள் கையில் வைத்திருந்த கேக்கை ப்ரஸி அவளின் பக்கம் சென்று லபக் என சாப்பிட...அதை தன் கைபேசியில் புகைப்படமாய் மாற்றினான் அர்ஜூன்...

ஹ்ம்ம்...நீ நடத்து...நடத்து என அர்ஜூனின் காதில் வினை கூற...அவன் பிடரி முடியை கோதி விட்டு திரும்பியபடி சிரிக்க...மச்சான்..சூப்பரா வெக்கம் படுறா டா நீ என கூற...

அடேய்...நீ வேற..சும்மா இரி டா என கூறியவன் அங்கிருந்து நகர்ந்தவன்..ப்ரஸியை பார்த்து ஒரு பெரு மூச்சி விட்டான்...
(ஹ்ம்ம்...வேற என்ன அவளின் உதடை சுற்றி கேக் இருக்குலே...அதான்😍😍)

தோழிகள் எல்லோருக்கும் கேக்கை குடுத்தவள்...அவர்களிடமிருந்து வாழ்த்தையும், பரிசு பொருள்களையும் பெற்று கொண்டாள்..

எல்லோரும் அவர்அவர்கள் நண்பர்களுடன் இருக்க..

இவர்கள் சீனியர்ஸுடன் இருக்கே...எங்கே..என் கிஃப்ட் என ப்ரஸியிடம் மரியம் கேட்க..

மரியம் மா...கிஃப்ட் தானா வரனும்...கேட்டு வாங்க கூடாது என அர்ஜூன் கூற..

ஹாஹா...நாங்க எப்பையுமே கேட்டு தான் வாங்குவோம்...எங்க நட்பு...நாங்க கிஃப்ட் தரும் போது சிரிச்சிட்டு தேங்ஸ் சொல்ல மாட்டோம்..
கிஃப்ட்னு கேட்டு டார்ச்சர் பன்னி புடுங்கிடுவோம் என மரியம் சிரிக்க..

ஹாஹா...நல்ல நட்பு என ஷாலினி கூற..

ஹ்ம்ம் என மரியம் ப்ரஸியை பார்க்க அழகான வாட்ச் ஒன்றை மரியமின் கையில் கட்டி விட்டாள் ப்ரஸி...

எம்மா...இந்த கேக் ஏற்பாடு பன்னுனது உன் ப்ரஸி தான் என அர்ஜூன் கூற..
ஹய்ய் என ப்ரஸியை கட்டி கொண்டாள் மரியம்...

நான் கேக் வாங்குனேன் தான்...அர்ஜூன் தான் இந்த ஏற்ப்பாடு பன்னது என ப்ரஸி கூற அர்ஜுன் ஸ்தம்பித்தான்..
(ப்ரஸி வாயால அர்ஜுன்னு பேர சொல்லிட்டாங்களாம்😂😂)

அர்ஜூன்க்கு தேங்ஸ் சொல்லியவள் சிறிது நேரம் பேசிவிட்டு அவர்அவர்கள்
அறைக்கு சென்றனர்...

சந்தோஷமாக படுத்தவளுக்கு அவர்கள் திட்டுனது நியாபகம் வர..
கைப்பேசியை எடுத்து வழக்கமாக கவலை வந்தா என்ன செய்வோமோ அதையே செய்தாள்...
(அட ஆமாங்க...வாட்பேட் ஓபன் பன்றா)..

வந்த ஒவ்வொறு கமென்டையும் ரசித்து வாசித்தவள்...அதர்க்கு ஏத்தது போல் அதே ரசனையுடன் பதில் கமென்ட் அனுப்பியபடி வர...

அதில் "Aash" என ஒரு ஐடி யிலிருந்து கமென்ட் வரவும் புது ரீடர் என மட்டும் யோசித்தவளுக்கு வேற எதுவும் தோனவில்லை..அந்த கமென்டிர்க்கு பதில் அனுப்பியவள்...அடுத்ததை பார்த்து கொண்டு போக...

ஒரு ப்ரைவேட் மெஸேஜ் என வரவும் அதில் போய் பார்த்தவள்...ஆஷ் இடமிருந்து ஹாய் என குறுஞ்செய்தி வந்தது..

(பொதுவாக ஆண்களிடமிருந்து ப்ரைவேட் மெஸேஜில் ஹாய் என்றபடி வந்தால் பதில் அனுப்ப மாட்டாள்...அதே சமயம் கதையை பற்றி ஏதேனும் கருத்து கூறியிருந்தாள் அதர்க்கு பதில் அனுப்புவாள்...

மத்தபடி எல்லாம் கமென்ட்டோட சரி..)

ஆனால், ஆஷ் இன் டி.பியை பார்த்த மரியம் ஏதோ ஒரு பொம்மை இருக்க பொண்ணு என நினைத்து பதில் அனுப்ப முடிவு செய்தாள் மரியம்...

ஆஷா: ஹாய்..

ஆஷ்: (ஐயையோ ஹாய் போட்டாச்சி...என்ன பேசனு தெரியலயே..இதுக்கு தான் பொண்ணுங்க கூட கடலை போடனும்னு சொல்றது...பேசாம இப்படியே ஓடிருவோமா என நினைத்தவன்)
உங்க ஸ்டோரி நல்லா இருக்கு...

ஆஷா: தேங்ஸ்

ஆஷ்: ஹ்ம்ம்...சாப்டீங்களா??

ஆஷா: ஹ்ம்ம்...எஸ்...நீங்க??

ஆஷ்: ஹ்ம்ம்..சாப்டேன்..

ஆஷா: ஹ்ம்ம்...ரீட் மை அநதர் ஸ்டோரீஸ்...
ஷேர் யுவர் வேலியபுல் வோட்ஸ் ஆன்ட் கமென்ட்..

ஆஷ்: ஹ்ம்ம்...கண்டிப்பா..

ஆஷா: ஓகே...

ஆஷ்: குட் நைட்...

ஆஷா: ஹ்ம்ம்...குட் நைட்..

ஆஷ்: (அட நாயே...அவ கிட்ட டீடெய்ல்ஸ் கேக்காம...மொக்க போட்டிக்றா என மனசாட்சி கூற...ஃபர்ஸ்ட் டே வ டீடெய்ல்ஸ் கேட்டா எப்படி தருவா...கொஞ்சம் கொஞ்சமா பேசிக்கலாம் என கூறி படுத்தான்)

ஃபோனில் எடுத்த ஆஷாவின் புகைப்படத்தை பார்த்தவன்...
ஓய்...ஆஷா குட்டி...நான் இங்கே உன்னையே நினைச்சிட்டு இருக்கேனே...
என் நினைவு உனக்கு இருக்கா..
இன்னைக்கு உன் பேர்த் டேலே...நீ எப்பையும் ஹேப்பியா இருக்கனும்...நான் உன்னை ஹேப்பியா வச்சிருப்பேன் டி...
குட் நைட் குட்டி மா என மனதிர்க்குள்ளே பேசியவன்(பின்னே... பக்கத்துல ரியாஜ் தூங்கி கிடக்குறாங்களே) தூங்கினான்...
.
.
.
தன் கூடவே வைத்திருந்த ஆஷிஃப் வாங்கி தந்த டெடியை எடுத்து பேச ஆரம்பித்தாள் மரியம்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro