46
வரும் வழியில் பேசிக் கொண்டு வந்த படி அங்கே கிடந்த மாட்டு சானத்தை கவனிக்காமல் காலை வைத்த ப்ரவீன் வழுக்கி விழ போக பின்னால் வந்த சந்தியா தாங்கி பிடித்தாள்...
பின் பக்கமாக விழ இருந்த ப்ரவீனும்...பின் பக்கமாக அவனை பிடித்து அவன் முகத்திர்க்கு முன்னால் தலை குனிந்த சந்தியாவும் ஒருவருடைய கண்களை மற்றொருவர் பார்த்த படி இருக்க...
அதில் இருவரும் தங்களை சுற்றி உள்ளவர்களை மறந்த நிலையில் இருக்க...
அந்த நிகழ்வை அழகாய் தன் கைபேசியில் புகைப்படமாய் மாற்றினான் ஆஜித்...
ஹும்...ஹுஹும் என அவர்களை சுற்றி இருந்தவர்கள் தொன்டையை கனைக்க...
பாவம்...இவர்கள் காதிர்க்கு எட்ட கூட இல்லை..
என்ன டா நடக்குது இங்கே என அர்ஜூன் கேட்க..
இதுக்கு பேர் தான்...என்னமோ சொல்லுவாங்களே... ஹான்...புடிச்சி வைச்ச பிள்ளையார் என ஷிவானி கூற...
ஹாஹாஹா என சுற்றி இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க...
அவர்களின் சிரிப்பு சத்தத்தில் சுய நினைவுக்கு வந்தவர்கள்....வேகமாக தங்களை சரி செய்து நிற்க...
சந்தியா தன் கைகளை உதற... என்னாச்சி என மையூரி கேட்க...கை என கூற வந்தவளை...
ரொம்ப நேரமா அப்படியே இருந்தீங்களே...அதான் கை மறுத்து போயிருக்கும் என சிரித்தபடி சுதா கூற..
உன் மூஞ்சி...கை வலிக்குதுடி என சந்தியா கூற..
ஹாஹா...பார்க்க தான் இவன் இப்படி இருக்கான்...போர்ன் வெய்ட் மா என அர்ஜூன் கூறி.. இருந்தாலும் இது ஓவர் டா...மாட்டு சானத்தில காதல் பன்னுன முதல் காதல் புறா நீங்க தான் என கூறவும்...
ஹலோ...ஹலோ...இது லவ்லாம் இல்லை என ப்ரவீனும் சந்தியாவும் ஒன்றாக சொல்ல...
பாருடா பொருத்தத்தை என கூறியவன்...இக்கட சூடு என தான் எடுத்த புகைப்படத்தை ஆஜித் காண்பிக்க...
உண்மையிலயுமே இருவரும் அந்த புகைப்படத்தை ரசிச்சி பார்த்தவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்து கொள்ள...ஒரு மாதிரியாக இருக்க திரும்பி கொண்டனர்...
.
.
.
.
வீர சாகசம் செய்வதை போல் ஏரி குதிக்க போன மரியம்...
எத்தனை நாளா நடக்குது இது என்றபடி வந்தவனை பார்த்ததும்...
ப்ச்ச்...இவனா என சலிச்சிக்கிட்டவள்...
உனக்கு என்ன...நான் என்ன வேணாலும் செய்வேன்...அதை ஏன் நீ கேக்குறே என மரியம் கூற..
ஹாஹா...அதை நான் தான் கேக்கனும்.. இஷ்டத்துக்கு ஊர் சுத்திட்டு வந்ததும் இல்லாம இப்படி பின் பக்கமா ஏறி குதிக்குறே...ஃபர்ஸ்ட் ஏர் தானே...அதுக்குள்ளேவா?? என கேட்க..
என்ன மச்சான்...இங்கே ப்ராப்ளம்?? என்றபடி வந்தவனிடம்...நடந்ததை சொல்ல...
டேய்...இந்த பொண்ணுங்களே இப்படி தான் கண்டவன் கூடையும் சுத்திட்டு திரியிவாங்க...அப்புறம் இந்த மாதிரி ஏறி குதிப்பாங்க... அப்புறம் அப்படியே ஒன்னுமே தெரியாத நல்ல பொண்ணுங்க மாதிரி சீன் போடுவாங்க...இதுலாம் எல்லா காலேஜ்லையும் நடக்குறது தான் என கூற...
ஹலோ...நான் ஒன்னும் அப்படி இல்லை என கோவமாக கூறியவளை...ஹ்ம்ம்...யாரு தான் உண்மையை ஒத்துக்குட்டாங்க என கூறி கொண்டிக்க...
என்ன ப்ராப்ளம் என்றபடி வந்த ப்ரொஃபெஸரிடம்...
அன்னைக்கு என்னை அடி வாங்க வச்சிலே...இன்னைக்கு என் டர்ன் டி என கருவிகொண்டவன்...
சார்...இந்த பொண்ணு பின் பக்கமா ஏறி குதிச்சிட்டு திமிரா பேசுது என அவன் கூற..
அவளை உறுத்து பார்த்தவர்...என்னம்மா இது...இவ்வளவு கலக்கலா ரெடியாகிட்டு எங்க போயிட்டு வர என்றவரிடம் சார்...சாரி சார் என மரியம் கெஞ்ச...
நீ வெளியே போனது கூட சரினு வச்சிக்கோ...இப்படி ஏறி வந்தது தப்புலே என கேட்டவரை பார்த்து கண்கலங்க நின்றவளிடம்...
சரி...இதான் ஃபர்ஸ்ட் ஆன்ட் லாஸ்ட்...இனிமேல் இந்த மாதிரி தப்பு பன்ன கூடாது என கூறியவர் நகர்ந்து விட..
தப்பு செஞ்சி அழுகுற மாதிரி ஆக்ட் பன்னியே எல்லோரையும் கவுக்குறது பொண்ணுங்களுக்கு கை வந்த கலை டா என கூறியவன்...தன் நண்பனுடன் சென்று விட்டான்..
தன்னை பற்றி அசிங்கமாக பேசியதும் அழுகையுடனே அறைக்கு சென்றாள் மரியம்...
.
.
.
வீட்டிர்க்கு வந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் தங்கள் நண்பர்களை அறிமுகம் படுத்தினர் சுதாவும், சந்தியாவும்..
(சுதா, சந்தியா இருவரும் அத்தை மகள், மாமன் மகள்...அவர்களின் குடும்பம் கூட்டு குடும்பம்)..
வந்தவர்களை நன்றாக கவனித்து அவர்களுக்கு விருந்து வைத்து தான் அனுப்பினார்கள் அவர்களின் குடும்பத்தார்..
இவ்வளவு அன்புடனும் ஒரு குடும்பம் இருக்குமா என எண்ணி வியந்தான் ப்ரவீன்..
.
.
.
இரவு சாப்பிட்டு படுத்த ஆஷிஃப்...தன் கைப்பேசியை எடுத்து வாட்பேடை ஓப்பன் செய்தவன்...ஏதாச்சிம் ஸ்டோரி ரீட் பன்னுவோம் என நினைத்த படி ஸ்டோரியின் பெயரை பார்த்து கொண்டே வர...
அதில்...
"உன்னை நினைத்து...என்னை மறந்தேன்"
என ஒரு ஸ்டோரியை பார்த்தவன்...
ஹ்ம்ம்...உன்னை நினைத்து தான்..என்னை மறக்குறேன் ஆஷா என புலம்பியபடி இந்த ஸ்டோரி ரீட் பன்னலாம் என வாசிக்க ஆரம்பித்தான்...
அது முற்றிலும் ஒரு காதல் கதை...
அதில்....
"நாம மட்டும் செத்ததுக்கு அப்புறம் ஆவியா வருவோம்ங்குறது உண்மையா இருந்தா...மனசார செத்து காதலிக்கலாம் டா...இந்த கொடூறமான உலகத்துல வாழ்றதுக்கு" என அந்த கதாபாத்திரத்தில் வரும் நாயகி கூறுவதை போல் இருக்க...
"ஹாஹா...இந்த லைன் மட்டும் உண்மையா இருந்தா இந்த உலகத்துல காதல் தோல்வியே இருக்காது...நம்பி சாகலாம் ஆதர் ஜி" என அந்த வரிக்கு கமெண்ட் குடுக்க...
உடனே ஆதரிடம் இருந்து பதில் வர...
அதை பார்த்தவன் அதிர்ந்தான்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro