43
காவல் அதிகாரிடம் நடந்ததை கூறினாலும்.. தன் மனைவியை ஒருவன் நாசம் பன்னதர்க்கும் தன் தங்கையிடம் ஒருவன் தவராக நடந்ததர்க்கும் ஜைனம்பையும் முஸ்லீஹாவையும் கொலை செய்தேன் என்பதை மறைத்து சொத்துக்காக என் தாயையும் தங்கையையும் ஜைனம்பும் முஸ்லிஹாவும் கொண்று விட்டதால் ஆத்திரம் அடைந்த நான்.. அவர்கள் இருவரையும் அருவாளால் கொன்று விட்டேன் என்பதை மட்டும் ரியாஜ் கூறினான்..
நான் செய்த குற்றத்துக்காக எனக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைத்தது.. ஜைலை விட்டு வெளியே வந்ததும் நேராக நான் கோயம்பத்தூருக்கு போனேன்...
அங்கே நாங்க இருந்த வீட்டில் ஃபாத்திமாவும் என் பையனும் இல்லை...
செய்யதுனு ஒருத்தவங்க இருந்தவங்க.. சுத்தி இருந்தவங்க மட்டும் அடையாளம் தெரிஞ்சி என் கிட்ட விசாரிச்சாங்க..
நான் நடந்ததை சொன்னேன்...
அவங்க ரொம்ப வருத்தப்பட்டாங்க...நடந்தத முழுசா தெரிஞ்சிக்காம அந்த பிள்ளைய குத்தி குத்தியே சாகடிச்சிட்டோமேனு மனசார வருந்துனாங்க..
அங்க ஃபாத்திமா பட்ட கஷ்டத்தையும்
நெஞ்சு வலில வஃபாத்(இறந்து) ஆகிவிட்டதாகவும் சொன்னாங்க😢😢😢
எனக்கு என் உயிரே என்னை விட்டு போன மாதிரி இருந்துச்சி..
என் பிள்ளையையும் ஒரு பணக்கார வீட்டில வழக்குறதா சொன்னாங்க...அவங்கள பத்தி சொன்னாங்க...
ஆனால், அவங்க என் நியாபகத்துக்கு வரலை...அவங்க வீட்டுல தான் என் மனைவி வேலை செய்ஞ்சதா சொன்னாங்க...
அப்புறம் நான் சென்னைக்கே வந்தேன்...வாழவே பிடிக்காம ரோட் ரோடா திரியிவேன்...அப்ப தான் இந்த தம்பி என்னை இங்கே கூட்டிட்டு வந்தாங்க...
ஆனால், இங்கே உங்களை நான் எதிர் பார்க்கலே என ரியாஜ் கண்கலங்கி கூறி முடிக்க அங்கே இருந்த எல்லோருக்கும் கண் கலங்கியது..
சித்தியும் தன் புடவையால் கண்களை துடைத்துக் கொண்டார்...
வாப்பா என கூவலுடன் ரியாஜைக் கட்டிக் கொண்டான் ஆஷிஃப்...
ரியாஜ் ஒன்றும் புரியாமல் விழிக்க...
நாங்க தான் இவனை வழர்க்குறோம்...இவன் தான் ஆஷிஃப்..இவன் தான் உங்க பையன் என சித்தி கூற...
என்னது...என் ஆஷிஃபா??...
நீ எவ்வளவு பெரிய பையனா வளர்ந்துட்டே..
நான் உன்னை பார்ப்பேனு நினைச்சி கூட பார்க்கலே...நான் உங்களை ரொம்ப தவிக்க விட்டுட்டேன் டா...என்னை மன்னிச்சிறு ப்பா என கூறிய ரியாஜ் ஆஷிஃபை கட்டி அழுதார்..
நீங்க எந்த தப்பும் பன்னலே வாப்பா...எங்க எல்லோரையும் விட நீங்க தான் வாப்பா ரொம்ப கஷ்டப்பட்டிக்குறீங்க...
ஆனால், நீங்க எங்க ம்மாவ புரிஞ்சிக்கிட்டது எங்க ம்மாக்கு கடைசி வரை தெரியாம போச்சே வாப்பா என இத்தனை நாளாக மனதில் தேங்கி வைத்ததை முழுதாக கொட்டி தரையில் அமர்ந்து கதறி அழுதான் ஆஷிஃப்😢😢😢...
நீங்க இனி எங்கக்கூட தான் இருக்கனும் வாப்பா...என் ரூம்ல நாம ஒன்னா இருக்கனும் வாப்பா...என்னை பெத்த உங்க அன்பு எனக்கு இனிமேயாச்சும் கிடைக்கனும் வாப்பா என சின்ன பையனை போல் கூறி அவரை அவன் அறைக்கு கூட்டி சென்றான் ஆஷிஃப்..
.
.
.
அர்ஜுன் பாட்டிலை சுத்த விட அது மரியமை குறி வைத்து இருந்தது...
ஹே...பெர்த் டே பேபி கிட்ட பாட்டில் போயிடுச்சி என அர்ஜுன் கூற...
ட்ரூத் ஆர் டேர் என ப்ரவீன் கேட்டான்..
ட்ரூத் என மரியம் கூற...
செம்ம என கூறி நண்பர்கள் சூழ்ந்தார்கள்..
சரி...நாங்க கேக்குறதுக்கு உண்மைய தான் சொல்லனும் என ஆஜித் கூற...
அடேய்...அதுக்கு தான் ட்ரூத்னு மரியம் சொல்லிக்குது...நீ கேள்விய கேளு டா என வினை கூற...
ஈஈஈஈஈ...சரி...சரி...உங்க டேட(dad) தவிர நீ எந்த பையனையாச்சும் நினைச்சிக்கிறியா என ஆஜித் கேட்க...
அழகாக புன்னகைத்தவள்....தலையை குனிந்து.....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Eeeee...next ud la solluraen...
Bye
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro