41
இரண்டு நாட்கள் வீட்டில் சோகமாக திரிந்தவன்....அதர்க்கு மேல் தன்னால் ஃபாத்திமா இல்லாமல் இருக்க முடியாது என உணர்ந்தவன்..பலவாறு யோசித்து கொண்டிருந்தான்..
இல்லை...நம்ம பொண்டாட்டி கண்டிப்பா தப்பு செய்ஞ்சிருக்க மாட்டா.. அவன்..அப்ப அவன் யாரவன்...இதெல்லாம் தெரிஞ்சிக்கனும்னா நம்ம கோயம்புத்தூர் போகனும் என நினைத்தவன்...விடிந்ததும் போகலாம் என நினைத்தவன் தூக்கம் இல்லாமல் மொட்டை மாடிக்கு சென்றான் ரியாஜ்..
அங்கு...அவன் பார்த்தது...அவனுக்கு ரொம்ப பெரிய அதிர்ச்சி...
அவன் ஆசை தங்கை...அங்கே...
.
.
.
அவள் மயங்கி கிடக்க...அவளின் ஆடையை கலட்ட முயற்ச்சித்து கொண்டிருந்தான் ஒருவன்... அவனை ஓங்கி உதைத்தான் ரியாஜ்...
ரியாஜை கண்டவன் தப்பிக்க முயல...அவனை அங்கு அடுக்கி வைக்கப்பட்ட இரும்பு கம்பியால் முதுகிலும் காலிலும் அடித்து...அவனை ஓட முடியாமல் செய்தான் ரியாஜ்...
அங்கு இருட்டாக இருப்பதால் உருவம் துள்ளியமாக தெரிந்தாலும்...வந்தவனின் அடையாளம் தெரியாததால் மாடி விளக்கை போட்டவன்...
தன் தங்கையின் ஆடையை சரி செய்தவன்.. அவளை எழுப்ப முயல அவளோ ஆழ்ந்த உறக்கத்தில்(மயக்கத்தில்) இருந்தாள்..
கோவம் தலைக்கேற அவனை பார்த்த ரியாஜ்... அவன் முதுகு காட்டி விழுந்திருப்பதால்...முகம் தெரியாமல் போக...அவனை புரட்டி போட்டவன் அதிர்ந்தான்...
.
.
இவன் வேறு யாருமில்லை...தங்கள் வாழ்க்கையை கெடுக்க வந்தவன்...தன் மனைவிக்கு அவப்பெயரை வாங்கி குடுத்தவன் என நினைத்தவன்..
நீ லாம் கொடுமையா சாகனும்டா என நினைத்து மயங்கி கிடந்தவனின் முகத்தில் தண்ணீரை எடுத்து ஊற்றியவன்... அவன் தெளிந்ததும் அந்த கம்பியை எடுத்து அடிக்க போன ரியாஜிடம்...
ஐயோ...விட்ருங்க..ப்ளீஸ் என கத்தி கொண்டிருந்தவனை...கேட்கும் மன நிலையில் இல்லாமல் வெறி கொண்ட சிங்கம் போல் அடிக்க...
ப்ளீஸ்...இதை நானா பன்னலே...அவங்க சொல்லி தான் பன்னேன் என வலியை தாங்க முடியாமல் உண்மையை உலர...ஆவேசமாக அடித்துக் கொண்டிருந்த ரியாஜ்... அவன் சொன்ன வாக்கியத்தில் தடுமாறி நிறுத்தியவன்...
யாரு டா சொன்னது???
சொல்லு டா...யாரு சொன்னது என அவனை உலுக்கி கேட்ட ரியாஜிடம்...
அது...அது என தடுமாற்றத்துடன் இழுத்தவனை...இப்ப நீ சொல்ல போறியா?? இல்லையா?? என அவனின் கழுத்தை ரியாஜ் நெரிக்க...
சொல்லிறேன்...சொல்லிறேன்... ஜைனம்ப் தான் இதையெல்லாம் செய்ய சொன்னது...ஜைனம்ப் தான் என வலியில் கத்த...ஒரு நிமிடம் அதிர்ந்த ரியாஜ்....டேய் யார பாத்து என்ன சொல்லுறே என மறுபடியும் அடிக்க போக..
இல்லை...நான் உண்மையா தான் சொல்லுறேன் என்றவன் சொல்ல தொடங்கினான்...
பேருந்தில்:
ரியாஜின் தங்கை பானு தன் கல்லூரிக்கு வழக்கமாக அரசு பேருந்தில் செல்வாள்...
அன்று... பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பானுவிர்க்கு சீட்டு கிடைக்காமல் நிற்க நேர்ந்தது...
முதலில் தன்னை யாரோ உரசுவதாக நினைத்தவள்...கூட்டமாக இருக்குதுலே...அதான் நமக்கு தப்பா படுது என நினைத்தவள் ஒதுங்கி ஒதுங்கி நின்றாள்...
மறுபடியும் யாரோ பின்னால் கை வைத்தது போல தோன்ற.. திரும்பி பார்க்க...அங்கு அவர் அவர்கள் கூட்ட நெரிசலில் தன் நிறுத்தத்தை எதிர் பார்த்து காத்திருந்தனர்..
ச்சே...நம்ம பிரமை போல என நினைத்தவள்...திரும்பி நிற்க...
திரும்பி நின்றவளை மறுபடியும் தன் பின்னால் யாரோ தட்டுவதை உணர்ந்தவள்...திரும்பி பார்க்க அங்கு இவளை பார்த்து ஒருத்தன் குரூரமான புத்தியுடன் சிரிக்க...
அவன் கண்ணத்தில் ஓங்கி அறைந்தாள் பானு..
ஹேய்...என்னாச்சி மா என பக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் பானுவிடம் கேள்வி எழுப்ப...இவன் என் கிட்ட தப்பா...என சொல்ல வந்தவள் அழுக ஆரம்பிக்க...
அங்குள்ளவர்கள் நடந்ததை யூகித்து அவனை அடித்து காவல் நிலையத்திர்க்கு அனுப்ப நினைத்தவர்கள்...பொண்ணு விஷயம் என நினைத்து பேருந்தை நிறுத்த சொல்லி...அவனை இறக்கி விட்டனர்...
ச்சே...ஒரு வயசு பொண்ணால எங்கையுமே தனியா போக முடியலே...காலம் கெட்டு கிடக்குது என பாவம்... புலம்பியவர்களுக்கு தெரியவில்லை..
(இனி வரும் காலத்தில் பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை...குரூரமான புத்திக்காரர்களால் பிஞ்சு குழந்தைகளான உலகத்தை அறியாத நிலையிலும் காம நாய்களுக்கு உணவாக போகிறார்கள் என்று😢😢😢)
இங்கு...தன்னை அவமானம் படுத்தியவளை பழி வாங்கியே தீரனும் என நினைத்தவனுக்கு தானாக ஒரு வாய்ப்பு கிடைத்தது...
நீ அவளை அடைய ஆசை படுறேனு தெரியும்...நான் சொல்றதை நீ செய்தீனா...நான் உனக்கு அவளை தர்ரேன் என கூறியவள் தன் திட்டத்தை கூற தொடங்கினாள் ஜைனம்ப்...
என்னுடன் சென்னையிலிருந்து அவரும் கோயம்பத்தூருக்கு வந்தார்... அவரின்
திட்ட படி... ஃபாத்திமாவை மோசம் செய்தது..
பிறகு இங்கு வந்து பணம் தந்தது... இன்று... பானு மொட்டை மாடியில் இருந்தது தெரிந்ததும் அவரே என்னை அழைத்து கதவை திறந்து விட்டது வரை கூறி முடித்தான் அவன்...
இதையெல்லாம் அணல் தெரிக்கும் பார்வையுடன் கேட்டுக் கொண்டிருந்தான் ரியாஜ்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro