4
சுப்ஹு பாங்கு(அல்லாஹ்வை நினைவு கூற அழைப்பது) சத்தம் கேட்டு எழுந்த ஃபரிதா, தன் கணவனை பார்த்து வெட்கத்துடன்...இரவில் நடந்தவைகளை ரசித்து கொண்டு இருக்க....
சிராஜ் அசைவது தெரிந்ததும் வேகமாக எழுந்து குளியலறைக்கு சென்று குளித்து விட்டு ஒளு(தொழுகுறதுக்கு முன் தன்னை சுத்தம் செய்வது) செய்து தொழுது முடித்து...தன்னுடைய கணவனுக்காகவும் தங்களுடைய வாழ்வு நலமாக இருக்கவும் துஆ (வேண்டுதல்) செய்தவள் ....தங்களை சேர்த்து வைத்ததர்க்காக நன்றி கூறினாள்...
( தவறியும் தங்கள் பெற்றோர்களை நினைத்து கூட பார்க்க வில்லை).
பிறகு சிராஜும் தொழுது விட்டு வர....
தேநீர் போட போன ஃபரிதாவை இழுத்து அமர்த்தியவன்....தான் தேநீர் போட்டு வருவதாக கூறி சமையலறை சென்று 2 கோப்பை தேநீர் போட்டு கொண்டு வந்து..ஒன்றை ஃபரிதாவிடமும், மற்றொன்ரை தானும் எடுத்து அமர்ந்தான்..
தன் கணவன் போட்டு வந்த தேநீரை ஆசையாக ருசி பார்க்க எடுத்தவள்...வாயில் வைத்து முகம் சுளிக்கவும்... அதனை பார்த்தவன் என்ன என்று கண்களால் கேட்க....சர்க்கரையே இல்லை என்று உதடை சுளித்தவள்...தேநீர் கோப்பையை அவனிடமே நீட்ட.... ஒரு நிமிடம் யோசித்த சிராஜ், இந்த படத்தில் வருவதை போல தன் உதடு பட்டதை குடிக்க நினைக்கிறாளோ என்று உல்லாசமாக நகைத்து😍😍....
தேநீர் கோப்பையை வாங்கி வாயில் வைத்தவன்...த்த்தூ என்று துப்பி...ஃபரிதாவை பாவமாக பார்க்க....அவளோ அவனை முறைத்து கொண்டிரூந்தாள்...
ஆர்வகோளாரில் தன் அன்பு மனைவிக்கு தேநீரையே சுடு தண்ணியாக போட்டு குடுத்தான் அவள் கள்வன்😂😂....
அவளின் முறைப்பை பார்த்து
சரி சமாளிப்போம் என்று எண்ணியவன்...
தவறு நடந்து விட்டது கண்ணம்மா!!😦
அதுக்கு பிராயச்சித்தமாக நானே இன்று சமையல் செய்கிரேன் என்று கூற....
"அய்யோ" என்று பதறியடித்து எழுந்தவள்...அதெல்லாம் வேண்டாம்ங்க என்று கூறி தானே காலை உணவு செய்து குடுத்து வேலைக்கு அனுப்பினாள்..
கணவன் வேலைக்கு சென்றதும் மதிய உணவு செய்தவள்...சிறிது நேரம் ஓய்வு எடுப்போம் என்று நினைக்கையில் வீட்டு கதவு தட்டும் சத்தம் கேட்க...சிறிது யோசனையுடனே கதவை திறந்தாள்...
அங்கு ஒரு 30 வயது மதிக்கத்தக்க பெண்மணி இருந்தார்...தன் பெயர் நஸிரா என்றும் தான் பக்கத்து வீட்டில் குடியிருப்பதாகவும் கூற...வீட்டில் உள்ளே வர சொல்லி ஃபரிதா அழைக்கவும் சிறிது நேரம் இருந்து பேசி விட்டு சென்றார்...
நேரங்கள் கடக்க... இரவும் வந்தது... இரவு சமையலை முடித்து விட்டு கணவனுக்காக காத்திருந்தாள்.... சிராஜ் தன் மனைவிக்கு மல்லிகை பூ வாங்கி வந்து தன் கையால் அவளின் பட்டு கூந்தலில் வைத்து விட....இதைலாம் எங்கிருந்துங்க கத்துக்கிட்டீங்க என்று ஃபரிதா கேட்கவும்...
பெண்களுக்கு பூக்கள் பிடிக்கும் என்று தெரியாத ஆண்மகன் உண்டா??😍😍😍
அதுவும் மல்லிகை பூ நா சொல்லவா வேண்டும்....என்று கூறி..இது மட்டுமல்ல... இன்னும் நிறைய கத்து வச்சிக்கிரேன் மா என்று அழகாக கன்னடித்தான் அவளின் உள்ளம் கவர்ந்த கள்வன்...அன்றைய இரவும் இவர்களுக்கு சந்தோஷமாக கழிந்தது...
மறுநாள் விடியலும் வர... அன்றும் வழமை போல கொஞ்சல், கெஞ்சல், சிணுங்கல் என்று இவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்தது..
நாட்களும் நகர்ந்தன...ஏழ்மையிலும் சந்தோஷமாக வாழ்ந்தனர்...இடை இடையில் திலீப்பின் வீட்டினர் வந்து போய் இருந்தனர்...
பக்கத்து வீட்டு நஸிராவும் அவரின் கணவர் செய்யதும்... சிராஜ், ஃபரிதாவிடம் நெருங்கி பழகினர்...இரு குடும்பத்தினர்க்குள்ளும் நன்றாக அறிந்து வைத்திருந்தனர்...
நஸிரா விர்க்கு திருமணம் ஆகி 9 வருடம் ஆகியும் குழந்தை இல்லாததால் சோகத்தையே முகம் தத்தெடுக்க...அவளின் கணவரும் தனக்குள் இருக்கும் கஷ்டத்தை மறைத்து தன் மனைவியை சந்தோஷமாக வைத்திருந்தார்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro