36
தன்னை யாருமே அடிக்காத நிலையில் சிவா அடித்ததை நினைத்து அதிக கோவத்தில் இருந்தான்..
தான் ஒருவன் மேல் விழுந்து... ஒரு ஆணின் ஸ்பரிசம் தன் மேல் பட்டு விட்டதே என அதிர்ச்சியிலும் கவலையிலும் இருந்தால் மரியம்...
.
.
ப்ரஸி சேரியில் இருப்பதை இரசித்து கொண்டு அவளிடம் வந்தவன்..இடையில் புகுந்து மரியம் குட்டையை கிளப்ப...அந்த குழப்பத்தில் அவளை பார்க்க முடியுமல் போய் விட்டதே என்ற எரிச்சலில் இருந்தான் சிவா...
.
.
அங்கு ஷிவானி தன் தோழிகளுடன் பேசியபடி வருவதை பார்த்த சிவா..
ஓய்...இங்கே வா என சிவா அழைக்க..
ப்ரஸி ஆளு எதுக்கு நம்மள கூப்பிடுது என்று கேட்டவளை...இப்ப நீ சொன்னது மட்டும் ப்ரஸி க்கு தெரிஞ்சிச்சி மவளே அடுத்த டார்கெட் நீ தான் டி என்ற சந்தியாவை பார்த்து ஈஈஈஈ என இழுத்தவள்..
அங்கு செல்ல...உன் ப்ரெண்ட்ஸ் எங்கே என கேட்ட ஷிவானியிடம் ...அதோ நிக்கிறாங்க ப்ரோ...சுதாவும் சந்தியாவும் என கை காமித்த ஷிவானியை முறைத்த சிவா..நான் ப்ரஸியை கேட்டேன் என்க...
அவங்களுக்கு உடம்பு சரியில்லை..அதான் ஹாஸ்டல்ல ரெஸ்ட் எடுக்குறாங்க என மொட்டையாக சொன்னவள்...வரேன் ப்ரோ என ஓடியே விட்டாள்..
.
ஹேய்...நீ ரெஸ்ட் எடு செல்லம் என அவளை படுக்க வைத்து...அடிப் பட்ட இடத்தில் மருந்து தேய்த்து..வலி குறைய மாத்திரையை போட வைத்து...அவளை தூங்க வைத்தால் ப்ரஸி..
மரியம் தூங்கினதும்...ச்சே..போர் அடிக்கிதே..ட்ரெஸும் மாத்தியாச்சி..அங்கையும் போக முடியாது..
இப்ப என்ன செய்ய என யோசித்தவள்...
சரி...இருக்கவே இருக்கு ஃபோனு...யாரு கூடையாவது மொக்கை போடலாம் என நினைத்து ஹாஸ்டலுக்கு பின்னால் சென்று...பூங்கா மாதிரி இருக்கும் இடத்தில் அமர்ந்து ஃபோனை பார்த்து கொண்டிருந்தாள்..
ஓய்...உடம்பு சரியில்லைனு பார்க்க வந்தா...நல்லா ஊட்டி ஆப்பிள் மாதிரி ஃப்ரெஸா இருக்கிறே என்ற படி வந்த சிவாவை முறைத்தவள்...
ஹலோ...இது கேர்ள்ஸ் ஹாஸ்டல்...இங்கே எதுக்கு வந்தீங்க என கேட்டவளை உன்னை பார்க்க தான் வந்தேன் என்றவனை முறைத்து பார்க்க...
வா...அப்படி போய் பேசலாம் என்ற சிவாவை முறைத்தவள்...நான் ஒன்னும் அந்த மாதிரி பொண்ணு இல்லை என்க..
ஹி ஹி...நானும் அந்த மாதிரி பையன் இல்லை...எனக்கு என்னவோ உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு என்றவனை முறைத்து பார்க்க...
அம்மா...தாயே...தப்பாலாம் இல்லை மா...விட்டா கண்ணாலயே எரிச்சிரிவா போலயே...நான் உன்னை லவ் பன்றேன் என்றவனை பார்த்து சுர்ரென கோபம் வர..
என்னை பத்தி...என்ன தெரியும்னு காலேஜ் ஓபன் ஆகுன செகண்ட் டேயே வந்து லவ் சொல்றீங்க என கேட்டவளிடம்...
உன்னை பத்தி என்ன தெரியனும்..நீ அழகா இருக்கிறே...நல்ல பொண்ணா இருக்கிறே..அது போதாதா என்க...
ச்சே..சரியான லூஸு கிட்ட மாட்டிக்கிட்டோம் போலயே என குமுறியவளை..
சொல்லு ப்ரஸி என்க...அவளோ முறைத்து கொண்டிருக்க...சரி உடனே சொல்ல வேண்டாம்...ஒரு டூ டேஸ் டைம் எடுத்துக்கோ என்றவனை ஒரு மாதிரியாக மேலும் கீழும் பார்க்க...
என்ன டா...இப்பவே சைட் அடிக்கிறியா என்றவனிடம் வாந்தி வருது என்க..
என்ன என்றவனிடம் வாமிட் வர மாதிரி இருக்கு என சொன்னவள்..ரூம்க்கு போறேன் என ஓடியே விட்டாள்..
.
.
.
.
.
மேம்...இன்னைக்கு ஒரு பொண்ண பார்த்தேன்...பார்க்க அப்படியே உங்கள மாதிரியே இருந்திச்சி என்றவரை..
என்ன சொல்ரீங்க சார்...நிஜமாவா அந்த பொண்ணு எங்கே...எந்த டிப்பார்ட்மென்ட் என வரிசையாக கேள்வியை அடுக்கினாளும்.. தன் பிள்ளையோட வயதையும்...என்ன படிக்கும் என யோசித்தும் ஒரு கணக்கை போட்ட ஃபரிதா... அந்த லைப்ரரி ஸ்டாஃப் சொல்லும் பதிலுக்காக ஏக்கத்துடன் காத்திருந்தாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro