35
எப்படியும் அவர்களிடம் சாரி கேட்ருவோம் என்றபடி வந்தவன்..
அவர்களை சுற்றி சீனியர்ஸ் இருக்க அமைதியாக தள்ளி நின்று அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்...
ஹாய் மரியம்.. என வந்தும் வராமயுமா பின்னிருந்து சுதா இழுக்க...
ஹாய் சுதா, ஹாய் சந்தியா என திரும்பி சிரித்து பேசிக்கொண்டிருந்தவளை பார்த்தவன்...
ச்சே...இவ்ளோ அழகா இருக்காளே...இவளை போய் பகைச்சிக்கிடோமே என நினைக்க...
டேய்...இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லை...நீ எப்படி டா இப்படி மாறினே என கேட்ட மனசாட்சியிடம் ஏன் டா...நானும் ஆம்பளை தானே ட...எனக்கு ஆசை வர்ரது ஒரு குத்தமா டா என்று கேட்டவனை..
ஹாஹா...நீ ஆம்பளைனு உனக்கு இப்ப தான் நியாபகம் வருதா என கேட்ட மனசாட்சியிடம் ஓவரா மொக்கை பன்றானே..
நான் என்ன?? கல்யாணம் பண்ணி பிள்ளையா பெத்துக்கிட்டேன்..சும்மா பார்த்தேன்...அவ்வளவுதானே என கேட்டு கொண்டவனை இவன் ஒரு மார்க்கமா தான் திரியறான்...நாம்ம தூங்குவோம் என அவன் மனசாட்சி அமைதியானது..
அதர்க்குள் இவனை பார்த்த மரியம்..
குரங்கு..இங்க தான் இருககு..
இவனை ஏதாச்சும் பன்னனுமே என யோசித்து கொண்டவள் ப்ரஸியை இடிக்க..
என்ன என்பது போல் பார்த்த ப்ரஸிக்கு கண்களால் அவனை கான்பித்தாள் மரியம்..
இருவரும் தீவிரமாக யோசிக்க....
அந்த பக்கம் மதன், சிவா, வினீத் பேசிக்கொண்டே வருவதை பார்த்த மரியம்..
வேகமாக அவர்களிடம் சென்று ஏதோ கூறிவிட்டு வந்து இவர்களிடம் ஐங்கியமானவள்...இப்ப பாரு ப்ரஸி என்பது போல் கண்ணை காமிக்க..
ஏன் டா தம்பி..இங்க நிக்கிறே என கேட்ட மதனிடம்... நத்திங்ணா என கூறியவனை வா..அங்க போய் பேசலாம் என சிவா இழுத்து செல்ல அவனும் ஒன்றும் புரியாமல் அங்கே சென்றான்..
ஏய்...என்ன டி நடக்குது இங்கே என கேட்டவளிடம்...
ஈஈஈஈ...பெரிசா ஒன்னும் இல்லை டி என்றவளை... நீ சொல்லு...பெரிசா...இல்லையானு பார்ப்போம் என கேட்டு முறைத்தாள் ப்ரஸி..
நான்கு அடி பின்னால் தள்ளி சென்ற மரியம்...
உன்னை அவன் லவ் டார்ச்சர் பன்னானு சொன்னேன் டி...அதான் உன் ஆளு கொந்தளிச்சிட்டாரு என்க அடி சாத்தானே..
என்னை ஏன் டி இழுத்து விடுறே என கூறி அடிக்க தொறத்த...
அவளோ புடவை அணிந்து ஓட முடியாமல் தடுமாறி ஓட...இவளை துரத்தியபடி வந்தாள் ப்ரஸி...
பின் பக்கம் யாரும் இல்லாததால்..பின் பக்கமாக ஓட...துரத்தி கொண்டு வந்தாள் ப்ரஸி..
.
.
டேய்...நீ ஃபர்ஸ்ட் ஏர் தானே என கேட்ட மதனிடம் ஆமா ப்ரோ என்க...உன் நேம் என்ன ட என கேட்க..**** ...
சரி...இனி இந்த மாதிரி செய்ய கூடாது...
வந்தோமா...படிச்சோமா...போனோமானு இருக்கனும் சரியா என்க...
புரியாமல் விழித்தவனை பார்க்க கோவம் சுர்ரென வர ஓங்கி கண்ணத்தில் அறைந்தவன்..
வந்ததும் உன் வேலையை ஆரம்பிச்சிடியோ..
மனசுல பெரிய ஹீரோ னு நினைப்பு..
இனி இந்த மாதிரி செய்ஞ்சே...மவனே தொலைச்சிறுவேன் என சிவா கோவம் பட சமாதானம் செய்த அவனுடைய நண்பர்கள் இழுத்து சென்றனர்..
தலையும் புரியாமல் வாழும் புரியாமல் முழித்தவன் சுய நினைவுக்கு வரும் முன்னால் அவர்கள் சென்று விட்டிருந்தனர்..
இதெல்லாம் அவள் வேலையா தான் இருக்கும்...அவள் தான் அவர்களிடம் ஏதோ சொல்லிக்கிறாள் என நினைத்தவன் கோவமாக வந்தான்..
.
.
ஓடி வந்த மரியம்...தன் புடவையை தன் காலாளே மிதிக்க...கீழே விழ போக..
கோவமாக மற்றொரு பக்கமாக வந்தவன் யாரோ தன் மேல் வந்து விழுவதை உணர்ந்து வேகமாக தாங்கி பிடிக்க..
அவளோ இவனை அதிர்ச்சியாக பார்க்க..
அவனோ சுர்ரென வந்த கோவத்தில் தாங்கிய கையை...அவள் எதிர்ப்பார்க்காத நேரம் விட்டு விட்டான்..
.
.
.
.
ஏய்..என்னாச்சி டா..ஒரு மாதிரியா இருக்க என கேட்ட நண்பனிடம் ஒன்றுமில்லை டா..
கொஞ்சம் தலை வலிக்குது என கூறியவன் அமைதியாக மரத்தடியில் அமர்ந்து இருந்தான்...
( ஈஈஈஈ... இவனும் இளங்கலை வணிகவியல் தான் படிக்கிறான்...என்ன... பையன் கணினியையும் சேர்த்து படிக்கிறான்...அவ்வளவு தான்)
.
.
.
ஏய்...ஏன் டி..இப்படியே இருக்கிறே...அவன் உன்னைய கீழே போட்டுட்டு போறான்...நீ அவனையே பார்த்துட்டு இருக்கிறே..ஃபர்ஸ்ட் எழுந்திரி டி என ப்ரஸி கூறி கொண்டிருக்க..
அவளோ அவன் சென்ற திசையையே பார்த்து கொண்டிருக்க...ஏய் மரியம் ..எந்திரி டி..யாராச்சும் வந்துர போராங்க என அவளை போட்டு உழுக்கியவளை பார்த்து முழிக்க..
என்ன டி என கேட்ட தோழியிடம் ஒன்னுமில்லை டி என ப்ரஸியை பிடித்து எழும்ப...
(பாவம்..பையன் கீழே போட்டதுல குறுக்குல செம்ம அடி...அவளால எழவே முடியவில்லை..)
ச்சே...வொய்ட் சேரி..ஃபுல்லா செம்மன் டி...அந்த இடியட்னால கலரே மாறிடுச்சு என ப்ரஸி புலம்ப..
ஷ்ஷ்.. முடியல டி...நான் போய் ரூம் ல ரெஸ்ட் எடுத்துக்குறேன்...நீ போ டி என்றவளை முறைத்தவள் உன்னை விட எனக்கு எதுவும் முக்கியமில்லை டி என அவளை கூட்டி கொண்டு விடுதியை நோக்கி சென்றாள்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro