31
காலையிலேயே பயந்து வந்தவள் தங்கள் சீனியர்களே தங்களிடம் சகஜமாக பேசவும் இலேசாக உணர்ந்தாள் மரியம்..
அப்படியே மரியமும் ப்ரஸிலாவும் அங்கே இருந்த மரபெஞ்சில் அமர்ந்த படி சுற்றி நோட்டமிட்டு கொண்டிருக்க..
அங்கு மூன்று பசங்க ஒரு பெண்ணை போட்டு பாடா படுத்தி கொண்டிருந்தனர்..
ஓய்...இவன் அழகா இருக்கான்லே..இவனுக்கு ஐ லவ் யூ சொல்லு என மதன் சிவாவை நக்கலாக பார்த்த படி அவளிடம் கூற..
வந்தவளோ சிவாவயும் மதனையும் மாறி மாறி பார்த்தவள் மதனிடம் திரும்பி நீங்க தான் அழகா இருக்கீங்க..நான் உங்களை தான் லவ் பன்றேன்..ஐ லவ் யூ என கூற மதன் பேந்த பேந்த முழிக்க அவள் ஓடவும் மதனை சிவா அசைக்க..
அப்பொழுது தான் அங்கே காளியின் சுயரூபத்தில் நின்ற அவன் காதலி
ப்ரியாவை பார்த்தான்..
இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த மரியம் கொள்ளென சிரிக்க..மதனின் நண்பன் வினீத் ஓய்...இங்கே வா என மரியமை கையசைத்து அழைக்க...ப்ரஸி, ப்ரஸி..அங்க பாரு டி...அவங்க கூப்பிடுறாங்க பயமா இருக்கு டி என மரியம் புலம்ப உன் வாய வச்சிட்டு அமைதியா இருக்காம...சரி வா..அவுங்களுக்கு உன்ன டக்குனு அடையாளம் தெரியாது..இப்படியே ஓடிரலாம் என மரியமை அழைத்து பிரஸிலா சிறிது தூரம் நடக்க...
ஹலோ ஹலோ என பின்னிருந்து ஒரு கூப்பிடும் குரல் கேட்க...இவர்கள் திரும்பி பார்க்கவும் உங்க டிபார்ட்மென்ட் கவின் சார் உங்கள கூப்பிடுறாங்க...
ஜி- ஒன் ப்ளாக் ல இருக்காங்க என அவன் கூறி செல்ல...இவர்களும் அங்கே சென்றனர்...
அங்கே வினீத் இவர்களை முறைத்த படி நிற்க..போச்சி..மாட்டினோம் என புலம்பியபடி வர..
ஓய்...நான் கூப்பிட்டு ஏன் நீ வரல என மரியமை பார்க்க...அவளோ பயத்தில் ப்ரஸிலாவை பார்த்தாள்..
ஓ...மேடம் தான் உங்களை விடலயோ என ப்ரஸியை பார்த்து முறைக்க...
டேய்..இவங்களை ஏன் டா முறைக்கிறா...
பாவம் இவங்க என ப்ரஸியை பார்த்த படி சிவா கூற மதனும் வினீத்தும் சிவாவை பார்க்க அவனோ அவளை ரசித்து கொண்டிருந்தான்..
சரி...உங்க நேம் என்ன என கேட்க..ப்ரஸிலா என கூறினாள்...உன் நேம் என கேட்க..மரியம் என ப்ரஸிலா கூறினாள்..
ஏன் அத நீங்க சொல்ல மாட்டிலோ என மரியமிடம் கேட்க..அவள் கொஞ்சம் பயப்பிடுவா என ப்ரஸிலா கூற அப்ப நீங்க ரொம்ப தைரியசாலியோ என ஒரு மாதிரி சிவா கேட்க...ஏனோ அவனை பார்க்கவே அருவருப்பாக இருந்தது ப்ரஸிவாவிர்க்கு..
ஹேய்...டென்க்கு ஆடிட்யோரியத்தில் அஸெம்ப்ள் ஆக சொன்னாங்களே...வா போகலாம் என ப்ரஸிலாவின் காதில் மரியம் குசுகுசுக்க..
சரிங்கண்ணா நாங்க வரோம் என்றபடி மரியமை இழுத்து செல்ல...அண்ணாவா என அவர்கள் வாயை பிளக்கவும்
இவர்கள் ஓடி விட்டனர்..
வந்தவர்கள் நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க...ஹேய் ப்ரஸி...இந்த பக்கி தான் டி நம்ம கிட்ட பொய் சொல்லி ஏமாத்திச்சி என முன்னால் அமர்ந்திருந்தவனை காமிக்க...
ஆமா...இவன் தான்...இவனுக்கு எப்படி நாம எந்த டிப்பார்ட்மென்ட்னு தெரியும் என யோசிக்க இதை இப்ப யோசிச்சி என்ன செய்ய என்றபடி மரியம் முறைக்க..
சரி..அமைதியா இரி...ஏதாச்சும் பன்னலாம் என்றபடி அவனையே பார்த்துக் கொண்டிருக்க..அவனோ அவன் நன்பனுடன் முன்னால் எட்டி நின்று பேசி அமர போக..அந்த நேரத்தில் ப்ரஸி நாற்காலியின் காலை...அவள் காலால் யாருக்கும் சந்தேகம் வராமல் இழுக்கவும் அவன் கீழே விழுந்தான்...
அவனை சுற்றி இருந்தவர்கள் டக்குனு சிரிக்க...அவனோ அதை பெரிதாக எண்ணாத மாதிரி நாற்காலியை எடுக்க திரும்ப இவர்களை பார்த்து விட்டான்...
இவர்கள் வேலையாய் தான் இருக்க வேண்டும் என யோசனையாய் பார்க்க இதுக்கு மேல் அடக்க முடியாது என்பது போல் இருவரும் சிரிக்க..அவர்களை முறைத்து விட்டு திரும்பி அமர்ந்தான்..
முதல் இரு வாரங்கள் ப்ரிஞ் கோர்ஸ் என கூறி சிறு தேர்வு வைக்க.. இருவரும் ஃபர்ஸ்ட் க்ளாஸ் என்பதால் ஏ-ஓன் ல் இருந்தனர்..
மறுநாள் காலையில் முதல் இரு வகுப்பு ப்ரிஞ் கோர்ஸ் என்பதால் அங்கே அமர்ந்து இருக்க...முதுகலை மாணவர்கள் தான் இந்த வகுப்பு எடுப்பார்கள் என ஏற்கனவே தெரிந்ததால் யார் வருவார்கள் என அவர்களுக்குள் சலசலப்பு இருக்க...
வந்தவரை முதலில் பார்த்த மரியம் ...மச்சி உன் ஆளு டி என்க...அவளோ முன்னாள் ஏறிட்டு பார்க்க...அங்கே சிவா நின்றான்..
அடி சாத்தானே..ஏன் டி..இப்படி சொல்லுரே என மரியமை கிள்ள.. ஈஈஈஈ...சார் தான் உனக்கு சப்போர்ட் பன்னாங்களே அது தான்...வேற ஒன்னும் இல்ல என கூறி இழிக்க..
வந்தவன் செல்ஃப் இன்ட்ரோ குடுக்க சொல்ல..ஒவ்வொறுதராக வந்து குடுக்க...யாரையும் கவனிக்காமல் ப்ரஸிலாவையே பார்த்துக் கொண்டிருந்தான்..
மூதேவி...மூதேவி...எப்படி பார்க்குது பாரு சனியன் என புலம்பியபடி இருக்க...அந்த வகுப்பும் முடிந்தது..
இடைவெளியில் அவர் அவரின் வகுப்பிர்க்கு செல்ல இளங்கலை வணிகவியல் டிப்பார்ட்மென்ட்டில் உள்ள பி-ஒன் ல் சென்றாள்...
அங்கு அவர்கள் கடைசி இருக்கையில் அமர அவர்களுக்கு முன்னால் இருக்கையில் சுதா, சந்தியா என இருவர் அமர அவர்களிடம் பரஸ்பர அறிமுகம் ஆகி பேசிக்கொண்டிருக்க எல்லோரும் எழும்பும் சத்தம் கேட்க ஹாய் ஸ்டூடண்ட்ஸ் என்ற படி வந்த ஆசிரியரிடம் குட் மார்னிங் மேம் என கூற..தலையை அசைத்தவள் ஐ எம் ஃபரிதா சிராஜ் என தன்னை அறிமுகப்படுத்தினாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro