3
திருச்சி:
தங்களை நோக்கி வந்த ரவுடிகள்...
தன்னை தள்ளிவிட்டு, ஃபரிதாவின் கையை பிடித்து இழுக்க...
இதை எதிர் பார்க்காத சிராஜ், சிறிது அதிர்ந்தாலும் உடனே சுதாரித்துக் கொண்டு குடிபோதையில் இருந்தவர்களை தள்ளி விட்டுட்டு ஃபரிதாவின் கையை பிடித்துவன்...
வேகமாக ஓட... இருவரையும் அந்த ரவுடிகள் துரத்தினர்...
பின்னால் துரத்தி வந்தவர்கள் வருகிறார்களா?? இல்லையா?? என்று திரும்பி திரும்பி பார்த்த படி வந்த சிராஜும் ஃபரிதாவும் முன்னாள் வந்த காரை கவனிக்காமல் மோதினர்...
இவர்கள் காரில் மோதவும் துரத்தி வந்த ரவுடிகள் திரும்பி சென்றார்கள்...
மோதின அதிர்ச்சியில் இவர்கள் மயங்கி விழ... காரை ஓட்டி வந்த டிரைவர் பதறியடித்து இறங்கி வந்து பார்த்தவன்.....சிராஜ் என கத்தி கொண்டு சிராஜின் முகத்திலும் ஃபரிதாவின் முகத்திலும் தண்ணீரை தெளித்தான்..
சிராஜும் ஃபரிதாவும் கண்களை திறக்கவும் ....சிராஜ், முன்னாள் தன்னுடன் சென்னையில் டிராவல்ஸில் வேலை செய்த நண்பரான திலீப்பை கண்டதும் நம்பிக்கை எழ சந்தோஷத்தில் கட்டி தழுவினான்...பிறகு ஃபரிதாவிர்க்கு திலீப்பை தனது நண்பர் என்றும்..திலீப்பிர்க்கு ஃபரிதாவை தனது காதலி என்றும் தாங்கள் இருக்கும் நிலைமையை பற்றியும் சிராஜ் கூறினான்..
இவர்கள் நிலையை கேட்ட திலீப்...தன் வீட்டுக்கு கூட்டி சென்று தனது பெற்றோர்க்கு அறிமுகம் படுத்தி வைத்தான்...திலீப்பின் பெற்றோரும் இன்முகத்துடன் சிராஜயும் ஃபரிதாவயும் வரவேற்றார்கள்...
வந்தவர்களை சாப்பிட வைத்தார்.. திலீப்பின் தாய் செல்வி.. சாப்பிட்டு முடித்ததும் ஃபரிதாவை ஒரு அறையில் ஓய்வு எடுக்க சொல்லி விட்டு...தன் மகனிடம் சிராஜ் உன்னுடன் தூங்கட்டும் என்றார் செல்வி..
சரி என தாயிடம் கூறிவிட்டு சிராஜை அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றான் திலீப்...அங்கு சிராஜ் திலீப்பிடம் தனக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து தரும்படியும்.. தங்களுக்கு நாளைக்கே நிக்காஹ்(திருமணம்) செய்து வைக்கும்படியும் கூறினான்...
சரி எல்லாத்தையும் விடிந்ததும் பார்த்துக்கொள்ளலாம்...இப்போது நீ தூங்கு என்று கூறி திலீப்பும் தூங்கினான்.
விடிந்ததும் காலை தேவைகளை முடித்து விட்டு நண்பர்கள் இருவரும் வெளியே சென்றனர்...
திலீப் தான் வேலை செய்யும் டிராவல்ஸிர்க்கு சிராஜையும் கூட்டி சென்று அங்கு இருந்த தன் முதலாளியிடம், சிராஜை அறிமுகப்படுத்தி அவனின் நிலைமையையும் எடுத்து கூறினான்...
சிராஜின் நிலைமையை கேட்ட முதலாளியும் முன் பணமாக ரூபாய் 450ஐ கொடுத்து, நாளை முதல் வேலையில் வந்து சேரும் படி கூறினார்..
இன்றைக்கு ஒரு நாள் தனக்கு விடுப்பு எடுத்து கொண்ட திலீப், தன்னுடைய நண்பனான முஸ்தஃபா வீட்டிர்க்கு சிராஜையும் கூட்டி சென்று முஸ்தஃபா விடம் சிராஜை பற்றி கூறி, சிராஜிர்க்கு பள்ளியில் நிக்காஹ் செய்து வைக்கும்படி கூறினான்... இவர்களின் நிலைமையை புரிந்த முஸ்தஃபா, சரி என்று கூறவும்...முஸ்தஃபாவும் திலீப்பின் குடும்பத்தாரும் சிராஜிர்க்கும் ஃபரிதாக்கும் எளிமையாக நிக்காஹ் செய்து வைத்தனர்...
அன்றைய தினம் மாலையே திலீப் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி சின்ன குச்சி வீடை ரூபாய் 100க்கு வாடகை பிடித்து, வீட்டிர்க்கு அவசியம் தேவையான சில பொருட்களை மட்டும் செல்வியின் உதவியுடன் வாங்கி குடியேறினர்..சிராஜும் ஃபரிதாவும்...
திலீப்பின் குடும்பத்தார் மற்றும் முஸ்தஃபா வும் வந்திருக்க.. வந்தவர்களுக்கு பால் காய்ச்சி குடுத்தால் ஃபரிதா....பால் குடித்து சிறிது நேரம் பேசி விட்டு....சிராஜி டமும் ஃபரிதாவிடமும் கூறி விடைபெற்றார்கள்..
இவர்கள் விடைபெற்றதும்....தங்களுக்காக இரவு சமையலை முடித்து விட்டு தன் கணவனிடம் சென்றாள்...தன் மனைவியின் முகவாட்டத்தை கண்டவன் ஃபரிதாவிடம் எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று ஆறுதல் கூறி அனைத்தான்...
சிறிது நேரம் அவர்கள் அமர்ந்த நிலையில் பேசி கொண்டிருந்து விட்டு....
இருவரும் தொழ( அல்லாஹ்வை நினைவு கூறுதல்) சென்றனர்...
பிறகு இருவரும் இரவு உணவு உண்ணவும்....ஃபரிதா படுக்குறதுக்காக கீழே பாய்யை விரித்தாள்...இருவரும் படுத்து கொண்டு பேசி சந்தோஷமாக இருந்த படியே தங்கள் இல்லற வாழ்க்கையை தொடங்கினர்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro