28
தான் பெற்ற பிள்ளை எங்கே இருக்கோ என நினைத்து கண்ணீர் சிந்தியவளை கட்டியணைத்தவள்...ஹேய்..அழாதே டி..
இதை பற்றி பேச தான் வந்தேன்...எதை எதையோ பேசிட்டிருக்கேன் பாரு என ரேகா தலையில் அடித்து கொள்ள... சொல்லிட்டு அடிச்சிக்கோ என ஃபரிதா கூறவும் முறைத்தவள்..
அது இல்லை டி...இவ்ளோ நேரம் சிராஜ்..உங்க பிள்ளையை பற்றி தான் கேக்குறாரு...அப்புறம் அப்டியே பேச்சு வேற திசைக்கு போயிருச்சி...
இப்ப எல்லா ப்ராப்ளமும் சால்வ் ஆகிடுச்சு..
நவ் அகைன் பிள்ளையை பத்தி கேட்பாங்களே...நீ என்ன சொல்ல போறே?? என ரேகா கேட்க... அது தான் டி..எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலே..உண்மை தெரிஞ்சா என்ன நடக்குமோனு நினைக்கும் போதே பயமா இருக்கு டி என ஃபரிதா புலம்ப ஆரம்பிக்க...
நான் ஒன்னு சொல்றேன்...நீ தப்பா நினைக்க மாட்டியே என ரேகா இழுக்க..
ஹ்ம்ம்..அது நீ சொல்றத பொருத்து என கூறினாள்...
அது இல்லை டி.. உன் டெலிவெரிக்கு முன்னாடியே சிராஜ் காணாமல் போய்டாங்கல.. அந்த அதிர்ச்சில உனக்கு ஏதோ ஆகி குழந்தைக்கு என இழுத்தவளின் வாயை பொற்றியவள் வேண்டாம் என கண்ணீருடன் இரு பக்கமும் தலையசைத்து...
அல்லாஹ் காப்பாற்றுவான்...
அஸ்தஹ்ஃபிர்லாஹுல் அலீம் என கூறி அழுதவள்...
நான் உயிரோட இருக்குறதே என் கணவருக்காகவும் பிள்ளைக்காகவும் தான்..
அல்லாஹ்... என் சிராஜ என் கூட சேர்த்து வைச்சிட்டான்...
கண்டிப்பா என் பிள்ளையையும் என் கிட்ட கொண்டுட்டு வந்துருவான்..
ஒவ்வொறு நாளும் என் பிள்ளை...எப்படி இருக்குறா...என்ன பன்றானு யோசிச்சிட்டு இருப்பேன்..
ஆனால், என் பிள்ளை கண்டிப்பா நல்லா இருப்பா டி...அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு...அவள நஸிரா லாத்தா நல்ல படியா பாத்துப்பாங்க...கண்டிப்பா என் கிட்ட என் செல்லம் வந்துருவா என அழுது கொண்டே திரும்ப அங்கே சிராஜ் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தான்...
நாட்களும் அதன் போக்கில் செல்ல நஸிரா மொத்த அன்பையும் ஆஷா மீது கொட்டி வளர்த்தாள்... செய்யதுக்கு ஆஷா தான் எல்லாமே...அவளுடைய வருங்காலம் நல்லா அமையனும் என இரா பகலா உளைத்தார்...
அவரின் வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்தான்...சின்ன கடை..பல்பொருள் அங்காடி(super market) ஆனது...சொந்தமாக வீடு வாங்கினார்கள்..
அவர்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக போய் கொண்டிருந்தது...
அந்த வீட்டிற்கே அவள் தான் மகாராணி..
அவள் சொல்வது தான் சட்டம் என்றானது..
ஆரம்ப காலத்தில் ஆஷிஃபின் நினைப்பு அதிகமாக வந்தது..
தன்னுடைய தோழன் தன்னிடம் இல்லையே என்பதை போல ஒரு அன்பு..
சொந்தமாக வீடு வாங்கய பிறகு..
பள்ளி(school)க்கு செல்ல தூரமாக இருப்பதால் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் சேர்ந்தாள்..
தன்னை மரியம் என்றே அறிமுகப்படுத்தினாள்...
பெற்றோர்களிடமும் அவ்வாறே அழைக்கும் படி கூறினாள்..
மரியம் பள்ளியில் சேர்ந்ததில் முதன் முதலாக அறிமுகம் ஆன தோழி ப்ரஸிலா..
அவளுடனே என்றும் இருப்பாள்..
எங்கு சென்றாலும் ஒன்றாக திரிவார்கள்..
ஆசிரியரிடம் மாட்டி கொண்டாலும் ஒன்றாக மாட்டி கொள்வார்வள்..
நாம் இல்லாமல் நட்பு கிடையாது என்பது போல இருப்பார்கள்..
நாட்கள் அதிவேகமாக கடந்தன..
மரியம்(நம்மளது குட்டி ஆஷா) பெரிய மனுஷி(age attend)யாகினாள்..
நஸிரா மரியமிர்க்கு இஸ்லாத்தின் சட்டத்தை பற்றி கூற ஆரம்பித்தார்..
ம்மா..இப்ப நீ சின்ன பொன்னு இல்லை..
பெரிய பொன்னாகிட்டே..
நீ ஃபர்தா போட்டு தான் வெளியே போகனும்..
தேவையின்றி வெளியே செல்ல கூடாது..
தலை நிமிர்ந்து நடக்க கூடாது..
வழியில் நின்று பேச கூடாது..
பசங்க கூட பேச கூடாது..
எதுவா இருந்தாலும் என்னிடம் மறைக்க கூடாது...
நீ புத்திசாலி பொன்னு மா பார்த்து நடந்துக்கனும் என சில பல அறிவுரைகளை கூறி கண் கலங்கியவர் உச்சி முகர்ந்தார்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro