Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

27

ஏன் ரேகா..உடம்புக்கு எதுவும் முடியலயா?? எதுக்கு என்னை ரூம்க்கு கூப்பிட்டு வந்தே என ஃபரிதா கேட்டு கொண்டு போக...கொஞ்சம் உன் திருவாய மூடு...எனக்கு ஒன்னும் இல்லை..இப்படி வந்து உட்கரு என்க ஹ்ம்ம் என அமர எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு டி என்றவளை ஏன் என்பது போல் பார்க்க..

இல்லை டி...உன் சிராஜ் உன்னை விட..உன் பொண்ணு மேல உயிரயே வச்சிருக்காங்க டி என ரேகா கூற அதை ஆமோதிப்பதை போல அமைதியாக ஃபரிதா இருக்க..ரேகா தொடர்ந்தாள்..

நான் இங்கே வந்த முதல் நாளே பார்த்தேன் டி...அவர் மேலே இருந்து உன்னை பார்த்தார்...அப்ப கூட அவருக்கு உன்னை தெரியல..ஆனால் என ரேகா இழுக்க என்ன என்பதை போல பார்க்க..

இல்லை...இன்னைக்கு என் மேடான வயிற பார்க்கும் போது தான் பழைய நினைவு வந்திருக்கு...இதை வைத்தே தெரியுது...பிள்ளை மேலே எவ்வளவு பாசமா இருக்காங்கனு...

நீ கூட சொல்வியே...நான் ப்ரெங்னென்டா இருந்ததுல இருந்து...அவரு நம்மலுக்கு பொண்ணு தானு அடிச்சு சொல்லுவாங்க..
நான் சும்மா சிரிச்சிட்டு இருந்துருவேனு...அப்ப கூட எனக்கு இது பெரிசா தெரியல டி..

ஆனால், இப்ப நினைச்சா...ப்ப்பா.. இந்த அளவுக்கு வயித்துல இருக்குற பிள்ளை மேல பாசம் வைக்கமுடியுமா... அதுவும் ஒரு ஆம்பளையாலா என ஆச்சரியம் பட..

எல்லோருக்கும் தனக்குனு ஒரு பிள்ளை இருந்தா இப்படி ஒரு பாசம் கண்டிப்பா இருக்கும் டி..ஆனால், சில பேர் வெளியே காமிக்கிறது இல்லை...அவ்வளவுதான்..

எங்க வாப்பா..எப்படி இருப்பாங்க..என்னை கண்டுக்கவே மாட்டாங்கனு உனக்கு தெரியும்லே.. ஆனால், சிராஜ கானோம்னு நான் அழுகுனே...அப்ப எங்க வாப்பா கண்ல உள்ள சோகத்த பார்த்தேன் டி..

அவங்களுக்கு தேவைக்காக சம்பாதிச்சு நம்மள கண்டுகாம இல்லை டி..
நம்ம தேவைக்காக.. நம்ம எல்லோர் முன்னாடியும் தலை நிமிர்ந்து நிற்கனும்..நாம்ம கஷ்டபட்டுற கூடாதுனு தான்..

நீ ஒரு படம் பாத்துக்குறியா??...இடையில பார்த்தேன்...கொஞ்சம் ஓல்ட் மூவினு நினைக்கிறேன்...அந்த கான்செப்ட் மட்டும் கேளு என ஃபரிதா கூற ரேகாவும் ஆர்வமாக கேட்டாள்...

(வாங்க..
வழக்கம் போல நாமளும் ஒட்டு கேட்போம்..

அது ஒரு கிராமம்..
அவன் ஒரு பெரிய குடிகாரன்...எந்த பொண்ணு தனியா இருந்தாலும் விட மாட்டான்..

அவனுக்கு தேவை குடிக்கனும் அப்புறம் பொண்ணுங்க கூட இருக்கனும்..

இருபதிநாளு மணிநேரமும் இதே வேலை தான்...ஊர் மக்கள்லாம் அவங்க அவங்க பிள்ளையை ரொம்ப பொத்தி பொத்தி வளர்ப்பாங்க..

இவன் கிட்ட உள்ள பழக்கம் என்னன்னா சின்ன பிள்ளை, திருமணம் ஆனவங்கள தொட மாட்டான்...வயசு வந்த பிள்ளைங்கள மட்டும் தான்..

இதுக்காகவே அந்த ஊர் மக்கள் பிள்ளை வயசுக்கு வந்தா கூட வெளியே சொல்ல மாட்டாங்க...அவனை யாராலும் எதிர்க்க முடியாது...எதிர்த்தா அவங்க பொண்ணுக்கும் இதே நிலைமை தான்..

இந்த ஊருல இருக்குற தேவாலயத்தில்(church) கன்னியாஸ்திரியாக சேவை செய்யனும்னு ஒரு பொண்ணுக்கு ரொம்ப ஆசை...அவ ஒரு செவிலியர்(நர்ஸ்)..அவளுக்குனு யாரும் இல்லை.. சேவை செய்யனும்னா அவ நல்லவளா கற்புடையவளா இருக்கனுமாம்.. அவளை ஃபாதர் தேவாலயத்தில் கன்னியாஸ்திரியாக சேரும் படி கூறிவிட்டார்..

இந்நேரம் பக்கத்து தெருவில் ஒரு பொண்ணுக்கு பிரசவ வலி வந்ததாக கூறி ஒரு சிறு பையன் வர..அவளும் அங்கு சென்று அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து வீட்டிற்கு வர இரவு ஆகிவிட்டது..

பாவம்...வரும் வழியிலே அந்த அய்யோகியனிடம் மாட்டி அந்த அயோக்கியனிடமிருந்து தப்பிக்க முடியாமல் அவனுக்கு இரையாகி விட்டாள்..

இவளால் இனி அந்த புன்னியஸ்தலத்தில் சேவை செய்ய முடியாது...ஃபாதர் வந்து இவளுக்காக வேண்டி...நீ சேவை செய்ய வேண்டும் என கூறினாய்...இந்த ஊர் மக்களை இவனிடமிருந்து காப்பாற்ற உன்னால் தான் முடியும்...இவனை நீ திருமணம் செய்து கொள் என கூற அவளும் ஊருக்காக சம்மதித்தாள்..

திருமணம் முடிந்தும் இவனிடம் மாற்றம் தெரியவில்லை..குடிப்பான்...குடித்தவுடன் இவளே தக்கவைத்து கொள்வாள்..
அவன் சுகத்திலும் எதையும் உணரும் மன நிலையில் இல்லாமலும் வாழ்ந்தாள்...கருவுற்றாள்..

திருமணத்தையே பெரியதாக எண்ணாதவன்...அவள் கற்பமானதயும் பெரியதாக நினைக்கவில்லை...

வழக்கத்திற்கு மாற்றமில்லாமல் நாட்களும் நகர்ந்தன...பிரசவ வலியும் வந்தது..அவளை சுற்றி இருந்த பாட்டிகளிடம் என் கணவரை உள்ளே அழையுங்கள் என கூற...ஒரு பாட்டி அவனிடம் சென்று கூறினார்...உன் பெண்டாட்டி உள்ளே அழைக்கிறாள்...நீ அவளுடன் இருக்க வேண்டுமாம் என்க இவ எதுக்கு நம்மள கூப்பிடுறா..சரி..இதையும் தான் பாத்துருவோமே என்ற எண்ணத்துடன் உள்ளே சென்றான்..

அவள் கத்தினாள்..கதறினாள்..
இவன் கொஞ்சமும் அசரவில்லை..

நேரமாக ஆக அவள் கத்தலுடன் இரு பக்கமும் தலையசைத்தாள்..இரு கால்களையும் மடக்கி மடக்கி நீட்டினாள்...
அழுகையுடனே தலையசைத்து முக்கினாள்..
இவன் கொஞ்சம் பயம் கொண்டான்..
அவளின் கையை பற்றினான்..

அவளின் அழுகையும் கதறழும் நிண்டபாடில்லை..
ஏதாச்சும் செய்யுங்க பாட்டி என கூறியவன் அவளின் அழுகையையும் விடாமல் அவள் துடிப்பதையும் அவளின் அசைவயும் பார்த்தவன் துடிக்க ஆரம்பித்தான்...
கடவுளிடம் முதல்முறையாக வேண்டினான்..

பயப்பிடாதே...எதுவும் ஆகாது என அவனை அறியாமலே ஆறுதல் கூறி கொண்டிருந்தான்..

ஒரு அழகு பெண்ணை பெற்றெடுத்தாள்...அவனின் கண்களில் வடியும் கண்ணீரை பார்த்த சந்தோஷத்தில் கண்களை மூடினாள்...இறைவனிடம் சேர்ந்தாள்..

அவனுக்கு அந்த பிள்ளையை என்ன செய்வது என தெரியவில்லை...இந்த பிள்ளையை வைத்து கொள்ளுங்கள் என நிறைய பேரிடம் கேட்டான்...யாரும் முன் வரவில்லை..

அந்த குழந்தைக்கு பக்கத்து வீட்டில் பால் கேட்டான்.. இவனை பார்த்தவுடன் கதவை மூடிக்கொண்டனர்...

அடுத்த நாள் கையில் சாராயம் குடிக்கும் அளவே காசிருக்க சாராயம் வாங்கி வந்தான்..

உள்ளே வர...பிள்ளை அழுது கொண்டிருந்தது..ச்சே..ஒரே அழுதுட்டே இருக்கே...என்ன செய்ய என யோசித்தவன் அந்த பச்சிளங் குழந்தையின் முகத்தை பார்க்க எனக்கு இதையாச்சும் கொடு ப்பா...ரொம்ப பசிக்கிது என பிள்ளை கூறுவது போல் இருக்க...

அதை உடைத்தெரிந்தவன்...அந்த பிள்ளைக்காக வாழ தொடங்கினான்...

குடியை விட்டவன்...தப்பை நிறுத்தியவன் தன் தங்கத்துக்காக சம்பாதிக்க தொடங்கினான்..

அவனை கண்டு கதவை மூடினவர்கள் எல்லோரும் அவன் வீட்டு வாசலில் காத்திருப்பார்கள்..

அந்த பெண்ணிர்க்காகவே மறுமணம் கூட முடிக்காமல் வாழ்ந்தவன் ஊரில் பெரிய செல்வந்தராக இருந்தான்)

{ஈஈஈஈஈஈ...இது படமா இல்லையானு எனக்கு தெரியாது...ஏழாவது படிக்கும் போது நான் தோழிகளுடன் சேர்ந்து ஒரு பாட்டியிடம் கேட்ட கதை...அதில் கொஞ்சம் இல்லை...அதிகமான கற்பனையை கலந்திருக்கிறேன்}...

செம்ம படம் டி...இப்படியுமா மாறுவாங்க...
எனக்கு அழுகையே வந்திருச்சி டி என ரேகா கூற...ஃபரிதா கண்கலங்கினாள்...

தான் பெற்ற பிள்ளை எங்கே இருக்கோ என்று......







Hi frndz...
Siraj yepdi ponnu nu solluradha niraya peru kaekureenga...
Siraj...faridha pregnant aanadhula irundhu ponnunu than solluvaan...
Thanaku ponnunae ninaichi ava kitta ponnu yenganu kaekuraen..
adhayum indha ud la kuduthurupaen...
Apdiyum doubt la kaekureenga...
Adhaan indha editing...
K va...bye

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro