25
ரேகா குளித்து விட்டு அறையில் நுழையவும்..
ஃபரிதா அமர்ந்து சிராஜ் என புலம்பி அழுது கொண்டிருந்தாள்...
ஏய்..என்னாச்சி டி...இங்கே வந்ததுக்கு அப்புறம் நல்லா தானே இருந்தே...ப்ளீஸ் டீ..அழாதே என ரேகா சமாதானம் படுத்த முயல..
இல்லை டி...என்னால முடியல...நான் திரும்பவும் சிராஜ் குரலை கேட்டேன் டி என அழுதவளை லூஸா டி நீ... காலேஜ்ல ரவி சார் வந்து என் கிட்ட அக்கவுண்ட்ஸ் புக் வாங்கும் போதும்...சிராஜ் பேசுர சத்தம் கேக்குதுனு பதறியடிச்சிட்டு வரே..
இங்கே வர வழியிலே ஏதாச்சும் சாப்பிடலாம்னு கார நிப்பாட்டுனா அங்க ஒருத்தன் பேசுரத வச்சி..இவன் என் சிராஜ்..சிராஜ் குரல் தானு கத்துரே... உன்னை எல்லோரும் லூஸு மாதிரி பார்க்குறாங்க டி.. உன்னாலே எனக்கும் பைத்தியம் பிடிச்சிரும் போல என புலம்பியவள்
இங்க பாரு மா...நீ எந்நேரமும் சிராஜை நினைச்சிக்கிட்டு இருக்குற நாளே...உனக்கு எங்க பார்த்தாளும் சிராஜ் இருக்குற மாதிரி இருக்கு...யாரு பேசுனாலும் சிராஜ் குரல் மாதிரி தெரியுது டி...
ஃபைவ் ஏர்ஸ் ஆச்சி டி...இன்னும் ஏன் டி இப்படியே இருக்குறே...
சந்தோஷமும் துக்கமும் மூன்று நாள் தான் டி..
ப்ளீஸ் டி...மறந்துரு டி...
உனக்குனு ஒரு லைஃப் இருக்கு...
அத நினைச்சி பாரு...உன் பேரன்ட்ஸ்ஸ நினைச்சி பாரு என சொன்னவளை கோவமாக பார்த்தவள்...
எப்படி டி எப்படி ஹான்...நீ ஈஸிய மறக்க சொல்லுறே...அவன் என் காதல் டி...சிராஜ் என் உயிர் டி...என்னால எப்படி டி அவன் இல்லாம இருக்க முடியும்...ஒரு வருஷம் நாளும் நாங்க அப்படி வாழ்ந்தோம் டி.. என் காதலோட அடையாளம் இந்த உலகத்துல இருக்கு டி...
நான் எப்படி டி அவன மறந்துட்டு இன்னொரு வாழ்க்கையை வாழ்வேனு நினைக்கிறே...நெவர் என கத்தி அழுதவள் அப்படியே மயங்கி சரிந்தாள்...
அவளை எழுப்பி சமாதானம் செய்தவள் சிறிது நேரம் ஓய்வு எடுக்க சொல்லி அறையை விட்டு வெளியே சென்றால்..
கல்யாண வேலை பரப்பரப்பாக இருக்க...ஒவ்வொறுதறும் ஒவ்வொறு வேலையை செய்ய...தன்னால் இயன்ற வேலையை சிறிது நேரம் செய்து கொண்டிருந்தாள்...
நாளை திருமணம் என்றிருக்க...
தேவையான பொருட்களை மண்டபத்திர்கு ஆட்கள் மூலம் குடுத்து விட்டு தாங்களும் கிளம்பினர்...
பெண்கள் எல்லோரும் ஒரு பெரிய அறையில் இருந்தனர்...
பர்வதம் மருதாணி கொண்டு வந்து குடுக்க..
ஃபரிதா செம்மயா மெஹந்தி விடுவா மஞ்சு என வேணும் என்றே ரேகா கூற..
ஹேய் ப்ளீஸ் க்கா...ஃபர்ஸ்ட் எனக்கு என கை நீட்ட...
ஏற்கனவே அழுது அழுது தலைவலியில் இருந்தவள்...மறுத்து பேசவும் தோன்றாமல் தலைவலியோடவே விட்டு விட்டாள்...
அக்கா...செம்மயா மெஹந்தி விடுறீங்க க்கா என பாராட்டியவள் இரு கைக்கும் காலுக்கும் அவளையே விட சொல்லி ஒரு வழி பன்னிவிட்டாள்...
மஞ்சு, நந்தினியின் தோழிகளான மாதவி, ரம்யா, சிந்து இவர்களும் மருதாணி விட்டு நந்தினிக்கும் ஒரு கை விட்டு விட்டு சோர்ந்து போக...
நந்தினியின் மற்றொரு கைக்கும் காலுக்கும் ஃபரிதா மருதாணி இட்டு விட்டாள்...
ஏற்கனவே தலைவலியுடன் மருதாணி விட்டு விட்டவள் இப்பொழுது உடம்பு வலியும் ஒன்று சேர நடு இரவு இரண்டு மணிக்கு தூங்கினாள்...
காலையில் ஆறு பத்துக்கு முகூர்த்தம் என்பதால் ஐந்து மணிக்கு எந்திருத்து எல்லோரும் தயராக ஆரம்பித்தனர்..
ஹேய்...எந்திரி டி..நேரமாச்சி என ரேகா எழுப்பவும் கண்ணெல்லாம் சிவந்து எழும்பியவளை என்ன டி..இப்படி சோர்ந்து போய் இருக்கிறா என ஃபரிதாவின் நெற்றியில் கையை வைத்தவள்...
என்ன டி...உடம்பு நெருப்பா கொதிக்குது என ரேகா புலம்பு...
ப்ச்...என்னால முடியல டி...நடக்க கூட முடியாது...நான் தூங்கவா டி என பாவமாக கேட்டவளை...சரி...இந்தா...இந்த காஃபியை குடிச்சிட்டு டேப்லெட் போட்டு படு என சொன்னவள் கீழே இறங்கினாள்...
ஐயர் வந்து மந்திரத்தை ஆரம்பித்து...மாப்பிள்ளையை வர சொல்லுங்க என கூறவும் இரு மாப்பிள்ளைகளும் வந்தனர்..
ஐயர் மந்திரம் கூற பின்னாலே மந்திரத்தை கூறி வந்த கதிர் கீழையே பார்த்து கொண்டிருந்தான்...
செல்வம் மஞ்சுவை எதிர் பார்த்து மணப்பெண் அறையையே நோட்டமிட்டு கொண்டிருந்தான்...
ஐயர் மாங்கல்யத்தை ஆசிர்வாதம் வாங்க குடுத்து விட...மணப்பெண்களும் வந்து அமர..ஆசிர்வாதம் வாங்க சென்ற ரேகா ஐயரிடம் குடுக்க...எதிர்பாராமல் நிமிர்ந்து பார்த்த கதிர்...ரேகாவின் மேடிட்ட வயிற்றை பார்க்க...தலை வலி அதிகமாகி தலையில் மின்னல் வெட்ட தலையை பிடித்த கதிர் மண்டபமே அலறும் படி ஃபரிதா என கத்தினான்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro