Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

24



நீங்க போய் ரெஸ்ட் எடுங்க..ஃபரிதா உன் ரூம்ல இருக்கட்டும் என சுமதி கூற ரேகா கூட்டி சென்றாள்...

ஃபரிதா ரேகாவின் குடும்பத்தில் சின்ன வயதிலிருந்தே பழக்கம் இருப்பதால்...அவர்களிடம் மட்டுமே முகம் காண்பித்து பேசுவாள்... மற்றபடி எந்த ஆண்மகனிடமும் பேச மாட்டாள்...

(சிராஜை விரும்பினாலேனு கேக்காதீங்க...அவன் ஒருத்தனை மட்டும் காதலித்தால். .ஏதோ ஷைத்தானின் தூண்டுதலாள்)

(இது இஸ்லாமிய சட்டம்...அந்நியான்களிடம்[திருமணம் முடிக்கலாம் என்னும் உரிமையுடையவர்] பேசுவது தவறுக்குரியது)

கல்யாண வீடு என்பதால்..ஆண்கள் அதிகமாக இருக்க...தேவையின்றி அவளிர்க்கு என குடுக்கப்பட்ட அறையிலிருந்து வெளிவரவில்லை..

ரேகாவும் மாதமாக இருப்பதால் அறையிலே இருப்பாள்.. நந்தின், மஞ்சு மற்றும் இவர்களின் வயதை ஒத்த அத்தை, மாமன் மகள்கள் என இவர்களுடன் அறையிலேயே கலாட்டா செய்தார்கள்...

இவர்களின் கலாட்டாவில் நந்தினி கலந்துகொள்ளவே இல்லை...அவள் மட்டும் ஏதோ யோசனையிலே இருந்தாள்...

என்னாச்சி நந்தினி..ஏதோ யோசனையிலே இருக்குறாப்ல இருக்கு என்ன என ஃபரிதா கேட்க...அப்படிலாம் இல்லைக்கா என நந்தினி சமாளிக்கவும்... என்னக்கா...இப்படி கேக்குறீங்க...கல்யாண பொன்னு என்ன யோசனையிலே இருப்பா??

நான் செல்வம்ம நினைச்சி யோசிச்சிட்டு இருக்கேன்லே...அதே போல இவள் கதிர்ர நினைச்சிட்டு இருப்பா என மஞ்சு கூறி கொள்ள ஃபரிதா கலாட்டா செய்ய ஆரம்பித்தாள்...

அப்படியா...ஆமா...உங்க லவ் ஸ்டோரிய சொல்லு...உங்க லவ்வ யாரு ஃபர்ஸ்ட் சொன்ன...எப்படி லவ் பண்ணீங்க என கண்ணடித்து ஃபரிதா கேட்க... நந்தினி திருதிருவென விழிக்கவும்...வெட்கம் படுறாலாம் என ஏதோ எல்லாம் தெரிந்தவளை போல உலரி தட்டினாள் மஞ்சு...

இதை விட கொடுமை என்னன்னா...
இவ வெட்க்கப்படுறது கூட பரவாயில்லை..
கதிரும் வெட்க்கப்பட்டுட்டு ரூமே கதினு இருக்காங்க...செம காமெடிலே என மஞ்சு கூறவும் கொள்ளென சிரித்தார்கள் அங்கிருந்தவர்கள்..

ஆமா...நான் கதிர பார்த்ததே இல்லையே...உன் கிட்ட பிக்(pic) இருக்கா மஞ்சு என ஃபரிதா கேட்க.. இல்லைக்கா என யோசித்தவள் ஹான்...நிச்சயம் அப்ப ஃபோட்டோ எடுத்தோம்ல அதுல இருப்பாங்க...இருங்க..ஃபோன் என் ரூம்ல சார்ஜ் ஏறுது...நான் எடுத்துட்டடு வரேன் என சென்றாள்...

அங்கு... என்னடி செல்லம்...மாமாவ பார்க்கவே வர மாட்டிக்கிறா என அவளை தனியாக இழுத்து அவன் அறையில் வைத்து செல்வம் கேட்க.. அட...என் மாமாக்கு தைரியம் வந்திருச்சி போல என்று சிரித்தவளை...இதுக்கு அப்புறம் நான் யாருக்கு பயப்பிடனும்..எனக்கு எல்லா உரிமையும் இருக்கு என அவளின் வயிற்றில் கை வைத்து அளுத்த...
பதரியவள்...ஐயோ அம்மா என கத்த..
அடியேய்...கத்தாதே...ஏன்டி என் மானத்த வாங்கிறா என கேட்டுகொண்டிருந்த நேரம் சுதாரித்தவள் அவனை தள்ளி விட்டு பளிப்பு காண்பித்து விட்டு ஓட...இருடி...என் கிட்ட சிக்குவேலே...அப்ப இருக்கு உனக்கு கச்சேரி என கத்த... என்ன கச்சேரி மச்சான் என ரகு கேட்க...அப்பதான் வெளியே எட்டிப் பார்த்தவன் அவனின் நட்புகள் வெளியே நிற்க நெற்றியில் அடித்து...ச்சே...அசிங்க பட்டோமே என நினைத்து ஈஈஈஈஈஈ என இழிக்க.. வழியுது...தொடைச்சிக்கோ என கூறவம் நட்புக்குள் சிரித்து கலாட்டா செய்து கொண்டிருந்தனர்...

என்ன...ஒரு ஃபோன் எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா என ஃபரிதா கேட்க...ஐயோ அக்கா...அந்த குட்டி சாத்தானுங்க என் ஃபோன என்ன பன்னுனாங்கனு தெரியலே..ஆட்டோமேடிக்க ரீஃப்ரெஸ் ஆச்சி...போச்சி..எல்லா ஃபோட்டோஸும் டெலிட் ஆகிருச்சு என வருத்தப்பட...சரி விடு அம்மா ஃபோன்ல இருக்கும்...அப்புறமா வாங்கிகலாம் என ரேகா கூற சமாதனம் ஆகினாள்...

திருமணத்திற்கு இரண்டு நாள் இருக்க வாங்கிய நகைகளை சரி பார்த்த பர்வதம்..இந்த நகைகள ரேகா கிட்ட குடுத்து வைக்கனும்...அவக்கிட்ட இருந்தா பத்திரமா இருக்கும் என நினைக்கும் நேரம்...கதிர் அந்த பக்கம் போக... கதிர் தம்பி..இந்த நகைய கொஞ்சம் ரேகா கிட்ட குடுத்துரு பா என்க அதுக்கு ஏன் தயங்குறீங்க மா..

நான் குடுத்துற்றேன் மா என நகையை எடுத்து ரேகா இருக்கும் அறைக்கு சென்று கதவை தட்ட...ரேகா குளிக்க சென்றதாள் ஃபரிதா மட்டுமே இருக்க...யாரா இருக்கும் என யோசித்தவள் கதவை திறக்கும் நேரம்..டேய் கதிர் என செல்வம் அங்கிருந்து குரல் குடுக்க.. கொஞ்சம் பொறு என்பது போல கையை தூக்கி காட்ட....கதவை திறந்தவளுக்கு அவன் கொஞ்சம் தள்ளி திரும்பி நின்றதால் கையை மட்டுமே பார்த்தவள்...நிற்பது ஒரு ஆண் என மட்டும் தெரிந்ததால் தலையில் முக்காடு போட்டு திரும்பி கொள்ள...இந்த நகையை ரேகா கிட்ட குடுக்க சொல்லி பர்வதம்ம்மா தந்தாங்க என கூறி நாகரிகம் கருதி கட்டிலில் வைத்து சென்றான்...

திரும்பி நின்றவள் இவன் குரலை கேட்டு அதிர்ந்து நின்றவள்...சுதாரித்து திரும்புவதர்க்குள் போயிருந்தான்..
வேகமாக வெளியே சென்று எட்டி பார்க்க யாரும் இல்லாமல் போக..

சிராஜ் என கத்தியவள் அமர்ந்த நிலையிலேயே அழுதாள்..















One small clarification...
Sila peruku doubt..
1998 la phn vasadhi adhihama illa nu..
Ippa nadakuradhu aasha ku 5 age la...so, 6 yrs aachu...2004 la chennai maari city la irukuravanga and rich aanavanga camera phn use pannunaanga and neenga kaekalaam.. aprm yaen whatsapp la manju reka ku pic anupalaenu...
Yenaku thaerinji 2004 la whatsapp varalaenu ninaikraen...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro