22
இரு வீட்டாரும் கலந்து வரும் வெள்ளிக்கிழமை செல்வம், மஞ்சு இருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயம் நடத்த முடிவு செய்தனர்..
கதிர், நந்தினி இருவருக்கும் சேர்த்து நிச்சயதார்த்தத்தை வச்சிரலாம் என செல்வம் கூற ஹ்ம்ம்..ஆமா, நம்ம ரேகா க்கு ஏழு மாசம் ஆச்சு.. அவ பிரசவத்திர்க்கு முன்னாடி கல்யாணத்த வச்சிருவோம் என சுமதி கூறவும்...அப்ப அக்கா நிச்சயத்துக்கு வரமாட்டாலாமா என மஞ்சு கேட்க அவ வந்துட்டு திரும்ப மாமியார் வீட்டுக்கு போயிட்டு திரும்ப கல்யாணத்துக்கு வர்றது சரி வராது மா...வயித்துல பிள்ளைய வச்சிட்டு...கஷ்டம் மா என சுமதி கூற ஆமா..அவ சொல்ரதும் சரி தான் என எல்லோரும் சம்மதித்தனர்..
ம்மா..இன்னைக்கு ஆஷிஃப் ஸ்கூல்கு வரல மா ...நீங்க அவனை பார்த்தீங்களா மா என கேட்ட ஆஷாவிடம் ஹ்ம்ம்...ஆமா மா..இனி ஆஷிஃப் ஸ்கூல்கு வர மாட்டான் மா..அவன் ஹனா சாச்சி(சித்தி) கூட துபாய் போய்ருவான்...ஹனா சாச்சி தான் பார்த்துப்பாங்க என்க அப்ப நான் ஆஷிஃப பார்க்க முடியாதா மா என அழுதாள்..
ஏய்...அழாதே தங்கம்... ஆஷிஃப் அங்க போன தான் சந்தோஷமா இருப்பான்...நான் உன்னை அங்க கூட்டிட்டு போறேன் என கூறவும் அழுது கொண்டே தலையாட்டினாள்..
ஆஷாவை கூட்டி கொண்டு நஸிரா ஆஷிஃபின் வீட்டிற்கு செல்லவும் ஆஷிஃபை கண்ட ஆஷா ஆஷிஃபின் அறையில் இருந்து விளையாட...ஆஷா..நான் துபாய்க்கி போறேன்...இனி இங்க வர மாட்டேன் என ஆஷிஃப் கூற ஏன் ஆஷிஃப் சித்தி ம்மாவ பார்க்க வருவிலே என கேட்க...
அவங்களயும் கூட்டிட்டு போறோம்..
இன்னைக்கு தான் எனக்கு தேவையானது எல்லாம் ஹனா ம்மா கடைக்கு கூட்டிட்டு போய் வாங்கி தந்தாங்க என கூறி அவளிடம் ஒவ்வொன்றையும் காட்டியவன்..இங்க பாரு..இது நல்லா இருக்குல என கரடி பொம்மையை(Teddy bear) காட்டியவன்...
அவளிடம் நீட்ட..
இருவரும் விளையாடிய பின்..
இது உனக்கு என கொடுத்தான்...
நந்தினி, கதிர் இருவரிடமும் செல்வமிர்க்கும் மஞ்சுவிர்க்கும் நிச்சயம் என மட்டும் சொல்ல...அவர்கள் சந்தோஷம் அடைந்தனர்..
நிச்சயத்திர்க்கு தேவையான உடுப்பு, நகை என எல்லாருக்கும் சேர்த்தே எடுக்க...இருவருக்கும் சந்தேகமே வரவில்லை..
வீட்டில் தெரிந்தவர்கள் சிலரை மட்டுமே அழைக்க...எல்லோரும் அமரவும்...ஐயர் நிச்சய பத்திரிக்கையை வாசிக்க ஆரம்பிக்க...முதலில் செல்வத்திர்க்கும் மஞ்சுவிர்க்கும் நிச்சயம் செய்து...
பிறகு ஐயர் அடுத்த பத்திரிக்கையை வாசிக்க ஆரம்பிக்கவும் எதுவும் புரியாமல் இருவரும் விழிக்க மற்றவர்கள் சிரித்தனர்..
அதிலே ஐயர்...எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் நிகழும் மங்களகரமான ஸ்ரீ விளம்பி வருடம் 1178 ம் ஆண்டு பங்குனி மாதம் 22ஆம் தேதி கூடிய சுப யோக சுப தினத்தில் கதிர் என்பவருக்கும் இந்த ஊரில் பெரிய வீட்டுகாரர் ரத்தினவேல் ஆகியவரின் புதல்வி நந்தினிக்கும் திருமணம் செய்து வைக்கும் படி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு தாம்பூலம் மாற்ற படுகிறது எனவும் கதிரின் பக்கம் சுமதி தம்பதியரும் நந்தினியின் பெற்றோரும் மாற்ற பட...சுபம் என கூறவும் இருவரும் அதிர்ந்தனர்...
ஆஷா அடிக்கடி ஆஷிஃபை பார்க்க வர...இருவரும் விளையாடுவார்கள்...
இப்படியே நாட்கள் நகர..
நாளை மறுநாள் துபாய் போவதாக இருக்க இரு பிஞ்சு மணமும் வருந்தியது...
ம்மா...ஆஷிஃப்க்கு ஏதாவது வாங்கி குடுக்கனும் மா.. அவன் துபாய்க்கி போறான்லே என்க சரி மா என கூறி கடைத்தெருவிர்க்கு சென்றனர்..
ஹேய்...ஆஷிஃப்..இங்க பாரு...
இது உனக்கு என கூறி ஒரு கண்ணாடி டப்பா(box)வை குடுக்க...அதை எடுத்து பார்க்க ஒரு அழகான வெள்ளி சங்கிலி(chain) யில் A என போட்டு இருந்தது...
ரொம்ப அழகா இருக்கு ஆஷா...நம்மலோட ஃபர்ஸ்ட் லெட்டர் போட்ருக்கு...தேங்க்ஸ்...இத நான் பத்திரமா வச்சிருக்கேன் என்க சரி டா...நானும் ம்மாவும் உனக்காக வாங்கினோம்..உனக்கு பிடிச்சிருக்குல என்க எஸ் மா...ரொம்ப பிடிச்சிருக்கு என ஆஷிஃப் கூறினான்...
ஆஷிஃப் நேரமாச்சி..வா...போலாம் என்க கழுத்தில் சங்கிலியை போட்டவன் நஸிரா குடும்பத்திடம் விடை பெற்று புது வாழ்க்கையை நோக்கி சென்றான்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro