21
குரல் கேட்ட திசையை பார்க்க அங்கே சுமதி அவர்களை முறைத்த படி இருக்க...அத்...தை அது என இழுக்க...எத்தனை நாளா இது நடக்குது என்க தலையை குனிந்து சோகமாக நின்றான் செல்வம்..
ஏம்மா...ஏன் ம்மா மிரட்டுரே...இன்னைக்கு தான் என் மாமாக்கே தைரியம் வந்திருக்குது..அதையும் கெடுத்துருவா போலயே என மஞ்சு கூறவும் சுமதி சிரிக்க திருதிருவென விழித்தான் செல்வம்...
ஹிஹி...இப்படி முழிக்காதே மச்சான்...உங்க காதல்...தெய்வீக காதல் எங்களுக்கு முன்னாடியே தெரியும்...
பேசிக்களி நாங்க ஃப்ரெண்ட்ஸ்...வீட்டிலே நாங்க எதையும் மறைக்க மாட்டோம்...எல்லா விஷயத்தையும் ஷேர் பன்னிப்போம்...
மூர்த்தி அங்கிள் எங்க மேரேஜ் பத்தி பேசி ஒரு வாரத்திலேயே மஞ்சு உங்கள லவ் பன்றத பத்தி சொல்லிட்டா... எங்க வீட்டுல எல்லாருக்கும் டபுள் ஓகே... மஞ்சு தான் உங்க லவ்வ உங்க வாயால சொல்ல வைக்க ரொம்ப கஷ்ட பட்ட...ஒரு வழியா அதையும் சொல்லீடீங்க பா என மூச்சு விட்டான் மஞ்சுவின் அண்ணன் ரகு..
டேய் டேய் மூச்சு வாங்கு டா என ரகுவின் முதுகில் தட்டியவர்...என்ன மருமகனே.. என் மக உங்கள ஒரு வழி பண்ணிட்டா போலே என ராஜம் கேட்க அநியாயத்துக்கு வெட்க பட்டான் செல்வம்..
யாருலாம் ஹோம் வொர்க் பன்னலே...எந்திரிங்க என ஆசிரியர் கேட்க நாங்க பன்னிட்டோம் மிஸ் என குழந்தைகள் கூறிக்கொன்டிருக்க...
எஸ்கியுஸ் மீ மிஸ் என மற்றொரு ஆசிரியர் வர...வாங்க ஹேமா மிஸ் என்ன ஆச்சி?? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க என கேட்க..
அது வந்து...ஆஷிஃப்...ஆஷிஃப ஆஃபிஸ் ரூம் ல கூப்பிட்டாங்க என்க...என்ன ஆச்சி மிஸ்...எனி ப்ராப்ளம் என கேட்க..எஸ் மிஸ்...ஆஷிஃப் அம்மா இறந்துட்டாங்க என கூறி ஆஷிஃபை பார்க்க அவன் ஆஷாவுடன் சிரித்து பேசிகொண்டிருந்தான்..
அவனுக்குனு இருக்குறது அவங்க ம்மா மட்டும் தான்...பாவம் மிஸ்...இனி அவனுக்குனு யாரு இருக்கா என வருத்தப்பட...அதான் எனக்கும் கஷ்டமா இருக்கு என கூறி ஆஷிஃப்...உன்னை கூப்பிட்டு உங்க வீட்டுல இருந்து ஆள் வந்துருக்காங்க...உன் பேக் லாம் எடுத்துட்டு வா என கூட்டி சென்றார்...
அவன் சென்ற பிறகு ஸ்டூடண்ட்ஸ் உங்க ஃப்ரெண்ட் ஆஷிஃபோட ம்ம்மா வஃபாத் ஆகிட்டாங்க...அவங்களுக்காக டூ மினிட்ஸ் கண்ண மூடிட்டு ப்ரே பன்னுங்க என கூறவும் குழந்தைகள் அழுதே விட்டனர்..
ம்மா...ம்மா...ஆஷிஃபோட ம்ம்மா...மவுத்தா போயிட்டாங்க மா...பாவம் ம்ம்மா ஆஷிஃப் என அழுது கொண்டே ஆஷா கூற..
நேற்று நடந்ததை நினைத்து கலங்கியவர்...நீ இரி மா...நான் போய் பார்த்துட்டு வரேன் என கூறி செல்லும் நேரம்...
லாத்தா....காக்கா க்கு சின்ன ஆக்ஸிடெண்ட் என ஒருவர் வந்து தகவல் கூறவும் பதறியவர் மருத்துவமனைக்கு செல்ல..அங்கே செய்யது சைக்கிளில் போகும் போது ஒரு ஆட்டோ வந்து இடித்ததால் காலில் அடி பட்டு உடைந்ததால்... மருத்துவர் மாக்கட்டு போட...வீட்டுக்கு வர இரவு பத்து மணி ஆகிவிட்டது...
வந்ததும் தான் ஆஷிஃபின் நியாபகம் வர...ச்சே..இத எப்படி மறந்தேன்..பிள்ளை என்ன பன்றான், எப்படி இருக்கான்...என்ன ஏதுனு தெரியலயே...இவ்வளவு நேரம் ஆச்சே...எப்படியும் பக்கத்து வீட்டில இருக்கிற ராணி பார்த்துப்பாங்க...விடிந்ததும் போய் பார்ப்போம் என நினைத்தவர் விடிய விடிய தூங்கவே இல்லை..
விடிந்ததும் ம்ம்மா...ஆஷிஃப பார்த்தியா மா.. அவன் அழுவுனானோ என்க இல்லை ம்மா...உன்னை ஸ்கூல்ல விட்டுட்டு தான் பார்க்க போகனும் என கூறியவர் ஆஷாவை விட்டுட்டு ஆஷிஃப் வீட்டு பக்கத்தில் குடிசையில் இருக்கும் ராணி வீட்டிர்க்கு சென்று விசாரிக்க...
நேத்து வேலைக்கு போன இடத்தில நெஞ்சு வலிச்சி இறந்துட்டாங்க மா...பாவம் மா...வாழ்க்கைல ரொம்ப கஷ்டப்பட்டாங்க..நேத்து சாயங்காலமே அடக்கிட்டாங்க மா என ராணி வருத்தமாக கூற...ஆஷிஃப் எங்கே ராணி என நஸிரா வினவ அந்த பையன் ரொம்ப பாவம் மா..துடிச்சி போயிட்டான் மா...அவன ஃபாத்திமா வேலை செய்ஞ்ச வீட்டில உள்ளவங்க தான் கூட்டிட்டு போனாங்க என கூறியவள் அவங்க நல்லவங்க மா..அந்த பையன நல்லா பாத்துக்குவாங்க என கூறினாள்...
அங்கிருந்து ஆஷிஃபை பார்க்க செல்ல...அந்த வீட்டு முதலாலி சித்தியின் மகள் ஹனாவின் மடியில் தூங்கி கொண்டிருந்தான்... ஹனா துபாயில் இருந்து ம்மாவை பார்க்க ஒரு மாதத்திற்கு வந்திருந்தாள்...அவள்க்கு ஆஷிஃபை ரொம்ப பிடிக்கும்..ஆஷிஃப்க்கும் அப்படி தான்..
ஆஷிஃபின் முகத்தை பார்க்கும் போதே தெரிந்தது...அவன் நல்லா அழுதிருக்குறான் என்று.. அவன் தலையை வறுடியவாரு ஹனாவிடம் பேசிக் கொண்டிருக்க...பேச்சு சத்தம் கேட்டு எழுந்தவன் நஸிராவை கண்டதும் ம்மா என அழுது கட்டிக்கொண்டான்...
நீ அழாதே டா தங்கம்...உன்னை நாங்க பார்த்துக்குறோம் என சமாதானம் படுத்தியவள் நீ என் கூட வந்திடு பா என்க இல்லை நஸிரா...ஹனா இவனை துபாய்க்கு கூட்டிட்டு போக போறாள்...இவளுக்கு கல்யாணம் ஆகி நாளு வருஷம் ஆகியும் பிள்ளை இல்லை..
அதான் ஆஷிஃபை முறைப்படி அவள் பிள்ளையாக்குறதுக்கு தேவையானதை செய்யுறா...இன்னும் கொஞ்ச நாள்ல பிள்ளையை கூட்டுட்டு துபாய்க்கு போயிடுவா என சித்தி கூறவும் நஸிரா கண்கலங்கினார்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro