20
முத்தத்தின் அதிர்ச்சியில் அங்கும் இங்கும் தன்னிலை மறந்து சென்றவன்..அங்கு உள்ள ஒரு படி கல்லில் அமர்ந்திருக்க...
ஏய் காகா...இப்படி வெயில்ல காயாதே..அப்புறம் அந்த மாமா மாதிரி கருப்பா போயிடுவா என கூறியவள் செல்வம் முறைக்கும் முன்பே ஓடி விட்டாள்...
தன்னுடைய ம்மாவின் கையை பிடித்து ஆஷிஃப் வர...சந்தோஷமாக வரவேற்றார் நஸிரா...
அவர்களை பாயில் அமர வைத்து விட்டு ஒவ்வொறுதறயும் வரவேற்று கொண்டிருந்தாள்..
இவர்கள் அமர்ந்திருந்த பாயில் இருந்த ஒரு சிலர் ஆஷிஃபின் தாயை ஏளனமாக பார்த்து விட்டு வேறு இடத்தில் போய் அமர்ந்து விட்டனர்...இதெல்லாம் கவனித்து மனதால் அழுதால் அவனின் தாய்...
நாற்காலியில் அமர்ந்து இருந்த ஆஷா செய்கையால் ஆஷிஃபை அழைக்க..என்ன என்று கேட்க அவள் தன் பக்கத்தில் அமர சொல்லவும் இருவரும் அமர்ந்தனர்...
ஆலிம்மிஷா வரவும் நஸிரா ஆஷாவின் அருகில் இருந்த ஆஷிஃபின் தாய் பக்கம் அமர...ஆலிம்மிஷா ஓதி துஆ செய்து விட்டு சென்றார்...
பிறகு நஸிரா ஆஷிஃப் தாயிடம் பேசி கொண்டிருக்க...அங்கிருந்தவர்கள் பேச்சின் சத்தம் அதிகமாக என்னாச்சி என கேட்க என்ன இருந்தாலும் நீ இப்படி இருந்திருக்க கூடாது நஸிரா என ஆஷிஃபின் தாயை அந்த கூட்டத்தில் இருந்தவர் முறைத்து கூற...
அந்த பார்வையின் அர்த்தத்தை புரிந்தவள் ஆஷிஃபை ஆஷா வுடன் உள்ளே அனுப்பி விட்டு..இப்ப என்ன நடந்திச்சி..எதுக்கு இப்படி பேசுறீங்க என கேட்க..
இவளை நீ இங்கு கூப்பிட்டதே தப்பு, இவளும் நாங்களும் ஒன்னா, ச்சீ இவலாம் இன்னும் உயிரோட இருக்கிறாவே..நாண்டுகிட்டு சாகலாம் என அங்கிருந்தவர்கள் மாறி மாறி கூற அவர்களுக்குள் சலசலப்பு அதிகமானது...
(இவர்கள் சண்டை பிடிக்கட்டும்...அதுக்குள்ள நம்ம ஆஷிஃபின் தாயை பற்றி பார்ப்போம்
இதே ஊரை சேர்ந்தவர் தான் ஆஷிஃபின் தாய் ஃபாத்திமா..ஃபாத்திமா பெற்றோர்க்கு ஒரே பிள்ளை...ஏழ்மையான குடும்பம்..ஏழ்மையின் காரணத்தால் முப்பது வயதாகியும் திருமணம் ஆகவில்லை..
அப்பொழுது இவர்களின் வீட்டு பக்கத்தில் வாடகைக்கு வந்த ரியாஜ் என்றவருடன் பழக்கம் ஏற்பட்டு... இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்..
வீட்டு ஏழ்மையின் காரணத்தால் ஃபாத்திமாவிர்க்கு ரியாஜை மணமுடித்து வைத்தனர்....ஃபாத்திமாவின் பெற்றோர்...
திருமணம் ஆகி சந்தோஷமாக வாழ்ந்தாகள்...ஆனால், வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்க..
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து பொறுமையாக இருந்த காரணத்தால் ஐந்து வருடங்கள் பிறகு கர்ப்பமானாள்..
வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்க...பையனை பெற்றெடுத்தாள்...
ஆஷிஃப்க்கு மூன்று மாதம் இருக்க...ஊரில் பெரிய திருமணம் நடக்க.. குடும்பத்துடன் சென்றனர் ஃபாத்திமாவை தவிர..
திருமணம் முடிந்து வீட்டிற்கு திரும்பியவர்கள் அதிர்ந்தனர்...
அவள் மயங்கிய நிலையில் இருக்க.. அவளுடைய ஆடை கலைந்திருக்க .. பக்கத்து வீட்டில் குடியிருப்பவன் அவளை அணைத்து தூங்கி கொண்டிருந்தான்...
இதை பார்த்த பெற்றோரின் உயிர் அந்த இடத்துலயே பிரிந்தது..
பக்கத்தில் குடியிருப்பவர்கள் மூலம் விஷயம் வேகவேகமாக பரவ...
வந்தவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க..
அவள் இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...என்ன நம்புங்க..கதவ தட்டுற சத்தம் கேட்டு திறந்து பார்த்தப்ப யாரோ என் மூக்கில் துணிய வைத்தது மட்டும் தான் தெரியும் என அழுது கொண்டே ரியாஜை பார்க்க..
அங்கு இருந்தவர்களின் பார்வை அவனிடம் திரும்ப...ச்சே..தப்பு செய்துட்டு எப்பவும் சரியான நேரத்துக்கு தப்பிச்சிருவோம்...
இன்னைக்கு இப்படி மாட்டிக்கிட்டோமே என நினைத்தவன் அவர்களின் பார்வை தன் பக்கம் இருப்பதை உணர்ந்து...
என்ன, நீ இப்படி சொல்ரே..இத்தனை வருஷமா நமக்குள்ள நடக்கிறது தானே என்க ச்சீ, வாய மூடு டா..பொருக்கி நாயே...
இவன் சொல்ரத நம்பாதீங்க என கூறவும் அதற்க்குள் சுதாரித்தவன் நீ தானே சொன்ன..எனக்கு கல்யாணம் முடிஞ்சி 5 வருஷம் ஆகியும் பிள்ளை இல்லை.. என் கணவர் கூட சந்தோஷமாக இல்லை...உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. உன் மூலமா பிள்ளை பெத்துக்கிறேனு நீ தானே வீட்டில யாரும் இல்லாத நேரமா பார்த்து என்னை கூப்பிடுவே..இவன் கூட எனக்கு பிறந்தவன் தானே என்க ஓங்கி அறைந்தாள்..
நீ அடிச்சா எல்லாம் சரியா போச்சா...உன்னை நம்பிடுவாங்களா..இங்க பாருங்க...பின் கதவு கூட திறந்து இருக்கு..இவ தான் எனக்காக திறந்து வைப்பா என கூற இவள் மறுத்து பேசி அழுது கெஞ்சியும் ரியாஜ் திரும்பி கூட பார்க்காமல் போய் விட்டான்...
சுற்றி இருந்தவர்கள் அனைவரும் இவளை அருவருப்பாய் பார்த்ததோடு...அசிங்கமாக பேசியும் சென்றனர்..
தன் வாழ்க்கை ஒரே நாளில் முடிந்து விட்டதே... என தர்கொலை செய்ய முயற்சித்தவள் தன் பையனுக்காக வாழ துவங்கினாள்..
{தனி ஒருவன் சுகத்துக்காக ஒரு குடும்பமே சிதைஞ்சிடுச்சு...இது அன்றாட வாழ்க்கையில் நடக்குற ஒன்று...
கேட்கும் போதுலாம் உயிரையே அறுத்து போடுறாப்ல வலிக்கும்..
இத யாரயும் புண்படுத்தும் நோக்கத்துடன் பதிவிடவில்லை..
தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள்})
நஸிரா அவர்களை சமாளிக்க முயல தன்னால் இங்கே பிரச்சினை வேண்டாம் என அங்கிருந்து அழுகையுடனே நழுவினால்..
விடிந்து இவ்வளவு நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராமல் இருக்க அவன் அறையில் சென்று பார்த்தாள் மஞ்சுளா...
அங்கே அவன் போர்வையை போர்த்தி நன்றாக தூங்கி கொண்டிருக்க...அவன் போர்வையை நடுவில் இருந்து மேல் தூக்கி இடுப்பில் அவள் வருட...நெளிந்தவன் சிரித்தபடி திரும்ப...மாமா எந்திரிங்க மாமா என்க..
கனவிலும் இம்சை பன்றாலே என நினைத்தவன் அவள் கையை பிடித்து இழுக்க...இதை எதிர்பார்க்காதவள் அவன் மீதே விழுந்தாள்..
கண்ணை திறக்கும் போதே தேவதையாய் ஹமாம் சோப் மணக்க தன் மேல் கிடந்ததவளை என்ன செய்வது என தெரியாமல் விழிக்க..
அவள் வேகமாக எழவும்...நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா என பட்டென போட்டு உடைக்க திருதிருவென விழித்தவள் எழ முயல..எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்...உனக்கும் என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியும்..
நீ உங்க அப்பா கிட்ட சொல்லு...நான் என் மாமன தான் கட்டிக்கிவேனு...சரியா என்க அதுகென்ன சொல்லிட்டா போச்சி என குரல் வந்த திசையை பார்க்க அதிர்ந்தனர்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro