2
இரவு 10.30 மணிக்கு திருச்சி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினர்.. ஃபரிதாவும் சிராஜும்...
அங்கிருந்து ஆட்டோ ஒன்றை பிடித்து சிராஜின் நண்பன் அஷோக் வீட்டிற்கு சென்று பார்க்கையில் அஷோக் வீட்டு கதவில் பூட்டு தொங்கி கொண்டிருந்தது...
பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் விசாரித்து பார்க்க... அஷோக் குடும்பத்தார் வீட்டை காலி செய்து விட்டு போய் 1 மாதம் ஆகிவிட்டன என்று கூறினார்கள்.
இந்த இரவில் புது ஊர், புது நபர்கள்....எங்கே செல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தனர் சிராஜும் ஃபரிதாவும்..
பக்கத்தில் சாலை ஓரத்தில் ஒரு குடிசை தென்பட.... அங்கு சென்று இந்த இரவை கழிக்கலாம் என்று சிராஜ் கூறவும் ஃபரிதாவும் வேறு வழி இல்லாததால் சம்மதித்தால்...
அங்கு சென்றதும் பெட்டியில் வைத்து இருந்த போர்வையை எடுத்து கீழே விரித்து சிராஜும் ஃபரிதாவும் படுத்தனர்...
படுத்த சிறிது நேரத்தில் குடிசையின் பின் பக்கம் ஏதோ சத்தம் கேட்கவும் பயந்தபடியே சத்தம் கேட்ட இடத்தை பார்க்க... அங்கு 4 நபர்கள் இவர்களை பார்த்தவாறு நடந்து வந்தனர்...
(வந்தவர்கள் குடித்திருக்கிறார்கள் என்பதும் அவர்கள் மோசமானவர்கள் என்பதும் அவர்களின் தோற்றத்திலும், நடையிலுமே தெரிந்தது )
ஃபரிதா பயந்தபடியே சிராஜின் பின்னால் போய் நின்று கொண்டாள்....வந்தவர்களில் ஒருவன் சிராஜை தள்ளி விட மற்றொருவன் ஃபரிதா வின் கையை பிடித்து இழுத்தான்..
சென்னை:
தோழியின் வீட்டிற்க்கு போய் வருவதாக சொன்ன ஃபரிதா....இத்தனை நேரமாகியும் வராததால் பயம் தொற்றிகொள்ள ஃபரிதாவின் தாய் மும்தாஜ் வீட்டு வாசலிலே அமர்ந்திருந்தாள்...
கார் சத்தம் கேட்டு வேகமாக எழுந்தவள்...தன் கணவனை கண்டதும் வேகமாக சென்று தோழி வீட்டுக்கு போய் வருவதாக சொன்ன மகளை இன்னும் கானோம்ங்க என்று அழுதபடியே கூறினார்...
மும்தாஜ் கூறிய மறு நிமிடமே ஃபரிதாவின் தந்தை ரஹ்மான் மும்தாஜையும் காரில் ஏற்றி கொண்டு ஃபரிதா வாடிக்கையாக
செல்லும் இடங்களிலெல்லாம் தேடினார்கள். எங்கு தேடியும் கிடைக்காததால் சிராஜின் வீட்டின் முன்னால் வந்து காரை நிறுத்தினார்கள். ..
சிராஜ் வீட்டில் உள்ளவர்களிடம் சிராஜ் எங்கே என்று ரஹ்மான் கேட்க....காலையில் சென்றவன்..இன்னும் திரும்பவில்லை என்று சிராஜின் பெற்றார் ரஹ்மானிடம் கூற....
உங்கள் மகன் உங்களுக்கு உயிருடன் கிடைக்க மாட்டான் என்று கூறி நேரே காவல் நிலையத்திற்கு சென்றனர்.. ஃபரிதாவின் பெற்றோர்கள்.....
.
.
.
.
.
ஒரு சிறிய குறிப்பு:
இந்த சிராஜ் ஃபரிதா வுடைய வாழ்க்கை(கதை) 20 வருடங்களுக்கு முன்னால் நடந்தது. அதாவது நீங்கள் 1998க்கு சென்று பாருங்கள்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro