18
மா ஃபரிதா...நீ இப்படியே இருந்தா எப்படி மா...எங்களையும் நினைச்சி பாரு மா...எங்களுக்கு அப்புறம் உனக்குனு ஒரு துணை வேணாமா...சிராஜை பற்றி ஒரு தகவலுமே இல்லை...குழந்தையை பற்றிய தகவலும் இல்லை...உனக்குனு ஒரு வாழ்க்கை அமைஞ்சா நாங்க நிம்மதியா அல்லாஹ் கிட்ட போயிடுவோம் மா என்று ரஹ்மான், மும்தாஜ் இருவரும் மாறி மாறி சொல்ல...இல்லை வாப்பா என் சிராஜ் சீக்கிரம் என் கிட்ட வந்துருவாங்கனு நம்பிக்கை இருக்கு என்று அழுகையுடனே எழுந்து சென்றாள்...
யா அல்லாஹ்...என் பிள்ளையோட வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழியை காட்டு என தொழுகையில் மன்றாடினர் அவளை பெற்றோர்...
.
.
.
.
.
பெட்டியில் உள்ள புடவையை ஒவ்வொன்றாக எடுத்து பாயில் பரப்பி கொண்டிருந்தவனை...என்னப்பா ஏன் எல்லா புடவையையும் வெளியில் போடுரே...என்ன பார்க்குறே என கேட்டவரிடம்...
ஏன் மா உன் கிட்ட உள்ள எந்த புடவையும் நல்லா இல்லையே மா...இன்னைக்கு அஸர் க்கு ஆஷா வீட்டிலே ஃபங்ஷன் மா...
உனக்கு ஒரு புது புடவை வாங்கலாம் மா என்க எதுக்கு ப்பா...நீ போயிட்டு வா...நான் வரல என தயங்கி புரிய வைக்க...
ஆஷா கண்டிப்பா வர சொல்லிக்கிரா மா...ப்ளீஸ் மா...அப்புறம் கோவிச்சிக்கிட்டு பேசமாட்டா மா என்றவனை அது இல்லை பா...புடவைக்குலாம் ம்மா கிட்ட துட்டு இல்லை பா என்றதும் சோகமானவன்..
சிறிது நேரத்தில் வேகமாக எழுந்தவன்..தன்னுடைய உன்டியலை எடுத்து ம்ம்மா...இதுல நான் துட்டு நிறைய சேர்த்து வைச்சிக்கிறேன் மா..இத உடைச்சி உனக்கு வாங்களாம் மா என்றவனை கண்ணீர் மல்க சந்தோஷமாக அவனை அணைத்தவள்...
இல்லை ப்பா..இது உனக்கு பின்னாடி உதவும் என்று கூற..பின்னாடி உள்ளது பின்னாடி மா என கூறி உன்டியலை உடைத்தான்..
அதிலே அதிகமாக ஐம்பது பைசா பிறகு ஒரு ருபாய் என இருக்க மொத்தமாக நூற்றி ஐந்து ருபாய் ஐம்பது பைசா இருந்தது...
உடனே சோகமானவன் அடுப்பு தட்டில் அங்கு அங்கு தன் தாய் வைத்திருக்கும் காசை எடுக்க இருநூற்று முப்பது ருபாய் இருந்தது...
ம்மா...இவ்வளவு துட்டு இருக்கு மா..வா மா...உனக்கு புடவை எடுக்கலாம் என அழைத்து சென்றான் ஆஷிஃப்..
.
.
.
.
.
ஏங்க...நீங்க இத கவனிச்சீங்களா?? நம்ம நந்தினியும் கதிரும் அப்படி இப்படி பார்த்துக்கிறாங்க...அவங்க மனசில ஆசை இருக்குனு நினைக்கிறேன்...நீங்க என்ன சொல்லுரீங்க என கேட்ட பர்வதத்திடம் ம்ம்ம்...ஆமா...அதை பத்தி தான் நானும் யோசிச்சிட்டு இருக்கிறேனு என ஐயா கூற...இதுல யோசிக்க என்னய்யா இருக்கு என்றபடி செல்வம் வந்தான்...
அதில்லை தம்பி...அந்த பையன் நல்லவன் தான்...ஆனால் என இழுக்க என்ன ப்பா...என்ன ஜாதி, என்ன ஏதுனு யோசிக்கிறீங்களா என கேட்க...
ச்சீ..என்ன தம்பி...நான் அந்த மாதிரிலாம் யோசிக்கிறவனா...நான் மதத்தையே பெரிசா எண்ண மாட்டேன்னு உனக்கு தெரியாதா என கேட்க...அப்புறம் என்னப்பா என செல்வம் கேட்டான்..
அந்த பையனுக்கு இப்ப பழைசு எதுவுமே நியாபகம் இல்லை.... கல்யாணத்துக்கு அப்புறம் பழைய நினைவு நியாபகம் வந்திச்சுனா ஏதாவது பிரச்சினை வந்துரும் லே என ஐயா கூற...அது எப்படி ப்பா...இத்தனை வருஷம் வராத நினைவு இப்ப வர போகுதா...அதெல்லாம் பார்த்துகலாம் ப்பா என கூறினான் செல்வம்...
இத்தனை நாள் கல்யாணம் வேண்டாம்னு சொன்னவ மனசு இப்ப தான் மாறுது.. கையோடு முடிச்சு வைச்சிரலாம் ப்பா என்க சரி தம்பி...அவுங்க இரண்டு பேர் கிட்டயும் கேட்டுட்டு முடிவு பண்ணலாம் என ஐயா கூறினார்...
இதுல கேக்குறதுக்கு என்னங்க இருக்கு...அதான் கண்கூட பார்த்தாச்சே.. நாம்ம நல்ல நாளா பார்த்து ஜோசியர கூப்பிட்டு நிச்சயம் பண்ணலாம்ங்க என பர்வதம் கூற யோசித்தவாரு ஐயா வெளியேறினார்..
.
.
.
.
.
தன் தாயை துனி கடைக்கு கூட்டி சென்றவன் அங்குள்ள புடவையை பார்த்து இது, அது என ஆஷிஃப் பார்க்க...தன் மகனை சந்தோஷமாக பார்த்து கொண்டிருந்தார் அவனின் தாய்...
அவன் இருநூற்று பத்து ரூபாய் க்கு ஒரு புடவையை பார்க்க....
தங்கம்...இங்க பாரு ப்பா...துட்டு இருக்குதுனு அவ்வளவயும் செலவு பண்ண கூடாது...நாளைக்குனு சேமிக்கனும்ப்பா என கூறி நூற்றி நாற்பது ரூபாய் க்கு ஒரு அழகான நீல நிற புடவையை எடுத்தார்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro