17
ஹப்பா...என்ன மணம்...என்ன மணம்..
இன்னைக்கு ஒரு கட்டு கட்டிர வேண்டியது தான் என செல்வம் கூற...
அங்கு இருந்த திண்ணையில் இடியப்பம், ஆப்பம், தோசை, சப்பாத்தியை பர்வதம் பரப்ப...இதுங்களுடன் சன்டைக்கு தயாராகி கோழி வறுவல், ஆட்டு குழம்புவை அவள் அக்கா பரப்ப...இதுங்களை சமாதானம் படுத்த பாயாசத்தை வந்து வைத்தாள் நந்தினி...
(ப்பா...என்ன சாப்பாடு...ரொம்ப பசிக்கிது)
சாப்பிட அமர்ந்தவன் ஆசையாய் கோழிக் காலை(leg Piece) பார்தாதவன்.. எச்சில் ஊற அதை எடுத்து வாயில் வைக்க போக...தடுத்தது ஒரு கரம்...
யார் என பக்கத்தில் பார்க்க..அங்க கதிர் எனக்கு ஒரு சந்தேகம் என கேட்டான்...
இப்ப என்ன கேட்க போறானு தெரியலயே எனவும் கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலயே என்ற எரிச்சலுடன் கதிரை பார்க்க...இன்னைக்கு எதுக்கு இப்படி ஒரு விருந்து என கேட்டவனை முறைத்தவன்...
சாப்பாடு வைச்சா...திங்கனும்..
இப்படி ஆராய்ச்சி பன்ன கூடாது என செல்வம் கூறவும்...அவனை கதிர் முறைக்க...நீ நினைவில்லாம இருக்குறதுல அதிக கஷ்டம் எனக்கு தான் டா என கூறி..
இன்று கறிநாள்..
அதாவது அதிகாலையிலேயே ஊரிலுள்ள முனியாண்டி கோவிலுக்கு படைக்கப்பட்ட ஆடுகள் வெட்டி பகிரப்படும். அதாவது முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். காலை சிற்றுண்டிகளுக்கே மாமிச வாசனை மணக்கத் தொடங்கிவிடும்...இதுலாம் வருடா வருடம் நடக்குறது என கூறி கொண்டே அவனை பார்க்க...
அவன் சாப்பிட ஆரம்பித்திருந்தான்..
இவனை என ஒரு முறை முறைத்தவன் தானும் சாப்பிட ஆரம்பித்தான்...
பிறகு...
பெண், புலி, கரடி, சாமியார் என பல வேடங்களிட்டு பக்தர்கள் ஊர்வலம் சென்று தானமாக பணம் பெற்று அவை சாமிக்கு உண்டியலிடப்பட்டது..
மதிய வேளையில் மாப்பிள்ளை பெண் அழைப்பு நடைபெற்றன.. ட்ராக்டர் வண்டியில் மாப்பிள்ளை பெண்ணாக வேடமிட்டு பூசாரியுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.
பிறகு வில்லுப்பாட்டு, கரகாட்டம், ஆடல் பாடல்னு இருக்க...அந்த நேரம் கதிர், செல்வம் இன்னும் அவனுடைய நண்பர்களுடம் நின்று கதைத்து கொண்டிருக்க...அந்த பக்கம் தன் தோழிகளுடன் தங்க பதுமை என வந்த நந்தினி கதிரின் பக்கம் பார்வையை செலுத்தி வெட்கத்துடன் செல்வதை
பார்த்தான் செல்வம்...
அங்கு போட்டிருந்த ஒவ்வொறு கடைக்கும் சென்று வந்தவள் வளையல் கடையிலிருந்து கையில் கண்ணாடி வளையலை அணிந்து கையை ஆட்டிப் பார்த்து சிரிக்க...மற்றொரு பக்கம் கதிரும் வர சரியாக பார்த்துவிட்டார் பர்வதம்...
அதன் பின் செலுத்தப் பட்ட முளைப் பயிர்கள் எடுத்துச் செல்லப்பட்டு ஊரணியில் கரைக்கப்பட...
முளைப்பாறி செலுத்திய பின்
வள்ளி திருமணம் நாடகம் சரியாக 11 மணிக்கு ஆரம்பமாகியது. பாதிக்குமேல் மக்கள் தூக்கத்தை ஆக்கிரமித்திருந்தார்கள்...அங்கு இரு உருவம் ஒன்றோடு சேர்ந்து கொஞ்சியபடி இருக்க...இருட்டாக இருந்ததால் யார் என தெரியவில்லை..
எங்கே அறையில் இருந்து வெளியே வந்தாள் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விடுவாலோ என செல்வம் உள்ளிருக்க...
கதிர் தம்பி.. உங்கள ஐயா கூப்பிடுறாங்க என மாரி கூற...கதிர் சென்ற அடுத்த நொடியில் அவன் மாமன் மகள் மஞ்சுளா அறையினுல் நுழைந்தாள்...
ஏய் வேணாம் டி..போயிடு என கூறியும் கேட்காமல் தாவனி பாவடையில் இடுப்பு தெரிய நடந்து வந்தவளை பார்க்க மனதில் ஏதோ தோன்ற திரும்பி கொண்டான்...
பின்னால் நெருங்கி வந்தவள்...அவன் மேல் மஞ்சள் தண்ணீரை ஊற்ற...தன் மேல் ஊற்றிவிட்டாளே அவளை என வேகமாக திரும்ப அதிர்ச்சியில் உறைந்தான்..
மஞ்சள் தண்ணீரை ஊற்றியவல் கண்ணத்தில் முத்தம் குடுக்க போக அவன் திரும்பிய வேகத்தில் இதழில் பதித்தவள் பயத்திலே என்ன செய்வது என தெரியாமல் அசையாது நின்றாள்...
முதலில் சுதாரித்தவன் வெட்கத்துடன் திரும்ப...இவளும் சிரித்த படியே அறையை விட்டு வெளியே வர அங்கு நந்தினி கதிரின் மேல் மஞ்சள் தண்ணீரை ஊற்றியிருந்தாள்...
.
.
.
.
.
ஹேய்...இந்த ஃபோட்டோ(photo)ல நீ அழகா இருக்கிறே என ஆஷிஃப் அவர்களின் ஆண்டு விழா புகைப்படத்தை பார்த்து கூற...
நீ தான் ரொம்ப அழகா இருக்கறே என ஆஷா கூறினாள்..
இல்லை, நீ தான் என ஆஷிஃப் கூற...இல்லை நீ என ஆஷா கூறவும்...இப்படியே இவர்கள் மாறி மாறி கூறி கொண்டிருக்க...
இறுதியாக சரி...நான் தான் அழகாய் இருக்கேன் என ஆஷா கூறினாள்..
அப்ப நான் அழகாய் இல்லையா என பாவமாக கேட்ட ஆஷிஃபை ஆஷா முறைத்து பார்க்க...அவன் விழித்தான்..
சரி...நாளைக்கு எங்க வீட்டுல ஃபங்ஷன்...நான் ஓதி முடிச்சதுக்கு என ஆஷா கூறவும்...
என்ன.. நீ அதுக்குள்ள ஓதி முடிச்சிட்டியா என ஆஷிஃப் ஆச்சரியமாக கேட்க...தலையாட்டியவள் நாளைக்கு நீ வீட்டுக்கு வா...நம்ம ஃப்ரெண்ட்ஸும் வருவாங்க.. அப்புறம் ம்ம்மா வயும் கூட்டிட்டு வா என்க...
இல்லை ம்ம்மா வ எப்படி என இழுக்க...
அதெல்லாம் தெரியாது...நீ கூட்டிட்டு வரனும் என அன்பு கட்டளையிட்டாள்..
.
.
.
.
.
ஏனோ இன்று மனது சந்தோஷமாக இருந்தது..
என்ன என்று யோசிக்க முடியாத அளவு துள்ளளை தர...தன் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை வாயில் வைத்து யோசித்த படி சந்தோஷமாக சாய்ந்திருந்தாள் நந்தினி..
ம்மா...நல்லது வர இருக்கிறது மா...
இந்த வீட்டில் இருக்கிற மகராசிக்கு விரைவில் நல்லது நடக்கவிருக்கு மா..
நான் சொன்னா நடக்கும் மா...
நான் சொன்னது பழிக்கும் மா என தோற்றத்தில் இளம் வயதையும் முகவாக்கில் முதுமையையும், நெற்றியில் பெரிய குங்குமத்தை வைத்த ஒரு பெண்மணி கூறி கொண்டிருக்க இப்படி கூறுபவர்களை பெரியதாக நம்பாதவள்..இன்று ஏனோ தன் சந்தோஷம் இரட்டிப்பாக ஆக...வீட்டில் உள்ள தின்பண்டங்களை எடுத்து குடுத்தாள்...
எனக்கு இதெல்லாம் வேண்டாம் மா..உடுப்பு ஏதாவது இருந்தா குடுங்க மா என்க ஆர்வகோளாரில் தன் தாயின் விலையுயர்ந்த புடவையை எடுத்து குடுத்தாள்...
Eeeeee...yenna pa seekram update potaanu kaekaadhae nga...knjm free time kidaichiruchaa. ..adhaan
Bye...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro