13
என்னாச்சி என நந்தினி பதறி கதிரின் அருகில் வந்தாள்..
நீங்க bachelor of commerce படிக்கிறதா தானே சொன்னீங்க?? என கதிர் கேட்கவும்...
ஆமாம்...அதுக்கு என்ன?? என்று கேட்டாள்..
இல்லை...நீங்க அப்படி சொல்லவும் எனக்குள்ள...என் தலை வலிச்சிட்டு ஏதோ செய்ஞ்சிருச்சு...
ஒரு வேலை நீங்களும் இந்த படிப்பு படிச்சிருப்பீங்களோ...அதான் உங்களுக்கு அப்படி தோனுதோ என்று கேட்கவும்...
அவன் மௌனத்தையே பதிலாக தந்தான்..
அந்த நேரம் அங்கே வந்த பர்வதம்..
கோவில்க்கு போயிட்டு வந்தேன்..
இந்தாங்க தம்பி..அம்மன் கோவில் பிரசாதம் என நீட்டினாள்...
இது என்ன... நமக்கு ஏதோ ரொம்ப வித்தியாசமாக தோனுதே என அவன் பிரசாதத்தை பார்த்து கொண்டிருந்தான்...
என்னாச்சி பா...எடுத்துக்கோ பா என பர்வதம் சொல்லவும்...
திருநீறை எடுத்து கையில் வைத்தபடியே இருந்தான்....வித்தியாசமாக பார்த்தவர் அதை நெற்றியில் இட்டு சென்றார்...
.
.
.
.
.
மா ஃபரிதா...நீ பட்ட கஷ்டமெல்லாம் போதும் மா..
நீ ஆசை பட்டவன் கூடவே உன்னை சேர்த்து வைக்கிறேன் மா என ரஹ்மான் சொல்லவும்..
நிஜமாவா வாப்பா?? நீங்க உண்மையா தானே சொல்லுறீங்க...பொய் சொல்லலே தானே என சந்தேகமாக கேட்க ப்ராமிஸ்(promise) மா...வேணும்னா அல்லாஹ் மேல சத்தியம் பன்னவா என கேட்டார்...
இல்லை வாப்பா...அதெல்லாம் வேண்டாம்...நான் உங்களை நம்புகிறேன் என கூறினாள்...
ரொம்ப சந்தோஷம் மா...
இப்ப மாப்பிளை எங்க இருக்காங்கனு உனக்கு தெரியுமா?? என கேட்டார்..
எனக்கு தெரியாது வாப்பா என தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் கூறி அழுதாள்...
ஏன் டி?? பெத்த பிள்ளையை எப்படி டி இத்தனை வருஷமா பிரிஞ்சி இருக்கே??..
இதை முன்னாடியே சொல்லிருக்கலாமேடி என ஃபரிதாவை அடித்து கொண்டே புலம்பி அழுதார் அவளின் தாய் மும்தாஜ்...
.
.
.
.
.
விசுப்பலகையில் அமர்ந்து அன்றைய பாடத்தை எழுதி கொண்டிருந்தான் ஆஷிஃப்.. அருகில் யாரோ அமரும் அரவம் கேட்டு ஹாய் ஆஷா என்றபடி திரும்பி பார்க்க அங்கே ஹனா அமர்ந்திருந்தாள்...
ஹாய் ஆஷிஃப் என ஹனா கூற ஹாய் என சிரித்தான்...
இவள் ஃப்ரெண்ட்ஸ் என கை நீட்ட சிரித்தபடி கை குடுத்தான் ஆஷிஃப்...
இந்தா சாக்லேட் என ஹனா குடுக்க தேங்க்ஸ் என வாங்கினான்..
இதையெல்லாம் பார்த்தபடி அங்கு வந்தாள் ஆஷா...
ஏனோ ஆஷா வுக்கு.. ஆஷிஃப் ஹனா வுடன் பேசுவது பிடிக்கவில்லை.
மேசை மீது தன்னுடைய பையை வைத்தவள் ஆஷிஃபை பார்த்தும் பார்க்காதது போல் வெளியேறினாள்...
ஹேய் ஆஷா என அழைத்தபடி சென்றவன் அவள் கையை பிடித்து இழுக்க.....
அவள் ம்ம்ம் னு முகத்தை வைத்துக் கொண்டிருக்க அவளிடம் சாக்லேட்டை நீட்டினான் ஆஷிஃப்..
அதை பிடுங்கி தூக்கி எரிய நினைத்தவள்..
பக்கத்தில் இருந்த கே.ஜி பிள்ளைகளிடம் குடுத்தாள்...
ஆஷா என அழைக்க திருதிருவென முழித்தவள் வகுப்பறையில் சென்று அமர்ந்தாள்...
பின்னால் வந்தவன் அருகில் அமர்ந்து பேச வாயெடுக்க....குட் மார்னிங் மிஸ் என மாணவ மாணவிகள் கூறி எழ இவர்களும் குட் மார்னிங் கூறி அமர்தனர்..
ஆசிரியர்: நம்ம ஸ்கூலில் நெக்ஸ்ட் மன்த் 25 ஆன்வெல் டே... இந்த ஃபார்ம் ல இருக்கிற ப்ரோங்ரேம ரீட் பன்றேன்....பார்டிசிபேட் பன்றவங்க என் கிட்ட நேம் குடுங்க என்று கூறி ரீட் பன்னினர்...
ஒவ்வொறுதறும் அவர்களுக்கு பிடித்தவற்றில் பெயர் குடுத்தனர்...
ஆஷா அமைதியாக இருக்கவும்.. எழுந்து சென்று தன் பெயரையும் ஆஷாவின் பெயரையும் ஒரே நிகழ்ச்சியில் கொடுத்து விட்டு வந்தமர்ந்தான் ஆஷிஃப்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro