12
மா கொஞ்சம் மா, செல்லம்லே...ப்ளீஸ் டா...கொஞ்சூன்டு என கெஞ்சி கொண்டிருந்தாள் நஸிரா...
ம்மா, போதும் மா...வயிறு வலிக்குது மா..ஸ்கூல்கு நேரமாச்சி மா..
அதான் ஒரு இட்லி சாப்பிட்டேன்லே மா..
என கூறி வராத கண்ணீரை துடைத்து கொண்டிருந்தாள் நம் வீட்டு குட்டி இளவரசி..
ஆஷா மா...உனக்கு வாப்பா(dad) என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாருங்க என செய்யது கூற...
ஐ...லட்டூ என கத்தி கொண்டு வாயில் எடுத்து வைக்க போக..
ஏன் டீ...செல்லக் குட்டி...இப்ப உன் வயிறு வலி எங்க போச்சி என நஸிரா வர..
திருதிருவென முழித்தாள் ஆஷா...
முழிய பாரு முழிய முன்டக்கண்ணி என நஸிரா கூற..
பாருங்க வாப்பா, உங்க பெண்டாட்டி என்னை என்ன சொல்ராங்கனு என செய்யது பின்னாடி ஒலிய...அவ என்னையும் அப்படி தான் பேசுவா...நீ கண்டுக்காதே செல்லம் என கூற...நஸிரா முறைத்தார்..
நஸிராவின் முறைப்பை காட்டி...செய்யது ஆஷாவின் காதில் ஏதோ சொல்ல...சிரித்து கொண்டே தலையாட்டி நஸிராவை கிச்சி கிச்சி மூட்டவும்...செய்யதும் சேர்ந்து கொண்டார்...
என்னங்க இது...பிள்ளைய வச்சிக்கிட்டு என வெட்க்கப்படவும்... அட புது பொண்ணுக்கு வெட்க்கத்த பாருங்க என செய்யது சிரிக்க...
மற்றிருவரும் சிரித்தனர்..
சரி சரி ஸ்கூல்கு நேரமாச்சி என நஸிரா கூறவும்...
சரி மா..அஸ்ஸலாமு அலைக்கும் மா..போயிட்டு வரேன் என கிளம்பி போக..நஸிரா முறைத்தார்..
ஸ்ஸ்ஸ்...சாரி மா என கூறி நஸிராவிர்க்கும் செய்யதிர்க்கும் முத்தம் குடுத்து...இருவரிடமும் முத்தத்தை பெற்று கொண்டாள்..
(வெளியே போகும் போது முத்தம் கொடுப்பது இவர்கள் வீட்டில் எழுத படாத சட்டம்)..
ஸ்கூல்கு போனதுமே ஆஷிஃபை தேட..
ஆஷிஃப் ஒரு மரத்தடியில் சோகமாக அமர்ந்திருந்தான்..
என்னாச்சி ஆஷிஃப்?? ஏன் இப்படி உட்கார்ந்துக்கிரே என ஆஷா கேட்டாள்..
சாரி ஆஷா என்க எதுக்கு என புரியாமல் பார்த்தாள்...
இரண்டு நாளா ம்ம்மா க்கு அதிகமான வேலையாம்..அதுல ம்ம்மா க்கு காய்ச்சல் வேற வந்துருச்சி..அதுனால ம்ம்மா வால துணி தைக்க முடியல என ஆஷிஃப் கூறினான்...
சரி டா...இதுக்கு எதுக்கு என் கிட்ட சாரி சொல்ரே?? என கேட்டவளிடம்..
ஹ்ம்ம்..நீ உன் பொம்மைக்கு சட்டை தச்சி கேட்டிலே...அதான் என்க ஆஷா சிரித்தாள்..
சரி சரி...அதுக்கு தான் இப்படி இருக்குறியா??
ம்மா க்கு உடம்பு சரியானதும் தச்சிக்கலாம்...
இப்ப என் கூட வா...உனக்கு ஒரு சாமான் வச்சிருக்கேன் என கூறி ஆஷிஃபின் கையை பிடித்து வகுப்பறைக்கு இழுத்து சென்றாள்...
என்ன சாமான் என ஆஷிஃப் கேட்க..
உனக்கு பிடிச்சது கண்டுபிடி பார்க்கலாம் என்றாள்..
ஹேய் ப்ளீஸ்..நீயே சொல்லு என்க..
நோ....நீயே கண்டுபிடி..என சொல்ல..
சரி என யோசித்து பால்(ball), கண்ணாடி என அவனுக்கு பிடித்தவற்றை சொல்லி கொண்டிருக்க...இல்லையென தலையசைத்து...இது திண்பண்டம் என்று சொல்ல...
சிறிது யோசித்து..ஆஷாவின் கண்ணங்களை பிடித்து லட்டூ என கேட்டான்..
கரெக்ட்(correct) என கூறி சிரித்தவள் பின்னர் முறைத்து என்னை பார்க்க லட்டூ மாதிரி இருக்கா என கேட்க..
நான்கு பக்கமும் தலையசைத்து முழித்தான்..
.
.
.
.
.
முதுகலை பட்டப்படிப்பு படித்து..அவள் படித்த கல்லூரியிலே சொற்பொழிவாளராக பணியாற்றிவருகிறாள் ஃபரிதா..
தன் மகளை நினைத்து கலங்கிய மும்தாஜ்...
ஏங்க, அவளை அவள் விரும்பும் பையனோடயே சேர்த்து வச்சிருக்கலாம்ங்க..
அவ வாழ்க்கையை உங்க பிடிவாதத்தால நாசமாக்கிடாதீங்க என ஒரு தாயாய் கண் கலங்கினார்..
ரஹ்மான் மனதில் குழப்பத்துடனே அவருக்கு பதில் அழிக்காமல் வெளியேறினர்..
.
.
.
.
.
.
இந்தாங்க தேநீர் என கோப்பையை நந்தினி நீட்டினாள்...
தேநீரை கையில் வாங்கியவன்..
என்னால தானே உங்க திருமணம் தடைபட்டது என கதிர் வருந்தினான்..
அட நீங்க வேற..உங்களாலே தான்
எங்க குடும்பமே உயிரோடிருக்குது...
நான் ஆசைப்பட்ட படி என்னையும் படிக்க வச்சிக்றாங்க...
இதுக்கெல்லாம் உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லனும் என கூறி நன்றி தெரிவித்தாள் நந்தினி...
ஹாஹா..அது சரி...
ஆமா... இப்ப நீங்க என்ன படிக்கிறீங்க என கேட்க??
அவள் சொன்ன பதிலில் இவன் தலையை பிடித்து அமர்ந்தான்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro