10
என்னய்யா இந்த பையன் இன்னும் எத்தன நாளு தான் இப்படி இருப்பானு தெரியலயேயா என லிங்கசாமி கூற...ஏலே லிங்கு இந்த பையல பத்தி ஒரு தகவலும் இல்லை...இந்த பையலுக்கு தலையில ரொம்ப ஆழமா ஏதோ அடிப்பட்ருக்கதா ஐயா சொன்னாங்க...
கண் விழிக்க எத்தன மாசமோ ஏன் வருஷமோ கூட ஆகலாமால்லே...அதான்லே அது வரை இந்த மூலிகைய தினமும் இவனுக்கு போடனுமாம்லே என்று மாரியப்பன் கூறினான்..
என்னலே மாரி...அங்க என்னலே சத்தம் என்று கேட்ட படி ஐயா வந்தார்...
மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றவர்களை தலையசைத்துவிட்டு பச்சையிலையில் படுத்திருந்தவனை ஒரு பார்வை பார்த்து விட்டு பெருமூச்சு விட்ட படி உள்ளே சென்றார்...
ரஹ்மான் குடும்பத்தினர் இருந்த வீடை விட்டு விட்டு மற்றொரு வீட்டை வாங்கி அங்கு குடியேறினர்...
ஃபரிதாக்கு இரு காவலர்கள் உடன் இருந்தால் மட்டுமே எங்கும் போய் வர அனுமதி அளிக்க.... வேறு வழியின்றி மனதின் உணர்ச்சிகளை உள்ளடக்கி கொண்டு கல்லூரி மற்றும் வீடு என்றே இருந்தாள்...
செய்யது கையில் வைத்திருந்த சேமிப்பு பணத்தை வைத்து சிறு மளிகைக் கடை நடத்தி வருகிறார்....
நஸிராவிர்க்கும் செய்யதிர்க்கும் குட்டி தேவதை தான் உலகம் என்று ஆனார்கள்...
அவள் முகம் பார்த்து சிரிக்க ஆரம்பிக்கவே.. ஆஷா மா... ஆஷா மா என இருவரும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தார்கள்..
பிள்ளை தவள ஆரம்மிக்க... தத்தி தத்தி நடக்க ஆரம்பிக்க...பேச ஆரம்பிக்க என ஒவ்வொன்றயும் பார்த்து பார்த்து மகிழ்ந்தார்கள்...
பின்னந் தலையில் வலி இருக்கவும்...சுற்றிமுற்றி பார்த்த படி எழுபவனை பார்த்த மாரி...
ஏலே லிங்கு இந்த தம்பி எழுந்துட்டாருலே...ஐயாவ கூட்டிட்டு வா என்று கூறினான்..
ஐயா!!!
அந்த பையன் எழுந்துட்டான்ங்கயா என லிங்கு கூற ஐயா கம்பீரமாக வேக நடையிட்டு வந்தார்..
ஏஐயா...என் குடும்பத்த காக்க வந்த குலதெய்வமே!!
நீ இல்லைன்னா நாங்க யாரும் உசுரோடவே இருந்துக்க மாட்டோம்லேயா.... நீ எப்படிய்யா இருக்கிற என ஐயா கேட்க...
திருதிருவென முழித்தவன் ஆமா நீங்க யாரு?? இல்லை நான் யாரு?? என்று குழம்பியவனை பார்த்தவங்களுக்கு இவனுக்கு தலையில் அடிபட்டதுல பழைய விஷயம் எல்லாம் மறந்து விட்டது போல என ஒருவருக்கொருவர் பேசி கொண்டிருந்தனர்..
நாட்களும் நகர...
ஆஷா க்கு 3 வயது ஆனது...
பள்ளியில் கே.ஜி. யில் சேர்த்தனர்.. சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்த பிள்ளையை அழாதேமா அழாதேமா என கூறி செய்யது அழுது கொண்டிருக்க...அவரை நஸிரா இழுத்து கொண்டு சென்றாள்..
தன் சுட்டிதனத்தாலயே எல்லாரையும் அவள் பக்கம் சேர்த்து வைத்திருந்தாள் ஆஷா...
அந்த குட்டி தேவதையை சுற்றி எந்நேரமும் பல குட்டி தேவதைகள் இருந்தனர்..
ஆஷா மா.. நன்றாக படிக்கிறாள் என்று சொல்வதை விட அதிக ஆட்டம், வாலுத்தனம் என்றே பெயர் வாங்கினாள்..
படிப்பும் சுட்டித்தனமும் ஒரு சேர ஒன்றாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்தாள் ஆஷா..
டேய்!! உனக்கு ஒன்று தெரியுமா?? ஆசிஃப்போட ம்ம்மா எங்க வீட்டு வேலைக்காரி டா என்று அம்ஜத் சொல்லவும்...
சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் என்ன டா சொல்ர...உண்மையாவா?? என்று கேட்க..
ஆமா டா..நமக்கு விடுமுறை விட்டாங்களே அப்ப ஆசிஃப் அவன் ம்ம்மா கூட வந்தான்டா.. அவனுக்கு எங்க வீடுனு தெரியாது போல...வீட்டுக்கு வந்ததும் என் கிட்ட பேச வந்தான்...நான் அவனை முறைச்சதும் அவன் ம்மா கிட்ட போய்ட்டான்...
எங்க ம்மா என்னோட பழைய சட்டையெல்லாம் அவனுக்கு குடுத்தாங்க..
இனிமேல் அவன் கூட பேச வேண்டாம் என்று அம்ஜத் கூற மற்ற நண்பர்களும் தலையாட்டினார்கள்...
ஆசிஃப் பக்கத்தில் யாரும் அமராமல் அங்க இருந்து எழுந்து போயினார்கள்...
இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த ஆஷிஃப் புத்தகம் வைக்கும் பலகையின் மீது தலை கவிழ்ந்து படுத்து அழுது கொண்டிருந்தான்...
யாரோ தன் பக்கத்தில் அமரும் அரவம் கேட்டு எழுந்து பார்த்தான்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro