1
சென்னையில் பிரபல தொழிலதிபர் S.P அவர்களின் மகள் ஃபரிதா(19)....இவர்கள் வீட்டில் கார் ஓட்டுநராக வேலை செய்பவர் சிராஜ்(27)...
(கல்லூரியில் படிக்கும் ஃபரிதாவை காரில் கூட்டி செல்லும் நேரத்தில் தான் சிராஜிர்க்கும் ஃபரிதாக்கும் காதல் ஏற்ப்பட்டது)
இது தெரிந்த ஃபரிதா வின் பெற்றோர்கள் சிராஜை வேலை நிறுத்தம் செய்தது மட்டுமின்றி சிராஜின் வீட்டாரை கடுமையாக கடிந்துள்ளனர்.
பணத்தில் ஏழையாக இருந்தாலும்...அந்த பெரிய வீட்டில் பேசியதில் இருந்து சிராஜை ஃபரிதாவை மறந்து விட வேண்டும் என்றும் இந்த திருமணம் நடக்காது என்றும் கூறினார்கள்..
போராடி பார்த்த இவ்விருவரும் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் வெளியேறினர்.
.
.
.
.
சென்னை பேருந்து நிலையம்:
ஃபரிதா: ரொம்ப பயமா இருக்குங்க..
சிராஜ்: ஏன்? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா??
ஃபரிதா: அது இல்லங்க.........
நாம இப்ப எங்க போறோம்.
சிராஜ்: திருச்சியில் இருக்கிர என் நண்பனுடைய வீட்டிற்கு...
அங்க தான் நமக்கு கல்யாணம்.
பேருந்தில் அமர்ந்ததும் ஒரு வழியாக பயந்து கொண்டே சிராஜின் மடியில் தூங்கிபோனால் ஃபரிதா...
சிராஜ் தான் தூக்கமில்லாமல் யோசனையுடனே அமர்ந்திருந்தான்..
இனி நம்ம வாழ்க்கையில் எது நடந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம்படியே நடக்கட்டும் என்று நினைத்து கொண்டே தூங்கியும் போனான்...
(ஃபரிதாவை விட எட்டு வயது பெரியவன் தான் சிராஜ்...)
.
.
.
.
சந்தோஷ காலத்தில் பூத்த இவர்களுடைய காதல் கஷ்ட காலத்திலும் நிலைத்திருக்குமா???
பொருத்து இருந்து பார்க்கலாம்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro