chapter 2
அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. அவர்கள் பரபரப்பாக வீட்டை அழகுபடித்திக்கொண்டு இருந்தனர் . அங்கே வந்த ஒருவன்
"என்னத்துக்கு வீட்டை அலங்கரிக்கிறீங்க ? "
என்றதும் மற்றையவன்
"நம்ம கணேஷ் தாத்தா குடும்பம் வாரங்களாம் "
என்றதும் மற்றையவன்
"திரும்ப சண்டை வந்து பிரியமா இருந்தா சரி "
என்றதும் மற்றையவனும் ஆமோதிப்பாய் தலை அசைத்து சொன்னான் .
கொஞ்ச நேரத்தில் அனைத்து வேலைகளும் முடிந்து விட ஒவ்வொரு வாகனமாக வந்து நிற்க இறுதியில் ஒரு டாக்ஸி வந்து நின்றது . அனைவரின் பார்வையும் திரும்ப அதிலிருந்து இறங்கியது நம்ம நாயகி அனாமிகா மற்றும் அவளின் குடும்பமே அவர்களை பார்த்த கீர்த்தி அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தாள் .
பின்னர் அனைவரும் உள்ளே நுழைந்தனர் அனைவருக்கும் அறை எது என காட்டப்பட்டது அனாமிகாவிற்கு இரண்டாம் தளத்தில் ஓர் அறை வழங்கப்பட்டது . பாவம் கடவுள் விதி யாரிற்கு அவள் பயந்தாலோ அவன் இவளது அடுத்த அறையில் தங்கினான். அவன் வேறு யாருமல்ல நம்ம நாயகன் அர்ஜுன் .
அனைவரையும் சீக்கிரமாக தயாராகி வர சொன்னார் அவர்களுன் பாட்டி மரகதம் . அவர் சொன்னது தான் அந்த வீட்டில் நீதி அவரின் பேச்சை யாரும் மீறியது கிடையாது ஒருவரை தவிர அது தான் நம்ம அனாமிகா .
மரகதம் மற்றும் கணேஷிற்கு பிறந்தவர்கள் தான் கிருஷ்ணா ,
முருகன், மாலினி , மைதிலி இது தான் இவங்க பிள்ளைங்க
மாலினியை பத்தி சொல்லனும்னா அவங்க ரொம்ப நல்லவங்க ஆனா ரொம்ப ஸ்ட்ரிக்ட் அளவாக செலவு செய்வாங்க இவங்க கணவர் குமார் ஒரு மால் ஒன்று செஞ்சிட்டு போறாங்க இவங்க ரெண்டு பேருக்கும் பிறந்த செல்வங்கள் தான் அனாமிகா மற்றும் விஷ்வா. அனாமிகாவிற்கும் விஷ்வாவிற்கும் நான்கு வருடம் தான் வித்தியாசம் ஆனா இவங்கள மிஞ்சின அக்கா தம்பி யாருமே இல்ல .
மைதிலியை பத்தி சொல்லனும்னா நல்லவங்க தான் ஆனா திமிரு கூட இவர்களுக்கும் மூத்தவங்க மாலினி தான் கணவன் மகேஷ் ஒரு பிசினெஸ் மேன் இவர்களுக்கும் இரண்டு செல்வங்கள் மகள் கீர்த்தி மகன் வினோத் வித்யாவும் அனாமிகவும் ஒரே வயசு ஆனா ரெண்டு பேரும் இரு துருவங்கள் வினோத் விஷ்வாவை பார்க்க ஒரு வருடம் மூத்தவன் . இவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேந்துக்கிட்டு அனாமிய மற்றும் விஷ்வாவிற்கு பல கெடுதல் செய்வாங்க .
முருகன் இவர் இறக்கமானவர் பண்புள்ளவர் சுயநலம் அற்றவர் ஆனால் கோடி சொத்துக்கு முதலாளி இவரும் பிஸ்னஸ் தான் பன்றாரு ஆனா இப்போ எல்லாமே அர்ஜுன் தான் பாக்குறான் . மனைவி தேன் மொழி அன்பானவர் இவங்க ரெண்டு பேரோடையும் செல்வங்கள் அர்ஜுன் நித்யா
இவங்க எல்லோருக்கும் மூத்தவங்களா இருக்குறது கிருஷ்ணா இவரு ஒரு டாக்டர் . அன்பானவர் இவர் ஸ்ட்ரிக்ட் ஒபிசெர் இவங்க மனைவி சாரதா இவங்களும் அன்பானவங்க இவங்களுக்கும் ரெண்டு புத்திரர்கள் சூர்யா விக்னேஷ்
(இது போதும் இவங்கள பத்தி போகப்போக தெரிஞ்சிப்பீங்க எல்லாரும் கீழ மாடில ஒன்னு கூடிட்டாங்க இப்போ கதைக்குள்ள போகலாம் )
அனைவரும் ஹாலில் ஒன்று கூடினர் அனைவரும் தங்களுக்கான இடத்தில் அமர்ந்தனர் பின்னர் மரகதம் பாட்டி பேசினார் .
"இங்க பாருங்க முன்ன நடந்தது போல ஏதாவது ஏடா கூடமா பண்ணி என்னோட பேத்தியை அனுப்ப பார்த்தீங்க அப்புறம் நடக்கிறதே வேற இங்க பாரு அனாமி எங்களுக்காக நீ உன்ன மாதிக்க வேணாம் நீ பாவாடை தாவணியே அணி அப்படி சொன்னதும் முதன் முறையாக அர்ஜுனின் பார்வை அனாமி மேல் விழுந்தது
விரிக்கப்பட்ட கருங் கூந்தல் மீன் போன்ற கண்கள் நேரான மூக்கு பிறை போன்ற நெற்றியில் சிறிதாக ஒரு கரும் புள்ளி (பொட்டு ) ரோஜா நிறத்தை ஒத்த இதழ்கள் சிறிதும் கலக்கமற்ற முகம் கழுத்தில் சிறிய மாலை அது அர்ஜுனின் அம்மா கொடுத்தது அவளது பிறந்தநாளிற்கு கையில் சிறு வளையல் பாவாடை தாவணி அணிந்து ஒரு தேவதையாக தெரிந்தாள்.
யாரோ தன்னை பார்ப்பது போல உணர்ந்த அனாமிகா கண்களில் அலசி ஆராய தொடங்க அங்கிருந்த அர்ஜுனை கண்டுகொண்டாள் உடலில் சற்று நடுக்கம் ஏற்பட தொடங்கியது அவளுக்கு பொறுமையாக இருந்தால் அதன் பின் அர்ஜுனிற்கு கால் வரவும் தன்னிலை பெற்றவன் அதை ஏற்று சிறிது நேரத்துக்கு பின் அழைக்குமாறு கோரி விட்டு பாட்டி சொல்வதில் கவனம் செலுத்தினான் .
அப்போது தான் சீராக மூச்சுவிட்டாள் அனாமி இதை பார்த்துக்கொண்டு இருந்த கீர்த்தி உள்ளுக்குள் எரிமலையாய் கொதித்தாள்
இதில் மரகதம் பாட்டி என்ன சொன்னாரென்று மூவருக்கும் புரியவில்லை .
இறுதியில் சொன்னதில் அனைவரும் அதிர்ந்தனர்
"என்னோட பேத்திகளை பேரன்களோட தான் கல்யாணம் பண்ணி வெக்கணும் நான் முடிவு பண்ணிட்டேன் "
என்றதும் அனாமி "பாட்டி......" என்றே கத்தி விட்டாள் நிது சொல்லவே தேவையில்லை அதிர்ச்சியில் இருந்தாள் .
ஆண்கள் " எங்களால முடியாது பாட்டி " என்றுவிட
"அப்போ என்னோட பிணத்தை தான் பாப்பிங்க " என்றதும் "பண்ணிக்கிறோம் "என்றனர் .
அதன் பின்னர் சந்தோதோஷமடைந்த மரகதம் பாட்டி "அர்ஜுன்கண்ணா இங்க வாடா " என்றதும் அவரின் காலடியில் சென்று அமர்ந்தவன் "உன்னோட மனைவி நம்ம அனாமி தான்டா" என்றதும்
அனாமிகாவிற்கு தலையில் இடி இறங்கியது போல இருக்க அவளை திரும்பி பார்த்தவன் "சம்மதம்" என்றான் .......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro