வரதட்சணை
ஆயிரம் ஆயிரம் பெண்களுக்கு,
"முதிர்கன்னி" என்ற
பட்டத்தைக் கொடுக்கும்
பகைவன்!
புகுந்த வீட்டில் வாழ வந்தவளை,
"வாழாவெட்டி"என்ற பட்டத்தோடு
பிறந்த வீட்டிற்கு அனுப்பும்
கொடூரன்!
அக்கினி சாட்சியாக
கரம் பிடித்து வந்தவளை,
அக்கினியில் எரிய வைக்கும்
கொலைக்காரன்!
இனியும் பெற்றோருக்கு
சுமையா?என்று தன்னையே
மாய்த்துக்கொள்ள செய்யும்
எமன்!
மொத்தத்தில் வரதட்சணை
என்பது சமுதாயத்தை,
ஆட்டிப்படைக்க வந்த
விரோதி !
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro